03) ஒட்டுமொத்த மக்களின் கலாச்சாரம்
ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து கொள்வது அன்றைய காலத்தின் சாதாரண நடைமுறையாகும்.
நபிகள் நாயகம் மட்டுமே பல திருமணம் செய்தவர்களல்ல! அப்போதைய கால கட்டத்தில் பலரும் அதுபோன்று பல பெண்களை திருமணம் செய்தவர்கள் தாம்.
நபிகள் நாயகம் மட்டுமின்றி ஏனைய சாதாரண மக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணந்திருந்தனர்.
வஹ்புல் அஸதீ என்பவர் எட்டுப் பெண்களை மணந்திருந்தார்.
கைலான் பின் ஸலமா என்பவர் பத்துப் பெண்களை மனைவியாகக் கொண்டிருந்தார்.
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே இவர்கள் இந்த திருமணங்களை செய்திருந்தார்கள் என்பதிலிருந்தே அக்காலத்தின் சாதாரண நடைமுறை என்பதை புரியலாம்.
(நான்கு மனைவியருக்கு மேல் திருமணம் கூடாது என்று சட்டம் இயற்றி இஸ்லாமிய மார்க்கம் அதை முறைப்படுத்தி விட்டது.)
நபிகள் நாயகத்தின் எதிரிகளும் பல திருமணங்கள் செய்து இருந்தார்கள்.
அப்போதைய நேரத்தில் சவுதி மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல பெண்களைத் திருமணம் செய்யும் கலாச்சாரம் சாதாரணமாக இருந்துள்ளது.