04) நம்பிக்கை கொண்டோருக்காக

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا ٱغْفِرْ لَنَا وَلِإِخْوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلْإِيمَـٰنِ وَلَا تَجْعَلْ فِى قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
ரப்பன-ghக்Fபிர் லனா வலிஇkhக்வானின-ல்லdhதீன ஸபqகூனா பில்ஈமானி வலா தஜ்oஅல் Fபீ
.qகுலூபினா ghகில்லல் லில்லdhதீன ஆமனூ ரப்பனாa இன்னக ரஊFபுர் ரஹீம்
எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ
.இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்
(அல்குர்ஆன்: 59:10)➚
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து நாடுதுறந்தவர்கள், மதீனாவில் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள், இதற்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றவர்கள் இப்பிரார்த்தனையைக் கேட்டார்கள்

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّـٰتِ عَدْنٍ
ٱلَّتِى وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
ரப்பனா வஸிoஃத குல்ல ஷைஇர் ரஹ்மதவ் வoஇல்மன் Fபghக்Fபிர் லில்லdhதீன தாபூ வத்தபoஊ ஸபீலக வqகிhஹிம் oஅdhதாபல் ஜஹீம் ரப்பனா வஅdத்khகில்hஹும் ஜன்னாதி oஅdத்னினி-ல்லதீ வoஅத்தhஹும் வமன் sஸலஹ மின் ஆபாaaஇhஹிம் வஅzஸ்வாஜிhஹிம் வdhதுர்ரியாதிhஹிம் , இன்னக அன்தல் oஅzஸீzஸுல் ஹகீம்
பொருள்: எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே
மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக! எங்கள் இறைவா! அவர்களையும் அவர்களது பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைகள், மற்றும் அவர்களது சந்ததிகளில் நல்லோரை நீ வாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில்
நுழையச் செய்வாயாக! நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 40:7-8)➚
அல்லாஹ்வின் அர்ஷைச் சுமந்தும் அதைச் சுற்றியும் இருக்கும் வானவர்கள் நல்லவர்களுக்காகச் செய்த பிரார்த்தனை