01) முன்னுரை

நூல்கள்: உம்மு சுலைம் (ரலி) வரலாறு

01) முன்னுரை

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மனிகளில் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார். இவர்கள் ஈமானிய உணர்வும், உறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள், ஒரு தாயாகவும் தாயியாகவும் மட்டுமின்றி இஸ்லாத்திற்க்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள். 

இதுபோன்ற அழுத்தமான அறிவுரைகளுக்கேற்ப நபித்தோழர்கள் அனைவரும் எளியோர்க்கும் வழியோர்க்கும் விருந்திட்டு உபசரித்தார்கள். ஆனால் அபூதல்ஹா, உம்மு சுலைம்(ரலி) இருவரின் வாழ்வு இப்பண்பாட்டில் சிறந்த வியக்கத்தக்கதொரு முன்மாதிரியாய் திகழ்கிறது.

மேலும் நபி (ஸல்) அவர்களால் வாழும்போதே சொர்கதிற்குரியவர்கள் என்று நற்செய்தி சொல்லப்பட்டவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்.