அன்பின் வேறுபாடு இம்மையும் மறுமையும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

இந்த உலகில் வாழும் நமக்கு நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கையும். வசதிகளும் நிரந்தரமாக வழங்கப்பட்டதல்ல. அவை அனைத்தும் குறிப்பிட்ட காலம் வரைதான் வழங்கப்பட்டுள்ளது.

உங்களுக்குப் பூமியில் தங்குமிடமும் குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கை வசதியும் உண்டு.(அல்குர்ஆன்: 2:36)

உறவு ஓர் அருட்கொடை

நிரந்தரமில்லா இவ்வுலகில் குறிப்பிட்ட காலம் வரை நாம் வாழ்வதற்கு ஏராளமான அருட்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் உறவு என்னும் அருட்கொடை

உண்மையிலேயே உறவு என்பது ஓர் அற்புதமான அருட்கொடையாகும். நமது வாழ்கையின் வெற்றிக்கும். முன்னேற்றத்திற்கும் மட்டுமல்ல! இவ்வுலகில் நாம் வாழவேண்டும் என்றாய் உறவு என்ற அருட்கொடைதான் மிகவும் அவசியமானதாகும்.

அந்த உறவுகள் நமக்கு ஏராளமாக இருந்தாலும் அவற்றில் குறிப்பாகப் பெற்றோர் என்ற உறவு என்பது மற்ற அனைத்து உறவுகளையும் விட உச்சத்தில் உயர்ந்து நிற்கிறது.

உலகில் வாழும் அனைவருக்கும் பெற்றோர் என்ற உறவு இருக்கின்றது. சிலருக்கு இப்போது இல்லாமல் இருக்கலாம். மரணித்திருக்கலாம். ஆனால் எந்த மனிதரும் தனக்குப் பெற்றோர் என்ற உறவே இல்லை என கூறவே முடியாது. விதிவிலக்காக ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகியோருக்குப் பெற்றோர் இல்லாமலும், ஈஸா (அலை) அவர்களுக்குத் தந்தை இல்லாமலும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். இவர்கள் அல்லாத அனைவருக்கும் இந்த உறவு இருக்கின்றன.

இப்படிப்பட்ட இந்த உறவை இஸ்லாம் புனிதமாகவும், புண்ணியமாகவும். பார்க்க சொல்கிறது. இடங்களில் இவர்களின் சிறப்பையும், மேன்மையையும் மேலோங்க செய்கிறது.

தாய்மையின் சிறப்பு

மனிதனுக்கு அவளது பெற்றோர் குறித்தும் அறிவுறுத்தினோம். அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டு அவனைச் சுமந்தாள்.

(அல்குர்ஆன்: 31:14)

இந்த வசனத்தின் மூலம் தாய்மையின் சிறப்பை அல்லாஹ் சிலாகித்துக் கூறுகின்றான்.

93 தாய். தன் பிள்ளையைப் பெற்றெடுப்பதற்காகப் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிறாள்.

பிள்ளையைச் சுமக்க ஆரம்பித்த நாள் முதல் பெற்றெடுக்கும் நாள் வரை அல்ல! அவளது வாழ்நாள் முடியும் தாள் வரை கஷ்டங்களால் குழப்பட்டுள்ளாள். ஒரு தாய் தனக்கு விருப்பமான உணவு, உடை, உறக்கம், உறவு, உணர்வு என அனைத்தையும் தன் பிள்ளைக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் தியாகம் செய்கிறாள்.

குறிப்பாகப் பிரசவ காலத்தின் போது சுப்ஹானல்லாஹ். அந்த வேதனை ஒரு மனிதன் சராசரியாக அனுபவிக்கும் வேதனையை விடப் பல மடங்கு கொடூரமானது என்றும் மற்ற நேரங்களில் இதுபோன்ற ஒரு வேதனையை ஒருவர் அடைந்தால் அவர் நிச்சயம் மரணத்தைத் தான் அடைவார் என்ற அளவுக்கு மரண வேதனை என்கிறார்கள்.

ஒரு மனிதனின் 20 எலும்புகளை ஒன்றாக உடைத்தால் எந்த அளவுக்கு வேதனையின் உச்சத்தை அடைவானோ அப்படிப்பட்ட துன்பத்தை ஒவ்வொரு பெண்ணும் தன் பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது அனுபவிக்கிறாள்.

இவ்வளவு கஷ்டத்தையும் தாய்மார்கள் இஷ்டத்துடன் ஏற்று கொள்கின்றார்களென்றால் அதற்கான முதன்மைக் காரணம் பிள்ளைகளின் மீது கொண்ட அன்பு. தனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அந்தக் குழந்தையின் மேல் அன்பு செலுத்தி அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதேயாகும்.

இல்லையெனில் ஒரு குழந்தை பிறந்த உடனே எனக்கு மற்றொரு குழந்தை தேவை இல்லை, இதனால் ஏற்படும் வேதனை படுபயங்கரமானது இதுபோன்ற துன்பத்தை என்னால் இனி ஒருபோதும் அனுபவிக்கவே முடியாது என்று கூறி விடுவாள்.

ஆனால் இவ்வளவு கஷ்டங்களையும் பார்த்து, அனுபவித்துவிட்டு மீண்டும் அந்த கொடுமையை அனுபவிக்க ஒரு தாய் தன்னையே அர்ப்பணிக்கிறாள் என்றால் அது குழந்தையின் மேல் உள்ள ஏக்கமின்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

அதேபோலத் தான் தந்தையும்…

தந்தையின் சிறப்பு

தந்தையைப் பற்றி நபிகளார் கூறும் போது:

(ஒரு மனிதன்) தன்னுடைய தந்தையை அடிமையாகப் பெற்று அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்)தைத் தவிர (வேறு எந்த காரியத்தைச் செய்தாலும்) மகன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்ய முடியாது.

நூல்: (இப்னு மாஜா: 3649)

நாம் நமது வாழ்நாள் முழுவதும் நமது தந்தைக்கு உபகாரம் செய்தாலும், பல மாத சம்பளங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் அது தந்தையின் தியாகத்திற்கு முன்னால் ஒருபோதும் ஈடாகாது. பெற்றோர் செய்யும் தியாகத்திற்கு இன்று சிலர் பணத்தைக் கொடுத்துவிட்டால் அவர்களுக்கு ஈடு செய்துவிட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் இவையெல்லாம் அவர்கள் நமக்காகச் செய்த தியாகத்திற்கு முன் ஒரு பொருட்டே அல்ல என நபிகளார் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு தந்தையும் தனது பிள்ளைக்காகவும் தன் மனைவிக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் ஒட்டுமொத்த இன்பங்களையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டுத்தான் வாழ்கின்றனர்.

தாம் வாழ்கையில் பார்க்காத இன்பங்களையும், வசதிகளையும், தன் பிள்ளைகள் பார்க்க வேண்டும். தன் குடும்பம் பார்க்க வேண்டும், அவர்கள் நல்ல நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.

இங்கு அனைவரும் கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் அல்ல. பலரின் தந்தைமார்கள் அதிகமான தியாகங்களைத் தாங்கியே குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையிலுள்ளது. இவ்வாறு இருக்கையில் நாம் நமது தந்தையின் கஷ்டத்தை எண்ணிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அதற்காக அவர்களுக்கு நன்றி செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்.

பேருந்து அல்லது ரயில் நிலயம் போன்ற இடங்களில் ஒருவர் வியாபாரம் செய்கிறார் என்றால் அன்றைய தினம் எப்படியாவது அதிகமான பொருட்களை விற்பனை செய்துவிட வேண்டும் என சிப்ஸ், பாப்கார்ன், கண்டல், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை விற்பதற்கு ஒவ்வொரு பஸ்ஸாக ரயில் பெட்டியாக ஏறி ஏறி இறங்குவார். கூவிக் கூவி விற்பார். வாகனம் புறப்பட்டத் துவங்கியதும் உடனே பதற்றமாக ஓடி வந்து கொடுப்பார்.

இவர்களெல்லாம் யாரோ ஒருவருடைய தந்தை என்பதால் இதை நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை இருப்பினும் நம்முடைய தந்தையும் இப்படித் தானே எங்கோ கஷ்டப்படுகிறார். வெளிநாடுகளில் தன் மனைவியையும். பிள்ளைகளையும், குடும்பத்தையும் பிரிந்து தவிக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம் கஷ்டப்பட்டு உழைத்தால்தான் தமது குடும்பத்தார் நிம்மதியாக வாழ்வார்கள் என்ற எண்ணத்தில் தனக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் சகித்துக் கொள்கிறார்கள். முதலாளியின் ஏச்சுக்கும். பேச்சுக்கும் ஆனாகி அங்கு இருப்பவர்களுக்கு முன்னால் தனது சுயமரியாதையைக் கூடப் பொருட்படுத்தாமல் நாளை உணவிற்கு என்ன செய்வது என்ற நிலையில் வேறு வழி இல்லாமல் அனைத்துக் கஷ்டங்களையும் தாங்கிக் கொள்கிறார்.

தொழிலில் பல துக்கத்தையும், துயரங்களையும் தாண்டி வீட்டிற்கு வந்தால் அங்கும் ஏதேனும் துன்பங்கள், வீட்டையும் விட்டு வெளியே சென்றால் சமூகத்திலும் பிரச்சனைகள், இதுபோக தனது உடலிலும் பிரச்சனைகள் என அனைத்துப் பிரச்சனைகளையும் தாண்டி நம்மை நல்ல முறையில் வளர்த்து, நல்ல நிலையில் வாழச் செய்கிறார்கள் என்றால் அவர்களின் தியாகத்திற்கு ஈடு செய்து விட முடியுமா என்ன?

நபிகளார் கூறினார்கள்: அப்படி ஈடு செய்ய வேண்டுமெனில் தம் தந்தை யாருக்காவது அடிமையாக இருந்து அவர்களை நாம் விடுவிக்க வேண்டும். இந்தப் பாக்கியம் தற்போது உள்ள சூழலில் யாருக்கும் உண்டா?

இவ்வாறு பல துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல் அனைத்தையும் சகித்துக் கொண்டு பிள்ளைகளுக்காகயே வாழக்கூடிய ஓர் உறவு தான் பெற்றோர். எனவே தான் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய உபகாரங்களை, கடமைகளை உலகத்திலேயே அவர்களுக்கு முறையாகச் செய்யுமாறு மார்க்கம் நமக்கு கட்டளைவிடுகிறது.

அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையில் ஒருபோதும் நாம் குறை வைத்து விடக்கூடாது. அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து இவ்வுலகத்திலேயே அதற்கான கணக்கை நாம் தீர்த்து விட வேண்டும்.

ஏனெனில் நம்மீது அவர்கள் வைத்திருந்த அன்பும், அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் அன்பும் இந்த உலகத்துடன் முடிவடைந்து விடும். மறுமையிலே இந்த உறவுக்கு மத்தியில் விரிசல் விட்டுவிடும். அவர்கள் நம்மீது வைத்த பாசத்திற்காகப் பரிந்துரையோ, பாதுகாப்போ செய்ய முடியாத ஒரு நாளுக்கு நாமும் அவர்களும் தள்ளப்பட்டு விடுவோம். அன்றைய தினம் அனைவரின் அன்பும் அடியோடு அற்றுப் போய், அழிந்து போய்விடும்.

உறவுகளின் மறுமை நிலை

நம் மீது நேசமும், பாசமும் வைத்திருக்கும் பெற்றோர் உலகில் எவ்வாறு இருந்தார்களோ அதற்கு அப்படியே நேர்மாற்றமாக மறுமையில் இருப்பார்கள் என்று இறைவேதம் நமக்கு எடுத்துரைக்கின்றது.

அவற்றைப் பார்க்கும்போது மிக அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தாலும் அதுவே மறுமையின் யதார்த்த நிலையாகும் என்பதை உணரலாம். ஏனென்றால் மறுமையின் கொடுமை படு பயங்கரமாக இருக்கும்.

கருவைப் பிரசவித்து விடுவாள்

அதை நீங்கள் பார்க்கும் நாளில், பாலூட்டும் இதன் காரணமாகத்தான் ஒருபோதும் ஒவ்வொரு பெண்ணும், தான் எதற்குப் அவர்களுக்கு ஈடு செய்யவே முடியாது என்று பாலூட்டினாளோ அதை மறந்து விடுவாள்.

ஒவ்வொரு கர்ப்பிணியும் தனது கருவைப் பிராலித்து விடுவாள். நீர் மக்களைப் போதையில் இருப்பவர்களாகக் காண்பீர். ஆனால் அவர்கள் போதையில் இருப்போர் அல்ல! மாறாக. அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானது.

(அல்குர்ஆன்: 22:2)

பெண்கள் பிரசவத்தின் போதுநான் கடுமையான துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்பதைப் பார்த்தோம். ஆனால் மறுமையின் துன்பத்திற்கு முன்னால் அவற்றை ஒப்பிடுகையில் இது என்ன கஷ்டம் என்பதை உணர்த்தும் வகையில், யாருடைய உதவியும் இல்லாமல் தனது பிரசவத்தைத் தாமே பிரசவித்து விடும் நிலை ஏற்படும்.

அதேபோன்று இவ்வுலகில் பிள்ளைகள் இரவு நேரங்களில் தூக்கமின்றி அழுகுரல் எழுப்பினால் அவர்களை ஆறுதல் படுத்துவதற்காகத் தூக்கத்தையும் தூக்கி எறிந்த தாய்தான் மறுமையில் தனது பால்குடி பிள்ளையையே தூக்கி எறிந்துவிடுவாள். அப்படியென்றால் தாயின் பாசம் மறுமையில் எங்கே? தாயின் பாசம் மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமூகமும் நாளை மறுமையில் தன்னுடைய நிலை என்ன? என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்களே தவிர மற்றவர்களின் நிலை என்ன? பிள்ளை, தாய், தந்தை, மனைவி, உற்றார், உறவினர், ஆகியோரின் நிலை என்ன என்பதை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். இதற்கான காரணம் மறுமையின் வேதனை கொடூரமானதாக இருக்கும் என்பதுதான்.

தனக்காக வாதிடுவான்

அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தனக்காக வாதிடுவதற்காக வருவான்.

(அல்குர்ஆன்: 16:11)

தனக்காக மட்டும் வாதிட வருவார்கள், மற்றவர்களை மறந்து விடுவார்கள்.

ஸுர்’ ஊதப்படும்போது, அன்றைய தினம் அவர்களுக்கிடையே உறவுகள் எதுவும் இருக்காது. அவர்கள் ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 23:101)

உலகில் நாம் துன்பத்திற்கு உள்ளாகும் போது, நோய்வாய்பட்டு இருக்கும் போது நம்மை நலமாக, பக்குவமாகப் பார்த்துக் கொண்டவர்கள் பராமரித்தவர்கள் யாரும் மறுமையில் விசாரிக்கக் கூட மாட்டார்கள்.

மறுமை நாளில் உங்கள் உறவினர்களோ, உங்கள் பிள்ளைகளோ உங்களுக்குப் பயனளிக்கவே மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 6:3)

உலகில் உறவுகளின் அன்பையும், பாசத்தையும் பார்த்து வளர்ந்த தமக்கு மறுமையில் எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். ஒரு வார்தை கூட விசாரிக்க மாட்டார்கள் என்பதைப் படிக்கும்போதே பயமாகவும், நடுக்கமாகவும் உள்ளளது. இந்த உலகில் ஏதேனும் பிரச்சனை என்றவுடன் ஓடோடி வந்த உறவுகள் மறுமையில் நம்மைக் கண்டு ஓடிவிடுவார்கள் எனக் குர்ஆன் நமக்கு எச்சரிக்கை செய்கிறது.

மனிதன் வெருண்டோடுவான்

அந்நாளில் பெரும் சப்தம் ஏற்படும்போது. தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு மனிதன் வெருண்டோடுவான். அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும், (பிறரைக் கவனிக்காமல் தன்னைப் பற்றியே கவனம் செலுத்தும் ஒரு நிலைதான் இருக்கும். அந்நாளில் சில முகங்கள் ஒளிமயமாக இருக்கும்; மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருக்கும்.

(அல்குர்ஆன்: 80:33-39)

இந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் அனுபவித்தே ஆகவேண்டும். மறுமையில் நிற்கும்போது நாம் யார் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தோமோ. யாருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோமோ, யாருக்காக வாழ்ந்தோமோ. யாருக்காகப் பல துயரங்களை அனுபவித்தோமோ அப்படிப்பட்டவர்கள் மறுமையில் நமக்கு முன்னால் வந்தாலும் அவர்களைப் பார்ப்பதற்குக் கூடத் தயாராக இருக்க மாட்டோம். அவர்கள் நீண்ட வருடம் ஏக்கத்திற்குப் பின் பிறந்த குழந்தையாக இருந்தாலும், நமது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆசை, ஆசையாக அரவணைத்த மனைவியாக இருந்தாலும் நாம்தான் அவர்களின் நோக்கம் என்று வாழ்ந்த தமது பெற்றோர்களாக இருந்தாலும் சரியே!

இன்னும் ஒருபடி மேலே அல்லாஹ் அவர்களின் செயலைப் பற்றி விவரிக்கின்றான்.

இறைவனிடம் பேரம் பேச விரும்புவார்கள்

அவர்கள் ஒருவருக்கொருவர் காண்பிக்கப் படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு மாற்றாகத் பிள்ளைகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்து வாழ்ந்த உறவினரையும், பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுத்து, அது தன்னைக் காப்பாற்ற வேண்டுமெனக் குற்றவாளி விரும்புவான்.

(அல்குர்ஆன்: 70:11-14)

எனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் பரவாயில்லை. எனது குழந்தைகளுக்கு எந்தத் துன்பமும் வந்துவிடக்கூடாது என தன்னையே அர்ப்பணித்த பெற்றோர் வேதளையைப் பார்த்த மறுமையில் தன்னை பின்பு எப்படியாவது காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கும்போது அன்பும், பாசமும் கொட்டி வளர்த்த தனது பிள்ளையை வேதனைக்கு ஈடாகக் கொடுக்க முனைவார்கள்.

ஆசையுடன் கட்டிய அழகான, அன்பான மனைவியை, இறைவா! அவர்களை வேதனை செய்ய நீ எடுத்துக்கொள் எனக் கூறுவான். இந்த மனைவிக்காகத் தாயையும், தந்தையையும் ஏன்? தனது மார்க்கத்தையே தூக்கிப் போட்டவன். மறுமையில் மனைவியை அடைமானம் வைத்துத் தன்னைக் காத்துக் கொள்ள நினைப்பான்.

உறவுகளுக்காக மார்க்கத்தை வளைத்து அவர்களின் தீமையான காரியங்களில் பங்குகொண்ட நிலையில் ‘இறைவா! எனது உறவை எடுத்துக்கொள்’ கூறுவான். இன்னும் இவர்கள் உனக்குப் போதவில்லையென்றால் உலகில் வாழ்ந்த அனைத்து மக்களையும் நீ எடுத்துக்கொள்! தான் மட்டும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுவான். மறுமை வேதனையை விட்டு அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும். இவ்வளவு கொடுமையையும் நாம் சந்திக்கும் நிலை நிச்சயமாக வந்தே தீரும்.

ஒரு மனிதனின் அன்பின் எல்லையை இதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. உலகில் என்னதான் பெற்றவர்கள் மீதும், பிள்ளைகளின் மீதும், பிற மக்களின் மீதும், அளவு கடந்த அன்பு வைத்திருந்தாலும் அவை அனைத்தும் மரணம் வரையேர் மறுமை வரையல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கொள்கையில் சமரசம் வேண்டாம்

இப்படிப்பட்ட உறவுகளுக்காகச் சிலர் மார்க்கத்தை விட்டுக் கொடுத்து விடுகின்றனர். மறுமையில் உறவுகளின் நிலவரம் இவ்வாறு எனும்போது எப்படி பிள்ளைகளுக்காகவும். பெற்றோருக்காகவும். உறவினர்களுக்காகவும், கொள்கையில் சமரசம் செய்ய முடியும் என்பதைச் சித்திக்க வேண்டும். இறைவன் கட்டளையிடுவது போன்று இவ்வுலகில் உறவை இணைத்து வாழ வேண்டும். அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும்.

ஆனால் அவர்கள் நம்மீது வைத்துள்ள அன்பிற்காக ஆசைக்காக ஒருபோதும் கொள்கையில் சாய்ந்துவிடக் கூடாது, சரிந்து விடக்கூடாது. அவர்களுடன் தீமையில் பங்கு கொள்ளக்கூடாது.

தாய் சொன்னார்; தந்தை சொன்னார்; எனவே வரதட்சணை வாங்கினேன்.

பெண்ணைப் எனக்குப் பிடித்தது: அதனால் கொள்கையில் உள்ளாரா. இல்லையா எனப் பார்க்காமல் திருமணம் செய்தேன்.

ஊரும் உறவும் எனக்கு முக்கியம்; எனவே அவர்களுடன் பாவத்தில் பங்கு கொண்டேன் என்றெல்லாம் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது.

இவ்வாறு இருந்தால் யாருக்காக இதை நாம் செய்தோமோ அவர்களே நம்மை மறுமையில் கைவிட்டுவிடுவார்கள். நாம்தான் இறைவனிடம் குற்றவாளியாக நிற்போம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இந்த உலகத்தில் உறவுகள்மீது அன்போடும். பாசத்தோடும் வாழ வேண்டும். ஆனால் அதே சமயம் மறுமையில் அந்த உறவுகள் நம்மை ஒருபோதும் காப்பாற்றப் போவதில்லை என்பதை உணர்ந்து, மார்க்கம் காட்டிய அடிப்படையில் உறவைப் பேணி மறுமையில் வெற்றி பெறுவோமாக!