ஈமானை அதிகரிக்கச் செய்யும் அதிசயங்கள்..!
இறைவனை மட்டும் வணங்கி வழிபடுகின்ற முஸ்லிம்களின் உள்ளங்கள் என்பது ஈமானால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக. இறைவன் தன்னுடைய புறத்திலிருந்து ஏராளமான அதிசயங்களையும் – மகத்தான அற்புதங்களையும் நிகழ்த்தி ஒவ்வொருவரின் ஈமானையும் உறுதிப்படுத்துகின்றான்.
இறைவனின் மீது அளப்பரிய நம்பிக்கையை வைத்து வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அவர்கள் எண்ணிப் பார்த்திராத வகையில், இறைவன் தன் புறத்திலிருந்து அறியாப்புற வகையில் பேருபகாரம் செய்கின்றான்.
முதலில் ஒரு அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய பலதரப்பட்ட அற்புதங்கள் அதிசயங்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக் காட்டுகின்றான். ஆனால், நபிமார்களின் வாழ்க்கையில் நடைபெற்ற எந்த அற்புதத்தையும் நேரடியாக நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்று அல்லாஹ் எடுத்துக் காட்டவில்லை. மாறாக, படிப்பினையூட்டும் செய்திகளாகத் தான் அல்லாஹ் நினைவுபடுத்துகின்றான். அந்த வகையில் நபிமார்கள் வாழ்வில் நடந்த அதிசயங்கள் பலவற்றை நபிகளாருக்கு முக்கியமான செய்திகளாக திருக்குர்ஆனிலே அல்லாஹ் எடுத்துக் கூறுகின்றான்.
உதாரணமாக, நபி (ஸல்) அவர்கள் இறைவனிடத்தில், மூஸர் (அலை) அவர்கள் காலத்தில் நடைபெற்ற அதிசய நிகழ்வுகளை எனக்கு எடுத்துக் காட்டு! அப்பொழுது தான் நம்பிக்கை என்பது என்னுடைய உள்ளங்களில் ஆழமாகப் பதியும் என்று கோரிக்கை வைக்கவுமில்லை. அல்லாஹ் அவ்வாறு எடுத்துக் காட்டவுமில்லை.
இறைவன் புறத்திலிருந்து நடைபெற்ற அற்புதங்களை உள்ளது உள்ளபடியே அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த பாடம் இந்த ஒரு அடிப்படையைப் புரிந்து கொண்டு, இறைவளின் புறத்திலிருந்து நிகழும் அதிசயங்களையும் அற்புதங்களையும் தம்முடைய வாழ்க்கையில் ஆழமாக நம்பிக்கை கொண்டு படிப்பினைகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்!
நாம் நாடினால் அவர்களுக்கு வானிலிருந்து ஒரு சான்றை இறக்கியிருப்போம். அப்போது அவர்களின் கழுத்துக்கள் அதற்குப் பணிந்தவையாகி விடும்.
அல்லாஹ்வின் அருளப்பட்ட புறத்திலிருந்து இறக்கி அற்புதங்கள் மற்றும் அதிசயங்களை ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்விக்கணைகளை தொடுக்காமல் கழுத்துக்கள் கீழ்படித்து இறைவனின் சன்னிதானத்திலே விழுந்து விட வேண்டும் என்பதுதான் இறைவனின் கட்டளையாக இருக்கின்றது.
அரபுக் கோத்திரத்தை சார்ந்த அடிமைப் பெண் ஒருவர் பள்ளிவாசலில் இருக்கின்ற அறைக்கு வந்து ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருப்பாள். அப்போது, அந்த கருப்பு நிற அடிமைப் பெண் தனது வாழ்க்கையில் நடைபெற்ற கொடுமையான சம்பவங்களையும், அந்தச் சம்பவத்தின் மூலமாக தான் அனுபவித்த சிரமங்களையும், அந்தச் சிரமங்களைப் பொறுத்துக் கொண்ட காரணத்தினால் அதிசயத்தின் மூலமாக அல்லாஹ்வின் உதவி வெளிப்பட்டதையும் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் எடுத்து சொன்னாள்.
அந்த சுவாரஸ்யமான அதிசயங்கள் நிறைந்த சம்பவங்கள் இதோ!
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்தமான கருப்பு (திற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள். அவளுக்குப் பள்ளிவாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம் வந்து பேசிக் கொண்டிருப்பாள். அவள் பேசி முடிக்கும் போது, “அரையணித் தோள் பட்டிகை (காணாமல் போன) நாள் எம் இறைவனின் வித்தைகளில் ஒன்றாகும். அந்த தாள் இறைமறுப்பு (மேலோங்கி) இருந்த ஊரிலிருந்து என்னை (வெளியேற்றிக்) காப்பாற்றி விட்டது” என்று பாடுவாள்.
இவ்வாறு அவள் அதிகமாகப் பாடுவதைக் கேட்ட நான், “அரையணித் தோள் பட்டிகை நாள் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன் சொன்னாள்:
குடும்பத்தாரில் என் (எஜமானியர்) ஒருவருக்குரிய சிறுமி ஒருத்தி (மணப்பெண்ணாக இருந்ததால்) பதனிடப்பட்ட தோலால் ஆண (சிவப்பு) அரையணித்தோய் பட்டிகை ஒன்றை அணிந்து கொண்டு (குளியலறைக்குச்) சென்றாள். அப்போது அந்தப் பட்டிகை (எதிர்பாராத விதமாக) அவளிடமிருந்து கழன்று) விழுந்து விட, அதைப் பருந்து ஒன்று இறைச்சி என்று நினைத்துக் கல்வி எடுத்துச் சென்று விட்டது.
(என் எஜமானர்கள் நாஸ்தான் அதைத் திருடினேன் என்று) என் மீது குற்றம் சாட்டி என்னைச் சித்திரவதை செய்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் பிறப்புறுப்பையும் என் சோதனையிட்டார்கள். அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்க, நான் கடும் வேதனையில் துடித்தபடி) இருந்தபோது, அந்தப் பருந்து எங்கள் தலைகளுக்கு நேராக வந்து அந்தப் பட்டிகையைக் கீழே) போட்டது. உடனே அதை அவர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போது தான் அவர்களிடம், “நான் குற்றமற்றவளாயிருக்க, நான் திருடிவிட்டதாக நீங்கள் குற்றம் சாட்டினீர்களே அந்தப் பட்டிகை தான் இது” என்று சொன்னேன்.
ஆதாரம்: (புகாரி: 3835)
மேலே உள்ள செய்தியை ஆழமாகப் படித்துப் பார்த்தால், உண்மையில் நம்முடைய உள்ளங்களை கலங்கச் செய்கின்ற செய்தியாகும்.
கருப்பு நிறப் பெண்மணி ஒருவர் வேலை செய்து வந்த வீட்டில், தன்னுடைய எஜமானனின் மகள் அணிந்திருந்த தோள்பட்டிகை ஒன்றை பருந்து தூக்கிச் சென்று விடுகின்றது.
ஆனால், எஜமானனின் குடும்பத்தார்களும், ஊர் மக்களும் சேர்ந்து அந்தக் கருப்பு நிற அடிமைப் பெண்ணின் மீது திருட்டுக் குற்றத்தைச் சுமத்தி, கடுமையான முறையில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு துன்பத்தையும் சிரமத்தையும் கொடுக்கின்றார்கள். அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கிறார்கள்.
ஆனால், அந்த கருப்பு நிறப் பெண்மணியைக் காப்பாற்றுவதற்காக இறைவன் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகின்றான்?
அதாவது, எந்தப் பருந்து தோள் பட்டிகையை எடுத்துச் சென்றதோ, அதே பருந்து ஊர் மக்கள் குழுமி, அப்பாவிப் பெண்ணை சித்ரவதை செய்து கொண்டிருந்த அத்தகைய கூட்டத்தாருக்கு முன்னால், அந்தத் தோள் பட்டிகையை தூக்கி வீசி எறியச் செய்து, தன்னுடைய வல்லமையை மகத்தான அதிசயத்தின் மூலம் அல்லாஹ் நிகழ்த்திக் காட்டுகின்றான்.
இப்ராஹீம் நபி அவர்களின் மனைவியிடத்தில் தவறான முறையில் நெருங்கச் சென்ற கொடுங்கோல் ஆட்சியாளனிடமிருந்து இப்ராஹீம் நபியின் மனைவிக்கு அல்லாஹ்வின் உதவி எப்படி கிடைத்தது? என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சிபுரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைத்தனர். “அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹிம் வந்திருக்கிறார்!” என்று (மன்னனிடம்) கூறப்பட்டது.
மன்னன், இப்ராஹிம் (அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, “இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?” எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) ‘என் சகோதரி’ என்று சொன்னார்கள். பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள், “நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூஃமின்) யாரும் இல்லை” என்று சொன்னார்கள்.
பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து தொழுதுவிட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!” என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.
மன்னனின் நிலையைக் கண்ட சாரா, ”இறைவா! இவன் செத்து விட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்” என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து அங்கசுத்தி செய்து தொழுதுவிட்டு, “இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், எனது பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ளவிடாதே!” என்று பிரார்த்தித்தார்.
உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக்கொண்டான். மன்னனின் நிலையைக் கண்ட சாரா, “இறைவா! இவன் செத்துவிட்டால் நான்தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்” என்று பிரார்த்தித்தார்.
இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே. இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள்” என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து, “அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
ஆதாரம்: (புகாரி: 2217)
கொடுங்கோல் ஆட்சியாளனிடம் இப்ராஹீம் நபி அவர்களின் மனைவி சென்ற போது, கேடுகெட்ட மன்னன் சாரா அம்மையாரை நெருங்க முற்படுகின்றான்.
கேடுகெட்டவர்களின் தமக்கருகில் பாதுகாப்பிற்கு கூடாரத்திற்குள் யாருமில்லை என்றாலும், என்னுடைய இறைவன் நிச்சயம் என்னைக் காப்பாற்றுவான் என்ற ஆழமான நம்பிக்கையோடு செய்து உளு விட்டு இறைவனிடத்தில் கையேந்துகின்றார்.
இறைவனின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து, இறைவா! நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். உன்னைத் தவிர என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை என்று உளமார இறைவனைச் சார்ந்திருப்போருக்கு, இறைவன் தன்னுடைய புறத்திலிருந்து உச்சக்கட்ட அதிசயங்களின் மூலமாக உதவி மழையைப் பொழிவான் என்பதற்கு இந்தச் செய்தி நிதர்சனமான சான்றாகும்.
இறைவனின் தூதரான அய்யூப் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இறைவன் ஏராளமான சோதனைகளையும். கஷ்டங்களையும், சிரமங்களையும் வழங்கி பல கட்ட வகைகளில் அடுக்கடுக்காய் சோதனைகளைத் தொடுத்தான்.
அய்யூப் (அலை) அவர்களின் வாழ்க்கையில் நீண்ட நெடிய நாட்கள் இறைவனின் புறத்திலிருந்து தொடுக்கப்பட்ட சோதனைகளை சகித்துக் கொண்டு பொறுமையாக இருந்த காரணத்தினால், அவர் அனுபவித்த சோதனைகளுக்குப் பசுரமாக இரண்டு மடங்கு பிரம்மாண்டமான கூலியை தன்னுடைய அதிசயத்தின் மூலமாக அய்யூப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கி சிறப்பிக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் நபியாகிய அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு ஏற்பட்ட துன்பத்தில் பதினைந்து ஆண்டுகள் அல்லது பதினெட்டு ஆண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு வாழ்ந்தார். அய்யூப் (அலை) அவர்களின் இரண்டு சகோதரர்களைத் தவிர ஏனைய அவர்களின் நெருங்கிய உறவினர்களும், தூரமான உறவினர்களும் (அவரது நோயின் காரணமாக) அவரை ஒதுக்கித் தள்ளினார்கள். அவ்விரண்டு சகோதரர்களும், அய்யூப் (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கத்திற்குரியவர்களாக இருந்தார்கள். அந்த இரண்டு சகோதரர்களும் காலையிலும், மாலையிலும் அய்யூப் (அலை) அவர்களை சந்தித்து (ஆறுதல்) சொல்பவர்களாக இருந்தனர்.
அந்த இருவரில் ஒருவர் தன்னுடைய சகோதரனிடம்.
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக. அய்யூப் (அலை) அவர்கள் உலகத்தில் எவரும் செய்திராத, பெரும் பாவத்தை செய்திருப்பார் என்பதை நீ அறிவாயா?” என்று கேட்டார். அதற்கு, மற்றொரு சகோதரர், ”(பெரும் பாவம்) செய்திருப்பார் என்பது உனக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டார்.
அதற்கு (குறை சொன்ன) அந்த சகோதரன், “அய்யூப் (அலை) அவர்கள் பதினெட்டு ஆண்டுகள் நோய்வாய்ப்பட்டுள்ளார். அல்லாஹ், அய்யூப் (அலை) மீது கருணை புரிந்து, அவருடைய நோயின் துன்பத்தைப் போக்கவில்லை” என்று கூறினார்.
அய்யூப் (அலை) அவர்கள் குறித்து, (உடன் இருந்த) சகோதரன் சொன்னதை மற்றொரு சகோதரன் மறுநாள் அவர்களிடம் எடுத்து சொன்னார். (இந்த விஷயத்தை) அய்யூப் (அலை) அவர்களிடம் சொல்லாமல் இருப்பதிலிருந்து (அவரால்) பொறுமை காக்க இயலவில்லை.
(அலை) அதற்கு அய்யூப் அவர்கள். ”என்னவென்று நான் அறிய மாட்டேன். மாறாக, அல்லாஹ் அறிந்ததற்கு மாற்றமாகத்தான் நீர் கூறுகின்றாய் என்றே எனக்குத் தோன்றுகின்றது” என்று கூறிவிட்டு,
அய்யூப் (அலை) கூறினார்கள்:
அல்லாஹ் விஷயத்தில் இரண்டு மனிதர்கள் தர்க்கம் செய்து கொண்டே இருந்தார்கள். நான் என்னுடைய வீட்டிற்கு வந்ததும், அல்லாஹ் விஷயத்தில் தர்க்கம் செய்து கொண்டிருந்த அந்த இரண்டு மனிதர்களுக்காக (உண்மையை அறிந்து கொள்ள இறைவனிடம்) பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தேன் (இவ்வாறுதான் நான் செய்தேன்)” என்று கூறினார்கள்.
அய்யூப் (அலை) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக வெளியேறிச் செல்பவர்களாக இருந்தார்கள். அப்போது. அவருடைய மனைவி அய்யூப் (அலை) அவர்களின் கரங்களைப் பிடித்து அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள். ஒருநாள் இயற்கைத் தேவையை நிறைவேற்ற சென்ற அய்யூப் (அலை) அவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
(அந்த நேரத்தில்) அய்யூப் (அலை) அவர்களுக்கு, அவர் நின்ற இடத்திலேயே அல்லாஹ் வஹிச் செய்தியை அருளினான். ‘அய்யூபோ உனது காலால் தரையில் மிதிப்பீராக! (அந்த இடத்திலிருந்து) தண்ணீர் ஊற்று பீறிட்டது இது அருந்துகின்ற குளிர்ந்த தண்ணீர் ஊற்றாகும், அருந்துவதற்குரிய பானமாகும்” என்று கூறினான்.
(நீண்ட நேரத்திற்குப் பிறகு) அய்யூப் (அலை) வெளியேறி, தன்னுடைய மனைவியைச் சந்தித்த போது, அய்யூப் (அலை) அவர்கள் (பாதிக்கப்பட்டிருந்த) முழுமையான நோய்க்கு அல்லாஹ் நிவாரணம் வழங்கி விட்டான் என்பதை அறிந்து கொண்டார். (ஆனால் இவர் தன்னுடைய கணவர் தான் என்பது அவருக்கு தெரியவில்லை) மேலும் அய்யூப் (அலை) மிகவும்: அழகிய தோற்றத்தில் மாறியிருப்பதை (மனைவி) உணர்ந்து கொண்டார்!
மேலும் அய்யூப் (அலை) அவர்களை பார்த்து அவருடைய மனைவி கூறினார்கள்:
“அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! இன்னின்ன சோதனையால் பாதிக்கப்பட்டிருந்த அல்லாஹ்வின் நபியை நீர் கண்டீரா? ஒருவேளை அவர் ஆரோக்கியமுள்ளவராக இருந்திருந்தால் உங்களைப் போன்று தான் இருந்திருப்பார்” என்று இவர் தான் தன்னுடைய கணவர் அய்யூப் (அலை) அவர்கள் என்பதை அறியாத மனைவி (அந்த அழகிய மனிதரிடத்தில்) கேட்டார். அதற்கு, அய்யூப் (அலை) அவர்கள், நான் தான் உன்னுடைய கணவர் என்று பதிலளித்தார்கள்.
மேலும், அல்லாஹ் அய்யூப் (அலை) அவர்களுக்கு இரண்டு பாத்திரங்களை வழங்கினான். அதில் ஒன்றில் (வாற்)கோதுமையும் மற்றொன்றில் (மணற்) கோதுமையும் இருந்தது. மேலும், இரண்டு மேகங்களை அல்லாஹ் அனுப்பினான்.
அந்த மேகங்களில் ஒன்று (வாற்)கோதுமை (களத்தை) அடைந்ததும், அது நிரம்புகின்ற வரை, பொன் மழை பொழிந்தது. மேகங்களில் மற்றொன்று (மணற்) கோதுமை (களத்தை) அடைந்ததும், அது நிரம்புகின்ற வரை, பொன் மழை பொழிந்தது.
ஆதாரம்: (இப்னு ஹிப்பான்: 2898)
இறைவன் அய்யூப் (அலை) அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அதிசயத்தை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.
பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட அய்யூப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிந்து, அந்த நோயைப் போக்கியதற்குப் பிறகு இரண்டு மடங்காகத் தங்கத்தை வாரி வழங்குகின்றான்.
இறைவனின் புறத்திலிருந்து சோதனைகளை சகித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருந்தால், அல்லாஹ் இரண்டு மடங்கு கூலியை தன்னுடைய அதிசயத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டுவான் என்பதற்கு அய்யூப் (அலை) செய்தி மிகச் சிறந்த சான்றாகும்.
சோதனைகளைச் சகித்துக் காரணத்தினால் பன்மடங்கு பேருதவியை இறக்கியருளினான். அல்லாஹ் அந்த வகையில் அய்யூப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் தங்கத்திலான வெட்டுக்கிளியை அருட்கொடையாகவும் அதிசயமாகவும் அல்லாஹ் வழங்கிய மெய்சிலிர்க்க வைக்கின்ற செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அய்யூப் (அலை) அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்கள் மீது விழுந்தது. உடனே அய்யூப் (அலை) அவர்கள் அதை தம் துணியால் பிடிக்கப் போனார்கள். அப்போது அவர்களின் இறைவன் அவர்களை அழைத்து, “அய்வூபே! நீங்கள் பார்க்கின்ற இந்தச் செல்வ) நிலை உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (தன்னிறைவுடையவராக) வைத்திருக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு “ஆம், உன் வலிமையின் மீதாணையாக! (உண்மைதான்.) ஆயினும் உன் (செல்வ) மேம்பாடு (பரக்கத்) எனக்குத் தேவைப்படுகின்றதே!” என்று அய்யூப் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். ஆதாரம்: (புகாரி: 279)
அல்லாஹ்வின் பேரருளாகவும், மிகப்பெரும் அதிசயமாகவும் தன்னுடைய நபியான அய்யூப் (அலை) அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, அவர்களது மேனியில் தங்க வெட்டுக்கிளி ஒன்று விழுகின்றது! இதைக் கண்ட அய்யூப் நபி அவர்கள், தான் தன்னிறைவான நிலையில் இருந்தபோதும் கூட அந்த வெட்டுக்கிளியை தன்னுடைய ஆடையால் அள்ள முற்பட்டார்கள்!
அப்போது, இறைவன் தன்னுடைய தூதர் அய்யூப் (அலை) அவர்களிடம் இந்தத் தங்க வெட்டுக்கிளியை விட்டும், உங்களை நான் தன்னிறைவாக ஆக்கவில்லையா? ஏற்படும் என்று கேட்டபோது, இறைவா! உன்னுடைய பரக்கத்தின் மீது நான் தேவையுடையவனாக இருக்கின்றேன். என்று பதிலளித்தார்கள்.
ஹலாலான முறையிலும், இறைவனை மறந்துவிடாத வகையிலும், இறைவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்ட முறையிலும், வணக்கவழிபாடுகளைப் அய்யூப் (அலை) அவர்களுக்கு ஏற்பட்ட வகையிலும் புறக்கணிக்காத எவ்வளவு வேண்டுமானாலும் கொண்ட நம்முடைய சம்பாத்தியங்களை அமைத்துக் கொண்டு பொருளாதாரத்தைத் திரட்டலாம்.
அல்லாஹ்விடமிருந்து பரக்கத்தை எதிர்பார்க்கலாம் என்பதற்கு இத்தகைய அதிசய நிகழ்வு மகத்தான சான்றாக இருக்கின்றது.