தலைவிதி பற்றி பைபிள் பேசவில்லையா?
பைபிள் விதியைப் பற்றி ஏதும் சொல்கின்றதா? தயவு செய்து விளக்கவும். என் கிறித்தவ நண்பன் பைபிள் விதியைப் பற்றி எங்கும் சொல்லவில்லை என்கிறான். பைபிள் மூலமே பதில் கூற வேன்டும்.
எல்லாம் விதிப்படி நடக்கின்ற்ன என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு எதிராக கிறித்தவ போதகர்கள் பல குதர்க்கமான கேள்விகளைக் கேட்கிறார்கள். எல்லாம் விதிப்படி என்றால் சொர்க்கம் நரகம் ஏன்? பாவம் செய்தவன் விதிப்படி தானே பாவம் செய்கிறான்? அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர்.
இந்த நிலையில் நீங்கள் கேட்டுள்ள கேள்வி மிகவும் அவசியமான கேள்வியாகும். இஸ்லாத்தில் விதி குறித்த நம்பிக்கை உள்ளது போல் பைபிளிலும் விதி குறித்த நம்பிக்கையைப் பேசும் வசனங்கள் பல உள்ளன. ஆனால் கிறித்தவ போதகர்கள் அவற்றைப் படிக்காமல் இஸ்லாத்துக்கு எதிராக கேள்வி கேட்கின்றனர்.
8. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
வெளிப்படுத்திய சுவிசேஷம் 13:8
12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள்.
வெளிப்படுத்திய சுவிசேஷம் 20:12
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்.
14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
15. ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்.
வெளிப்படுத்திய சுவிசேஷம் 20:13,14,15
26. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்.
27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.
வெளிப்படுத்திய சுவிசேஷம் 21:26, 27
3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
4. என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 139:3, 4
16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
சங்கீதம் 139:16
16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
சங்கீதம் 139:16
21. அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும் போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்து போகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப் பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.
உபாகமம் 31:21
2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
1ம் பேதுரு 1:2
16. ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
17. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
17. மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
18. ஆதலால் எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன்யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
20. அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்குஅதிகாரம் இல்லையோ?
22. தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
ரோமர் 9:10 – 23
7. உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
1 ம் கொரிந்திரியர் 2:7
3. நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
4. பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.
யாத்திராகம்ம் 7:3,3
20. கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
யாத்திராகமம் 10:20
27. கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.
யாத்திராகமம் 10:27
10. மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.
யாத்திராகமம் 11:10
4. ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள் வரைக்கும் கொடுக்கவில்லை.
உபாகமம் 29:4
10. இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
ஏசாயா 6:10
8. கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
ரோமர் 11:8
40. அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
யோவான்12:40
17. கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப் பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
ஏசாயா 63:17
11. ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
தெசலோனிக்கேயர் 2:11,12
இது போல் விதியின்படியே எல்லாம் நடக்கின்றன எனக் கூறும் பல வசனங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஏராளமாக உள்ளன.
விதியைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தேடிப்படிக்கும் கிறித்தவப் போதகர்கள் பைபிளில் விதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளதை அறியவில்லை. பைபிள் காட்டும் வழியை கிறித்தவ மக்களுக்குப் போதிக்கிறார்கள் என்பதை இந்த ஆதாரங்களில் இருந்து அறியலாம்.