05) நபிகளார் மற்றவர்களுக்காக கேட்ட பிரார்த்தனை
நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் பலரின் நலனுக்காக அல்லாஹ் நவிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அந்த செய்திகளில் முக்கிய மான செய்திகளை தொகுத்து இங்கே தருகிறோம்.
“இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்க ளைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க் கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே!” எனப் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி), நூல் : (புகாரி: 1295)
அன்சாரிகள் (நபி (ஸல்) அவர்களிடம்), “ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. நாங்கள் உங்க ளைப் பின்பற்றினோம். ஆகவே, எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர் களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இவர்க ளுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹம்ஸா (ரலி), நூல்: (புகாரி: 3788)
அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக நான் (பெரிதும்) துக்கப் பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப் பாயாக” என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : (புகாரி: 4906)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின்போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான். ஆகவே, அன்சாரி களுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி” என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம், “நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப் போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்” என்று (பாடியபடி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்கள் : (புகாரி: 2834), (முஸ்லிம்: 3689)
மேலும், “இறைவா (உண்மையான) பலன் மறுமையின் பலனே. ஆகவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணையன்பு காட்டுவாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள்.
நூல் : (புகாரி: 3906)
நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. ‘பனூ கைனுக்கா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?”, “இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?” என்று கேட்டார்கள். ஃபாத் திமா (ரலி) அவர்கள் தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். இனி அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்” என்றோ அல்லது “மகனைக் நீராட்டிக்கொண்டிருக்கிறார்” என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹசன்(ரலி) அவர்கள்) ஓடிவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். இறைவா! இவனை நீ நேசிப்பாயாக! இவனை நேசிப்பவர்க ளையும் நீ நேசிப்பாயாக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் (புகாரி: 2122)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, “இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!” என்றார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), நூல் : (புகாரி: 6003)
இறைவா! ஸஅத் பிரார்த்தனை செய்தால் அதை ஏற்றுக் கொள்வாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஸஅத் (ரலி),(திர்மிதீ: 3684)
நபி (ஸல்) அவர்கள்(சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), நூல் : (புகாரி: 3735)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, “இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!” என்றார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி),
நூல்: (புகாரி: 6003)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை(த் தம் நெஞ்சோடு) அணைத்து “இறைவா! இவருக்கு உன் வேத(ஞான)த்தைக் கற்றுத் தரு வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 75)
(நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது (அவர்கள் உளூச் செய்வதற்காக) அவர்களுக்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள்.(என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது. உடனே “இறைவா இவ ருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!” என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புகாரி: 143)
என்னை நபி (ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, “இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக!” எனப் பிராத்தித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் (புகாரி: 3756)
நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போர் முடிந்த பின்னர் அபூஆமிர் (ரலி) அவர்களின் தலைமையில் ‘அவ்தாஸ்’ பள்ளத்தாக்கிற்கு ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். அப்போது அபூஆமிர் (ரலி) அவர்கள் (கவிஞன்) ‘துரைத் பின் அஸ்ஸிம்மா’வைச் சந்தித்தார்கள்.
(அவர்கள் இருவருக்குமிடையே நடந்த சண்டையில்) ‘துரைத்’ கொல் லப்பட்டான்; அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூஆமிர் அவர்களுடன் என்னையும் நபி (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பி யிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்கால் மீது அம்பு (வந்து) பாய்ந்தது. ‘பனூ ஜுஷம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனே அந்த அம்பை எய்து, அதை அவர்களது முழங்கால் நிறுத்தினான்.
உடனே நான் அபூஆமிர் அவர்களுக்கு அருகில் சென்று, “என் தந்தையின் சகோ தரரே! உங்கள் மீது அம்பெய்தவன் யார்?” என்று கேட்டேன். “இதோ அங்கே தெரிகிறானே அவன்தான் என்மீது அம்பெய்து என்னைக் கொன்றவன்” என்று எனக்குச் சைகை செய்து காட்டினார்கள். நான் அவனைக் குறி வைத்து நேராக அவனை நோக்கிச் சென்று அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். “புறமுது கிட்டு ஓடுகிறாயே உனக்கு வெட்க மில்லையா? நீ ஓர் அரபியன் இல்லையா? நீ நிற்கமாட்டாயா?” என்று அவனிடம் கேட்டுக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தேன். உடனே அவன் (ஒடு வதை) நிறுத்திக்கொண்டான்.
பிறகு நானும் அவனும் நேருக்குநேர் சந்தித்து, வாளால் மாறி மாறித் தாக்கிக்கொண்டோம். அவனை நான் வாளால் வெட்டிக் கொன்றேன். பிறகு அபூ ஆமிர் அவர்களிடம் திரும்பி வந்து, “உங்களைக் கொ(ல்ல முய)ன்றவனை அல்லாஹ் கொன்றொழித்துவிட்டான்” என்று சொன்னேன். பிறகு “(எனது முழங்கால் தைத்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கி எடுங்கள்” என்று அபூ ஆமிர் (ரலி) அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிருந்து நீர் கொட்டியது.
அப்போது அபூ ஆமிர் அவர்கள், “என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு என் முகமன் (சலாம்) கூறி, அபூஆமிர் தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கூறியதாகச் சொல்வீராக!” என்றார்கள்.
பிறகு அபூஆமிர் (ரலி) அவர்கள் என்னை மக்களுக்குத் தளபதியாக நியமித்துவிட்டுச் சிறிது நேரத்திற்குப்பின் இறந்துவிட்டார்கள்.
நான் (அங்கிருந்து) திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டில் (பேரீச்ச நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டில்படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. எனினும், சுட்டின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும் விலாப் புறங்களிலும் அடையாளம் பதிந்திருந்தது.
அப்போது அவர்களிடம் எங்கள் (படையினர் பற்றிய) செய்தியையும் அபூஆமிர் (ரலி) அவர்களது செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி அபூஆமிர் வேண்டியது பற்றியும் கூறினேன்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி கூறி, அதில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு தம் அக்குள்களின் வெண்மையை நான் பார்க்குமளவுக்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, “இறைவா அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப் பினங்களில் அல்லது ‘மனிதர்களில் பலரையும்விட (தகுதியில்) உயர்ந்த வராக அவரை ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே நான், “எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இறைவா! “(அபூமூசா) அப் துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியமான இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 4911)
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அனஸ் தங்களின் சேவகர். (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : (புகாரி: 6334)
“என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவரா கவும் நேர்வழியில் செலுத்தப் பெற்றவராகவும் ஆக்கு” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் (ரலி),
நூல் (புகாரி: 3036)
அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள் கூறியதாவது:
(பள்ளிவாசலுக்குள் கவிபாடுவதை உமர் ளரன அவர்கள் கண்டித்தபோது கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர் களிடம், “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ‘ஹஸ்ஸானே! அல்லாஹ்வின் தூதர் (ஆகிய என்) சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளா லேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ் (தூய ஆத்மா வானவர் ‘ஜிப்ரீல்’ மூலம்) துணைபுரிவாயாக!’ என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.
நூல்: (புகாரி: 453)
என் தாயார் இணைவைப்பாளராக இருந்தபோது, இஸ்லாத்திற்கு (வரு மாறு) அவருக்கு நான் அழைப்பு விடுத்துவந்தேன். ஒரு நாள் நான் அவருக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுத்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள்) சிலவற்றை என் காது படக் கூறினார்.
உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் தாயாருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்துவந்தேன். அவர் மறுத்துவந்தார். இன்றைய தினமும் அவருக்கு நான் அழைப்பு விடுத்தேன். அவர் உங்களைக் குறித்து நான் விரும்பாத (வசை மொழிகள் சிலவற்றை என் காதுபடக் கூறினார். ஆகவே, (இந்த) அபூ ஹுரை ராவின் அன்னைக்கு நல்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அபூ ஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையைக் கேட்டுப் புளங்காகிதம் அடைந்தவனாக நான் (வீட்டை நோக்கிப்) புறப்பட்டேன். நான் வீட்டு வாசலை அடைந்தபோது (உள்ளே) அது தாழிடப்பட்டிருந்தது. என் தாயார் என் காலடிச் சப்தத்தைக் கேட்டுவிட்டு,”அபூ ஹுரைரா அங்கேயே இரு” என்று கூறினார்.
அப்போது தண்ணீர் புழங்கும் சப்தம் எனக்குக் கேட்டது. என் தாயார் குளித்து விட்டு, தமது சட்டையை அணிந்து கொண்டு, முக்காட்டுத் துணி அணியாமல் விரைந்து வந்து கதவைத் திறந்தார். பிறகு, “அபூ ஹுரைரா அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதி மொழிகிறேன், முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார் என்றும் உறுதி மொழிகிறேன்” என்று கூறினார்.
உடனே நான் மகிழ்ச்சியில் அழுது கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் திரும்பிச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகிழ்ச்சியான செய்தி, அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான். அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டிவிட்டான்” என்று சொன்னேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நல்ல வார்த்தைகளைச் சொன்னார்கள்.
நான், “அல்லாஹ்வின் தூதரே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என் மீதும் என் தாயார் மீதும் நேசம் ஏற்படவும் அவர்கள் மீது எனக்கும் என் தாயா ருக்கும் நேசம் ஏற்படவும், தாங்கள் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! உன்னுடைய இந்தச் சிறிய அடியார் அபூ ஹுரைரா மீதும் அவருடைய தாயார் மீதும் இறை நம்பிக்கையாளர்களான உன் அடியார்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறை நம்பிக்கையாளர்கள் மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னைப் பார்க்காவிட்டாலும் என்னைப் பற்றிக் கேள்விப் படும் எந்த ஓர் இறை நம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்ப தில்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (முஸ்லிம்: 4904)