20) மற்ற நபிமார்களின் பிராத்தனை
நூஹ், தமது இறைவனை அழைத்து, “என் இறைவனே! எனது மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவன். உனது வாக்குறுதி உண்மையானது. நீயே தீர்ப்பளிப்போரில் தீர்ப்பளிப்பவன்” என்று கூறினார். மிகச் சிறந்து
“என் இறைவனே! என்னையும் எனது சகோதர்ரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார்.
அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) “எனக்குத் துன்பம் ஏற்பட்டுவிட்டது. நீ கருணையாளர்களில் மிக்க மேலான கருணையாளன்” என்று அவர் தமது இறைவனைப் பிரார்த்தித்தபோது அவருக்குப்பதிலளித்து, அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு வழங்கினோம். இது நமது அருளும், வணங்குவோருக்குப் படிப்பினையுமாகும்.
“உன்னைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை; நீ தூயவன்: நான் அநியாயக்காரர்களில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து பிரார்த்தித்தார்.
ஸக்கரிய்யாவையும் (நினைவு கூர்வீராக!) “என் இறைவனே! என்னைத் தன்னந் தனியாக விட்டுவிடாதே! நீயே உரிமையாளர்களில் மிகச் சிறந்தவன் ” என்று அவர் தமது இறைவனைப் பிரார்த்தித்தபோது, அவருக்குப் பதிலளித்து, யஹ்யாவை அவருக்குப் பரிசளித்தோம். அவரது மனைவியை அவருக்காகச் சீராக்கினோம். அவர்கள் நற்காரியங்களில் விரைவோராக இருந்தனர். ஆசையுடனும், அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்தித்தனர். நமக்கே பணிவோராக இருந்தனர்.
நமது கோரிக்கை ஏற்கப்பட இந்த முறையையும் நாம் பயன்படுத்துவோமாக. அல்லாஹ் நமது பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளப் போதுமானவன், அல்லாஹ்வே பிரார்த்தனைக்குப் பதிலளிப்பவன்.