21) முடிவுரை
நபி இப்ராஹீம் (அலை) காலமெல்லாம் இணை வைப்பை எதிர்த்துத் தீம்பிழம்பாய் களம் கண்டவர்கள். அவர்கள் தன் தந்தையிடம் குடி கொண்டிருந்த சிலை மோகத்தைக் கண்கூடாகக் கண்டார்கள். சிலை வணக்கத்தின் பிடிமானத்தில் இருந்த தன் தந்தையை நோக்கி அறிவுரை செய்கின்றார்கள்.
அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பார்க்காததை, உமக்குச் ஏன் சிறிதும் வணங்குகிறீர்?” பயனளிக்காததை என்று கூறியதை நினைவூட்டுவீராக
ஆனால் அதற்கு அவரது தந்தை தெரிவித்த பதில் என்ன தெரியுமா?
“இப்ராஹீமே! என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா? நீ விலகிக்கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் அடித்துக் கொல்வேன். காலமெல்லாம் என்னை விட்டுப் பிரிந்து விடு என்று அவர் கூறினார்.
பெற்ற பிள்ளையையும் கல்லால் அடித்துக் கொல்லத் துணிகின்றார் என்றால் சிலை வணக்கத்தின் வெறி அவர்களை எந்த அளவுக்கு ஆட்டிப் படைக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தந்தை சிலை வணக்கத்திலிருந்து வெளியேறவில்லை; விடுபடவில்லை. உஊர் மக்களாவது சிலை வணக்கத்திலிருந்து விடுபடட்டுமே, வெளியேறட்டுமே என்றெண்ணி அவர்களிடம் பிரச்சாரம் செய்கின்ற போது அவர்கள் அன்னாரைத் தீக்குண்டத்தில் தூக்கியெறிந்து கொலை செய்ய முயற்சித்தனர். ஆனால் அதிலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றி விட்டான்.
இதைத் திருக்குர்ஆனின் 21வது அத்தியாயம். முதல் 70 வரையிலுள்ள வசனங்கள் 52 தெளிவாகப் பேசுகின்றன.
“அல்லாஹ்வையன்றி சிறிதும் செய்யாதவற்றை நன்மையோ, உங்களுக்குச் தீமையோ வணங்குகிறீர்களா? உங்களுக்கும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும் அசிங்கம்தான்! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று அவர் கூறினார்.
“நீங்கள் (கடவுளுக்கு எதையேனும்) செய்வதாக இருந்தால் அவரைத் தீயில் எரித்து, உங்கள் கடவுள்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று அவர்கள் கூறினர்.
“நெருப்பே! இப்ராஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், இதமாகவும் ஆகிவிடு” என்று கூறினோம்.
அவருக்கு (எதிராக)ச் சதி செய்ய அவர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களை நாம் நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.
இந்த நிகழ்வு, மக்கள் கொண்டிருக்கும் சிலை வணக்க வெறியை எடுத்துச் சொல்கின்றது. அதனால் சிலை வணக்கத்தின் வீரியத்தை தெரிந்ததால் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் வல்ல இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்கின்றார்கள்.
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!”
தன்னையும், தனது பிள்ளைகளையும் சிலை வணக்கத்தை விட்டும் தூரமாக்குவாயாக என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் இணைவைப்பிற்கு எதிராகக் கொழுந்து விட்டெரிந்த தீப்பிழம்பு! அதற்கு விலையாக தீக்குண்டத்தைத் தண்டனையாகப் பெற்ற தியாகத் தழும்பு! அப்படிப்பட்ட பகுத்தறிவுத் தந்தையான அவர்களே தன்னையும் தனது மக்களையும் சிலை வணக்கத்தை விட்டும் தூரமாக்கக் கோருகின்றார்கள் என்றால் நாம் எம்மாத்திரம் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதனால் ஒவ்வொரு ஏகத்துவவாதியும் அவரது சந்ததியும் இந்த துஆவைத் தவறாது செய்து வரவேண்டும் என்பதை அன்னாரின் பிரார்த்தனை தெளிவாக எடுத்துச் சொல்கின்றது.
அதிலும் குறிப்பாக இன்றைய இந்தியச் சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய இஸ்லாமிய சமுதாயம், அதிலும் நெருப்பில் தூக்கிப் போடப்பட்ட நேரத்திலும் தன் ஏகத்துவக் கொள்கையை விட்டும் விலகாத அந்த இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பாக்கியமாகப் பெற்ற முஸ்லிம்கள். தற்போது ஆட்சியாளர்களுக்குப் பயந்து, தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாவிட்டாலும் தாங்களாக முன்வந்து சிலைகளுக்கு சீர்வரிசைகள் செய்கின்றார்கள் என்றால் இந்த துஆவின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.
அதனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த அத்தனை து.ஆக்களையும் நாம் மனப்பாடம் செய்து பிரார்த்திப்போமாக! அவர்கள் கொண்டிருந்த அந்த சத்தியக் கொள்கையில் நிலைத்திருப்போமாக!