08) ஹஃப்ஸா (ரலி)

நூல்கள்: நபிகள் நாயகத்தின் திருமணங்கள் விமர்சனங்களும் விளக்கங்களும்

வயது 21

விதவைப் பெண்மணி

திருமணத்தின் போது நபியின்      வயது 56

நபியுடன் வாழ்ந்த காலம் 7 வருடம்

நபி ஸல் அவர்களின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான உமர் ரலி அவர்களின் மகள் தான் ஹப்ஸா அவர்கள்.

அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்கு முதல் கணவராக இருந்த குனைஸ் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர்களில் ஒருவர். இவர்கள் இரண்டு முறை ஹிஜ்ரத் செய்தவர். முதலில் அபிஸீனியாவிற்கு ஆரம்பமாக ஹிஜ்ரத் செய்தவர்களில் இவரும் ஒருவர். பின்னர் அங்கிருந்து மதீனா சென்ற குனைஸ் (ரலி), பத்ருப் போரில் கலந்து கொண்டார். பனூ ஸஹ்ம் கோத்திரத்தாரில் குனைஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் பத்ருப் போரில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் உஹுத் போரில் கலந்து கொண்டு அப்போரில் ஏற்பட்ட காயத்தால் அவர்கள் உயிர் நீத்தார்கள். அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் விதவையானார்கள்.

போரில் கணவனை இழந்து விதவையாகி விட்ட நிலையில் நபி ஸல் அவர்கள் திருமணம் செய்துள்ளார்கள்.

(நூற்கள்: அல்இஸ்திஆப் 679, தபகாத் இப்னு ஸஅத், பாகம்: 3. பக்கம்: 392, அல்இஸாபா 2296)