ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?
ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள். ஒட்டகத்தின் பாலிலும் சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம்.
மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வரும் செய்தி கூறுகின்றது.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
“உக்ல்’ அல்லது “உரைனா’ குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) பால் ஒட்டகங்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் சிறு நீரையும், பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். (அவற்றின் சிறுநீரையும் பாலையும் பருகி) அவர்கள் உடல் நலம் தேறினர். அறிவிப்பவர்: அனஸ் (ரலி). (புகாரி: 233) ➚
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒட்டகப் பாலும் அதன் சிறுநீரும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இது அன்றைய காலத்து மக்களின் மருத்துவ முறையாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் தொடர்பாகக் கட்டளையிட்டால் அதை ஏற்று செயல்படுத்துவது நம்மீது கடமை. ஆனால் அவர்கள் இது போன்று உலக விஷயம் தொடர்பாக ஏதேனும் கூறினால் அது வஹீ அடிப்படையில் கூறப்பட்டதல்ல. எனவே அதை ஏற்பதற்கும் ஏற்காமல் இருப்பதற்கும் நமக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னை விட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னதாக உள்ளது.(முஸ்லிம்: 4713) ➚
ஒட்டகத்தின் பாலிலும் சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம்.
நபிகள் நாயகம் ஸல அவர்களுக்கு உஹதுப் போரில் காயம் ஏற்பட்டு இரத்தம் பீரிட்டு ஓடியது. இதை நிறுத்த சாம்பலை அந்த இடத்தில் பூசி இரத்தம் கசிவதை நிறுத்தியதாக(புகாரி: 243, 2903, 2911, 3037, 4075, 5248, 5722) ➚ஹதீஸ் உள்ளது.
இப்போது விபத்து ஏற்பட்டு இரத்தம் ஓடினால் சாம்பலைப் பூசுவது நபிவழியைப் பின்பற்றுவதாக ஆகாது. அன்றைக்கு அது தான் ஒரே வழியாக இருந்ததால் அதைத் தான் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இன்று இரத்தம் ஓடுவதை நிறுத்த சிறந்த வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்துவது தான் நபிவழியைப் பின்பற்றும் சரியான வழியாகும்.