ஹிஜாப் விவகாரம் கேரளா அரசு அதிரடி அறிவிப்பு !

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

கேரளாவில் பள்ளுருத்தி என்கிற பள்ளியில் மத துவேஷத்தை உமிழ்ந்த ஆசிரியையால் நாடளவில் மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!மதச்சார்மின்மைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் கேரளா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த காரணத்தினால் மனதைக் காயப்படுத்துகின்ற வகையில் பெண் ஆசிரியை ஒருவர் வன்மத்தைக் கக்கியுள்ளார்!

திருவனந்தபுரம் பள்ளுருத்தி பகுதியில் “செயிண்ட் ரீட்டா” என்ற பெயரில் கிறிஸ்தவ தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகின்றது!இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி “ஹிஜாப்” அணிந்து வந்துள்ளார்! இவ்வாறு “ஹிஜாப்” அணிவது விதிமுறைகளுக்கு எதிரானது! என்று கூறி 13 வயது மதிக்கத்தக்க எட்டாம் வகுப்பு மாணவியை கடுமையாக ஆசிரியை கண்டித்துள்ளார்!மேலும், வகுப்புக்குள் அனுமதிக்காமல் பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டிற்கும் அனுப்பி விட்டார்! இந்தக் கொடுமையான அடாவடித்தனத்தைக் கண்டித்துப் பல்வேறு நடுநிலையாளர்கள் கண்டனக் குரலை எழுப்பினார்கள்!மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாநிலக் கல்வித் துறையின் துணை இயக்குநரகம் பள்ளியில் விசாரணை நடத்தி கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார்கள்!

மேலும், சம்பந்தப்பட்ட முஸ்லிம் மாணவியின் தந்தை, ”ஹிஜாப் சம்பவத்திற்குப் பிறகு என் மகள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.என்னுடைய மகள் மீண்டும் அந்தப் பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டாள்.அதனால் அவளுடைய விருப்பத்திற்கு மதிப்பளிக்க முடிவு செய்தோம். இனிமேல் என் மகள் செயிண்ட் ரீட்டா பள்ளிக்குச் செல்ல மாட்டார்” என்று அவரது தந்தை கூறிவிட்டார்!இந்நிலையில், ஹிஜாப் தடையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவி வேறு எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேர்வதாக இருந்தாலும், அவருக்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என்று அம்மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சர் “வி. சிவன்குட்டி” கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”கொச்சியில் உள்ள ஒரு தேவாலயத்தால் நடத்தப்படும் தனியார் பள்ளியில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவி, வேறு எந்த நிறுவனத்திலும் சேர விருப்பம் தெரிவித்தாலும், அவரை அனுமதிக்க மற்றும் உதவ அரசு தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.மேலும், அந்த இஸ்லாமிய மாணவி அரசாங்கத்தை அணுகினால், அவர் சேர விரும்பும் எந்தப் பள்ளியிலும் ஒரு சிறப்பு உத்தரவு மூலம் உடனடியாக சேர்க்கை கிடைக்க நடவடிக்கை எடுப்போம்.கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தின்படி, எந்த மாணவரும் படிப்புக்கான வாய்ப்பை இழக்கக் கூடாது. செயிண்ட் ரீட்டா பள்ளி சிறுமியை வேதனைப்படுத்தியுள்ளது.

அச்சிறுமிக்கு ஏற்படும் எந்தவொரு மன அழுத்தத்திற்கும் பள்ளி நிர்வாகமே பொறுப்பு” என்று கூறி வன்மையாகக் கண்டித்தார்!அரசாங்கமே இதுபோன்ற சூழலில் மிகச் சரியான ஒத்துழைப்புடன் உதவி புரிவது வரவேற்கத்தகுந்த மற்றும் பாராட்டத்தக்க அம்சமாகும்!இதுபோன்ற மததுவேஷத்தை விதைக்கின்ற ஆசிரியர்களுக்கு தக்க முறையில் பாடம் புகட்ட வேண்டும்!சகிப்புத் தன்மை இல்லாமைக்கு இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கும், மாணவிகளை வேதனைப்படுத்தி காயப்படுத்தாமல் இருப்பதற்கும் இதுபோன்ற ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட வகையில் தகுதியானவர்களை வைத்து பாடங்கள் நடத்தி திருத்த வேண்டும்! இதுவே நடுநிலையாளர்களின் கோரிக்கையாகும்!