07) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்
கேள்வி : அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் எப்போது நடந்தது?
பதில் : ஆயிஷா (ரலி) அவர்களின் ஆறாவது வயதில் நடந்தது. ஆதாரம் :(புகாரி: 3896) ➚
கேள்வி : திருமணம் நடப்பதற்கு தூண்டுகேளாக இருந்தவர் யார்?
பதில் : கவ்லா பின்த் ஹகீம் (ரலி), ஆதாரம் :(அஹ்மத்: 24587) ➚
கேள்வி : கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் யார்?
பதில் : பிரசித்துப் பெற்ற உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மனைவியாவார். ஆதாரம் :(அஹ்மத்: 24587) ➚
கேள்வி : ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாருக்கு மனைவி என்று எவ்வாறு காட்டப்பட்டது?
பதில் : கனவில் வானவர் ஒருவர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை பட்டுத்துணியால் போர்த்திக்கொண்டு வந்து இவர் தான் உம் மனைவி என்று கூறினார். ஆதாரம் :(புகாரி: 5125) ➚
கேள்வி : இவ்வாறு எத்தனை தடவை காட்டப்பட்டது?
பதில் : மூன்று இரவுகள் காட்டப்பட்டது. ஆதாரம் :(முஸ்லிம்: 4468) ➚
கேள்வி : ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எவ்வளவு மஹர் தொகை கொடுக்கப்பட்டது?
பதில் : 500 திர்ஹம் மஹராக வழங்கப்பட்டது. ஆதாரம் :(முஸ்லிம்: 2555) ➚