02) பிரார்த்தனை பற்றி இப்ராஹிம் நபியின் எண்ணம்

நூல்கள்: இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகளும் அவை தரும் படிப்பினைகளும்

முதலில் பிரார்த்தனை பற்றி இப்ராஹீம் நபியின் எண்ணத்தைப் பாருங்கள்.

“என் இறைவனிடமே நான் பிரார்த்திப்பேன். இறைவனிடம் பிரார்த்திப்பதில் பாக்கியமிழந்தவனாக ஆக மாட்டேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

(அல்குர்ஆன்: 19:48)

கோரிக்கையை இறைவனிடம் முன்வைப்பதை விட்டும் துர்பாக்கியசாலியாக மாட்டேன் என்பதில் இப்ராஹீம் நபி உறுதியாக இருந்தார்கள்.

ஆனால் நம்மில் அதிகமானவர்கள் தேவைகளையும், கோரிக்கைகளையும் அல்லாஹ்தான் நிறைவேற்ற ஆற்றல் உள்ளவன் என்பதை அறித்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை விட்டும் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கின்றோம்.

இன்று பலர் தங்களின் தேவைகளை யாராலும் நிறைவேற்ற முடியாது என்ற நிலை வரும்போது தான் பிரார்த்தனை என்னும் கருவியைக் கையில் எடுக்கின்றனர். இவர்களுக்கு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனைகள் ஆழமான பாடத்தை நிச்சயமாகக் கற்றுத் தரும்.