13) எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு
எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நோய்களுக்கு தேவையான மருந்தை கண்டுபிடிப்பதற்கு காலதாமதம் ஆகலாம் அல்லது மருந்து கண்டுபிடித்தால் கிடைக்காமலும் போகலாம். அதனால் இந்த நோய்க்கு மருந்து இல்லை. அந்த நோய்க்கு மருந்து இல்லை என்று கூறக் கூடாது.
فتح الباري لابن حجر (10 / 134):
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 5678)