05) பாவங்கள் மன்னிக்கபடும்

நூல்கள்: நோயும் இஸ்லாம் கூறும் தீர்வும்

ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் சிறு விபத்து அல்லது அவரை தைக்கும் சிறு முள் உப்பட எல்லாத் துன்பங்களும் அவர் செய்த குற்றங்களுக்குத் தண்டனையாகவும். பாவத்திற்கு பரிகாரமாகும்.

عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ وَصَبٍ وَلَا نَصَبٍ وَلَا سَقَمٍ وَلَا حَزَنٍ حَتَّى الْهَمِّ يُهَمُّهُ إِلَّا كُفِّرَ بِهِ مِنْ سَيِّئَاتِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறை நம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

(முஸ்லிம்: 5030)