கோள் சொல்லுதல் கூடாது
கோள் சொல்வது தடைசெய்யப்பட்டதாகும்
(கோள் சொல்லுதல் என்பது குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஒருவரின் பேச்சை மக்களுக்கு மத்தியில் பரப்புவதாகும்.)
அல்லாஹ் கூறுகிறான்:
அவன் குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.
(அல்குர்ஆன்: 68:11)➚
அல்லாஹ் கூறுகிறான்:
(பதிவு செய்வதற்குத்) தயாராக உள்ள கண்காணிப்பாளர் அவனிடம் இருக்கும் நிலையிலேயே தவிர அவன் எந்த வார்த்தையையும் பேசுவதில்லை.
(அல்குர்ஆன்: 50:18)➚
قال رسُولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « لا يَدْخُلُ الجنةَ نمَّامٌ- متفقٌ عليه
ஹதீஸ் எண்: 1536
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கோள் சொல்பவன் சுவனம் புகமாட்டான்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),(புகாரி: 6056) ➚,(முஸ்லிம்: 168, 169, 170) ➚
أنَّ رَسُول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : مرَّ بِقَبريْنِ فقال : «إنَّهُمَا يُعَذَّبان وَمَا يُعَذَّبَانِ في كَبيرٍ بَلى إنَّهُ كَبيرٌ : أمَّا أحَدُهمَا فَكَانَ يمشِي بالنَّمِيمَةِ وأمَّا الآخرُ فَكَانَ لا يسْتَتِرُ مِنْ بولِه –
متفقٌ عليه وهذا لفظ إحدى روايات البخاري قالَ العُلَماءُ : معْنَى: «وما يُعَذَّبَانِ في كَبيرٍயு أيْ كبير في زَعْمِهما وقيلَ: كَبِيرٌ تَرْكُهُ عَلَيهما.
ஹதீஸ் எண்: 1537
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளை கடந்து சென்றார்கள். அப்போது “இவ்விருவரும வேதனை செய்யப்படுகிறார்கள். அவர்கள் மிகப் பெரும்பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. என்றாலும் அது (ஒரு வகையில்) பெரிய பாவம்தான். அவ்விருவரில் ஒருவரோ கோள் சொல்லித் திரிபவராக இருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும் போது (தமது உடலை) மறைக்காதவராக இருந்தார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 6055) ➚,(முஸ்லிம்: 491) ➚
இது புகாரியுடைய பல அறிவிப்புகளில் ஒரு அறிவிப்பாகும்.
« العَضْهُ – : بفَتْح العين المُهْمَلَةِ وإسْكان الضَّادِ المُعْجَمَةِ وبالهاءِ على وزنِ الوجهِ ورُوي : « العِضَةُ – بِكسْرِ العَيْنِ و فَتْحِ الضَّادِ المُعْجَمَةِ عَلى وَزْنِ العِدَةِ وهِي : الكذِبُ والبُهتانُ وعَلى الرِّواية الأولى : العَضْهُ مصدرٌ يقال : عَضَهَهُ عَضْهاً أي : رماهُ بالعَضْهِ
ஹதீஸ் எண்: 1538
நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “அல்அள்ஹு” (பொய், அவதூறு) என்றால் என்னவென்று உங்களுக்கு நான் அறிவிக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, ‘அது மக்களிடையே கோள் சொல்வதாகும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),(முஸ்லிம்: 5080) ➚
குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பது போன்ற அச்சமிருந்தாலே தவிர தேவையின்றி மக்களின் பேச்சுக்களையும், செய்திகளையும் ஆட்சியாளர்களிடம் கூறுவது கூடாது
அல்லாஹ் கூறுகிறான்:
பாவத்திலும் அநியாயத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன்: 5:2)➚
இதற்கு முந்தைய பாடத்தில் இடம் பெற்ற ஹதீஸ்கள் இந்தப் பாடத்திற்கும் உரியதாகும்.
ஹதீஸ் எண்: 1539
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய தோழர்களில் ஒருவர் மற்றொருவரைப் பற்றி என்னிடம் (குறைகள்) எதனையும் கூறவேண்டாம். நான் அமைதியான உள்ளத்துடன் உங்களிடம் வரவே விரும்புகிறேன்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),(அபூதாவூத்: 4218) ➚,(திர்மிதீ: 3831, 3832) ➚
குறிப்பு: இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “அல்வலீத் பின் அபீ ஹிஸாம்” மற்றும் “ஸைத் பின் ஸாயிதா” எனும் இருவர் இடம் பெற்றுள்ளனர். இருவருமே யாரென்றே அறியப்படாதவர்கள் ஆவர்.
அல்லாஹ் கூறுகிறான்:
அவர்கள் மக்களிடமிருந்து மறைந்து கொள்கிறார்கள். ஆனால் அல்லாஹ்விடமிருந்து மறைய முடியாது. அவன் விரும்பாத பேச்சை அவர்கள் பேசி, இரவில் திட்டம் தீட்டிய போது அவன் அவர்களுடனே இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:108)➚
قالَ رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « تَجدُونَ النَّاسَ معادِنَ : خِيارُهُم في الجاهِليَّةِ خيارُهُم في الإسْلامِ إذا فَقُهُوا وتجدُونَ خِيارَ النَّاسِ في هذا الشَّأنِ أشدَّهُمْ لهُ كَراهِيةً وتَجدُونَ شَرَّ النَّاسِ ذا الوجْهيْنِ الذي يأتي هؤلاءِ بِوجْهِ وَهؤلاءِ بِوَجْهِ – متفقٌ عليه
ஹதீஸ் எண்: 1540
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களை நீங்கள் பலதரப்பட்ட மூலகங்களாகக் காண்கிறீர்கள். மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால் அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள் இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 3493, 3494) ➚,(முஸ்லிம்: 4945) ➚
إنَّا نَدْخُلُ عَلَى سَلاطِيننا فنقولُ لهُمْ بِخلافِ ما نتكلَّمُ إذَا خَرَجْنَا مِنْ عِندِهِمْ قال : كُنًا نعُدُّ هذا نِفَاقاً عَلى عَهْدِ رسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم رواه البخاري
ஹதீஸ் எண்: 1541
மக்கள் சிலர் என்னுடைய பாட்டனார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கின்றோம். அவர்களிடமிருந்து வெளியேறியதும் (அவர்களைப் பற்றி) நாங்கள் என்ன பேசிக் கொள்வோமோ அதற்கு நேர் மாறானதையே அவர்களுக்கு (முன்னிலையில்) நாங்கள் கூறுவோம் என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இப்படி (உள் ஒன்று பேசி புறமொன்று) பேசுவதை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் நயவஞ்சகமாகக் கருதிவந்தோம் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஸைத்,(புகாரி: 7178) ➚