சிறிய செய்திகள் மனனம் செய்வோம்-1
சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள்
- உங்களில் சிறந்தவர் யார்?
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.
ஆதாரம்:(புகாரி: 5027)
2) தொழுகை
தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும்
ஆதாரம்:(முஸ்லிம்: 381)
3) நோன்பு சிறப்பு
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்.
ஆதாரம்:(புகாரி: 1894)
4) செய்திகளில் சிறந்தது எது?
செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.
ஆதாரம்:(முஸ்லிம்: 1573)
5) வழிகாட்டலில் சிறந்தது
வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும்.
ஆதாரம் :(முஸ்லிம்: 1573)
6) எது தர்மம்
எல்லா நற்கர்மமும் தர்மமே.
ஆதாரம்:(புகாரி: 6021)
7) நற்பண்பு
நன்மை என்பது நற்பண்பாகும்
ஆதாரம்:(முஸ்லிம்: 4992)
8) தூய்மை
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.
ஆதாரம் :(முஸ்லிம்: 381)
9) இறந்தோர்
இறந்தோரை ஏசாதீர்கள்!
ஆதாரம்:(புகாரி: 1393)
10) அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம்
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும்.
ஆதாரம்:(முஸ்லிம்: 1190)
11) அல்லாஹ் யாருக்கு கருணை காட்ட மாட்டன்
மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான்.
ஆதாரம்:(புகாரி: 7376)