03) அல்லாஹ்வை நம்புதல்

நூல்கள்: இஸ்லாத்தின் அடிப்படைகள்

பாடம் 2

அல்லாஹ்வை நம்புதல்

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷில் வீற்றிருக்கிறான்.

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன. பின்வரும் வசனத்தி­ருந்தும்  ஹதீஸி­ருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன்: 20:5).

நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள் , நான் வானத்திலுள்ள (அல்லாஹ்)வின்  நம்பிக்கைக்குரியவனாயிருக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி­) 

(புகாரி: 4351)

நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்தி­ருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ர­)   நூல் : முஸ்­லிம் (836)

அர்ஷ்  என்றால் என்ன?

அர்ஷ் என்பது அவனுடைய மிகப் பிரம்மாண்டமான ஆசனமாகும்.

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ  …(255) سورة البقرة

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். (அல்குர்ஆன்: 2:255)

அல்லாஹ் தூணிலும், துரும்பிலும் இருக்கின்றான் என்று நம்புவது கூடுமா?

அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று கூறுவது கூடாது. இவ்வாறு கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும். அல்லாஹ் தான் அர்ஷில் இருப்பதாகக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக நம்பிக்கை கொள்வது கூடாது

அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்பதின் கருத்து நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நம்முடைய ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதாகும். இதனை பின்வரும் வசனத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும். அல்லாஹ் மூஸா ( அலை) அவர்களையும் ஹாரூன் (அலை) அவர்கதளையும் ஃபிர்அவ்னிடம் சென்று சத்தியத்தைக் கூறுமாறு அனுப்பும் போது

قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى(46) سورة طه

”அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 20:46)

அதாவது இறைவன் நாம் செய்பவைகளைப் பார்ப்பதின் மூலமும் நாம் சொல்பவைகளை கேட்பதின் மூலமும் நம்முடன் இருக்கிறான்.

அல்லாஹ்விற்கு எத்தனை திருநாமங்கள் உள்ளன?

அல்லாஹ்விற்கு தொன்னூற்றி ஒன்பது திருநாமங்கள் உள்ளன.

நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன் மீது நம்பிக்கை வைத்து அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்

அறிவிப்பவர்:அபூஹுரைரா (ர­) நூல்:புகாரி (2736)