19) பாவ மன்னிப்பிற்காக

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ

ரப்பனாa இன்னனாa ஆமன்னா Fபghக்Fபிர் லனா dhதுனூபனா வqகினா oஅdhதாபன் நார்.

பொருள்: எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 3:16)➚

(இறையச்சமுடையவர்கள் கேட்கும் பிரார்த்தனை)


رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى ٱلَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَٱعْفُ عَنَّا وَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَآ ۚ أَنتَ مَوْلَىٰنَا فَٱنصُرْنَاعَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ

ரப்பனாa லா துஆkhகிdhத்னாa இன் நஸீனாa அவ் அkhக்Tதஃனா, ரப்பனா வலா தஹ்மில் oஅலைனாa இsஸ்ரன் கமா ஹமல்தhஹூ oஅல-ல்லdhதீன மின் qகப்லினா, ரப்பனா வலா துஹம்மில்னா மா லா Tதாqகத லனா பிhஹ், வoஃFபு oஅன்னா, வghக்Fபிர் லனா, வர்ஹம்னா, அன்த மவ்லானா Fபன்sஸுர்னா oஅலல் qகவ்மில் காFபிரீன்.

பொருள்: எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்.) (அல்குர்ஆன்: 2:286)➚

(முஃமின்கள் கேட்கும் பிரார்த்தனை)


رَّبِّ ٱغْفِرْ وَٱرْحَمْ وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

ரப்பி-ghக்Fபிர் வர்ஹம் வஅன்த khகைருர் ராஹிமீன்.

பொருள்: என் இறைவா! மன்னித்து அருள் புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன். (அல்குர்ஆன்: 23:118)➚

(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)


أَنتَ وَلِيُّنَا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ ٱلْغَـٰفِرِينَ

அன்த வலிய்யுனா Fபghக்Fபிர் லனா வர்ஹம்னா வஅன்த khகைருல் ghகாFபிரீன்.

பொருள்: நீயே எங்கள் பொறுப்பாளன். எனவே எங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன். (அல்குர்ஆன்: 7:155)➚

(பூகம்பம் தாக்கிய போது நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)


رَبَّنَآ ءَامَنَّا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰحِمِينَ

ரப்பனாa ஆமன்னா Fபghக்Fபிர் லனா வர்ஹம்னா வஅன்த khகைருர் ராஹிமீன்.

பொருள்: எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்.(அல்குர்ஆன்: 23:109)➚

(நல்லோர்கள் கேட்ட பிரார்த்தனை)


رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

ரப்பனா ளலம்னாa அன்Fபுஸனா வஇல் லம் தghக்Fபிர் லனா வதர்ஹம்னா லநகூனன்ன மினல் காஸிரீன்.

பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம். (அல்குர்ஆன்: 7:23)➚

(ஆதம் (அலை), ஹவ்வா (அலை) இருவரும் அவர்கள் செய்த தவறினால் ஜன்னத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தம் தவறுக்காக அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனை)


رَبَّنَآ أَتْمِمْ لَنَا نُورَنَا وَٱغْفِرْ لَنَآ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

ரப்பனாa அத்மிம் லனா நூரனா வghக்Fபிர் லனா, இன்னக oஅலா குல்லி ஷைஇன் qகdதீர்.

பொருள்: எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 66:8)➚

(சொர்க்கவாதிகளின் பிரார்த்தனை)


رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ

ரப்பனா oஅலைக தவக்கல்னா வஇலைக அனப்னா வஇலைகல் மsஸீர்.

பொருள்: எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.(அல்குர்ஆன்: 60:4)➚

(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)