Author: Trichy Farook

54) அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்பவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

கேள்வி : அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்பவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? பதில் :  அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அல்குர்ஆன் : 4 – 140   

53) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதால் கிடைக்கும் பலன் என்ன?

கேள்வி : அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதால் கிடைக்கும் பலன் என்ன? பதில் :  அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும், நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். அல்குர்ஆன் : 4 – 69     

52) அல்லாஹ் எந்த பாவத்தை மன்னிப்பான்?

கேள்வி : அல்லாஹ் எந்த பாவத்தை மன்னிப்பான்? எந்த பாவத்தை மன்னிக்க மன்னிக்க மாட்டன்? பதில் :  தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். அல்குர்ஆன் : 4 – 48     

51) ஆண்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்ததற்கான காரணம் என்ன?

கேள்வி :  ஆண்களுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்ததற்கான காரணம் என்ன? பதில் :  சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். அல்குர்ஆன் : 4 – 34

50) ஆண்கள் யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது?

கேள்வி :  ஆண்கள் யாரை யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது? பதில் :  உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் […]

49) யாருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது?

கேள்வி : யாருடைய தவ்பா ஏற்றுக் கொள்ளப்படாது? பதில் :  தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை.384 அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)➚  

48) யாருடைய தவ்பா அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்?

கேள்வி :  யாருடைய தவ்பா அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்? பதில் :  அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:17)➚

47) முஹம்மது நபியின் சமுதாயம் ஏன் சிறந்த சமுதாயம்?

கேள்வி :  நபி (ஸல்) அவகளின் சமுதாய மக்கள் சிறந்த மக்கள் என்று சொல்லப்படுவதற்குரிய காரணம் என்ன?  பதில் :  நபியவர்களின் சமுதாய மக்கள் நல்லதை ஏவி தீயதை தடுக்கின்ற காரணத்தினால் சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ் கூறுகிறான்.  ஆதாரம் :  நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். […]

46) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் எது?

கேள்வி : இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் எது? பதில் :  மக்காவில் உள்ள பைத்துல் ஹராம் பள்ளிவாசல் ஆகும்  ஆதாரம் :  அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன்: 3:96)➚  

45) இப்ராஹீம் விஷயத்தில் யூதர்கள் செய்த தர்க்கம் என்ன?

கேள்வி இப்ராஹீம் விஷயத்தில் யூதர்கள் செய்த தர்க்கம் என்ன? பதில்  வேதமுடையோரே! இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? தவ்ராத்தும், இஞ்சீலும்  அவருக்குப் பிறகே அருளப்பட்டன. விளங்க மாட்டீர்களா? உங்களுக்கு விளக்கம் உள்ள விஷயத்தில் (இதுவரை) தர்க்கம் செய்தீர்கள். உங்களுக்கு எது பற்றி விளக்கம் இல்லையோ அது பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்! இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை […]

44) ஈஸா நபி வானத்தில் உயர்தப்பட்டுவிட்டார் என்பதற்கான சான்று என்ன?

கேள்வி : ஈஸா நபி வானத்தில் உயர்தப்பட்டுவிட்டார் என்பதற்கான சான்று என்ன? பதில் :  ” ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும்,93 என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்,456 (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள்1 வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்448 இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்.a (அல்குர்ஆன்: 3:55)➚

43) ஈஸா (அலை) அவைகளை முதன் முதலாக ஈமான் கொண்டவர்கள் யார்?

கேள்வி : ஈஸா (அலை) அவைகளை முதன் முதலாக ஈமான் கொண்டவர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கை என்ன? அவர்களுக்குரிய பெயர் என்ன? அந்த பெயருக்குரிய காரணம் என்ன?  பதில் :  முதன் முதல் ஈமான் கொண்டவர்கள் ஹவாரிய்யீன்கள் அவர்கள் மொத்தம் பன்னிரண்டு நபர்கள், அவைகள் தூயவெனண்மையனவர்கள்.  ஆதாரம் :   அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?” என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் […]

42) ஈஸா (அலை) செய்த அற்புதம் என்ன?

கேள்வி :  ஈஸா (அலை) அவர்கள் செய்த அற்புதம் என்ன? பதில் :  மண்ணால் பறவையை படைத்தார் குருடர்களை குணமாக்கினார் குஷ்ட நோயை குணப்படுத்தினார் இறந்தவர்களை உயிர்பித்தார் வீட்டில் மறைமுகமாக சேமித்த பொருட்களை வெளிப்படுத்தினார் நீங்கள் சாப்பிட்டுவிட்டு வந்ததையும் கூறுவார் ஆதாரம் :  இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் அனுமதியின்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் […]

41) அகிலத்து பெண்களை விட தேர்வு செய்யப்பட்ட பெண் யார்?

கேள்வி : அல்லாஹ்வே தூய்மைபடுத்தி அகிலத்து பெண்களை விட தேர்வு செய்யப்பட்ட பெண் யார்? பதில் :  மர்யம் (அலை) அவர்கள்  ஆதாரம் :   “மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!” (என்றும் வானவர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 3:43)➚

40) குழந்தை பிறக்கும் என்பதற்கு இறைவன் வழங்கிய சான்று என்ன?

46) குழந்தை பிறக்கும் என்பதற்கு இறைவன் வழங்கிய சான்று என்ன? பதில் :  41. “இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!” என்று அவர் கேட்டார். “மூன்று நாட்கள் சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும். உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!” என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன்: 3:41)➚

39) ஏன் ஜகரிய்யா நபி ஆச்சரியப்பட்டார்?

45) குழந்தை பிறக்கும் என்று ஜகரிய்யாவிடத்தில் நற்செய்தி கூறப்பட்டதும் ஏன் ஜகரிய்யா ஆச்சரியப்பட்டார்?  கேள்வி :  குழந்தை பிறக்கும் என்று ஜகரிய்யாவிடத்தில் நற்செய்தி கூறப்பட்டதும் ஏன் ஜகரிய்யா ஆச்சரியப்பட்டார்? அதற்கு இறைவன் கொடுத்த மறுப்பு என்ன?  பதில் :  “என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?” என்று அவர் கேட்டார். “தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்” என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன்: […]

38) மிஹ்ராபில் தொழுது கொண்டிருக்கும் போது வானவர் அழைத்த நபி யார்?

44) மிஹ்ராபில் தொழுது கொண்டிருக்கும் போது வானவர் அழைத்த நபி யார்? கேள்வி : மிஹ்ராபில் தொழுது கொண்டிருக்கும் போது வானவர் அழைத்த நபி யார்? வானவர் சொன்ன நற்செய்தி என்ன? பதில் : வானவர் அழைத்த நபி ஜகரிய்யா ஆவார். மேலும் குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியும் கூறினார்கள்.  ஆதாரம் : அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது “யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் […]

37) இம்ரானின் மனைவி வயதான காலத்தில் செய்த பிரார்த்தனை என்ன?

43) இம்ரானின் மனைவி வயதான காலத்தில் செய்த பிரார்த்தனை என்ன? கேள்வி : இம்ரானின் மனைவி வயதான காலத்தில் குழந்தை பெறுவது கஷ்டம் என   உணர்த்து திடீர்ரென கருவுற்ற போது என்ன பிரார்த்தனை செய்தார்கள்? பதில் :   “இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 3:35)➚

36) அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்தெடுத்த நபிமார்கள் யார்? யார்?

42) அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்தெடுத்த நபிமார்கள் யார்? யார் ? பதில் : ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான். (அல்குர்ஆன்: 3:33)➚

35) அல்லாஹ்விடத்தில் உண்மையான மார்க்கம் என்ன?

40) அல்லாஹ்விடத்தில் உண்மையான மார்க்கம் என்ன? பதில் :  அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையான மார்க்கம் இஸ்லாமாகும். ஆதாரம் : அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன். (அல்குர்ஆன்: 3:19)➚

34) மனிதர்களுக்கு கவர்ச்சியாக காட்டப்பட்டுள்ளவைகள் என்னென்ன?

40) மனிதர்களுக்கு கவர்ச்சியாக காட்டப்பட்டுள்ளவைகள் என்னென்ன? கேள்வி : மனிதர்களுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும்  காட்டப்பட்டுள்ளவைகள் என்னென்ன? பதில் :  பெண்கள் பிள்ளைகள் தங்கம் வெள்ளி குதிரைகள் கால்நடைகள் விளைநிலங்கள் வாகனங்கள் ஆகியவை மக்களுக்கு கவர்ச்சியாக ஆக்கப்பட்டுள்ளது. இது விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  ஆதாரம் :  பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். […]

33) கெட்ட எண்ணங்கள் சம்மந்தமாக இறங்கிய வசனம்?

39) கெட்ட எண்ணங்கள் சம்மந்தமாக இறங்கிய வசனம்? கேள்வி : கெட்ட எண்ணங்கள் ஏற்படுகிறது என்று முஃமீன்கள் முறையிட்ட போது இறங்கிய வசனம் என்ன?  பதில் :  நாம்  தவறான எண்ணங்கள் கொண்டாலும் அதற்காக இறைவன் குற்றம் பிடிப்பான். ஆதாரம் :  வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அதுபற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் […]

32) தர்மங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன?

38) தர்மங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? பதில் :  271. தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:271)➚   

31) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் கிடைக்கும் நன்மை என்ன?

37) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் கிடைக்கும் நன்மை என்ன? கேள்வி :  அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படும் செல்வத்திற்கு அல்லாஹ் கொடுக்கும் நன்மை என்ன? பதில் :  261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 2:261)➚ 

30) அல்லாஹ் இறந்தோரை எப்படி உயிர்பிக்கிறான்?

36) அல்லாஹ் இறந்தோரை எப்படி உயிர்பிக்கிறான்? கேள்வி :  அல்லாஹ் இறந்தோரை எப்படி உயிர்பிக்கிறான் என்பதை  இப்ராஹீம் நபி அறிந்த நிகழ்ச்சி என்ன?  பதில் :  260. “என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று இப்ராஹீம் வேண்டியபோது, “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் “அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே” என்றார். “நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! […]

29) நம்ரூத்தை பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது

35) நம்ரூத்தை பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது பதில் :  258. தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறியபோது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த […]

28) மரணத்திற்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறிய சமுதாயம் யார்?

34) மரணத்திற்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறிய சமுதாயம் யார்? கேள்வி :  ஆயிரக்கணக்கானோர் மரணத்திற்கு பயந்து வீட்டிலிருந்து வெளியேறிய சமுதாயம் யார்? பதில் :  அவர்கள் பனூஇஸ்ராயீல் சமுதாய மக்கள். அவர்களில் ஊரில் காலரா நோய் ஏற்பட்டு மக்களெல்லாம் விரண்டோடினார்கள். அவர்களிடத்தில் இறந்துவிடுங்கள் என்று அல்லாஹ் கூறினான். அவர்கள் இறந்தார்கள். பின்பு அல்லாஹ் உயிர்பித்தான்.  ஆதாரம் :  243. மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். “செத்து விடுங்கள்!”என்று […]

27) கணவன் இறந்துவிட்டால் மனைவியின் இத்தா காலம் என்ன?

33) கணவன் இறந்துவிட்டால் மனைவியின் இத்தா காலம் என்ன? பதில் :  நான்கு மாதம்  பத்து நாட்களாகும். ஆதாரம் :  234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:234)➚ 

26) விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அல்லாஹ் தண்டிப்பனா?

31) விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அல்லாஹ் தண்டிப்பனா? கேள்வி :  சத்தியம் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அல்லாஹ் தண்டிப்பனா?   பதில் :  சத்தியம் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் விளையாட்டுக்காக சத்தியம் செய்தால் அதற்காக அல்லாஹ் தண்டிக்கமாட்டான். அது பாவமானதும் கிடையாது. பரிகாரமும் செய்ய வேண்டாம். எனினும் நம் எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் நம்மை தண்டிப்பான்.  ஆதாரம் :  225. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் […]

25) நபி (ஸல்) அவர்களுக்கு எந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது

29) நபி (ஸல்) அவர்களுக்கு எந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது கேள்வி : நபி (ஸல்) அவர்களுக்கு எந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது   பதில் :  ரமலான் மாத்தில் குர்ஆன் அருளப்பட்டது  ஆதாரம் :  185. இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.  (அல்குர்ஆன்: 2:185)➚

24) ரமலான் நோன்பிருந்து சலுகையளிக்கப்படவர்கள் யார்?

28) ரமலான் நோன்பிருந்து சலுகையளிக்கப்படவர்கள் யார்? கேள்வி :  ரமலான் நோன்பு காலங்களில் நோன்பு வைக்காமல் இருக்க சலுகையளிக்கப்பட்டவகள் யார்? யார் ? பதில் :  நோயாளிகள்  பயணிகள்  ஆதாரம் :  உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.  (அல்குர்ஆன்: 2:184)➚  

23) முந்தைய சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டதா?

27) முந்தைய சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டதா? பதில் :  ஆம் ஆதாரம் :  183, 184. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.  (அல்குர்ஆன்: 2:183)➚ 

22) அல்லாஹ் மனிதர்களுக்கு தடை செய்த உணவு என்னென்ன?

25) அல்லாஹ் மனிதர்களுக்கு தடை செய்த உணவு என்னென்ன? கேள்வி :  அல்லாஹ் மனிதர்களுக்கு தடை செய்த உணவு என்னென்ன? பதில் :  தானாக செத்தவை  இரத்தம் பன்றிக்கறி  அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்டவை  ஆதாரம் :  173. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: […]

21) முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்?

24) முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்? கேள்வி :  முஃமீன்களை அல்லாஹ் எவ்வாறெல்லாம் சோதிப்பான்? பதில் :  பயம்  அச்சம்  பசி  பொருட்சேதம்  மரணம் நோய்  விலை நிலம் அழிவு  ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் சோதிப்பான்  ஆதாரம் :  ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் நாம் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:155)➚

20) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன?

23) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை என்ன? கேள்வி :  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் இறக்கவில்லை ஆனால் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன?  பதில் :  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 2:154)➚   

19) யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை அறிந்தார்களா?

22) யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை அறிந்தார்களா? கேள்வி : யூதர்களும் கிறித்தவர்களும் முஹம்மதை  நபியை முழுமையான முறையில் அறிந்தார்களா? பதில் :  நபி (ஸல்) அவர்களை நபி என்பதை தெரிந்திருந்தும் புறக்கணித்தார்கள்.  ஆதாரம் :  நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள்,27 தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்.25 அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (அல்குர்ஆன்: 2:146)➚ 

18) இப்ராஹீம் (அலை) தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன?

19) இப்ராஹீம் (அலை) தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன? கேள்வி :  இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன? பதில் :  அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான் முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது’ ஆதாரம் :  “என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யாகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (அல்குர்ஆன்: 2:132)➚ 

17) பைத்துல் ஹராம் என்ற ஆலயத்தை அடித்தளத்தை உயர்த்தியவர் யார்?

18) பைத்துல் ஹராம் என்ற ஆலயத்தை அடித்தளத்தை உயர்த்தியவர் யார்? பதில் :  இப்ராஹீம் (அலை)  இஸ்மாயீல் (அலை)  ஆதாரம் :  இந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்தியபோது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.) (அல்குர்ஆன்: 2:127)➚ 

16) பனூஇஸ்ராயீல் மக்ககளுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட அந்த மாட்டின் தன்மை என்ன?

17) பனூஇஸ்ராயீல் மக்ககளுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட அந்த மாட்டின் தன்மை என்ன? கேள்வி :  மாட்டை அறுக்குமாறு பனூஇஸ்ராயீல் மக்ககளுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட அந்த மாட்டின் தன்மை என்ன? பதில் :  கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு ஆதாரம் :  68. “உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்” என்று அவர்கள் கேட்டனர். “அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் […]

15) மூஸாவின் சமுதாய மக்களுக்கு செய்த அருட்கொடைகள் என்ன?

16) மூஸாவின் சமுதாய மக்களுக்கு செய்த அருட்கொடைகள் என்ன? கேள்வி :  மூஸாவின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் செய்த அருட்கொடைகள் என்ன? பதில் : மரணித்த பின் உயிர்பித்தல்  மேகத்தை நிழலிடச் செய்தல்  மன்னு சல்வா எனும் உணவை வானத்திலிருந்து இறக்குதல் ஆதாரம் :   “மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது. பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் […]

14) மூஸா நபியின் சமுதாய மக்கள் ஈமான் கொள்ள என்ன நிபந்தனை வைத்ததார்கள்?

15) மூஸா அவர்களின் சமுதாய மக்கள் ஈமான் கொள்ள என்ன நிபந்தனை வைத்ததார்கள்? பதில் :  நாங்கள் இறைவனை நேரடியாக பார்க்க வேண்டும்.  ஆதாரம் : “மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது. (அல்குர்ஆன்: 2:55)➚ 

13)பனூஇஸ்ரவேலர்களுக்கு ஃபிர்அவ்ன் செய்த கொடுமை என்ன?

14) பனூஇஸ்ரவேலர்களுக்கு ஃபிர்அவ்ன் செய்த கொடுமை என்ன? கேள்வி :  பனூஇஸ்ரவேலர்களுக்கு ஃபிர்அவ்ன் செய்த கொடுமை என்ன? பதில் :  அவர்களில் ஆண் குழந்தைகளை கொள்ளுதல்  மற்றும் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டுவிடுதல்  ஆகிய கொடுமைகளை கொடுத்தான்.  ஆதாரம் :  ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இது மிகப் […]

12) எவை இரண்டு விஷயங்கள் மூலம் உதவி தேடுமாறு இறைவன் கூறுகிறான்

13) எவை இரண்டு விஷயங்கள் மூலம் உதவி தேடுமாறு இறைவன் கூறுகிறான் கேள்வி :  இரண்டு விஷயங்களை கொண்டு உதவி தேடுமாறு இறைவன் கூறுகிறான்? அவை என்னென்ன?  பதில் :  பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். ஆதாரம் :  பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பாரமாகவே இருக்கும். (அல்குர்ஆன்: 2:45)➚ 

11) ஆதம் ஹவ்வாவுக்கு அல்லாஹ் எதை தடை செய்தான்

12) ஆதம் ஹவ்வாவுக்கு அல்லாஹ் எதை தடை செய்தான் கேள்வி :  ஆதம் ஹவ்வாவுக்கு அல்லாஹ் எதை தடை செய்தான்? பதில் :  சுவர்க்கத்தில் குறிப்பிட்ட ஒரு மரத்தை நெருங்கக்கூடாது என இருவருக்கும் இறைவன் தடை பிறப்பித்தான். ஆதாரம் :  அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். “இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன”என்றும் நாம் கூறினோம்.  (அல்குர்ஆன்: […]

11) ஆதமும் ஹவ்வாவும் எங்கு வசித்தார்கள்

11) ஆதமும் ஹவ்வாவும் எங்கு வசித்தார்கள் கேள்வி :  ஆதமும் ஹவ்வாவும் படைக்கப்பட்டதும் எங்கு வசித்தார்கள். பதில் :  படைக்கப்பட்டதும் சுவர்க்கத்தில் வசித்தார்கள்.  ஆதாரம்:  “ஆதமே! நீரும், உமது மனைவியும் இந்த சொர்க்கத்தில்12 குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்” என்று நாம் கூறினோம்.  (அல்குர்ஆன்: 02:35)➚ 

10) திரும்ப திரும்ப ஓதப்படக்கூடிய வசனங்கள் எவை?

10) திரும்ப திரும்ப ஓதப்படக்கூடிய வசனங்கள் எவை? கேள்வி : திரும்ப திரும்ப ஓதப்படக்கூடிய வசனங்கள் எவை? பதில் : சூரத்துல் ஃபாத்திஹா ஆதாரம்  நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். (அல்குர்ஆன்: 15:87)➚

09) ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார்?

09) ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார? கேள்வி :  ஆதமுக்கு சஜ்தா செய்ய மறுத்தவன் யார்? பதில் :  இப்லீஸ் என்பவன் தான் இறைக்கட்டளைக்கு மாறு செய்தான்  ஆதாரம்   “ஆதமுக்குப் பணியுங்கள்!”என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன்: 2:34)➚    

08) தூய்மையான துணைகள் என்றால் யார்?

08) தூய்மையான துணைகள் என்றால் யார்? கேள்வி :  தூய்மையான துணைகள் என்றால் யார்? பதில் :  “நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன” என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் “இதற்கு முன் இதுதானே நமக்கு வழங்கப்பட்டது” எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். […]

07) அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்தது என்ன?

07) அல்லாஹ் ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்தது என்ன? கேள்வி :  அல்லாஹ்விடமிருந்து ஆதம் கற்றுக் கொண்டவை என்ன? அவை வானவர்களுக்கு தெரியாதா?  பதில் :  வானவர்களுக்கே தெரியாத பொருள்களின் பெயர்களை இறைவன் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்.  ஆதாரம் :  அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!” என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர […]

06) எத்தனை வானங்கள் உள்ளன?

06) எத்தனை வானங்கள் உள்ளன? கேள்வி :  எத்தனை வானங்கள் உள்ளன? பதில் :  ஏழு வானங்கள் உள்ளன ஆதாரம் :  அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன்: 2:29)➚     

Next Page » « Previous Page