04) திருக்குர்ஆனில் நபிமார்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரார்த்தனைகள்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பிரார்த்தனை

இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இறைத்தூதர்கள் தம் வாழ்நாளில் பல பிரச்சினைகளை சந்தித்தார்கள். அப்போது படைத்தவனிடம் ” பிரார்த்தனை செய்தார்கள், அவற்றில் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பல பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டுள்ளான். அவற்றில் முக்கியமானவைகளை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.

ஆதம் (அலை)

நபி ஆதம் (அலை) குறிப்பிட்ட மரத்தின் பக்கம் செல்ல வேண்டாம் என்று நபி ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது ஷைத்தானின் தூண்டுதலால் இறைக்கட்டளையை மீறினார்கள். இதனால் அந்த ஜன்னத்திலி ருந்து வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் அவர்கள் தாம் செய்த தவறுக்கு மன் னிப்பு கேட்டார்கள் அல்லாஹ் அவர்களின் தவறை மன்னித்தான்.

“நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறியிருக்கவில்லையா” எனக் கேட் டான்.

(அல்குர்ஆன்: 7:23)

அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின்  இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர், ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி காட்டினான்.

(அல்குர்ஆன்: 20:120-122)

“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர்.

(அல்குர்ஆன்: 2:37)

நபி நூஹ் (அலை)

நபி நூஹ் (அலை) அவர்கள் 950 வருடங்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தார் கள், அப்பிரச்சாரத்தில் ஈர்க்கப்பட்டவர்கள் மிக மிக சொற்பமானவர்களே எனவே ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக நடப்பவர்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடு, ஈமான் கொண்டவர்களை காப்பாற்று என்று பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனை இறைவன் ஏற்றுக் கொண்டான்.

நூஹ் நம்மிடம் பிரார்த்தித்தார், நாம் ஏற்றுக் கொள்வோரில் சிறந்தவரா வோம். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.

(அல்குர்ஆன்: 37:75-76)

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்திலிருந்து (காப்பாற்றி) அவருக்கு உதவினோம். அவர்கள் கெட்ட கூட்டமாக இருந்தனர். எனவே அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது.

அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!” என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார்.

அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது.

பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி.

(அல்குர்ஆன்: 54:9-14)

“என் இறைவா’ பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!” என்று நூஹ் கூறினார்.

நீ அவர்களை விட்டு வைத்தால் உனது அடியார்களை அவர்கள் வழி கெடுப் பார்கள். (உன்னை) மறுக்கும் பாவியைத் தவிர அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.

‘என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண் களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்).

(அல்குர்ஆன்: 72:26-28)

நபி சுலைமான் (அலை)

நபி சுலைமான் (அலை) அவர்கள் தனக்கு கொடுத்ததைப் போன்று வேறு எவருக்கும் கிடைக்காத ஆட்சி அதிகாரத்தை கேட்டார்கள். அல்லாஹ் வேறு எவருக்கும் கிடைக்காத பல அரிய அதிகாரத்தை வழங்கினான்.

“என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு நீயே வள்ளல்” எனக் கூறினார்.

அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.

“இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!” (என்று கூறினோம்.) அவருக்கு நம்மி டம் நெருக்கமும், அழகிய தங்குமிடமும் உள்ளது.

(அல்குர்ஆன்: 38:35-40)

நபி யூனூஸ் (அலை)

தான் கேட்டுக் கொண்டபடி மக்களை அல்லாஹ் அழிக்காததால் இறைவனிடம் கோபித்துச் சென்றார். இதனால் அவரை மீன் வயிற்றியில் அல்லாஹ் இருக்கச் செய்தான். பின்னர் தவறை உணர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்தபோது அல்லாஹ் அவரை மன்னித்தான்.

“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன் றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன்: 21:83-84)

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம் என்று நினைத்தார். “உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்த னையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

(அல்குர்ஆன்: 21:87-88)

நபி ஸக்கரிய்யா (அலை)

தனக்கு வாரிசு இல்லை என்பதால் தள்ளாத வயதில், ஒரு வாரிசை தனக்கு வழங்குமாறு கேட்டபோது அவரின் பிரார்த்தனை ஏற்று அல்லாஹ் குழந்தை கொடுத்தான்.

அப்போது தான் ஸக்கரிய்யா “இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்றுதம் இறைவனிடம் வேண்டினார்.

அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது “யஹ்யா வைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த் தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்” என்று அவரை வான வர்கள் அழைத்துக் கூறினர்.

(அல்குர்ஆன்: 3:38-39)

“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரி மையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக் காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப் பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதி யுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோ ராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந் தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன்: 21:89-90)

நபி யஃகூப் (அலை)

தன் மற்ற பிள்ளைகள் நபி யூசுஃப் (அலை) அவர்களை கொல்ல திட்டம் தீட்டியபோது அவரை காப்பாற்றுமாறு நபி யஃகூப் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.

அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். “உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட் டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்”

(அல்குர்ஆன்:)

“முன்னர் இவரது சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியதுபோல் இவர் விஷயத்திலும் உங்களை நம்புவேனா? அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவன் கருணையாளர்களில் மிகப் பெரும் கருணையாளன்” (என்று அவர் கூறினார்).

(அல்குர்ஆன்: 12:64)

“அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைபிடிக்கிறேன். அவர்கள் அனை வரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன், ஞான மிக்கவன்” என்று அவர் (தந்தை) கூறினார்.

அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமே’ என்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக் கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்) என்று அவர்கள் கூறினர். “எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடு கிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார்.

“என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏசு இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என்றார்.

(அல்குர்ஆன்: 12:83-87)

நபி யூசுஃப் (அலை)

நபி யூசுஃப் (அலை) அவர்களை தவறான வழிக்கு அழைத்தபோது இவர்க ளின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் பிரார்த்தனை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.

“இவரைக் குறித்துத்தான் என்னைப் பழித்தீர்கள். இவரை நான்தான் மயக் கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார். நான் கட்டளையிடுவதை இவர் செய்யாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார். சிறுமையானவராக ஆவார்” என்று அவள் கூறினாள்.

“என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதைவிட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றாவிட் டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்” என்றார்.

இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன்; அறிந்த வன்.

(அல்குர்ஆன்: 12:32-33)

நபி அய்யூப் (அலை)

நபி அய்யூப் (அலை) அவர்களுக்கு ஏற்றப்பட்ட ஒரு துன்பத்திலிருந்து விடு விக்க கோரிக்கை வைத்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.

“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக் கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோ ரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன்: 21:83-84)

நபி மூஸா (அலை)

பிர்அவ்னிடம் சென்று ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்க நாவன்மைமிக்க தன் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களை உதவியாளராக ஆக்கு என்று கேட்ட போது அவர்களை உதவியாளராக கொடுத்து உதவி புரிந்தான். மேலும் பிர்அவ் னின் கூட்டாத்தரை அழித்துவிடு என்று கேட்ட பிரார்த்தனையையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். மேலும் மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கும், எதிரி இனத்தைச் சேர்ந்தவருக்கும் இடையில் நடந்த சண்டையில் தனது இனத் தவருக்காக எதிரி இனத்தைச் சேர்ந்தவரை மூஸா நபி கொலை செய்து விடுகி றார்கள். இதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள். அதையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.

“என் இறைவா’ எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!” என்றார். எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போதுதான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியா ஏராக ஏற்படுத்து’

அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட் டாக்கு! நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக, நீ எங்களைப் பார்ப்பவனாக இருக்கிறாய் (என்றார்).

“மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 20:5-36)

“எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங் கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணா மல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.

“உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!” என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 10:88-89)

”’என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!” என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்ப வன்; நிகரற்ற அன்புடையோன்.

“என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுப வனாக இனிமேல் இருக்க மாட்டேன்” என்றார்.

(அல்குர்ஆன்: 20:16-17)

நபி ஈஸா (அலை)

ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் கூடிய உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்த னர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.

“மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?” என்று சீடர்கள் கூறியபோது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று அவர் கூறினார். “அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, இதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்” என்று அவர்கள் கூறினர்.

“அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாம வருக்கும், எங்களில் கடைசி யானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் அது இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்த வன்” என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார்.

“உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்” என்று அல்லாஹ் கூறினான்.

(அல்குர்ஆன்: 5:112-115)

நபி முஹம்மத் (ஸல்)

பத்ர் போரில் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இப்போரில் இறைவ னின் உதவியை நாடியபோது வானவர்களை அனுப்பி அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொண்டான்.

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின் னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுப வன்” என்று உங்களுக்குப் பதிலளித்தான்.

நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண் டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்வி டமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங் கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அகத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.

“நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத் துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப் பையும் வெட்டுங்கள்!” என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக!

(அல்குர்ஆன்: 8:9-12)