05) மலக்குமார்களை நம்புதல்
பாடம் 4
மலக்குமார்களை நம்புதல்
மலக்குமார்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள் ஆவார்கள். அவர்கள் இறைவனை மட்டுமே வணங்கி அவனுக்கு மட்டுமே வழிபடக் கூடியவர்கள்.
وَلَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ(19)يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ(20) سورة الأنبياء
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பகலும் துதிப்பார்கள். சப்படைய மாட்டார்கள்.
(அல்(அல்குர்ஆன்:) ➚,20)
لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ(6) سورة التحريم
தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்(அல்குர்ஆன்:) ➚
மலக்குமார்களுக்கு இறை தன்மையோ மனிதத் தன்மையோ கிடையாது. அவர்கள் இறைவனின் பிள்ளைகளும் கிடையாது.
மலக்குமார்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ர)
நூல் : முஸ்ம் (5314)
ஆம் மலக்குமார்கள் இறக்கைகள் உடையவர்களாகத்தான் படைக்கப்பட்டுள்ளனர். இதனை பின்வரும் ஆதாரங்களிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
الْحَمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلَائِكَةِ رُسُلًا أُولِي أَجْنِحَةٍ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ يَزِيدُ فِي الْخَلْقِ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ(1) سورة فاطر
வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண் டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகு களைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 35:1) ➚
நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீல்(அலை) அவர்களை 600 இறக்கை உடையவர்களாகக் கண்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ர)
நூல் : புகாரீ (4857)
மலக்குமார்கள் அல்லாஹ்வின் பெண்மக்கள் என்று கூறுபவன் காஃபிர் ஆவான்.
إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى(27)النجم 53
மறுமையை நம்பாதோர் வானவர்களுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர். .
மலக்குமார்கள் ஆண்களும் அல்ல பெண்களும் அல்ல. அவர்கள் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அடியார்ககள் ஆவார்கள்.
மலக்குமார்களின் எண்ணிக்கைளை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வரையறுத்துக் கூற முடியாது.
நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போது ஏழாவது வானத்திற்கு வந்தார்கள். அங்கு நடந்ததைப் பற்றிக் கூறும்போது,
எனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரயீடம் கேட்டேன். அவர் இது பைதுல் மஃமூர் ஆகும். இதில் நாள்தோறும் எழுபதினாயிரம் மலக்குமார்கள் தொழுகின்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் அவர்களில் யாரும் அதில் நுழைவதில்லை என்று கூறினார்கள்.
நூல் : புகாரீ (3207)
மேற்கண்ட ஹதீஸிருந்து வரையறுத்துக் கூறமுடியாத அளவிற்கு மிகஅதிக எண்ணிக்கையில் மலக்குமார்கள் உள்ளனர் என்பது தெளிவாகிறது.
திருமறைக்குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் மொத்தம் நான்கு மலக்கு மார்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.
1.ஜிப்ரீல் (அலை): (அல்குர்ஆன்: 2:98) ➚
2.மிக்காயீல் (அலை) : (அல்குர்ஆன்: 2:98) ➚
3.இஸ்ராஃபீல் (அலை) : (முஸ்ம் 1289)
4.மாக் (அலை) இவர் நரகத்தின் காவலாளி ஆவார். (43:77)
மலக்குமார்கள் இறைவனுடைய அனுமதியின் பிரகாரம் வஹீயை கொண்டு வருதல், நன்மை, தீமைகளைப் பதிவு செய்தல், உயிரைக் கைப்பற்றுதல், பாதுகாவல், அர்ஷைச் சுமப்பவர்கள் , நரகக் காவலாளிகள், கருவறையில் விதியை எழுதுதல், கப்ரில் விசாரணை செய்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.
يُنَزِّلُ الْمَلَائِكَةَ بِالرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ أَنْ أَنذِرُوا أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاتَّقُونِي(2) سورة النحل
”என்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்!” என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான். (அல்குர்ஆன்: 16:2) ➚
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ(10)كِرَامًا كَاتِبِينَ(11)يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ(12) سورة الإنفطار
உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள். (அல்(அல்குர்ஆன்:) ➚,11,12)
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنْ الْيَمِينِ وَعَنْ الشِّمَالِ قَعِيدٌ(17)مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ(18) سورة ق
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்: 50:17) ➚,18)
قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ(11) سورة السجدة
”உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!
لَهُ مُعَقِّبَاتٌ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ أَمْرِ اللَّهِ …(11) سورة الرعد
”மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். (அல்குர்ஆன்: 13:11) ➚
எட்டு மலக்குமார்கள் மறுமை நாளில் அர்ஷை சுமப்பார்கள். அதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாகும்.
وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ(17) سورة الحاقة
அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். (அல்குர்ஆன்: 69:17) ➚
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ(30)وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً…(31) سورة المدثر
அதன் மேல் பத்தொன்பது (வானவர்கள்) உள்ளனர். நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. (அல்குர்ஆன்: 74:30) ➚,31)
தாயின் வயிற்றிலுள்ள கரு, நான்கு மாதங்களை அடைந்ததும் அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள், ஆயுள், செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழுதுமாறு கட்டளையிடுவான்.
நூல் : புகாரீ (7454)
கப்ரில் மய்யித் வைக்கப்பட்டதும் இரு மலக்குகள் அதனிடம் வந்து அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும், நபி யார்? என்பதாகவும் கேள்விகளைக் கேட்பார்கள். நூல் : திர்மிதீ (991)