03) அபய பூமி

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

رَبِّا جْعَلْ هُذَا الْبَلَدَ آمِنًا

 

“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக!” இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 14:35)

رَبِّ اجْعَلْ هُذَا بَلَدًا آمِنً

“என் இறைவனே! (மக்கா எனும்) இந்த ஊரைப் பாதுகாப்புத்தலமாக ஆக்குவாயாக! என்று அவர் (இப்ராஹீம்) கூறினார்.

(அல்குர்ஆன்: 2:126)

இப்ராஹீம் நபி தனது மனைவியையும்.” மகனையும் மக்காவிலே தனியாக விட்டு வருகிறார்கள். பின்னர் அல்லாஹ்வின் அருளால் மக்கா என்பது மக்கள் வாழும் மாநகரமாக ஆக்க உருமானது. அவ்வூரை அபயமாக அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். அந்த ஊரில் வாழும் மக்களுக்கு பாதுகாப்புத் தலமாக அமையவேண்டும் என சமூக அக்கறையுடன் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.

அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரித்ததின் விளைவாகவே இன்றளவும் மக்களுக்கு அல்லாஹ் மக்காவை அபய பூமியாக ஆக்கினான்.