பெரும்பாவங்களை அறிந்து கொள்வோம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

உலகப்படைப்புக்களில் மனிதன் பலவீனமானவன். மறதியாளன். அறியாமையில் இருப்பவன். அவன் தன் பலவீனத்தாலும் அறியாமையாலும் அல்லாஹ்வை மறந்ததினாலும் பாவம் செய்து விடுகிறான்.

பாவம் செய்வது, இறைவனுக்கு மாறு செய்வது மனித இயல்பு. உலகத்தில் அனைவரும் பாவம் செய்பவர்கள் தான். அல்லது செய்தவர்கள் தான். ஆனால் அவ்வாறு பாவம் செய்பவர்களில் சிறந்தவர்களும் புத்திசாலிகளும் யாரென்றால் தன் பாவங்களை நினைத்து வருந்தி திருந்தி பாவமன்னிப்பின் மூலம் அல்லாஹ்விடம் மீளுபவர்கள் தான்.

பாவம் பண்ண பிறகு பாவ மன்னிப்பு கேட்பவர் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ تُوبُوٓا۟ إِلَى ٱللَّهِ تَوْبَةً نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.

(அல்குர்ஆன்: 66:8)➚

قُلْ يَـٰعِبَادِىَ ٱلَّذِينَ أَسْرَفُوا۟ عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன்: 39:53)➚

وَٱلَّذِينَ إِذَا فَعَلُوا۟ فَـٰحِشَةً أَوْ ظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ ذَكَرُوا۟ ٱللَّهَ فَٱسْتَغْفَرُوا۟ لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ ٱلذُّنُوبَ إِلَّا ٱللَّهُ وَلَمْ يُصِرُّوا۟ عَلَىٰ مَا فَعَلُوا۟ وَهُمْ يَعْلَمُونَ

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 3:135)➚

إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًا صَـٰلِحًا فَأُو۟لَـٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَـٰتٍ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا وَمَن تَابَ وَعَمِلَ صَـٰلِحًا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًا

திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.

(அல்குர்ஆன்: 25:70-71)➚

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَقُولُوا۟ قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَـٰلَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.
(அல்குர்ஆன்: 33:71-72)➚

மனிதன் செய்கின்ற பாவங்களை இரண்டு வகைகளாக பிரித்து நோக்க முடியும்.

சிறிய பாவங்கள்:-

இப்பாவங்கள் சில வேளைகளில் மனிதன் அறிந்ததும் அறியாமலும் செய்து கொள்ள முடியும். இவைகளிலிருந்து பாவமன்னிப்பு பெறுவதாக இருந்தால் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

உதாரணம்: கடமையான தொழுகைகளை பேணித் தொழுதல், வுழுவினை பூரணமாக செய்தல் இன்னும் சில உபரியான வணக்கங்களை செய்வது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமையும். இது பாவங்களின் முதலாவது வகையாகும்.

பெரும்பாவங்கள்:-

இது பாவங்களின் இரண்டாவது வகையாகும். இதனைப் பற்றி சில உப தலைப்புகள் மூலமாக அவதானிக்கலாமென நினைக்கிறேன்.

பெரும்பாவங்கள் என்றால் என்ன?

பெரும்பாவங்கள் என்றால் எந்தக் குற்றத்தை செய்வதன் மூலம் உலகத்திலேயே குற்றப்பரிகாரம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதோ அவைகளும், அல்லது அல்லாஹ்வுடைய சாபம், தண்டனை, கோபத்தைப் பெற்றுத்தரக் கூடியவைகளாக இருக்கின்றனவோ அவைகளே பெரும்பாவங்களாகும்.

பெரும்பாவங்களின் எண்ணிக்கை:

இது பற்றிய விடயத்தில் உலமாக்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்கள். சிலர் “அழிவைத் தரக்கூடிய 7 பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்” என்ற ஹதீஸின் படி பெரும் பாவங்கள் ஏழு என்றும் இன்னும் சிலர் 70 என்றும் ஒவ்வொரு விதமான பதில்களை ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகின்றனர்.

பெரும் பாவங்களுக்கான உதாரணங்கள்:
  • இணைவைத்தல்.
  • சூனியம் செய்தல்.
  • தொழுகையை விடுதல்.
  • ஸகாத் கொடுக்க மறுத்தல்.
  • ரமழான் மாதத்தில் நோன்பை விட்டுவிடல்.
  • பெற்றோருக்கு நோவினை செய்தல்.
  • விபச்சாரம் செய்தல்.
  • அநாதையின் சொத்தை சாப்பிடுதல்.
  • உறவுகளை துண்டித்தல்.
  • வட்டி.
  • மது அருந்துதல்.
  • திருடுதல்.
  • அவதூறு கூறல்.
  • ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகுதல்.

இது போன்று இன்னும் சில பாவங்களையும் குறிப்பட முடியும்.

حَدَّثَنِي طَيْسَلَةُ بْنُ مَيَّاسٍ قَالَ:
كُنْتُ مَعَ النَّجَدَاتِ، فَأَصَبْتُ ذُنُوبًا لَا أَرَاهَا إِلَّا مِنَ الْكَبَائِرِ، فَذَكَرْتُ ذَلِكَ لِابْنِ عُمَرَ قَالَ: مَا هِيَ؟ قُلْتُ: كَذَا وَكَذَا، قَالَ: لَيْسَتْ هَذِهِ مِنَ الْكَبَائِرِ، هُنَّ تِسْعٌ: الْإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ نَسَمَةٍ، وَالْفِرَارُ مِنَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَةِ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَإِلْحَادٌ فِي الْمَسْجِدِ، وَالَّذِي يَسْتَسْخِرُ، وَبُكَاءُ الْوَالِدَيْنِ مِنَ الْعُقُوقِ. قَالَ لِي ابْنُ عُمَرَ: أَتَفْرَقُ النَّارَ، وَتُحِبُّ أَنْ تَدْخُلَ الْجَنَّةَ؟ قُلْتُ: إِي وَاللَّهِ، قَالَ: أَحَيٌّ وَالِدُكَ؟ قُلْتُ: عِنْدِي أُمِّي، قَالَ: فَوَاللَّهِ لَوْ أَلَنْتَ لَهَا الْكَلَامَ، وَأَطْعَمْتَهَا الطَّعَامَ، لَتَدْخُلَنَّ الْجَنَّةَ مَا اجْتَنَبْتَ الْكَبَائِرَ

தைஸலா பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், (காரிஜிய்யாவின்-ஹரூரிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவரின் ஆதரவாளர்களுடன் சேர்ந்திருந்தபோது சில பாவங்களை செய்துவிட்டேன். அவைகளை பெரும்பாவங்கள் என்று நான் கருதினேன். எனவே இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். அதற்கவர்கள், “அந்தப் பாவங்கள் எவை? என்று என்னிடம் கேட்டார்கள். நான், “அவை இன்னின்ன பாவங்கள்” என்று கூறினேன்.

அதற்கவர்கள், இவைகள் பெரும்பாவங்கள் அல்ல. பெரும்பாவங்கள் ஒன்பதாகும். அவைகள்:

1 . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும்,
2 . நியாயமின்றி கொலைசெய்வதும்,
3 . போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும்,
4 . கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்,
5 . வட்டியை உண்பதும்,
6 . அனாதைகளின் செல்வத்தை உண்பதும்,
7 . கஅபாவின் புனிதத்தை சீர்குழைப்பதும்,
8 . (கேலி கிண்டல் செய்வதும்; அல்லது) சூனியம் செய்வதும்,
9 . பெற்றோருக்கு தொல்லைத் தந்து அழவைப்பதும் ஆகும்

என்று கூறினார்கள்.

(al-adabul-mufrad-8: 8)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ»
(90) وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ جَمِيعًا، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، كِلَاهُمَا عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 146)

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ» قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَأَكْلُ الرِّبَا، وَالتَّوَلِّي يَوْمَ
الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصِنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்திடுவீர்!” என்று கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று பதிலளித்தார்கள்.

(முஸ்லிம்: 145)

عَنْ أَنَسٍ،
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَبَائِرِ، قَالَ: «الشِّرْكُ بِاللهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَقَوْلُ الزُّورِ» (88) وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ أَبِي بَكْرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَبَائِرَ – أَوْ سُئِلَ عَنِ الْكَبَائِرِ – فَقَالَ: «الشِّرْكُ بِاللهِ، وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ» وَقَالَ: «أَلَا أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟» قَالَ: ” قَوْلُ الزُّورِ – أَوْ قَالَ: شَهَادَةُ الزُّورِ – “، قَالَ شُعْبَةُ: وَأَكْبَرُ ظَنِّي أَنَّهُ شَهَادَةُ الزُّورِ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள்” அல்லது “பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது”. அப்போது அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)” என்று கூறினார்கள்.

பிறகு “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு, “பொய் பேசுவது” அல்லது “பொய் சாட்சியம் கூறுவது” தான் (அது) என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 144)

عَنْ عَبْدِ اللهِ، قَالَ
سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللهِ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ» قَالَ: قُلْتُ لَهُ: إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ، قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ مَخَافَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ» قَالَ: قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், “நிச்சயமாக அது மிகப் பெரிய பாவம்தான்” என்று சொல்லிவிட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன்(மீது அபார நம்பிக்கைவைத்துள்ள) அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது” என்று சொன்னார்கள்.

(முஸ்லிம்: 141)

பெரும் பாவங்களிலிருந்து தவிர்ந்து நடப்பதன் சிறப்பு:

பெரும்பாவங்களை செய்வதிலிருந்து தவிர்ந்து நடப்பது எம்முடைய சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஒரு காரணியாக அமைகின்றது.
அல்லாஹ் கூறுகிறான்:

إِن تَجْتَنِبُوا۟ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًا كَرِيمًا

உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்புமிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.

(அல்குர்ஆன்: 4:31)➚

எனவே நாமும் இந்த பெரும் பாவங்களை விட்டு முற்றுமுழுதாக விலகி நடக்க வேண்டும். நாம் இதற்கு முன் தெரியாமல் தவறு செய்திருந்தால் அந்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொள்வேண்டும். மேலும் வரக்கூடிய காலத்தில் இது போன்ற பாவங்களை செய்யாமலிருக்க அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக…