Author: Abdur Rahman

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? முஹம்மத் அப்துல் அஜீஸ் சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில் படாமல் மறைப்பது. நம் கண்களுக்கு நமது முட்டுக்கால்கள் தெரிவதற்குத் தடை இல்லை. ஆனால் மற்றவர்கள் பார்க்காமல் மறைப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர். حدثنا عثمان بن أبي شيبة قال […]

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா?

மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? முஹம்மது சைபுல்லா.   முஸ்லிம்கள் தங்கள் செல்வங்களை மார்க்கப்பணி போன்ற நல்வழியில் செலவிட வேண்டும் என இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதற்கு மறுமையில் மிகப் பெரிய பரிசுகளை அளிப்பதாகவும் வாக்களிக்கின்றான். தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. […]

பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா?

பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா? வி.பாஸ்கர் பதில் : இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும், நோய்களைப் போக்குவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; மாற்கு 16:17 இதை ஆதாரமாக்க் கொண்டு மனித இயல்புக்கு அப்பாற்பட்ட தொனியிலும், தோரணையிலும் […]

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?

கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது “கஸ்அம்’ குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. […]

இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது முஸ்லிமல்லாதவர் எப்படி அறிய முடியும்?

பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும்? அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது? ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குப் பெற்றோர் முக்கியக் காரணமாக அமைந்தாலும் மனிதனுக்கு பகுத்தறிவை இறைவன் வழங்கியுள்ளான். எல்லா விஷயங்களிலும் அவன் பெற்றோர் சொன்னதை மட்டுமே மனிதன் […]

சகோதரி மகளைத் திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சட்டம் தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகு அவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் என்பதே மார்க்கச் சட்டம். வேறு கொள்கையில் இருப்பவர் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் இந்தச் சட்டத்தை செயல்படுத்தி விட்டுத்தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. வேறு கொள்கையில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தில் இணைய நினைத்தால் அவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. […]

போரின் போது நபி பொய் சொன்னதாக பீஜே சொன்னது பொய்யா?

போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று நாம் சொல்வது பொய்யா? சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரமலானில் தொடர் உரை நிகழ்த்திய போது ஒரு செய்தியை மேற்கோள்காட்டி பேசியிருந்தார். மூன்று சந்தர்ப்பங்களில் பொய் பேச நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் என்று சொல்லி கீழ்க்கண்ட ஹதீஸைக் குறிப்பிட்டார். حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى ، أَخْبَرَنَا ابْنُ […]

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா?

மூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா? காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் விளக்கி இருந்தார். பீஜேயின் விளக்கம் தவறானது என்று சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி சில வாதங்களை எடுத்து வைக்கின்றனர். பீஜே எழுதியது சரியா? எதிராளிகளின் மறுப்பு சரியா என்பதை ஆய்வு செய்து இது ஆய்வாளர்களுக்குப் […]

தேனீக்களின் தேனிலவு

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்: 30:21) ➚ இல்லற வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மன அமைதியாகும். இதன் துவக்கம் தான் திருமணம். இதில் ஆணும், பெண்ணும் இணைகின்றனர். திருமணம் முடிந்ததும் தம்பதியர்கள் தங்கள் இல்லற சுகத்தை அனுபவிப்பதற்குச் செல்லும் சுற்றுலாவிற்கு, தேனிலவு என்று பெயர். இதற்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற […]

உறவோடு உறவாடுவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நம்மில் சிலர் உறவினர்கள் விஷயத்தில் பாரபட்சமாகவும், பாராமுகமாகவும் இருப்பதை காண்கிறோம். உறவிலேயே பணக்காரர் என்றால் அவர்களுக்கென்று ஒரு தனி மரியாதை, அதுவே ஏழை என்றால் அப்படியே கண்டும் காணதது போல் விட்டுவிடுவது போன்ற செயல்கள் நடந்து வருவதை பார்க்கிறோம். எனவே உறவைப் பேணுவதின் முக்கியத்துவத்தை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் […]

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம்

அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, இஸ்லாத்தின் ஆதாரம் இறைச் செய்தி – வஹீ மட்டுமே என்று ஆணித்தரமாக மக்களிடம் பதிய வைத்தது. அந்தப் பிரச்சாரத்திலிருந்து எள்ளளவு கூட, இம்மியளவு கூட மாறவில்லை. சவூதி சம்பளத்தைப் பின்னணியாகக் கொண்ட மதனிகளுடன் சேர்ந்து அழைப்புப் பணி செய்யும் போதும் சரி! அவர்களை விட்டுப் பிரிந்து பணியாற்றும் போதும் சரி! குர்ஆன், ஹதீஸ் பார்வையில் சரியெனப்பட்டதையே மக்களிடம் எழுத்துரீதியாகவும், பேச்சுரீதியாகவும் பிரச்சாரம் செய்து […]

பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் […]

20) ஃபலக் விளக்கவுரை-6

08) ஸிஹ்ர் ஒரு விளக்கம் மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான். அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள். நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது. “மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் […]

19) ஃபலக் விளக்கவுரை-5

07) பொறாமையால் ஏற்படும் தீங்குகள்   وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் தீங்கிலிருந்தும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற இறுதி வசனத்தின் விளக்கத்தைக் காண்போம். ஒரு மனிதனிடமிருந்து நமக்குக் கேடு வருவதாக இருந்தால், பொறாமையினால்தான் கேடு வரும். நமக்கு எவன் கேடுசெய்தாலும் கண்டிப்பாக அதில் பொறாமை இருக்கும். அதனால்தான் தெரிந்தவர்களுக்குக் கேடுசெய்கிறார்கள். தெரியாதவர்களுக்கு மத்தியில் எந்தக் கேடும் நடப்பதில்லை. நீங்கள் யார்? என்று எனக்குத் தெரியாவிட்டால் நான் யார்? என்று உங்களுக்குத் தெரியவில்லையென்றால் […]

18) ஃபலக் விளக்கவுரை-4

06) முடிச்சுகளில் ஊதும் பெண்கள் ஏன்றால் யார்? அடுத்ததாக, ஸிஹ்ர் – சூனியம் செய்யும் மார்க்க அறிஞர்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லிக் கொள்கிறோம். சூனியம் என்பது பெரும்பாவம் ஆகும். அதுவும் இறைமறுப்பு எனும் குஃப்ர் என்ற பாவத்தில் சேர்த்து விடுகிற குற்றமாகும். “அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், […]

17) ஃபலக் விளக்கவுரை-3

05) ஹாரூத் மாரூத் மலக்கா? நாம் திருக்குர்ஆனில் உள்ள சின்னஞ்சிறிய அத்தியாயங்களுக்கு விரிவுரையைப் பார்த்து வருகிறோம். அந்தத் தொடரில் நபியவர்களுக்கு யூதர்களால் சூனியம் வைக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்தி, குர்ஆனிலுள்ள பல்வேறு வசனங்களுக்கு நேரடியாக முரண்படுவதாலும், அது சம்பந்தமாக அறிவிக்கப்படுகிற செய்திகளில் பல்வேறு முரண்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாலும் நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தி சரியானதாக இல்லை. ஒரு மனிதரை சூனியம் செய்து அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்பது தான் இதுவரை நாம் பார்த்ததின் சாராம்சம். இதன் தொடர்ச்சியாக, […]

16) ஃபலக் விளக்கவுரை-2

03) ஸிஹ்ர் என்றால் என்ன? மூஸா நபி அவர்கள் அற்புதங்கள் செய்து காட்டிய போது அதை மறுப்பதற்காக எதிரிகள் பயன்படுத்திய வாசகம் ஸிஹ்ர் என்பது தான். அதாவது இவர் செய்வது உண்மை அல்ல ஸிஹ்ர் அதாவது பித்தலாட்டம் என்று அவர்கள் கூறினார்கள். நபி மூஸா அலை அவர்களுக்கு எதிராக அவர்களது சமூகம் சொன்ன பதிலையே நபி ஈஸாவின் சமூகமும் அவருக்குச் சொன்னது. “மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல் குதுஸ் […]

15) ஃபலக் விளக்கவுரை-1

01) முன்னுரை 113 வது அத்தியாயத்தின் பெயர் ஃபலக் (அதிகாலை) என்பதாகும். இந்த அத்தியாயத்தின் மூலம் மனிதன் இறைவனிடம் எவ்வாறு பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ் கற்றுத் தருகிறான். முதலில் இந்த அத்தியாயத்தின் நேரடியான பொருளைப் பார்ப்போம். قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ(1)مِنْ شَرِّ مَا خَلَقَ(2)وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(3)وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ(4)وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ(5) அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், […]

14) யாஸீன் விளக்கவுரை-14

76வது வசனம் 76. (முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம். (அல்குர்ஆன்: 36:76) நபியவர்கள் இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்து கூறிய போது அவர்கள் அதை நம்ப மறுத்தது நபியவர்களுக்கு கவலையளித்தது. மேலும் நபியவர்களையும் விமர்சனம் செய்ததும் கவலையளித்தது. இதிலிருந்து அவர்களை ஆறுதல் படுத்துவதற்காகதான் “(முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்.” என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற சில வசனங்களிலும் இவ்வாறு ஆறுதல் கூறுகிறான். (முஹம்மதே!) […]

13) யாஸீன் விளக்கவுரை-13

65 வது வசனம் 65. இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும். (அல்குர்ஆன்: 36:65) ➚ ➚ மறுமையில் அல்லாஹ்வின் விசாரணை முறையை இவ்வசனம் விளக்குகிறது. யாரும் தங்கள் நாவால் பதிலளிக்க முடியாது. மாறாக செயலாற்றிய உறுப்புகளே பதிலளிக்கும். வாய்க்கு முத்திரை இடப்படும். இதனால் மனிதர்கள் தங்கள் உறுப்புகளிடம் கேள்வியெழுப்புவார்கள். “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது […]

12) யாஸீன் விளக்கவுரை-12

58 வது வசனம் 58. ஸலாம்! இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்று!. (அல்குர் ஆன் : 36 : 58.) இவ்வசனத்தின் துவக்கத்தில் கூறப்படும் ஸலாம் என்பது சொர்க்கவாசிகளுக்கு கூறப்படும் வாழ்த்தாகும். இதை பல வசனங்கள் விளக்குகின்றது. அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான். (அல்குர் ஆன் : 33 : 44.) அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள். ஸலாம் ஸலாம் […]

11) யாஸீன் விளக்கவுரை-11

50 வது வசனம் 50. அப்போது அவர்களுக்கு மரண சாசனம் கூற இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள். மறுமை நாள் எப்போது நிகழும் என கேலியாக கேட்ட இறைமறுப்பாளர்களுக்கு மரண சாசனம் கூட செய்ய இயலாதளவிற்கு மறுமைநாள் விரைவாக நிகழ்ந்துவிடும் என்று இவ்வசனம் பதிலளிக்கின்றது. மரண சாசனம் என்பது ஒருவர் தன் மரணத்தருவாயில் கூறும் விஷயங்களாகும். ஒருவர் தன் மரண வேளையில் தனது சொத்துக்கள் மற்றும் இதர விஷயங்கள் தொடர்பாக கூறுவதை மரண சாசனம் […]

10) யாஸீன் விளக்கவுரை-10

42 வது வசனம் 41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும் அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று. (அல்குர்ஆன்: 36:41) ➚, 42) ➚.) ஒட்டகமும் ஓர் அத்தாட்சி 42 வது வசனத்தில் அவர்கள் ஏறிச்செல்லும் அது போன்றதை அவர்களுக்காக படைத்ததும் அவர்களுக்குரிய சான்று.” என்று உள்ளது. இவ்வசனம் ஒட்டகம் பற்றி குறிப்பிடுகிறது. ஏனெனில் அது கப்பல் போன்றதாகும். ஒட்டகத்தை ஆய்வு செய்யும் போது இதை அறிய […]

09) யாஸீன் விளக்கவுரை-9

33, 34, 35 வது வசனங்கள் 33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்று. அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர். 34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக ஏற்படுத்தினோம். அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா? இதில் 33 வது வசனத்தில் உள்ள இறந்த பூமியை உயிர்ப்பித்தல் என்பது பற்றி […]

08) யாஸீன் விளக்கவுரை-8

25, 26, 27 வது வசனங்கள் 25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவி சாயுங்கள்! (என்றும் கூறினார்). 26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர் “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?” என்றார். இதில் 25 வது வசனம் வரை நல்லடியார் சொன்ன அறிவுரைகளை அல்லாஹ் கூறிவிட்டு 26 வது வசனத்தில் “சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது. […]

07) யாஸீன் விளக்கவுரை-7

16, 17 வது வசனங்கள் 16, 17. “நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை” என்று (தூதர்கள்) கூறினர். இவ்வரு வசனங்களிலும் அந்த மூன்று தூதர்களும் கூறிய பதில்கள் இடம் பெற்றுள்ளது. இதிலும் நமக்கு பல பாடங்கள் உண்டு. பிரச்சாரகர்கள் மென்மையாக நடக்கவேண்டும் பொதுவாக மக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது அதை அவர்கள் ஏற்கமறுப்பது மட்டுமின்றி நம்மை பொய்யர் என்றும் விமர்சிப்பார்கள். […]

06) யாஸீன் விளக்கவுரை-6

தஜ்ஜால் உயிர்கொடுப்பவனா? அடுத்து மறுமைநாளின் அடையாளமாக விளங்குகின்ற தஜ்ஜால் என்பவனை பற்றி பார்ப்போம். தஜ்ஜால் மக்களை குழப்புவதற்காக படைக்கப்பட்ட படைப்பினமாகும். அவன் இறந்தவருக்கு உயிர் கொடுப்பதாக ஹதீஸ்கள் வருகிறதே இதை எப்படி புரிந்து கொள்வது என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். அதற்கான விளக்கத்தை காண்போம். நல்லடியாரை கொலை செய்து மீண்டும் உயிர் கொடுப்பான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது; எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் […]

05) யாஸீன் விளக்கவுரை-5

8, 9, 10 ஆகிய வசனங்களின் விளக்கம் 8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன. 9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது. 10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். இந்த மூன்று […]

04) யாஸீன் விளக்கவுரை-4

6 வது வசனத்தின் விளக்கம் கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது. அவர்களோ கவனமற்று இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 36:06) ➚.) இதில் 6 வது வசனத்தில் “முன்னோர் எச்சரிக்கப்படாமல் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக” என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் நபியின் சமுதாயத்திற்கு நபியவர்களுக்கு முன் எந்த தூதரும் வரவில்லை. சிலை வணக்கம் போன்றவை கூடாது என்றும் அதனுடைய தீமைகளும் அவர்களுக்கு விளக்கி கூறப்படவில்லை. அதனாலேயே முன்னோர் […]

03) யாஸீன் விளக்கவுரை-3

 மூன்றாவது, மற்றும் நான்காவது வசனங்களின் விளக்கம் 3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர். 4. நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இவ்வசனங்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் அவர்கள் நேர்வழியில் இருப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகத்தை நேர்வழியில் இருப்பதாக இறைவன் குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் வஹீயின் அடிப்படையில் செயல்படுவதுதான் என்பதை பின்வரும் வசனங்களில் அல்லாஹ் விளக்குகிறான். வஹீ மட்டும்தான் நேர்வழி! உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக ! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். (அல்குர்ஆன்: […]

02) யாஸீன் விளக்கவுரை-2

யாஸீன் தொடர்பான தவறான நம்பிக்கைகள் சிலர் முழுக் குர்ஆனைவிட அல்லது குர்ஆனிலேயே யாஸீன் சூராவை மிகச்சிறந்ததாக நினைக்கின்றனர். அதனால்தான் யாஸீன் சூராவை மட்டும் தனியாக அச்சடித்து வைத்தல். தனி ஃப்ரேமாக செய்து கடைகளில் மாட்டுதல். இவைகளை வியாபாரம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு சில பலவீனமான ஹதீஸ்களும் காரணமாகும். அது பற்றி சற்று விரிவாக அறிந்து கொள்வோம். குர்ஆனுடைய இதயம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உள்ளது. குர்ஆனின் இதயம் யாஸீன் […]

01) யாஸீன் விளக்கவுரை-1

முன்னுரை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நல்லதொரு தலைப்பு தேர்வு செய்யப்பட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமையகத்தில் தொடர் உரை நிகழ்த்தப்படுவது வழக்கம். கடந்த 2018 வருடம் ரமலான் உரையில் திருக்குர் ஆனின் 36வது அத்தியாயமாகிய யாஸீன் சூராவினுடை விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அந்த தலைப்பில் தொடர் உரையாற்றுவதற்கான பொறுப்பு நிர்வாகத்தின் சார்பில் எனக்கு அளிக்கப்பட்டது. எப்போதும் ரமலானில் ஆற்றப்படும் தொடர் உரைக்கான தலைப்பை தேர்வு செய்ய பல […]

வட்டியில்லாத பங்கு சந்தை ஷேர் மார்க்கெட் கூடுமா? கூடுதல் வாதங்களும் பதில்களும்.

என்ன வாங்குகிறோம் என தெரியாது என்ற வாதம்! பங்கு வாங்கும் நிறுவனம் என்ன வியாபாரம் செய்கிறது அதன் வரவு செலவு என்ன என்பதனை அறிந்து கொள்ளும் வசதி இன்றைக்கு இருக்கிறது. எனவே இந்த அடிப்படையில் பங்குசந்தை ஹராம் என்று கூற முடியாது வட்டிக்கு பணம் வாங்கி இருப்பார்கள் என்கிற வாதம்! வட்டிக்கு வாங்கி முதலீடு செய்திருந்தால், அதில் போட்டிருந்தால் கூடாது என்பது சரிதான். எனினும் ஒரு நிறுவனம் கடன் வாங்கவில்லை என்றால் அந்த அடிப்படையில் இது ஹராம் […]

பென்ஷன் பெறுவது தவறா? அது வட்டி அடிப்படையிலானதா?

பென்ஷன் என்பதும் பிஎஃப் (Provident Fund) என்பது வேறு வேறு. பிஎஃப் என்பதில், ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்தது முதல், மாதாமாதம் நிறுவனம் மற்றும் அரசாங்கத்தால் ஒரு தொகை போடப்படும். ஒவ்வொரு வருடமும் அதில் வட்டி சேர்க்கப்படும். வேலையாள் ஓய்வு பெறும் போது, அது பெரும் தொகையாக, வட்டியுடன் சேர்த்து தரப்படும். வேறு வழியில்லை, நம்முடைய பணம் என்பதால் வாங்க வேண்டியது தான், பிஎஃப் முதலை நாம் பயன்படுத்திவிட்டு, பேணுதலுக்காக வட்டியை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம். ஆனால், […]

கேள்வி:8

கேள்வி:8 அல்லாஹ், அல்குர்ஆன், அந்நபி ஆகியவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையாகக் கருதப்பட்டன என்கிறார் ராம்ஸ்வர்ப். பதில்:8 இஸ்லாம் ஒரு போதும் விமர்சனத்தை மறுத்ததில்லை. யாரும் இஸ்லாத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால் விமர்சனம் செய்து உண்மையை உணர்ந்து அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொண்டபின் ஒருவன் விமர்சிக்கக் கூடாது. விமர்சித்தால் அவன் இன்னமும் அல்லாஹ்வை, அல்குர்ஆனை, நபியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இஸ்லாம் கருதுகிறது. இதில் எந்தத் தவறும் இருப்பதாக எவரும் கருத மாட்டார்கள். ஒரு தேசத்தில் பிரஜையாக இருப்பவன் […]

கேள்வி:7

கேள்வி:7 தன்னுடைய கவிதைகள் மூலம் முஹம்மதை எதிர்த்த காபிர்களை சிரச் சேதம் செய்யுமாறு ஆணையிட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. முஹம்மதின் போர்கள் (மகாஸி) நூல்களில் முக்கியப் பகுதியாக விளங்குபவை இந்தப் படுகொலைகள் தான் அஸ்மா, அஃபாக், கஃபு இப்னுல் அஷ்ரப் ஆகிய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம் என்கிறார் ராம்ஸ்வர்ப். பதில்:7 கவிஞர்கள் அவர்கள் கவிஞர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் ஒரு போதும் கொலை செய்யப்பட்டதில்லை. ஒரு சில கவிஞர்களாக இருந்தவர்கள் வேறு பல […]

கேள்வி:5,6

கேள்வி:5 போர், சமாதானம், கனீமத்தைப் பங்கிடுதல் வெற்றி கொள்ளப்பட்டவர்களை நடத்தும் முறைகள், எப்படி உடுத்துவது, உண்பது, மலஜலம் கழிப்பது, புணர்வது எல்லாமே இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது; இதனால் சல்மான் ரஷ்டி குர்ஆனைச் சட்டப் புத்தகம் எனப் பரிகசிக்கிறார் என்கிறார் ராம்ஸ்வர்ப். பதில்:5 ஆம்! குர்ஆன் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் சொல்லித் தருவது முட்டாள்களின் பரிகசிப்புக்கு உரியது என்றால் எமக்குக் கவலை இல்லை. முஸ்லிம் சமுதாயம் அதைப் பெருமைக்குரிய ஒன்றாகவே கருதுகிறது. கடவுள் பன்றி உருவம் எடுப்பது, மீனும், […]

கேள்வி:4

கேள்வி:4 பல கடவுள் கொள்கைக்குப் பதிலாக முஹம்மது ஒரு கடவுள் கொள்கை வந்த போதும் இவரது இந்த வேத வெளிப்பாட்டினால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை. மதத்தில் ஒரு ஆழமும், கடவுள் கொள்கையில் ஒரு தீர்க்கமும், மக்களின் பழக்க வழக்கங்களில் ஒரு உயர்வும் ஏற்படவில்லை என்கிறார் ராம்ஸ்வர்ப். பதில்:4 இவரது இந்த வாதத்துக்கு இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு பாமரன் கூட பதில் சொல்ல முடியும். அவ்வளவு முட்டாள் தனமான கூற்றை இவர் எடுத்து வைக்கிறார். உள்ளங்கை நெல்லிக் கனியாகத் […]

கேள்வி:3

கேள்வி:3 முஹம்மது நபி மக்காவில் இருந்த போது, அவருக்கு எழுத்தராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸஃது பற்றி ஹதீஸ் கூறுகிறது. நபி சொன்னபடி அவர் இறைவழிபாட்டை எழுதிக் கொள்வார். நபி சில சமயங்களில் பாதியில் நிறுத்தி விடுவார். அப்போது அந்த எழுத்தர் வார்த்தைகளைப் போட்டு நிரப்புவார். அவர் சேர்த்து எழுதிய வார்த்தைகளும் இறைவேதத்துடன் ஒன்றிவிட்டதைக் கண்டு அவர் குழப்பமுற்றார். இது அவருடைய உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. இதைப் பற்றி பலரிடமும் அவர் பேச ஆரம்பித்தார். இஸ்லாத்தையும் கை […]

கேள்வி:2

கேள்வி:2 அவருக்கு இறைவனிடமிருந்து வஹி வருகிறது என முதன் முதலில் நம்பியவர் அவருடைய முதலாளியும், முதல் மனைவியுமான கதீஜா தான். ஆனால் இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறான் போலும் என்று அவருடைய நேசத்துக்குரிய மனைவி ஆயிஷாவே அடிக்கடி அவரை கிண்டல் செய்திருக்கிறார். மேலும் தான் முஹம்மதுக்குக் கொடுத்த அறிவுரைக்கேற்ப மூன்றுமறை நபிக்கு வஹீ வந்ததாக உமர் பெருமையடித்துக் கொண்டார். இது உமருக்குத் திருப்தியளித்திருக்கலாம். ஆனால் பலருடைய உள்ளங்களில் வினாக்களை எழுப்பிவிட்டது என்கிறார் ராம்ஸ்வர்ப். பதில்:2 இந்த […]

கேள்வி:-1

கேள்வி:-1 மக்கத்துக் காபிர்கள் அல்லாத், அல்உஸ்ஸா, மனாத் ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டு வந்தனர். பல தெய்வ வணக்கம் கூடாது என்று போதித்த முஹம்மதுக்குத் திடீரென ஒரு வஹி வருகிறது. அல்லாத், அல்உஸ்ஸா, மற்றும் மூன்றாவதான மனாத்தைப் பற்றி நீர் நினைத்ததுண்டா? அவை போற்றப்பட்ட பறவைகள்; அவற்றின் சிபாரிசுகள் நிச்சயமாக விரும்பப்படுகின்றது என்று அந்த வஹி கூறுகிறது. தங்களின் தெய்வங்களை முஹம்மது புகழ்ந்து கூறியவுடன் மக்காவாசிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து முஹம்மதுவைப் பின்பற்றி அல்லாஹ்வை வணங்க வழி ஏற்படுகிறது. […]

முன்னுரை

சல்மான் ருஷ்டியின் நூலை ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990 களில் நான் எழுதிய மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச இணைப்பாக வெளியிடப்பட்டது. இதை சில இணைய தளங்கள் தமது ஆக்கம் போல் வெளியிட்டுள்ளன. அந்த நூல் இங்கே வெளியிடப்படுகிறது. ராம் ஸ்வரூப் என்பவர் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட ஹிந்து மதத்தைச் சார்ந்தவர். ஹதீஸின் வாயிலாக இஸ்லாத்தை அறிந்து கொள்ளுதல் என்று ஹிந்தி மொழியில் இவர் எழுதிய நூல் இந்திய […]

16) ஹாரூத் மாரூத்

2:102 வசனம் சூனியத்தின் மூலம் பெரிதாக ஒன்றையும் செய்ய முடியாது என்பதை அறிந்தோம். இவ்வசனத்தை எடுத்துக் காட்டி விட்டதால் அதில் கூறப்படும் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பதையும் இது பற்றி விரிவுரையாளர்கள் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாட்டையும் இங்கே சுட்டிக் காட்டுவோம். பில்லி சூனியத்துடன் அந்த விளக்கம் தொடர்புடையது அல்ல என்றாலும் இவ்வசனம் பற்றி சரியான அறிவைப் பெறுவதற்காக இதை விளக்குகிறோம். அப்படியானால் ஹாரூத், மாரூத் என்போர் யார்? அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டிய […]

15) சரியான மொழி பெயர்ப்பு

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். அவ்விரு வானவர்களுக்கும் (சூனியக் கலை) அருளப்படவில்லை. ஸுலைமான் (ஏக இறைவனை) மறுக்கவில்லை. பாபில் நகரத்தில் சூனியக்கலையை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே மறுத்து விடாதே! என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையே அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களுக்குத் தீங்களிப்பதையும், […]

14) தவறான மொழிபெயர்ப்பு

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால், ஸுலைமான் ஒரு போதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் நிச்சயமாக நாங்கள் சோதமையாக இருக்கிறோம். (இதைக்கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று சொல்லி எச்சரிக்காத வரையில் எவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் கணவன் மனைவியரிடையே பிரிவை […]

13) முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் (113:4) என்ற சொற்றொடரை வைத்துக் கொண்டு சூனியத்தினால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுகின்றனர். முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடச் சொல்வதால் அவர்களால் தீங்கிழைக்க இயலும் என்பது உறுதியாகிறதே என்று இவர்கள் கேட்கின்றனர். இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் […]

12) முரண்பட்ட அறிவிப்புக்கள்

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள் என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது. அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது. நபிகள் நாயகம் […]

11) ஹதீஸ்களும் மார்க்க ஆதாரங்களே!

திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரமும் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் தான் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் ஒரு அடிப்படையான விசயத்தை நாம் மறந்து விடக் கூடாது. நம்பகத் தன்மையில் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் சமமானவை அல்ல. குர்ஆனைப் பொருத்த வரை அனைத்து நபித்தோழர்களும் […]

10) சூனியம் வைக்கப்பட்டவர் அல்லர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்த மக்கள் முரண்பட்ட இரண்டு விமர்சனங்களைச் செய்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதங்களைக் கண்ட போது இவர் சூனியம் செய்கிறார் என்று சில வேளை விமர்சனம் செய்தனர். வேறு சில வேளைகளில் இவருக்கு யாரோ சூனியம் வைத்திருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தனர். இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு உளறுகிறார் என்பது இந்த விமர்சனத்தின் கருத்தாகும். பல நபிமார்கள் இவ்வாறு விமர்சனம் செய்யப்பட்டதாக […]

09) இறைத் தூதர்கள் நிராகரிக்கப்பட்டிருப்பர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது உண்மையாக இருந்தால் அவர்களை அன்றைய மக்கள் இறைத்தூதர் என்று நம்பியிருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை இறைத்தூதர் என்று நம்பியிருந்தவர்களில் பலரும் அவர்களை விட்டு விலகியிருப்பார்கள். ஒருவரை இறைத் தூதர் என்று நம்புவதற்கு இறைவன் எத்தகைய ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்பதை அறிந்து கொண்டால் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். இறைத்தூதர்கள் என்பதற்கான சான்றுகள் இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். […]

Next Page »