அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்
இந்த உலகத்தில் குறிப்பிட்ட சில குற்றங்களை செய்தவர்களை மறுமையில் அல்லாஹ் பார்க்கமாட்டான். அவர்களும் அல்லாஹ்வை பார்க்கும் பாக்கியத்தை இழந்து விடுவார்கள். இவ்வாறு பின்வரும் வசனம் கூறுகிறது.
அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்
(அல்குர்ஆன்: 83:15)➚
மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண்கூடாக காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாக பார்க்கிறோமோ! அதுபோன்று அல்லாஹ்வை காண்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ்,(புகாரி: 7435) ➚
அல்லாஹ்வை பார்ப்பது என்பது சாதாரணமான ஓன்றல்ல, மிகப்பெரிய பாக்கியம், சொர்க்கவாசிகள் சுவர்கத்தில் நுழையும் போது இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். நீ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்யவில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா? என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக எதுவும் இருக்காது.
அறிவிப்பாளர்: ஸுஹைப்,(முஸ்லிம்: 266) ➚
அல்லாஹ் பேசமாட்டான் என்பதை நல்லவார்த்தைகளால் அன்போடு பேசமாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், அல்லாஹ் நரகவாசியைப் பார்த்து வேதனையை சுவை என்று கூறுவதாக திருறைக் குர்ஆன் கூறுகிறது.
சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்).
(அல்குர்ஆன்: 44:49)➚
இன்னும் கேலி செய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்தமாட்டான் என்றால் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்கமாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
குர்ஆனிலும், நம்பத்தகுந்த நபிமொழியிலும் கிட்டத்தட்ட பத்து நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். இன்னும் இரண்டு நபர்கள் இந்த தண்டனைக்கு உரியவர்கள் என்று பலவீனமான ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த 12 நபர்கள் யார் யார் என்பதை வரிசையாக இனி பார்ப்போம்.
(1) வேதத்தை மறைத்தவர்கள்.
(2) பொய் சொல்லி வியாபாரம் செய்தவர்கள்.
(3) சுயநலத் தொண்டன்.
(4) எஞ்சியதை தர மறுத்தவன்.
(5) பெருமைக்காக ஆடையை கணுக்காலுக்கு கீழே கட்டியவன்.
(6) செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன்.
(7) விபச்சாரம் செய்த வயோதிகன்.
(8) பொய்கூறும் அரசன்.
(9) பெருமையடிக்கும் ஏழை.
(10) பெற்றோர்களை விட்டு ஓதுங்கியவன்.
(11) தன் பிள்ளையை விட்டு விலகியவன்.
(12) நன்றி மறப்பவன்.
அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்கமாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும்மாட்டான். அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன்: 2:174)➚
இன்று பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்த தவறை செய்துவருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்கள் அவர்களிடம் காணப்படுகின்றது. அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்கு பாதிப்பு வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள்.
உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது பாத்திஹா, கத்தம் போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆலிம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டது. இவற்றை செயல்படுத்தும்படி அல்லாஹ்வோ! அவனது தூதர் (ஸல்) அவர்களோ! கூறவில்லை என்பது ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும், ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன்வருவதில்லை. பல வியாக்கானங்களைக் கூறி அவர்கள் செய்வதையே! சரி காண்கிறார்கள்.
இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்க்ள் எண்ணிப்பார்ப்பதில்லை.
இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியாது. நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிடமாட்டான்.
உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
(அல்குர்ஆன்: 15:92)➚
யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ! அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.
(அல்குர்ஆன்: 7:6)➚
இதைத் தெளிவாக சஹாபாக்கள் விளங்கியிருந்தார்கள். அபூஹீரைரா (ரலி) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சஹாபாக்கள் குறையாகக் கூறிக்கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் அபூஹீரைரா (ரலி) அவர்கள் ஓரு பொருட்டாக கருதாமல் தான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்கு கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவாகள் எண்ணியதே! இதற்கு காரணம்.
மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய) வர்களும் சபிக்கின்றனர்.
(அல்குர்ஆன்: 2:159)➚
இந்த வசனத்தை அபூஹீரைரா (ரலி) அவர்கள் சுட்டிகாட்டி இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஓரு ஹதீஸைக் கூட கூறியிருக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 118) ➚
நாம் சிறிய சிறிய விஷயங்களில் உறுதிமொழி வாங்கமாட்டோம். மிக முக்கியமான விஷயத்தில் தான் உறுதிமொழி வாங்குவோம். மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தை செய்யக்கூடாது என்று நமக்கு முன் வேதம் வழங்கப்பட்டவர்களான யூத கிரிஸ்தவர்களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தீமையை சம்பாதித்துக் கொண்டார்கள்.
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது” என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர் அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது
(அல்குர்ஆன்: 3:187)➚
நாம் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற்காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோர்களிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.
அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன்: 3:77)➚
விற்பவரும், வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமைபடைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவுபடுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.
அறிவிப்பாளர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),(புகாரி: 2110) ➚
மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும்மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஓருவன் தன் பொருளை அதிக விளைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விளையை விட அதிக விளைகொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 2369) ➚
அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே! விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 2358) ➚
தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமான காரியத்தை செய்யும்படி கூறினால் அவருக்கு கட்டுப்பட கூடாது. ஏனெனில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்வதில் கட்டுப்படுதல் இல்லை. கட்டுப்படுதல் என்பது நல்ல விஷயத்தில் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அலீ (ரலி),(புகாரி: 7257) ➚
தலைவர் அநீதமாக நடந்தாலும் அவருக்கு எதிராக நாம் களம் இறங்கக்கூடாது.
நமது தேவையை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறக்கூடாது. தலைவர் நம்மை விட அழகில் அந்தஸ்த்தில் தாழ்ந்தவராக இருந்தாலும் கட்டுப்பட வேண்டும்.
விரைவில் உங்களை விட பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இன்னும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்களும் நடக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி),(புகாரி: 3603) ➚
உலர்ந்த திராட்சைப் போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கருப்ப நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரது சொல்லை) கேளுங்கள். (அவருக்கு) கீழ்படியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக்,(புகாரி: 7142) ➚
தனது கிணற்றின் நீரையோ! அல்லது குளத்தின் நீரையோ! அவன் அதை பயன்படுத்தியதற்குப் பிறகு எஞ்சிய நீரை பிறர் பயன்படுத்த விடாமல் தடுத்தவனும் இந்த துர்பாக்கிய நிலையை அடைவான். இன்னொருவன் தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்கவிடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 2369) ➚
தண்ணீர் என்பது நாமாக உருவாக்கும் பொருள் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நமக்கு கிடைக்கும் அற்புதமாகும். இந்த அற்புதத்தை பிறர் அனுபவிக்கவிடாமல் தடுத்தவனுக்கு அல்லாஹ் மறுமையில் தனது அருளைத் தடுத்துவிடுவான்.அல்லாஹ்வுக்கும், நமக்கும் மத்தியில் உள்ள பாவங்களை அல்லாஹ் தான் நாடினால் மன்னிப்பான். ஆனால் அடியார்களுக்கு நாம் செய்த பாவங்களை அந்த அடியார் மன்னித்தாலேத் தவிர வேறு யாரும் மன்னிக்க முடியாது. நாம் பிறருக்கு இரக்கப்பட்டால் தான் அல்லாஹ் நமக்கு இரக்கப்படுவான்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள், ‘எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை’ என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 5997) ➚
ஓரு நாய்க்கு இரக்கப்பட்டு தண்ணீர் கொடுத்த விபச்சாரியையே! அல்லாஹ் மண்ணித்து விட்டான். பூனைக்கு இரக்கம் காட்டாத பெண்னை நரகத்திற்குத் தள்ளினான்.
(முன்னொரு காலத்தில்) நாய் ஓன்று ஓரு கிணற்றை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஓருத்தி அதைப் பார்த்தாள். உடனே அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்கு புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்கு பாவமண்ணிப்பு வழங்கப்பட்டது.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 3467) ➚
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின்
அளவை அடையவே மாட்டாய்!
(அல்குர்ஆன்: 17:37)➚
நபி (ஸல்) அவர்களிடத்தில் ஓரு மனிதர் இடதுகையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், உன் வலது கையால் சாப்பிடு! என்று கூறினார்கள். (அதற்கு அவர்) என்னால் முடியாது என்று கூறினார். பெருமையே! அவரை (வலது கையில் சாப்பிடவிடாமல்) தடுத்தது. பிறகு அவரால் கையை வாய்க்கு அருகில் கொண்டு செல்ல முடியவில்லை.
அறிவிப்பாளர்: சலமா பின் அகூஃ, நூல்: (புகாரி: 3766) ➚
யாருடைய உள்ளத்தில் அனு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),(முஸ்லிம்: 147) ➚
யாருடைய உள்ளத்தில் அனு அளவு தற்பெருமை இருக்கின்றதோ! அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தமது ஆடை அழகாக இருக்க வேண்டும். தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஓருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா? என்று அப்போது ஓரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அழகானவன். அழகையே! அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களை கேவலமாக மதிப்பதும் தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),(முஸ்லிம்: 147) ➚
பெருமையோடு ஆடையை கணுக்காலுக்கு கீழே தொங்விட்டவனை அல்லாஹ் மறுமையில் கண்டுகொள்ள மாட்டான். அவர்களுக்கு தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவாகள் கூறியுள்ளார்கள்.
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறைகள் கூறினார்கள். நான் (அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு தமது ஆடையை (கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர். (செய்த உபகாரத்தை) சொல்லிக்காட்டுபவர். பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி),(முஸ்லிம்: 171) ➚
(முன் காலத்தில்) ஓருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தினால் (கணுக்கால் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டே! நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்றுகொண்டே இருப்பான்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),(புகாரி: 3485) ➚
பிறருக்கு தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை அல்லாஹ் பார்க்கமாட்டான். அவனிடம் பேசமாட்டான். அவனை பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான்.
மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேசமாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்பம் தரும் வேதனை தான் உண்டு என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். இதையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறைகள் கூறினார்கள். நான் (அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு தமது ஆடையை (கணுக்காளுக்கு) கீழே இறக்கிக்கட்டியவர். (செய்த உபகாரத்தை) சொல்லிக் காட்டுபவர். பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி),(முஸ்லிம்: 171) ➚
தான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக செய்த உதவியை சொல்லிக்காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித்தந்தாலும் அவருக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காது. இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன்: 2:264)➚
தான் செய்த உதவியை சொல்லிக்காட்டாதவற்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனி டம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 2:262)➚
அல்லாஹ் குர்ஆனில் சொர்க்கவாசிகளின் சில பண்புகளை சுட்டிக்காட்டுகிறான்.அவர்கள் யாருக்கு உதவிசெய்வார்களோ! அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்வதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொறுத்தத்தைப் பெறுவதற்காகவே! உதவுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே! உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை
(அல்குர்ஆன்: 76:8)➚
மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(முஸ்லிம்: 156) ➚
நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்விடத்தில் பாவங்களில் மிகப்பெரியது எது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது என்று சொன்னார்கள். நிச்சயமாக அது மிகப்பெரிய குற்றம்தான் என்று சொல்லிவிட்டு பிறகு எது என்று கேட்டேன். உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உனவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொள்வது என்று சொன்னார்கள். நான் பிறகு எது என்று கேட்க உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),(புகாரி: 4477) ➚
விபச்சாரன் விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஓருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஓருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஓருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளையடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 2475) ➚
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.
(அல்குர்ஆன்: 24:2)➚
மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(முஸ்லிம்: 172) ➚
நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறுசெய்வான். அவனை நம்பி எதையும் ஓப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
அறிவிப்பாளபர்: அபூஹீரைரா (ரலி),(புகாரி: 33) ➚
உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஓரு மனிதர் உண்மைப் பேசிக்கொண்டே! இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகிவிடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஓரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெறும் பொய்யர் எனப்பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ,(புகாரி: 6094) ➚
மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்களில் ஓருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன். (மற்றொருவன்) பொய் கூறும் அரசன். (மற்றொருவன்) பெருமையடிக்கும் ஏழை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி),(முஸ்லிம்: 172) ➚
யார் பெறுமை மற்றும் மோசடி மற்றும் கடன் ஆகியவற்றை விட்டு நீங்கியவராக மரணிக்கிறாரோ! அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: சவ்பான் (ரலி),(திர்மிதீ: 1497) ➚
அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: முஆத் பின் அனஸ் (ரலி),(அஹ்மத்: 15083) ➚
அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: முஆத் பின் அனஸ் (ரலி),(அஹ்மத்: 15083) ➚
மனிதன் இறந்துவிட்டால் மூன்றைத் தவிர அவனுடைய நல்ல செயல்பாடுகள் முடிவு பெற்றுவிடுகின்றன. (ஓன்று) நிலையான சொர்க்கம், (மற்றொன்று) பிரயோஜனமிக்க கல்வி, (மற்றொன்று) அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி) ,(முஸ்லிம்: 3084) ➚
அல்லாஹ்விற்கு சில அடியார்கள் உண்டு. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் (ஓருவன்) தனது பெற்றோரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன். (மற்றொருவன்) தனது பிள்ளையை விட்டு விலகியவன். (மற்றொருவன்) ஓரு கூட்டம் அவனுக்கு உதவி செய்தது. அவன் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி மறந்து அவர்களை விட்டும் விலகியவன் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: முஆத் பின் அனஸ் (ரலி) ,(அஹ்மத்: 15083) ➚
மக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக ஆகமாட்டான்.
அறிவிப்பாளர்: அபூஹீரைரா (ரலி) ,(திர்மிதீ: 1877) ➚
தனக்கு உதவியவருக்கு நன்றி செலுத்தும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்கள்.
(உங்களில்) ஓருவருக்கு நன்மை செய்யப்பட்டு அவர் அந்நன்மை செய்தவருக்கு جَزَاكَ اللَّهُ خَيْرًا (அல்லாஹ் உங்களுக்கு நன்மையை கூலியாக வழங்குவானாக) என்று கூறினால் அவர் அதிகமாக நன்றி செலுத்தியவராகிவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
அறிவிப்பாளர்: உஸாமா பின் ஸைத் (ரலி) ,(திர்மிதீ: 1958) ➚
உங்களுக்கு யாரேனும் நன்மை செய்தால் அவருக்கு பிரதி உபகாரமாக எதையாவது கொடுங்கள். பிரதி உதவி செய்வதற்கு உங்களிடத்தில் எதுவும் இல்லையென்றால் நீங்கள் அவருக்கு பரிகாரம் செய்துவிட்டதாக எண்ணும் வரை அவருக்காக துஆ செய்யங்கள் என்று நபி (ஸல்) அவாகள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் இப்னு உமர் (ரலி) ,(அஹ்மத்: 5110) ➚
நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடுசெய்து வந்தார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 2585) ➚
மேற்க்கூறப்பட்ட அணைத்து செய்திகளிலிருந்தும் பெறக்கூடிய படிப்பினைகளை பெற்று அல்லாஹ்வின் சாபத்திலிருந்து விடுபட்டவர்கலாக, மேலும் மறுமை நாளில் வல்ல அல்லாஹ் நம்மை பார்க்க ஆசை பட்டவனாக ஆகும் வழிகளை நாம் செய்து உயர்ந்த சொர்கமான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் நுழைய வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.