16) ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி)
1 நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் குர்ஆனை (மனனம் செய்து)திரட்டியவர்களில் இவரும் ஒருவர். (புகாரி: 3810)
2 அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் அல்குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில்நியமிக்கப்பட்டவர். (புகாரி: 4679)
3 இவரிடம் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது)நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். (புகாரி: 4679)
4 குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை நான் செய்வதை விடவும் ஒரு மலையைத் தகர்க்குமாறு கூறினால் அதை நான் செய்து விடுவேன் என்று கூறியவர். (புகாரி: 4679)
5 உஹ‚த் யுத்தத்தில் முனாபிக்குகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதில்நபித்தோழர்களிடம் கருத்து முரண் ஏற்பட்டது என்ற செய்தியை அறிவித்தவர். (முஸ்லிம்: 5358)
6 நபியவர்கள் சூரத்துன் நஜ்மை ஓதிய போது சஜ்தா செய்யவில்லை என்பதை அறிவித்தவர். (புகாரி: 1073)
7 நபியவர்கள் மஃரிப் தொழுகையில் நீளமான அத்தியாயங்களை ஓதியதாக அறிவித்தவர். (புகாரி: 764)
8 நபி (ஸல்) அவர்களின் மகள் ஸைனப் (ரலி) அவர்களின் குழந்தை மரணித்த போது இவரையும்நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் சென்றார்கள். (புகாரி: 1284)
9 அஹ்ஸாப் அத்தியாயத்தின் ஒரு வசனத்தை குஸைமா பின் சாபித் அல் அன்சாரீ அவர்களிடம்எடுத்து எழுதியவர். (புகாரி: 2807)
10 உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல நபித் தோழர்களையும் இவரையும் சேர்ந்துகுர்ஆனை பிரதியெடுக்குமாறு கட்டளையிடப்பட்டவர்கள். (புகாரி: 3506)