13) ஸைத் பின் ஸாபித் (ரலி)

நூல்கள்: நபித்தோழரை அறிந்து கொள்வோம்

1. நோன்பு நோற்க நபிகளாருடன் ஸஹர் செய்தவர். (புகாரி: 576)

2. இவர் அந்நஜ்மு அத்தியாயத்தை நபிகளாருக்கு ஓதிக் காட்டியபோது நபிகளார் ஸஜ்தா செய்யவில்லை. (புகாரி: 1072)

3. நபிகளார் காலத்திலும் அபூபக்ர் (ரரி) காலத்திலும் இளைஞராக இருந்தவர்.(புகாரி: 4679)

4. யஸீத் பின் ஸாபித் (ரரி) இவரின் அண்ணன். (திர்மிதீ: 943)

5. இவருடை அண்ணன் பத்ர் போரில் கலந்துள்ளார். (திர்மிதீ: 943)

6. இவர் பத்ர் போரில் கலந்து கொள்ளவில்லை. (திர்மிதீ: 943)

7. இவரிடமிருந்து அபூஹுரைரா (ரரி), அபூஸயீத் (ரரி), இப்னு உமர் (ரரி) ஸஹ்ல் பின் ஸஅத்(ரரி), உட்பட ஏரளாமான நபித்தோழர்கள் நபிமொழிகளை அறிவித்துள்ளனர். (அல் இஸாபா: 2882)

8. இவரின் தொடையில் நபிகளாரின் தொடை இருந்த நிலையில் (அல்குர்ஆன்: 4:95) வசனம் இறங்கியது. (புகாரி: 2832)

9. நபிகளார் காலத்தில் திருக்குர்ஆனை எழுதியவர்களில் இவரும் ஒருவர். (புகாரி: 4679)

10. அபூபக்ர் (ரரி) அவர்களின் கட்டளையின்படி திருக்குர் ஆன் இவர் தலைமையில் ஒன்று சேர்க்கப்பட்டது. (புகாரி: 4679)

ஸைத் பின் ஸாபித் (ரலி)