35) ருகூவில் ஓத வேண்டியது
ருகூவில் ஓத வேண்டியது
அல்லாஹும்ம ல(க்)க ர(க்)கஃ(த்)து வபி[B](க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து கஷஅ ல(க்)க ஸம்யீ வ ப[B]ஸரீ, வ முக்கீ வ அள்மீ வ அஸபீ[B]
இதன் பொருள் :
இறைவா! உனக்காக நான் ருகூவு செய்கிறேன். உன்னை நம்பினேன். உனக்குக் கட்டுப்பட்டேன். எனது செவியும், பார்வையும், மஜ்ஜையும், என் எலும்பும், என் நரம்பும் உனக்கே பணிந்தன.
ஆதாரம்:(முஸ்லிம்: 1419, 1290)
ருகூவில் மற்றொரு துஆ
ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ
இதன் பொருள் :
இறைவா! என் எஜமானே நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். இறைவா என்னை மன்னித்து விடு.
ஆதாரம்:(புகாரி: 794, 817, 4293, 4698, 4697)
ருகூவில் மற்றொரு துஆ
ஸுப்[B]ஹான ரப்பி[B]யல் அளீம்.
இதன் பொருள் :
மகத்தான என் இறைவன் தூயவன்.
ஆதாரம்:(அஹ்மத்: 3514, 3334)
ருகூவிலிருந்து எழுந்த பின்
அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவா(த்)தி வமில்அல் அர்ளி வமில்அ மாபை[B]னஹுமா வமில்அ மாஷிஃ(த்)த மின் ஷையின் ப[B]ஃது
இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும், மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு உனக்கே புகழனைத்தும்.
ருகூவிலிருந்து எழுந்த பின் மற்றொரு துஆ
அல்லாஹும்ம ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்:(புகாரி: 795, 7346)
அல்லது
ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்:(புகாரி: 689, 732, 734)
அல்லது
ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்:(புகாரி: 722, 733, 789)
அல்லது
அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து
இதன் பொருள் :
இறைவா! எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.
ஆதாரம்:(புகாரி: 796, 3228, 4560)