03) நபிகளாருக்கு கொடுத்த துன்பங்கள்
கேள்வி : இணைவைப்பாளர்கள் நபிகளாரின் பிரச்சாரத்தைப் பற்றி என்ன கூறினார்கள்?
பதில் : நமது பெரியவர்களை முட்டாளாக்கிறார், நமது முன்னோர்களை ஏசுகிறார், நமது மார்க்கத்தை குறை கூறுகிறார், நமது கூட்டமைப்பை பிரிக்கிறார், நமது தெய்வங்களை ஏசுகிறார் என்று கூறினார்கள். (ஆதாரம் :(அஹ்மத்: 6739)
கேள்வி : நபிகளாரை எவ்வாறு துன்பத்தினார்கள்?
பதில் : கழுத்தில் துணியைப் போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சித்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3678)
கேள்வி : இவ்வாறு செய்தது யார் ?
பதில் : உக்பா பின் முஐத் என்பவன் (ஆதாரம் :(புகாரீ: 3678)
கேள்வி : அப்போது நபிகளாரை காபாற்றியவர் யார்?
பதில் : அபூபக்ர் (ரலி) (ஆதாரம்(புகாரீ: 3678)
கேள்வி : அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகளாரை காப்பற்றும் போது எந்த வசனத்தைச் சுட்டிக் காட்டினார்கள்?
பதில் : “என் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? (அல்குர்ஆன்: 40:28) ➚ என்ற வசனத்தை சுட்டிக்காட்டி தடுத்தார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3678)
கேள்வி : நபி (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தை தடுக்க இணைவைப்பாளர்கள் செய்த முயற்சிகள் என்ன?
பதில் : முஹம்மதே உமக்கு பணம் வேண்டுமானால் கேள்! உம்மை குறைஷிகள் பணக்காரராக மாற்றுகிறோம். அல்லது, உமக்கு பெண்கள் மீது ஆசை இருந்தால் குறைஷிகளில் உமக்கு பிடித்த பெண்களை காட்டும்! நாம் இதைப் போன்ற பத்து பெண்களை திருமணம் முடித்துத் தருகிறோம். ஆனால் நீ உன் பிரச்சாரத்தை விட்டுவிடவேண்டும் என்றனர். (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818), முஸ்னத் அப்து இப்னு ஹýமைதீ (1123)
கேள்வி : இவ்வாறு கூறியவன் யார்?
பதில் : உத்பா பின் ரபீஇ (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818), முஸ்னத் அப்து இப்னு ஹýமைதீ (1123)
கேள்வி : அப்போது நபி (ஸல்) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் : 1. ஹா, மீம்
2. அளவற்ற அருளாளனான நிகரற்ற அன்புடையோனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
3. (இது) விளங்கிக் கொள்ளும் சமுதாயத்திற்காக வசனங்கள் தெளிவுபடுத் தப்பட்ட வேதம். அரபு மொழியில் அமைந்த குர்ஆன்.
4. நற்செய்தி கூறக் கூடியதாகவும், எச்சரிக்கை செய்யக் கூடியதாகவும் (இது இருக்கிறது) அவர்களில் பெரும்பாலோர் புறக்கணித்தனர். எனவே அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
5. “நீர் எதை நோக்கி எங்களை அழைக்கிறீரோ அதை விட்டும் (தடுப்பதற் காக) எங்கள் உள்ளங்களில் மூடிகள் இருக் கின்றன. எங்கள் காதுகளில் அடைப்பும் உள்ளது. எங்களுக்கும், உமக்கும் இடையே ஒரு திரையும் இருக்கிறது. எனவே நீரும் செயல்படுவீராக! நாங்களும் செயல்படு கிறோம்” என்று அவர்கள் கூறுகின்றனர்.
6. “நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே” என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!
7. அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.
8. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு முடிவில்லாத கூலி உண்டு.
9. பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகராகக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதி யாவான் என்று கூறுவீராக!
10. அதன் மேலே முளைகளை ஏற் படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
11. பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.
12. இரண்டு நாட்களில் ஏழு வானங் களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித் தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப் பட்டதாக (ஆக்கினோம்).307 இது அறிந்த வனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
13. அவர்கள் புறக்கணித்தால் “ஆது மற்றும் ஸமூது சமுதாயத்திற்கு ஏற்பட்ட இடி முழக்கம் போன்ற இடி முழக்கத்தை உங்களுக்கு எச்சரிக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!(அல்குர்ஆன்: 41:1-13) ➚ ஆகிய வசனங்களை பதிலாகக் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818, முஸ்னத் அப்து இப்னு ஹýமைதீ (1123)
கேள்வி : அதற்கு உத்பா என்ன கூறினான்?
பதில் : நிறுத்தும் ! இதைத் தவிர வேறு பதில் இல்லையா? என்று கேட்டான். நபி (ஸல்) அவர்கள் இல்லை என்றவுடன் சென்றுவிட்டான். (ஆதாரம் : முஸ்னத் அபூயஃலா அல்மூஸிலீ 1818), முஸ்னத் அப்து இப்னு ஹýமைதீ (1123)
கேள்வி : ஆசை வார்த்தைக்கு மயங்காத நபிகளாரிடம் வேறு என்ன குறைஷிகள் கேட்டார்கள்?
பதில் : ஸஃபா மலையை தங்கமாக மாற்றிக் காட்டினால் நாங்கள் ஈமான் கொள்கிறோம் என்று கூறினர். (ஆதாரம் :(அஹ்மத்: 2058),(ஹாகிம்: 3225).)
கேள்வி : அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் அளித்தார்கள்?
பதில் : ஈமான் கொள்வீர்களா? என்று கேட்டார்கள்? ஆம் என்று அவர்கள் பதிலளித்தார்கள்? பின்னர் அல்லாஹ்விடம் பிராத்தித்தார்கள். (ஆதாரம் :(அஹ்மத்: 2058),(ஹாகிம்: 3225).)
கேள்வி : அதற்கு அல்லாஹ் என்ன பதிலளித்தான்?
பதில் : ஜிப்ரீல் (அலை) அவர்களை, அல்லாஹ் நபிகளாரிடம் அனுப்பி வைத்தான். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ் சொன்ன ஸலாத்தை எத்தி வைத்து, நீங்கள் விரும்பினால் ஸஃபா மலை தங்கமாக மாற்றுகிறேன். ஆனால் இதன் பின்னர் அவர்கள் மறுத்தால் உலகத்தில் யாருக்கும் செய்யாத வேதனை அவர்களுக்குச் செய்வேன், நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு மன்னிப்பின் வாசல்களும் அருள் வாசல்களும் திறப்பேன் என்று அல்லாஹ் சொன்னதாக கூறினார். ஆதாரம் : (அஹ்மத்: 2058), (ஹாகிம்: 3225).)
கேள்வி : எதை நபி (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?
பதில் : மன்னிப்பையும் அவனின் அருள் வாசல்களையும் தேர்ந்தெடுத்தார்கள். ஆதாரம் : (அஹ்மத்: 2058), (ஹாகிம்: 3225)
கேள்வி : இது தொடர்பாக இறங்கிய வசனங்கள் எவை?
பதில் : அற்புதங்களை முன்னோர்கள் பொய்யெனக் கருதியதே அதை நாம் (இப்போது) அனுப்புவதற்குத் தடையாக வுள்ளது. ஸமூது சமுதாயத்தினருக்கு ஒட்டகத்தைக் கண்முன்னே கொடுத்தோம். அதற்கு அவர்கள் அநீதி இழைத்தனர். அச்சுறுத்தவே அற்புதங்களை அனுப்புகிறோம். (அல்குர்ஆன்:) ➚ ஆதாரம் : (ஹாகிம்: 3379)
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்: 3:190) ➚ (ஆதாரம் : தப்ரானீ – கபீர், பாகம் : 12, பக்கம் : 12)
கேள்வி : அபூஜஹ்ல் நபி (ஸல்) அவர்களை என்ன செய்ய நினைத்தான்?
பதில் : லாத்,உஸ்ஸாவின் மீது சத்தியமாக முஹம்மத் இங்கு தொழுதால் அவரின் பிடரியை மிதிப்பேன் அல்லது அவரின் முகத்தை மண்ணில் புதைச் செய்வேன் என்று கூறினான். (ஆதாராம் : (முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)
கேள்வி : அவ்வாறு அபூஹஜ்ல் செய்தானா?
பதில் : நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களின் பிடரியை மிதிக்கச் சென்றான், ஆனால் அவனால் அங்கு செல்ல முடியவில்லை, போவான் உடனே திரும்பி வந்துவிடுவான். ஆதாராம் : (முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)
கேள்வி : அவ்வாறு வந்ததற்கு காரணம் என்ன?
பதில் : அவனுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் ஒரு நெருப்புக் குண்டத்தையும் (வானவர்களின்) இறக்கைகளûயும் கண்டான் அது அவனை பயமுறுத்தியது எனவே அவன் திரும்பினான். ஆதாராம் : (முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)
கேள்வி : இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : அவன் என்னை நெருங்கியிருந்தால் மலக்குமார்கள் அவன் உறுப்புகளை ஒவ்வொன்றாக பிடித்திருப்பார்கள் என்று கூறினார்கள். (ஆதாராம் : (முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)
கேள்வி : அவ்வாறு அபூஹஜ்ல் செய்தானா?
பதில் : நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களின் பிடரியை மிதிக்கச் சென்றான், ஆனால் அவனால் அங்கு செல்ல முடியவில்லை, போவான் உடனே திரும்பி வந்துவிடுவான். (ஆதாராம் : (முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)
கேள்வி : அவ்வாறு வந்ததற்கு காரணம் என்ன?
பதில் : அவனுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் ஒரு நெருப்புக் குண்டத்தையும் (வானவர்களின்) இறக்கைகளûயும் கண்டான் அது அவனை பயமுறுத்தியது எனவே அவன் திரும்பினான். (ஆதாராம் : (முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)
கேள்வி : இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்?
பதில் : அவன் என்னை நெருங்கியிருந்தால் மலக்குமார்கள் அவன் உறுப்புகளை ஒவ்வொன்றாக பிடித்திருப்பார்கள் என்று கூறினார்கள். ஆதாராம் : (முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)
கேள்வி : அப்போது இறங்கிய வசனங்கள் எவை?
பதில் : அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படா தீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக! (அல்குர்ஆன்: 6:19) ➚
ஆதாராம் :(முஸ்லிம்: 5005), (அஹ்மத்: 8475)