அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்
இந்த உலகிலும், இதற்குப் பிறகுள்ள மறுமை வாழ்விலும் வெற்றி பெற வேண்டும் என்கிற சிறந்த நோக்கத்தோடு வாழும் முஃமின்களுக்கு மார்க்கத்தில் நிறைய கட்டளைகள், அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்த வகையில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது தொடர்பாக மார்க்கத்தில் அதிகம் போதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாசு இப்போது சில செய்திகளை அறிந்து கொள்ள இருக்கிறோம்.
அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒப்புக் கொள்கிற நாம். அந்த நம்பிக்கையை உண்மைப்படுத்தும் வகையில் அந்த ஏக இறைவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
இறைநம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்திருப்பவற்றில் தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
என்னை நினைவுகருங்கள்! உங்களை நினைவு கூர்வேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! என்னை மறுத்து விடாதீர்கள்!
நன்றி செலுத்துங்கள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், ஒருபோதும் நன்றி மறந்தும் இறைமறுப்பாளர்களாடு விடாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கையும் செய்கிறான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பண்பை வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
மனித சமூகத்திற்கு ஏகத்துவந்தை எடுத்துச் சொல்லி அதன் படி வாழ்த்து காட்டும் வகையில் ஆதம் நபி முதல் முஹம்மது நபி வரைக்கும் அல்லாஹ் எண்ணற்ற நபிமார்களை அனுப்பி இருக்கிறான். அந்த நபிமார்களுக்கு அல்லால் செய்திருக்கும் அறிவுரைகளுள் ஒன்று என்ன தெரியுமா? இதோ அல்லாஹ் கூறுகிறான். பாருங்கள்.
“நீர் இணை வைத்தால் உமது நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவீர்” என (நபியே!) உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக? நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவீராக!
“மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மற்றும் எனது பேச்சில் மூலம் பிற மக்களைவிட உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, நான் உமக்கு வழங்கியதை எடுத்துக் கொள்வீராக! நீர் நன்றி செலுத்துவோருள் ஆகிவிடுவீராக!” என்று (இறைவன்) கூறினான்.
அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது: அவ்வாறு கற்பித்தால் நல்லறங்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்பதோடு சேர்த்து நபிமார்களுக்குக் கூறப்பட்ட முக்கிய அறிவுரை, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள் என்பதாகும். நபிமார்களுக்கு இவ்வாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்றால் இந்தப் பண்பின் முக்கியத்துவத்தை இதன் மூலம் அறிய முடிகிறது.
நபிமார்களின் பண்புகள் மற்றும் பிரச்சாரப் பணிகள் பற்றி திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றைப் படிக்கும் போது. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பண்பு அவர்களிடம் இருந்ததாக அல்லாஹ் கூறுவதைப் பார்க்க முடிகிறது.
இப்ராஹீம் சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குப் பணிபவராகவும், சத்திய நெறியில் நிற்பவராகவும் இருந்தார். அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை. அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். அவன். அவரைத் தேர்ந்தெடுத்து, தேரான பாதையில் செலுத்தினான்.
நூஹுடன் நாம் (கப்பலில்) சுமந்து சென்றோரின் வழித்தோன்றல்களே! அவர் நன்றியுள்ள அடியாராக இருந்தார். (அல்குர்ஆன்: 17:3) ➚
நபிமார்களின் வாழ்க்கையில் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களுள் ஒன்றாக, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது. ஆகவே. முஃமின்களாக இருக்கும் நாமும் இந்தப் பண்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை மனித குலத்திற்குரிய முன்மாதிரியான வாழ்க்கை அத்தகைய தூதருடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று பார்க்கும் போது அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விஷயத்தில் எந்தளவுக்கு அக்கறையாக இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய, பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?’ என்று கேட்டேன். அவர்கள், “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். ‘குகூஉ ‘ செய்ய நினைக்கும்போது. எழுந்து (சிறிதுநேரம்) ஒதுவார்கள். பிறகு, ‘ருகூம.’ செய்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 4837)
சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் விங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள்.
அறிவிப்பவர்: முகீரா (ரலி)
நூல்: (புகாரி: 1130)
முன் பின் பாலங்களுக்குரிய மன்னிப்பைப் பெற்ற நபியவர்கள் அல்லாஹ்விடம் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டும் என்று இந்தளவு அக்கறையாக ஆர்வமாக இருந்திருக்கிறார்கள் என்றால் நம் நிலை என்ன? நாம் எப்படி இருக்க வேண்டும் என்று சிறிது யோசித்துப் பார்க்க வேண்டும்.
இதுமட்டுமல்ல! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாம். மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள வணக்க வழிபாடுகளில் கவனமாக இருக்க வேண்டும்; அதுவே நன்றி செலுத்துவதன் வெளிப்பாடு என்பதையும், மேற்கண்ட செய்தி மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த உலகில் வாழ்வதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கிய இறைவன் நமக்காக எல்லா விதமான ஏற்பாடுகளையும் இங்கு செய்து வைத்திருக்கிறான். நமக்கு உள்ளேயும். வெளியேயும் எண்ண இயலாத அளவுக்கு ஏராளமான கொடுத்திருக்கிறான். அருட்கொடைகளைக் அவற்றுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டியது நமது கடமை. இதோ அல்லாஹ் கூறுகிறான். கேளுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட, நல்லதை உண்ணுங்கள்! நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்!
சக மனிதனுக்கு ஏதேனும் ஒரு சிறு உதவி செய்துவிட்டாலும் கூட அதற்காக அவனிடம் நன்றி உணர்வை எதிர்பார்க்கிற நாம், அல்லாஹ்வின் விஷயத்தில் இதைக் கடைப்பிடிக்கிறோமா என்று சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவன் நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கிற அருட்கொடைகளுக்காக நன்றியுள்ள அடியார்களாக நாம் திகழ வேண்டும். படிப்பினையைத் தரும் பண்பு
அல்லாஹ்வின் ஆற்றலை. அதிகாரத்தை மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பல்வேறு செய்திகள், சம்பவங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து படிப்பினை பெறுவதற்கு நன்றி உணர்வு துணை புரியும்.
அவன் நாடினால் காற்றை நிறுத்தி விடுவான். அப்போது அவை அதன் மேற்பரப்பில் அசைவற்றதாக நின்றுவிடும். நன்றி செலுத்தும் ஒவ்வொரு பொறுமையாளருக்கும் இதில் சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் வரலாறாக இருந்தாலும், உதாரணங்களாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பண்பு நம்மிடம் இருக்கும் போது தான் அவற்றிலிருந்து பாடம் பெற்றுக் கொள்ள முடியும்; படிப்பினை பெற்று கொள்ள முடியும். எனவே இந்த அற்பமான வாழ்வுக்குப் பிறகு ஒரு நிலையான வாழ்வு இருக்கிறது; கண்டிப்பாக அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தப்படுவோம். அச்சமயம் குற்றவாளியாக நின்று விடக் கூடாது என்பதை நினைவில் கொண்டு இங்கு வாழும் போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர்களாக நாம் இருக்க வேண்டும். இவ்வாறு தான் அல்லாஹ்வும் அறிவுரை கூறுகிறாள்.
அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளையே வணங்குகிறீர்கள். பொய்யையே கற்பனை செய்கிறீர்கள், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு உணவளிப்பதற்குச் சக்தி பெறாது. எனவே, அல்லாஹ்விடமே உணவைத் தேடுங்கள்! அவனை வணங்கி,அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்.
அல்லாஹ்விடம் மகத்தான கூலிகளைப் பெற்று மறுமையில் வெற்றி பெற வேண்டுமெனில் எத்தகைய பண்புகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்று மார்க்கத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றாக நன்றி செலுத்தும் பண்பு இருக்கிறது.
எந்த உயிரும் அல்லாஹ்வின் நாட்டமின்றி மரணிக்காது. இது நேரம் குறிக்கப்பட்ட விதியாகும். இவ்வுலகின் பலனை விரும்புபவருக்கு அதை வழங்குவோம். மறுமையின் பலனை விரும்புபவருக்கு அதை வழங்குவோம். நன்றி செலுத்துவோருக்குக் கூலி வழங்குவோம்.
முஹம்மத் இறைத்தூதர் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் பழைய பாதைக்கே திரும்பிச் சென்று விடுவீர்களா? யார் பழைய பாதைக்குத் திரும்பிச் செல்கிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு, நன்றி செலுத்தினால் உங்களைத் தண்டித்து அல்லாஹ் என்ன செய்யப் போகிறான்? அல்லாஹ் நன்றி பாராட்டுபவனாகவும். நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
படைத்தவன் விஷயத்தில் நன்றி மறந்தவர்களாக வாழ்ந்தவர்கள் மறுமையில் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்று குர்ஆனில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
நேர்வழி எது, வழிகேடு எது என்பதை அல்லாஹ் மனிதர்களுக்குத் தெளிவுபடுத்தி விட்டான். அப்படி இருந்தும் சிலர் மட்டுமே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார்களே தவிர அதிகமான ஆட்கள் நன்றி கெட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
அவனுக்கு நேரான வழியைக் காட்டியுள்ளோம். அவன் நன்றியுள்ளவனாகவோ. நன்றி மறந்தவனாகவோ இருக்கிறான்.
மனிதர்கள்மீது உமது இறைவன் அருளுடையவன். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்த மாட்டார்கள்.
இறையச்சமோ, மறுமை சிந்தனையோ இல்லாதவர்கள் தான் அல்லாஹ்வின் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள் எனும்போது நாம் எப்படி இருக்க வேண்டும்?
உலகில் நன்றாக இருப்பதற்காகப் கோரிக்கைகளை, பலதரப்பட்ட படைத்தவனிடம் முன்வைக்கிற நாம் ஈருலகிலும் நமக்குப் பயனளிக்கக் கூடிய நன்றி செலுத்தும் பண்பை அல்லாஹ்விடம் அதிகம் கேட்க வேண்டும்.
(ஸுலைமான்) “என் இறைவனே! என்மீதும், என் பெற்றோர்மீதும் நீ புரிந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! உன் கருணையால் என்னை உனது நல்லடியார்களுடன் சேர்த்து வைப்பாயாசு!” என்று பிரார்த்தித்தார்.
தன் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனது தாய் சிரமத்துடன் அவனைச் சுமந்து, சிரமத்துடன் அவனைப் பெற்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால்குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். முடிவில் அவன் தனது இளமைப் பருவத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்ததும், “என் இறைவனே! எனக்கும். என் பெற்றோருக்கும் நீ வழங்கிய அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நற்செயலைச் செய்வதற்கும் எனக்கு வழிகாட்டுவாயாக! எனது பிள்ளைகளை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் உன்னை நோக்கித் திரும்பி விட்டேன். நான் முஸ்லிம்களில் உள்ளவன்” எனக் கூறுகிறான்.
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பண்பு மட்டுமல்ல! அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும். ஆற்றலையும் கேட்டுப் பிரார்த்திக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனங்களில் நமக்கு வழிகாட்டப்படுகிறது.
இப்படியான பிரார்த்தனை நம்மிடம் இருக்கிறதா என்று நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். இதுவரை அறிந்த செய்திகளை நினைவில் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் அடியார்களாகத் திகழ்ந்து அவனது அன்பையும், அருளையும் பெறுவோமாக?ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!