வணக்க வழிபாடுகள் வணக்கத்திற்குரியவனுக்கே

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

இந்தத் தலைப்பைப் பார்ந்தவுடன், அல்லாஹ் அல்லாதவர்களை வழிபடும் இணைவைப்புக் காரியங்களைப் பற்றிய ஆக்கம் இது என நினைக்கலாம். ஆனால் அது தொடர்பாக தமது மாத இதழ்களிலும் நூல்களிலும் ஏராளமாக கட்டுரைகள் வந்துள்ளன.

வணக்கத்திற்குரியவனுக்காக மட்டும் செய்யும். வணக்க வழிபாடுகளில் கலப்பு ஊடுருவி எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும், அதுவே நம்மை நரகில் கூடத் தள்ளிவிடும் என்பதையும் அறிவதற்கான ஒரு சிறிய ஆக்கம் தான் இது.

வணக்க வழிபாடுகளில் நாம் கவனிக்கத் தவறிய பகுதியே இது என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

கலப்பில்லாமல் வணங்குவதே வணக்கத்திற்குரியவனின் கட்டளை

அவர்கள் வாய்மை நெறியில் நின்று. அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கியவர்களாக அவனை வணங்கவும், தொழுகையை நிலைநிறுத்தவும், ஸகாத்தைக் கொடுக்கவுமே ஆணையிடப்பட்டிருந்தனர். இதுவே நேரான மார்க்கமாகும்.

(அல்குர்ஆன்: 98:5) வணக்க வழிபாடுகள் கலப்பில்லாமல் அல்லாஹ்வுக்குரியதாக மட்டும் செய்வதுதான் மனிதனுக்கிட்ட கட்டளை என்றும். அதுதான் சரியான மார்க்கம் என்றும் அல்லாஹ் வணக்க வழிபாட்டை வரையறுக்கின்றான்.

கலப்போடு வணக்க வழிபாடுகளைச் செய்தால் அது முறையற்ற வணக்க வழிபாடு என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

கலப்பற்ற முறையில் செய்பவர்களை மாட்டான். வணக்கங்களைச் ஷைத்தான் வழிகெடுக்க அல்லாஹ்வின் அடிமைகளான மனித ஜின் என அனைவரையும் வழிகெடுப்பதாக அல்லாஹ்விடத்தில் சத்தியம் செய்யும் ஷைத்தான், கலப்பில்லாமல் அல்லாஹ்வுக்காக வணக்கங்களைச் செய்பவர்களை வழிகெடுக்க முடியாது என்று ஷைத்தானே வாக்குறுதி கொடுக்கின்றான்.

“உன் மகத்துவத்தின்மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் நான்வழிகெடுப்பேன். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள் அடியார்களைத் தவிர!” என்று (இப்லீஸ்) கூறினான்.

(அல்குர்ஆன்: 38:82-83)

பிறகுக்கு காட்டுவதற்காகச் செய்வதே கலப்பான வணக்கங்கள்

வணக்கங்களைக் கலப்பற்ற முறையில் இறைவனுக்குச் செய்வது தான் சரியான வணக்கம் என்பதைப் பார்த்தோம்.

அந்த கலப்பான வணக்க வழிபாடுகளை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ்வுக்காக மட்டும் வணக்க வழிபாடுகளைச் செய்யும் போது பிறர் நம்மைப் புகழ வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் ஊடுருவி விட்டால் அது கலப்பான வணக்கமாகிவிடும்.

கலப்பான வணக்க வழிபாடு என்னவென்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களிடத்தில் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத் தான். “சிறிய இணைவைப்பு என்றால் என்ன? இறைத்தூதரே!” என்று அவர்கள் (நபித் தோழர்கள்; கேட்டார்கள். அதற்கவர்கள் கூறியதாவது:

“பிறருக்குக் காட்டுவதற்காக (வணக்க வழிபாடுகளை) செய்வதாகும். மக்கள் தங்களது செயல்களுக்குத் தக்கவாறு கூலி வழங்கப்படும்போது, மிகைத்த கண்ணியமிக்க அல்லாஹ் மறுமை நாளில் கூறுவாள்? உலகில் யாருக்குக் காண்பிப்பதற்காக சவணக்க வழிபாடுகளைச்) செய்து கொண்டிருந்தீர்களோ சென்று உங்களுக்கு அவர்களிடத்தில் கூலி கிடைக்குமா? என்று பாருங்கள். அவர்களிடத்தில் ((அஹ்மத்: 23630)

பிறகுக்கும் காட்டுவதற்காகயே நற்காரியங்களை அமைத்துக் கொண்டால் சிறிய இணைவைப்பு என்கின்ற அளவுக்கு நபியவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கான வணக்கவழிபாடுகளைப் பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்தவர்களுக்கு யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் கூலியை எதிர்பாருங்கள் என்று அல்லாஹ் மறுமைநாளில் கூறுவதிலிருந்து உலகில் எவ்வளவு வணக்க வழிபாடுகளைச் செய்தாலும் அதில் முகஸ்துதி வந்துவிட்டால் அதற்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்புமில்லை என்பதை காட்டுகிறது. தொழுகை தர்மங்கள் என அனைத்து நல்லறங்களையும் இது பாழாக்கிவிடும்.

தொழுகைகளை பாழாக்கிவிடும்

தமது தொழுகையில் அலட்சியமாக இருக்கும் தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் பிறகுக்குக் காட்டு(வதற்காகவே தொழு)கிறார்கள்.

(அல்குர்ஆன்: 107:4-6)

பிறருக்குக் காட்டுவதற்காகவே தொழும் தொழுகையாளிக்குக் கேடு என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்விடத்தில் கேடு என்பது அவன்து நரக வேதனையைத் தான் குர்ஆனில் பயன்படுத்துகின்றான்.

பொய்யெனக் கூறுவோருக்கு அந்தாளில் கேடுதான்.

(அல்குர்ஆன்: 77:34)

எத்தனை வருடங்கள் கால்கடுக்க நின்று வணங்கினாலும் அதிலே பிறருக்குக் காட்டுதல் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு நரக வேதனை என்பது எவ்வளவு கைசேதமான விஷயம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

தான தர்மங்களை அழித்துவிடும்

தர்மங்கள் என்பது நன்மைகளை அதிகமாக்கி அதன் மூலமாக சொர்க்கம் செல்வதற்கான ஒரு பாலம் தான், ஆனால் பிறருக்குக் காட்டுவதற்காக அந்த நன்மைகளைச் செய்தால் அந்த நன்மைகளும் அழித்துவிடும்.

இறைநம்பிக்கை அல்லாஹ்லின்மீதும், கொண்டோரோ மறுமை நாள்மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் செய்வத்தைச் செல்லிடுபவனைப் போன்று, சொல்லிக் காட்டியும் நோவினை செய்தும் உங்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்கள். இத்தகையவனுக்கு எடுத்துக்காட்டு, மண் படித்திருக்கும் 93 வழுக்குப் பாறையின் தன்மையைப் போன்றது. அதில் பெருமழை பொழிந்து அதை வெறும் பாறையாக ஆக்கிவிட்டது. அவர்கள், தாம் சம்பாதித்தவற்றிலிருந்து எந்தப் பலனையும் அடைய மாட்டார்கள். இறைமறுப்பாளர்களின் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 2:264)

நாம் வியர்வை சிந்தி உழைத்த நமது பொருளாதாரங்கள் அற்பமாகச் சொல்லிக் காட்டுவதினால், நாம் கொடுத்தவருக்குத் தரும் நோவினையால் வழுக்குப் பாறையில் படித்த மண்ணை பெரும் மழை துடைத்து வாரி அடித்துச் செல்வது போன்றது என்ற அல்லாஹ்வின் உதாரணம். பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்யும் தர்மத்தினால் நன்மைகள் கொஞ்சம்கூட மிஞ்சாது என்பதைக் காட்டுகிறது.

செயலைச் செய்பவர்கள் இன்னும் இந்தச் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாதவர்கள் என்ற ஒப்பீடு, அல்லாஹ்வின் காட்டமான ஒப்பீடு,

அல்லாஹ்விற்கு மட்டுமே நல்லறங்களை அர்ப்பணிக்காதவர்களை நரகில் தள்ளுதல்

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பாள். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் தீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பாள். அவர்.”(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.

இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்” என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவாள். பிறகு இறைவனின் கட்டனைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நாகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறகுக்கும் கற்பித்தவரும் குர்-ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) அவருக்குத் கொண்டுவரப்படுவார். வழங்கியிருந்த தாள் அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பாள். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று. பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) “அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்: “குர்ஆன் அறிஞர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார். பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பாள். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீஎவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “தீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்” (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உள் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான்.

நூல்: (முஸ்லிம்: 3865)

அல்லாஹ்ளின் பார்வையில் உயிர்த்தியாகம் என்பது தான் மிகப்பெரும் தியாகம் அதைப்போல அல்லாஹ்விற்காக தன்னை அர்ப்பணித்த மார்க்க அறிஞர் பல சோதனைகளைச் சந்தித்தவர். தனது பொருளாதாரத்தை அல்லாஹ்விற்காக வாரி இரைத்த வள்ளல்.

ஆனால் இந்தத் தியாகங்களையெல்லாம் பொய் வார்த்தைகள் என அல்லாஹ் கூறி அவர்கள் முகங்குப்புற நரகில் எறியப்படுவார்களென்றால், பிறருக்குக் காட்டுவதற்காக வணக்கங்களைச் செய்வது எந்த அளவுக்கு அடியார்களின் நல்லறங்களை நாசமாக்குகின்றது என்பதைக் கவனிக்க வேண்டும்.

பெரும் தியாகங்களைச் செய்தவருக்கே இந்நிலையென்றால் இன்றைய காலத்தில் “நான் இப்பொழுது தொழுகிறேன், உம்ரா செய்கிறேன்” என வணக்கவழிபாடுகளில் தன்னைப் புகைப்படம் எடுத்துப் பதிவிடும் செல்ஃபி கலாச்சரத்தை உறுத்தல் இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர். இது அல்லாஹ்வுக்கான செயலா? பிறர் ‘லைக்’ போட வேண்டும் என்பதற்காகவா? மறுமையில் அல்லாஹ்வின் லைக் கிடைக்குமா?

அல்லாஹ்வின் பாதையில் ஒரு சிறு அமலை செய்யும் போதும் ஷைத்தான் ஊடுருவான்.ஷைத்தானின் ஊடுருவலைப் அல்லாஹ்கூறும் போது.. 

“நீ என்னை வழிகேட்டில் விட்டுவிட்டதால், அவர்களுக்காக உனது நேரான வழியில் உட்கார்ந்து கொள்வேன். பின்னர் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும், வலப்புறங்களிலும், இடப்புறங்களிலும் (வழிகெடுப்பதற்காக) அவர்களிடம் வருவேன். அவர்களில் பெரும்பாலானவர்களை நன்றி செலுத்துவோராகக் காண மாட்டாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.

(அல்குர்ஆன்: 7:16-17)

ஷைத்தான் நாம் எப்போழுது அவனது லையில் வீழ்வோம் என்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றான்.

தப்பிக்கும் வழிமுறை

இதுவரை வணக்க வழிபாடுகளைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்கின்ற பாலத்தைப் பார்த்தோம். இனி அந்தப் பாவத்திலிருந்தது தப்பிக்கும் வழிமுறையைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் வார்த்தை இதற்கு அற்புதமான வழிகாட்டுதலைத் தருகிறது.

(நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் இந்த அறிவுரையைப் பின்பற்றி, மறைவான நிலையில் அளவற்ற அருளாளானை அஞ்சுவோரைத் தான். எனவே அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான கூலியும் உண்டு என நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன்: 36:11)

பிறருக்குக் காட்டுவதற்காக நற்காரியங்களை செய்வதென்பது பெரும்பாலும் மக்களுக்கு முன்னிலையில் நான். மக்கள் முன்னிலையில் செய்யும் நற்காரியங்களை தனிமையில் அல்லாஹ்விற்குப் பயந்து செய்ய வேண்டும்.

இதனால் பிறர் பார்ப்பதற்காகச் செய்யும் எண்ணம் வராது.

இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷிற்குரியவர்களில் பெரும்பாலோனோர் தனிமையில் இறைவனை அஞ்சும் வகையினராகத் தான் இருப்பார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான்.

அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர். தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: (புகாரி: 660, 1423, 6479, 6806)

தனிமையில் விபச்சாரத்திற்கு அழைத்த பெண்ணை விட்டு விலகி இறைவனை அஞ்சுகின்றேன் என்று சொன்னவர், வலக்கரத்தில் செய்யும் தர்மம் இடக்கரத்திற்குச் தெரியாமல் மறைத்து செய்தவர், தனிமையில் இறைவனை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர் என் தனிமையில் இறைவனை அஞ்சினால் பிறருக்காகச் செய்யும் எண்ணம் வராது.

இந்த வழிமுறையோடு நமது நல்லறங்களை ஏற்றுக் கொள்ளும் படி இறைவனிடத்தில் மன்றாடிப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் ஆலயத்தைக் கட்டி முடித்த பிறகு இப்றாஹீமும் இஸ்மாயீலும் செய்த பிரார்த்தனையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது,

இப்றாஹீமும், இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்தியபோது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்: நன்கறிந்தவன்” (என்று கூறினர்.)

(அல்குர்ஆன்: 2:127)

இறைத் தோழர் இப்றாஹீமும், அவரது மகள் இஸ்மாயிலும் தங்களது நற்காரியங்களைப் பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக நிச்சயம் செய்யப் போவதில்லை, ஆனாலும் தங்களது பணியை ஏற்றுக் கொள்ளும்படி பிரார்த்திக்கிறார்கள்.

நற்காரியங்களை வெளிப்படுத்தக்கூடாதா?

தனிமையில் இறைவனுக்குப் பயந்து வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்றால் அதை வெளிப்படுத்திச் செய்யவே கூடாதா? என்று கேள்வி எழலாம்.

வெளிப்படையாகச் செய்யும்போது பிறருக்குக் காட்டுவதற்காகச் செய்கிறோம். என்ற எண்ணம் இல்லாமல் செய்ய வேண்டும். வெளிப்படையாகச் செய்யும் கூட்டுத் தொழுகை, ஹஜ் போன்றவற்றை அல்லாஹ் நமக்குக் கடமையாக்கியுள்ளான்.

வெளிப்படையாகச் செய்யும் தர்மங்களும் நல்லது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதுதான். அதை நீங்கள் மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்கள் தீமைகளை, உங்களை விட்டும் அழித்துவிடும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:271)

எனவே நமது வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்காக மட்டும் செய்து அல்லாஹ்வின் சொர்க்கத்தை அடைவோமாக!