கத்னா என்னும் சுன்னத் செய்யச் சொல்லும் தினமலர்! ஆண்குழந்தைகளுக்கு கத்னா என்னும் சுன்னத் செய்வதை இஸ்லாம் வழிமுறையாக ஆக்கி உள்ளது. சுன்னத் என்னும் கத்னா செய்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதற்கு ஒரு பெரிய பட்டியலையே இடலாம்; அந்த அளவிற்கு ஆண்களுக்கான ஒரு சிறந்த மருத்துவ முறையாகவும், ஆண்களது இல்லற வாழ்வு சிறப்பாக அமைய சுன்னத் எனும் கத்னா வழிவகை செய்கின்றது என்பதையும் அறிவியல் உலகம் ஆதாரங்களுடன் தற்போது படியலிட்டு வருகின்றது. சுன்னத் செய்வதால் சுன்னத் […]
Author: Trichy Farook
நபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அமானிதத்தைப் பேணுவது இறைத்தூதர்களின் பண்பாகும். ரோம மன்னர் ஹிராக்ளியஸ் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானாரின் நடத்தைகள் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்த குணங்களை வைத்து அவர், நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் […]
046. இஹ்ராமில் கட் ஷூ அணிந்துக் கொள்ளலாமா?
‘ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!’ என்ற நபிமொழியின்படி, கட் ஷூ அணிந்து கொள்ளலாமா? குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் செருப்புக்குப் பதிலாக அதையே இஹ்ராமிலும் அணிந்துக் கொள்ளலாமா? இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 1838) நபி (ஸல்) அவர்கள் […]
045. ஹேர் ஆயில், தைலம், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவதில் அடங்குமா?
வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா? அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! […]
044. இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா?
இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா? ஆம் பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் […]
043. நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவது என்றால் என்ன?
ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு சொல்லக்கூடிய “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று ஹதீஸ் உள்ளதா? பதில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்கüடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், […]
042. ஹாஜிகள் பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா?
இஹ்ராமுக்கு முன் நகம், முடிகளைக் களைந்து கொள்ள வேண்டுமா? துல்ஹஜ் பிறை பிறந்த பிறகு ஊரிலிருந்து புறப்படுபவர்கள் (குர்பானிக்காக) பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா? பதில்: இஹ்ராமிற்கு பிறகிருந்தே முடி களையக் கூடாது. இஹ்ராமுக்கு முந்தி நகம், முடிகளைக் களைய வேண்டும் என்று எந்த ஹதீசும் வரவில்லை. ஆனால் இஹ்ராமுக்குப் பின்னால் இவற்றைக் களைகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்பு களைந்து கொள்ள வேண்டும். துல்ஹஜ் பிறை 1க்குப் பிறகு […]
041. தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டுமா?
நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா? துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும். யலம்லம் வழியாகவோ, மற்ற மீகாத்-எல்லை வழியாகவோ செல்பவருக்கு பொருந்தாது. நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு […]
040. இஹ்ராம் அணிந்த பின் தொழ வேண்டுமா?
இஹ்ராம் அணிந்த பின் தொழ வேண்டுமா? இல்லை நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது எந்தத் தொழுகையும் தொழவில்லை. ஆனால் அவர்களின் கடமையான தொழுகை இஹ்ராமுக்குப் பின்னால் அமைந்தது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) “துல்ஹுலைஃபா’வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப் பக்கத் திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் […]
039. இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா?
இஹ்ராமின் நிய்யத் ‘லப்பைக்க உம்ரதன் ஃபீ ஹஜ்ஜதின்’ என்று சேர்த்து சொல்லவேண்டுமா? ‘லப்பைக்க உம்ரதன்’ அல்லது ‘அல்லாஹும்ம லப்பைக்க உம்ரதன்’ என்பது மட்டும் போதுமானதா? கிரான் அடிப்படையில் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டுமே சேர்த்துச் சொல்ல வேண்டும். தமத்துஃ முறையில் செய்வதாக இருந்தால் தனித்தனியாகச் சொல்ல வேண்டும். “நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி […]
038. அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ….. என்று நிய்யத் உள்ளதா?
நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு அதை எளிதாக்கி, ஏற்றுக் கொள்வாயாக’ (அல்லாஹும்ம இன்னீ உரீதுல் ஹஜ்ஜ, ஃபயஸ்ஸிர்ஹுலீ வதகப்பல்ஹு மின்னீ) என்று நிய்யத் உள்ளதா? இது பித்அத் ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும். ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க ஹஜ்ஜன்” என்று கூற வேண்டும். உம்ராவை மட்டும் செய்ய நாடினால் “லப்பைக்க […]
037. இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை நோக்கி கட்டவேண்டுமா?
இஹ்ராம் ஆடை அணியும்போது கிப்லாவை முன்னோக்கி நின்றுதான் கட்டவேண்டுமா? அல்லது இஹ்ராம் கட்டும் எல்லைக்கு வந்து, நிய்யத் சொல்லும் போது தான் கிப்லாவை முன்னோக்கி இருக்கவேண்டுமா? ஆடைக்கு இல்லை. மீக்காத்தில் தல்பியாவின் போது கிப்லாவை நோக்க வேண்டும். இஹ்ராம் ஆடை அணியும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்று ஹதீஸில் வரவில்லை. ஆனால் மீக்காத் எனப்படும் எல்லைக்கு வந்து தல்பியா கூறும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹு தொழுதவுடன் […]
036. ஒரே பயணத்தில் பல உம்ராக்கள் செய்யலாமா?
துல்ஹஜ் மாதத்திற்கு முன்பே ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் பலமுறை உபரியான உம்ராக்கள் செய்யலாமா? பதில்: செய்யலாம் ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது சிலர் பித்அத் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு பயணத்தில் ஒரு உம்ராவைத் தவிர கூடுதலாக எந்த உம்ராவையும் செய்யவில்லை. எனவே இது பித்அத் என்று வாதிடுகின்றனர். இந்த வாதம் சில அடிப்படைகளைப் புரியாததால் வந்த விளைவாகும். எந்த நல்லறங்களையும் உபரியாக அவர் வசதிக்கு ஏற்றவாறு ஏற்ற […]
035. ஒரே பயணத்தில் மீண்டும் உம்ரா செய்தால் இஹ்ராம் எங்கு கட்டுவது?
ஒவ்வொரு உம்ராவையும் முடித்தபிறகு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமா? அல்லது விடுபடாமலே தொடர்ந்து பல உம்ராக்கள் செய்யலாமா? இஹ்ராமிலிருந்து விடுபட்டு, மீண்டும் இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்? அதாவது, ஒரே பயணத்தில் மீண்டும் உம்ரா செய்தால் இஹ்ராம் எங்கு கட்டுவது? பதில்: ஆயிஷா பள்ளிக்கு சென்று கட்டவேண்டும். உம்ராவுக்காக ஒருவர் இஹ்ராம் கட்டி விட்டால் அதுதான் உம்ராவின் துவக்கம் ஆகும். இதன் பின்னர் தவாஃப் செய்து, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்துகள் தொழுது, […]
034. உம்ரா செய்யும் முறை என்ன? விரிவாக
உம்ரா செய்யும் முறை என்ன? பதில் : இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்களும் இஹ்ராமுக்கு முன் குளிப்பது நபிவழியாகும். நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.”நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள். […]
வறுமை ஒரு குறையன்று
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். اَلشَّيْطٰنُ يَعِدُكُمُ الْـفَقْرَ وَيَاْمُرُكُمْ بِالْفَحْشَآءِ ۚ وَاللّٰهُ يَعِدُكُمْ مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌۚ ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: […]
நட்பு கொள்ளும் முறைகளை அறிவோம்!
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ لِىَ النَّبِىُّ -صلى الله عليه وسلم لاَ تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْق அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட […]
உலகின் முதல் இறையில்லம்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் கூறுகிறான்: وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَـرَامِؕ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوْا وُجُوْهَڪُمْ شَطْرَهٗ ۙ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِىْ وَلِاُتِمَّ نِعْمَتِىْ عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُوْنَ […]
நீதிபதிகள் மூன்று வகை
3102 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ عَنْ أَبِي هَاشِمٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى […]
நபியவர்கள் ஆடையின்றி இருந்தார்கள்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கட்டியணைக்கும் வழக்கமும் மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தச் செயல் நபிவழி என்று சொல்லும் அளவுக்கு ஏற்கத் தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இது பற்றி சில ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்துமே பலவீனமானவையாக உள்ளன. ‘ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) என் வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு ஸைத் பின் ஹாரிஸா (ரலி) வந்து கதவைத் தட்டினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) […]
போர்க்களத்தில் துஆ மறுக்கப்படாது
“பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறி: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),(அபூதாவூத்: 2540) இந்த ஹதீஸில் இடம்பெறும் 3வது அறிவிப்பாளரான மூஸா பின் யாகூப் அஸ்ஸம்ஈ (مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ) அவர்கள் பலஹீனமானவர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானது.
அம்மார் (ரலி) யின் கொலை
அம்மார் (ரலி) அவர்களை மக்கா காஃபிர்கள் பிடித்து, அவர்களின் ஒரு காலை ஒரு ஒட்டகத்திலும் இன்னொரு காலை இன்னொரு ஒட்டகத்திலும் கட்டி இரு ஒட்டகங்களையும் இருவேறு திசையில் ஓடச் செய்து, இருகூறாக பிளந்து கொலை செய்யப்பட்டார்கள். இந்த செய்தியை நாம் அறிந்த வரையில் எந்த நூலும் பார்க்க முடியவில்லை.
அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுவோம்!
முன்னுரை இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். எனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். […]
நாவைப் பேணுவோம்
முன்னுரை மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே நபிகளார் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் தீனாரோ, திர்ஹமோ பயன்தராது عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ […]
பேச்சாளர்களே! தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்திடுங்கள்
முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்கும், தாங்கள் சிறந்த பேச்சாளர்களாக ஆவதற்கும் அனைவருமே விரும்புகின்றனர். ஆனால் பிரச்சாரம் என்று வருகின்ற போது பல விஷயங்கள் அவர்களுக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது தாழ்வு மனப்பான்மை தான். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மிகச்சிறந்த […]
காலங்கள் மாறினாலும் காயங்கள் ஆறுவதில்லை
முன்னுரை ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். (அல்குர்ஆன்: 17:15) ➚ ஏக இறைவனாகிய அல்லாஹ் தன் அருள்மறையாம் திருமறையில், ஒருவரின் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார் என்று குறிப்பிடுகிறான். ஒருவர் செய்கின்ற செயலுக்கு மற்றவர் பொறுப்பாக மாட்டார். அவரவரின் கூலியோ, தண்டனையோ அது செய்தவருக்கே உரித்தானது என அல்லாஹ் கூறுகின்றான். உண்மை நிலை இவ்வாறிருக்க இன்றோ பாவம் ஒரு புறம், பழி ஒரு புறம் என்ற பழமொழிக்கேற்ப குற்றம் புரிபவன் ஒருவன்; அக்குற்றத்தைச் சுமப்பவன் மற்றொரு வன் […]
தியாக நபியின் தியாகக் குடும்பம்
முன்னுரை அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக! ஏகத்துவ தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது. ஊர் மக்களிடம், உலக மக்களிடம் அவர்கள் செய்த பிரச்சாரத்தை, ஆற்றிய வீரச் செயலை, அவரிடம் […]
சுத்தம் ஏன்றால் சும்மாவா?
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! கடந்த நவம்பர் 19ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகக் கழிப்பறை தினமாக அறிவித்தது. இதன் மூலமாக மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இப்படி அறிவித்துள்ளது. உலக மகளிர் தினம், குழந்தைகள் தினம், முதியோர் தினம், நீரிழிவு தினம், இருதய நோய் தினம் என்றெல்லாம் அறிவிப்பதால், அனுஷ்டிப்பதால் மக்களிடம் மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் இந்த நினைவு தினங்கள் அனுஷ்டிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடு கிடையாது. மாற்றம் என்பது மனதளவில் […]
முதலாளிகளின் கவனத்திற்கு…
முன்னுரை ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி உழைப்பாளிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. சில முதலாளிகள் தங்களது தொழிலாளிகளுக்கு ஆடைகள் வழங்கி அந்நாளை சிறப்பு படுத்துகின்றனர். இத்தினத்தை தொழிலாளர்களோடு கொண்டாடி, இத்தினத்தில் மட்டும் தொழிலாளர்களை சந்தோஷப்படுத்தும் முதலாளிகள் வருடம் முழுவதும் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களது கண்ணியத்தை சீர்குலைக்காமல், அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை, அவர்களது குடும்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைகளில் சலுகைகளும், தங்களால் முடிந்த அளவு […]
மனிதநேய மார்க்கம்
முன்னுரை இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது. இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும். மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல. மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே […]
இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை தாக்குதல்
முன்னுரை இன்று இஸ்லாமிய மார்க்கத்தின் மீது சேற்றை வாரியிறைப்பதற்கு எதிரிகள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆகும். அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீது நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய ஊடகங்களின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமடைந்தது. இன்றளவும் இராக், சிரியா, பாலஸ்தீனம், பாகிஸ்தான் என முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்கள் முஸ்லிமல்லாதவர்களிடம் இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. […]
முஃமின்களின் பண்புகளும், சிறப்புகளும்
வெற்றிபெற்ற இறைநம்பிக்கையாளர்களின் பண்புகள் قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ […]
இறைநம்பிக்கையாளர்கள் யார்?
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இறைநம்பிக்கையாளர்கள் யார்? என்ற கேள்விக்கு இறைவனே தனது திருமறையில் பல இலக்கணங்களை சொல்லித் தருகிறான். அவற்றை வரிசையாகப் பார்ப்போம்! இறைநம்பிக்கை கொண்ட பிறகு சந்தேகம் கொள்ளமாட்டார்கள் إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் […]
ஜும்மாவில் இமாம் மிம்பரில் அமரும் போது துஆ கேட்டால்
அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அது, இமாம் மிம்பரில் அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு […]
கடமையான தொழுகைக்குப் பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் சொர்க்கமா?
தொழுகைக்குப் பின் ஆயதுல் குர்ஸி ஓதுவது சிறப்புக்குரியது என்று வரும் பல செய்திகள் பலவீனமாக இருந்தாலும் இமாம் நஸயீ அவர்களுக்குரிய சுனனுல் குப்ராவில் இடம் பெறும் செய்தி கீழே உள்ள செய்தி ஆதாரப்பூர்வமானதாக உள்ளது. சரியான செய்தி ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: சுனனுல் குப்ரா, பாகம்: […]
ஷைத்தான் இவரை விட்டு விட்டான் என்று கூறிய போது
(புகாரி: 1125). ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) சில நாள்கள் வரவில்லை. அப்போது குறைஷீக் கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி ‘இவரின் ஷைத்தான் இவரைவிட்டுவிட்டான்’ என்று கூறினாள். அப்போது ‘முற்பகல் மீதும் இரவின் மீதும் ஆணையாக உம்முடைய இறைவன் உம்மைவிட்டு விடவுமில்லை; உம்மீது கோபம் கொள்ளவுமில்லை’ (அல்குர்ஆன்: 93:1) ➚,2,3) என்ற வசனம் அருளப்பட்டது.
033. ஹரம் பள்ளிவாசலில் தூங்கலாமா?
ஹரம் பள்ளிவாசலில் தூங்கலாமா பதில் : தூங்கலாம் கஅபாவாக இருந்தாலும், அல்லது வேறு எந்த பள்ளிவாசலாக இருந்தாலும், அதில் உறங்குவது தவறான காரியமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை. 440 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ أَعْزَبُ لَا أَهْلَ لَهُ فِي […]
032. ஹரமில் தொழுவதன் சிறப்பு என்ன?
இலட்சம் மடங்கு சிறந்தது. ”(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்நபவியில்) தொழுவது 1000 மடங்காகும். பைதுல் மக்திஸில் தொழுவது 500 மடங்கு சிறந்தது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்( ரலி) நூல்: ஸகீர் பைஹகீ) مسند البزار = البحر الزخار (10/ 77) 4142- حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا مُحَمد بن يزيد بن […]
031. மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை
மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை பதில் ஆயிரம் மடங்கு சிறந்தது. மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது. 1190 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الْأَغَرِّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ […]
030. உம்ரா மற்றும் 3 வகை ஹஜ் வேறுபாடு என்ன?
உம்ரா – 3 வகை ஹஜ் வேறுபாடு நபில் தொழுகை 2 ரகஅத், பின் லுஹர் தொழுகை 4 ரகஅத் ஆகியவை எப்படி தனித்தனி வணக்கங்களோ, அதே போன்று உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டும் தனித்தனி வணக்கங்களாகும். உம்ரா என்பது குறைவான செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். உம்ரா கட்டாயக் கடமையில்லை. ஹஜ் என்பது கூடுதலான செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். பர்ளான தொழுகையைப் போன்று, சக்தி பெற்றவர் மீது ஹஜ் கட்டாயக் கடமை. ஹஜ்ஜை தமத்தூ என்ற […]
029. உம்ரா என்றால் என்ன?
உம்ரா என்றால் என்ன? இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாஃப் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுது ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும். அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும். உம்ரா முடித்து, தலையை மழித்து, அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை. ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட […]
37) மகன் திருந்தாவிட்டால்…
எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாம் எவ்வளவு தான் அறிவுரைகளையும் உபதேசங்களையும் கூறினாலும் சிலர் அதைக் கேட்காமல் தன் இஷ்டம் போல் தடம்புரண்டுச் செல்வார்கள். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள். இத்தகைய பிள்ளைகள் நமக்கு இருந்தால் அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் திருந்தாவிட்டால் அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து பொறுமை காக்க வேண்டும். அவனுக்கு நேர்வழியை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். நூஹ் (அலை) […]
இன்னா செய்தாருக்கும் நன்னயஞ் செய்வோம்
முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் கிருபையால் உலகம் முழுவதும் தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியில் ஏகத்துவச் சிந்தனை நாளுக்கு நாள் துளிர் விட்டு வளர்ந்து வருகிறது. இறையருளால் இந்ந ஏகத்துவக் கொள்கையின் வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்பவர்கள் ஏகத்துவவாதிகள் தான். இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றிக்கு அடிப்படையாகத் திகழ்கின்ற இந்த சத்தியக் […]
பிறர் நலம் நாடுவோம்
நலம் நாடுவோம் முன்னுரை பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. இறை நம்பிக்கையின் அடையாளம். இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். எனவே, எப்போதும் எல்லோரும் எல்லோருக்கும் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். நலம் நாடுதல் என்று பொதுவாகக் குறிப்பிட்டுச் சொன்னாலும் அந்த வார்த்தை விரிவான விளக்கம் கொண்டது. நலம் நாடுதல் என்றால், அனைவரும் நலமாக இருப்பதற்காகச் செய்கின்ற அனைத்து நல்ல காரியங்களையும் குறிக்கும். நன்மையான காரியங்களை செய்வது, […]
உணவளிப்போம்! உயர்வு பெறுவோம்!
முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்தப் படைப்புகளில் பொருளாதார ரீதியில் உயர்வு, தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் மூலம் இறைவன் மனிதர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதாபிமானத்தைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இயற்கைச் சீற்றங்களினால் அனைத்தும் இழந்து […]
தூய்மை – 5
தூய்மை – 5 உள்ளத்தை தூய்மைப் படுத்துதல் ஒருவரை பார்க்கும் பொழுதே பல கெட்ட எண்ணங்களுடன் அவர்களுடன் பழகுபவர்களையும் உதட்டில் தேனும் உள் நாக்கில் விஷமும் வைத்து வாழ்பவர்களும் இரட்டை வேடம் போடுபவர்களும் மக்களில் ஏராளம் உள்ளனர். மனிதர்களிடத்தில் நற்பேறு வாங்குவதற்காக நல்லவர்களாக நடிப்பவர்களோ இறைவனிடத்தில் உண்மையாளர்களாக இருப்பதில்லை. மனிதர்களால் வெளிப்படையானதை மட்டும் தான் பார்க்க இயலும். ஏனெனில் கெட்டதை செய்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் பார்வையில் நல்லவர்களாகவும் நல்லதை செய்ய நினைத்து முடிவு கெட்டதாக அமைந்து மனிதர்களின் […]
தூய்மை – 4
தூய்மை – 4 இடங்களை தூய்மையாக வைத்தல் : நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சிலர் தாம் பயன்படுத்தக்கூடிய பாலிதின் கவர்களையும் வாழைப் பழத் தோல்களையும் கண்ட இடங்களில் எறிந்துவிடுகின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விபத்துக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் சாலையோரங்கள் மருத்துவமனைகள் போன்ற எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்கள் சுகாதாரமற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றது. மேலும் மக்கள் நடமாடக்கூடிய ஒய்வெடுக்கக்கூடிய இடங்களில் பல ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். 1. பொது […]
தூய்மை – 3
தூய்மை – 3 ஆடையில் தூய்மை நம்முடைய ஆடைகளை நாம் தூய்மையாக வைத்திருக்குமாறு இஸ்லாம் நமக்கு கட்டளையிடுகின்றது. وَثِيَابَكَ فَطَهِّرْ وَالرُّجْزَ فَاهْجُرْ உமது ஆடைகளைத் தூய்மைப் படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக! (அல்குர்ஆன்: 74:4,5) وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ، فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ நபி (ஸல்)அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு […]
தூய்மை – 2
தூய்மை – 2 வாரத்திற்கு ஒரு முறையாவது குளித்தல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக (பருவமடைந்த) ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டிய கடமையாகும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (புகாரி: 898) வியர்வையுடன் இருப்பவர்கள் குளித்துத் தூய்மையாகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு துர்வாடையை ஏற்படுத்தும். இதனால் அவர்களை விட்டும் மக்கள் விலகிச்செல்லும் நிலை ஏற்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் […]
தூய்மை – 1
தூய்மை – 1 முன்னுரை இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது . தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அல்குர்ஆன்: 87:14) ➚ தூய்மை என்பது விரிந்த பொருள் கொண்ட வார்த்தையாகும். இது ஒருவன் தன் உடல் மற்றும் அவனுடைய பொருட்கள் மற்றும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பதையும், […]