பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?
பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?
உடனே தொழக் கூடாது.
நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் : (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது 22041
மேற்கண்ட ஹதீஸில் கடமையான தொழுகை தொழுத பின் உபரியாக தொழ நாடினால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையாமல் இடம் மாறிக் கொள்ள வேண்டும். அல்லது ஏதேனும் பேசி விட்டு அதே இடத்தில் தொழ வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணமும் இந்த ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது இரண்டும் ஒரே தொழுகை என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பது தான் அந்தக் காரணம்.
தொழுகையுடன் சம்மந்தமில்லாத காரியத்தைச் செய்தல், அல்லது அதிக இடைவெளி கொடுத்தல், அல்லது தஸ்பீஹ் திக்ரு செய்தல் போன்றவற்றால் பிரித்து விட்டால் அதே இடத்தில் தொழலாம். உடனே உபரித் தொழுகை தொழக்கூடியவர்கள் யாரிடமாவது பேசிவிட்டோ, அல்லது இடம் மாறியோ தொழலாம்.