ஆண்கள் தொடையை மறைக்க வேண்டுமா?
நாம் எது செய்தாலும் அதை எதிர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் உணர்வுப்பூர்வமான பிரச்சணைகளையே முக்கியமான பிரச்சாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் வாதம் செய்ய அவர்களிடம் சரக்கு இல்லாததே இதற்குக் காரணமாகும்.
எதைச் சொன்னால் மக்கள் ஆத்திரப்படுவார்களோ அதை ஆயுதமாக எடுத்துக் கொண்டால் தவ்ஹீதுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட முடியும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.
தராவீஹ் தொழுகை 20 ரக்அத்கள் தான் என்பதில் தமிழக முஸ்லிம்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்த போது அதைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட முயன்றனர். அதற்கான ஆதாரங்களை அள்ளிப்போட்டு மக்களை நாம் சந்தித்த போது மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தராவீஹைக் கை கழுவினார்கள்.
தொழுகை இருப்பில் ஆட்காட்டி விரலை அசைப்பது மக்கள் கேள்விப்படாத விஷயமாக இருந்தது. இதை வைத்து மக்களைத் தூண்டிவிடலாம் என்று கணக்குப் போட்டு இந்தப் பிரச்சணையைக் கையில் எடுத்தார்கள். இதற்கான ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் வைத்த போது மக்களின் கேள்விகளை எதிர் கொள்ள முடியாமல் அந்தப் பிரச்சணையைப் பின்னுக்குத் தள்ளினார்கள்.
தொப்பி இஸ்லாத்தின் கடமை என்ற எண்ணம் மக்களிடம் வேரூன்றி இருந்ததால் அதையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திப் பார்த்தனர். தொப்பிக்கும், மார்க்கத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதை இன்னும் உறுதியாக நாம் தக்க சான்றுகளை வைத்து வாதிட்டபின் அதுவும் அடங்கிபோனது.
அது போல் மக்களைத் தூண்டி விடுவதற்கு இவர்கள் தற்போது எடுத்துக் கொண்ட பிரச்சணை தான் ஆண்கள் தொடையை மறைப்பது கட்டாயமா என்ற பிரச்சணை.
இது குறித்து நாம் என்ன எழுதினோம் என்பதைப் பற்றி அதிகமான மக்கள் அறியாததால் டவுசர் போட்டு தொழச் சொல்லும் டவுசர் ஜமாஅத் என்று கிண்டல் பண்ணும் அளவுக்கு கீழ்த்தரமாக இறங்கினார்கள்.
இது குறித்து நாம் என்ன எழுதினோம்? அது எந்த வகையில் தவறு என்றெல்லாம் ஆதாரங்கள் அடிப்படையில் இவர்கள் வாதிடுவதில்லை. மாறாக மக்களைத் தூண்டி விடுவது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கம்.
நான்கு மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என வாதிடும் இந்த சிந்தனைக் குருடர்கள் இதே விஷயத்தை மாலிகி மத்ஹப், ஹம்பலி மத்ஹப்களும் கூறுவதை மறந்து விடுகின்றனர். மாலிக் இமாமும் ஹம்பலி இமாமும் டவுசர் ஜமாஅத் என்று இவர்கள் சொல்ல வேண்டும் அல்லவா? அப்படிச் சொல்ல மாட்டார்கள். நம்மை எதிர்ப்பது மட்டுமே இவர்களின் ஒரே கொள்கை என்பது தான் இதற்குக் காரணம்.
இது குறித்து நாம் என்ன எழுதினோம் என்பதை அறியாமலே முகவரியற்றதுகளும் கள்ளமெயில்கள் மூலம் கொச்சைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் இப்போது எழுப்பும் கேள்விகள் உட்பட அனைத்துக்கும் நாம் புதிதாக எந்த மறுப்பும் சொல்லத் தேவை இல்லை. ஏற்கனவே நாம் ஏகத்துவம் இதழில் எழுதிய தொடரிலேயே அனைத்துக்கும் பதில் அளிக்கப்பட்டு விட்டது. அந்தத் தொடரில் எழுதியதை மீண்டும் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கிறோம்.
முன்னர் நாம் எழுதியதில் முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்ற ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதால் அதை மட்டும் நீக்கி விட்டோம். ஆதாரங்களை அரபி மூலத்துடன் விரிவுபடுத்தி வெளியிட்டுள்ளோம்.
ஏகத்துவம் இதழில் எழுதியது
தொழுகை தொடர் – 21
தொழுகையின் சட்டங்கள்
பி. ஜைனுல் ஆபிதீன்
தொழுகையில் ஈடுபடுவதற்கு முன் குளிப்பு கடமையாக இருந்தால் குளிக்க வேண்டும்; உளூ நீங்கி இருந்தால் உளூச் செய்ய வேண்டும்; தண்ணீர் கிடைக்காவிட்டாலோ, பயன்படுத்த முடியாவிட்டாலோ தயம்மும் செய்ய வேண்டும் என்பன குறித்து விரிவான முறையில் நாம் அறிந்து கொண்டோம்.
தொழுகைக்கு முன் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் தேவையான அளவுக்கு ஆடை அணிவதாகும். எனவே ஆண்களும், பெண்களும் எந்த அளவுக்குத் தமது உடல்களை மறைக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஆண்களின் ஆடைகள்
ஆண்களின் ஆடைகளைப் பொறுத்த வரை தொழுகையின் போதும், தொழுகைக்கு வெளியிலும் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைக்க வேண்டும் என்று பெரும்பாலான அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இது தவிர தொழுகையின் போது ஆண்கள் கண்டிப்பாக தலையை மறைக்க வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. மேலும் முழுக் கைகளையும் மறைத்துக் கொண்டு தொழ வேண்டும்; அரைக் கை சட்டை அல்லது பனியன் அணிந்து தொழக் கூடாது என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.
எனவே ஆண்கள் தமது உடலில் எந்த அளவுக்குப் பொதுவாக மறைக்க வேண்டும்? தொழுகையின் போது மேலதிகமாக அவர்கள் மறைக்க வேண்டிய பகுதிகள் யாவை என்பதை நாம் விரிவாக ஆராய்வோம்.
தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஆண்கள் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பது கட்டாயம் என்று அபூஹனீஃபா, ஷாஃபி உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அஹ்மத் பின் ஹம்பல், மாலிக் ஆகிய அறிஞர்களும் ளாஹிரிய்யாக்கள் என்ற பிரிவினரும் இதை விடக் குறைந்த அளவுக்கு மறைத்துக் கொள்வது போதுமானது என்று கூறுகின்றனர். முன் பகுதியையும், பின் பகுதியையும் மறைக்கும் வகையில் ஆடை அணிந்தால் போதும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் கருத்துப்படி ஆண்களின் முட்டுக்கால், தொடையின் பெரும் பகுதி, தொப்புள் ஆகியவை வெளியே தெரிந்தால் அதனால் குற்றமில்லை. அரைக்கால் டவுசரை அணிந்து கொண்டு தொழுதாலும் தொழுகை செல்லும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
வலுவான ஆதாரங்கள் அடிப்படையில் நாம் முடிவு செய்வதாக இருந்தால் முதல் சாராரின் கருத்தை விட இரண்டாம் சாராரின் கருத்துத் தான் ஏற்புடையதாக உள்ளது. இது நமக்கு வியப்பாகத் தெரிந்தாலும் இது தான் உண்மை.
தொடையை மறைக்க வேண்டும் என்று வாதிடுவோர் கீழ்க்காணும் ஹதீஸ்களைத் தமது கருத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
அபுதாவூத்-2732
அபூதவூத்-3499
இப்னுமஜா-1449
மேற்கண்ட ஹதீஸ்களின் பொருள்:
உனது தொடையை நீ வெளிப்படுத்தாதே! உயிருள்ள அல்லது இறந்த எவரது தொடையையும் நீ பார்க்காதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
இந்தக் கருத்துடைய ஹதீஸ்கள் ஹாகிம், பஸ்ஸார் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து நூல்களிலும் அலீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் ஆஸிம் பின் ளமுரா என்றும், ஆஸிம் பின் ளமுராவிடமிருந்து அறிவிப்பவர் ஹபீப் பின் அபீஸாபித் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிம் பின் ளமுரா என்பவரிடமிருந்து ஹபீப் என்பவர் எந்தச் செய்தியையும் கேட்டதில்லை.
மேலும் மேற்கண்ட செய்தியில் ஹபீப் என்பாரிடமிருந்து இப்னு ஜுரைஜ் என்பார் அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இப்னு ஜுரைஜ் என்பாரும் ஹபீபிடம் இருந்து எதையும் செவியுற்றதில்லை என்று ஹதீஸ் கலை இமாம் அபூ ஹாத்தம் ராஸீ அவர்களும் மற்றும் பல அறிஞர்களும் தெளிவு படுத்தியுள்ளனர்.
2308- وسألت أبي عن حديث رواه روح بن عبادة ، عن ابن جريج ، عن حبيب بن أبي ثابت ، عن عاصم بن ضمرة ، عن علي أن النبي صلى الله عليه وسلم ، قال لا تبرز فخذك ، ولا تنظر إلى فخذ حي ولا ميت قال أبي رواه حجاج ، عن ابن جريج ، قال أخبرت عن حبيب بن أبي ثابت ، عن عاصم ، عن علي ، عن النبي صلى الله عليه وسلم قال أبي ابن جريج لم يسمع هذا الحديث بذا الإسناد من حبيب ، إنما هو من حديث عمرو بن خالد الواسطي ، ولا يثبت لحبيب رواية عن عاصم ، فأرى أن ابن جريج أخذه من الحسن بن ذكوان ، عن عمرو بن خالد ، عن حبيب ، والحسن بن ذكوان وعمرو بن خالد ضعيفا الحديث
علل الحديث لابن أبي حاتم
மேற்கண்ட அறிவிப்பில் இரண்டு குறைபாடுகள் உள்ளன. இப்னு ஜுரைஜ் என்பார் ஹபீபிடம் எதையும் செவியுற்றதில்லை என்பது முதல் குறைபாடு. ஹபீப் என்பார் ஆஸிமிடம் இருந்து எதையும் செவியுற்றதில்லை என்பது இரண்டாவது குறைபாடு என்று இப்னு ரஜப் அவர்கள் கூறுகிறார்கள்.
وفي الباب – أيضا – : عن علي ، من طريق ابن جريج ، عن حبيب بن ثابت ، عن عاصم بن ضمرة ، عن علي ، قال : قال رسول الله – صلى الله عليه وسلم – : (( لا تكشف فخذك ، ولا تنظر إلى فخذ حي ولا ميت )) .خرجه أبو داود وابن ماجه. وقال أبو داود : فيه نكارة .وله علتان :إحداهما : أن ابن جريج لم يسمعه من حبيب ، ومن قال فيه : ((عن ابن جريج : أخبرني حبيب )) فقد وهم – : قال بن المديني .وفي رواية أبي داود (( عن ابن جريج ، قال : أخبرت عن حبيب ))، وهو الصحيح. قال ابن المديني : رايته في كتب ابن جريج : اخبرني إسماعيل بن مسلم ، عن حبيب – : نقله عنه يعقوب بن شيبة .ونقل ابن أبي حاتم الرازي عن أبيه ، قال : لم يسمع ابن جريج هذا الحديث من حبيب ، إنما من حديث عمرو بن خالد الواسطي ، فأرى أن ابن جريج أخذه من الحسن بن ذكوان ، عن عمرو بن خالد ، عن حبيب .العلة الثانية : أن حبيب بن أبي ثابت لم تثبت له رواية عن عاصم بالسماع منه -: قاله أبو حاتم الرازي والدارقطني .وقال ابن المديني : لا تصح عندي روايته عنه .
فتح الباري لابن رجب
وروى ابن جريج عن حبيب بن أبي ثابت عن عاصم بن ضمرة عن علي مرفوعاً حديثاً في كشف الفخذ .قال أبو حاتم : (( لم يسمعه ابن جريج من حبيب ، فأرى أن ابن جريج أخذه عن الحسن بن ذكوان عن عمرو بن خالد عن حبيب ))وقال ابن المديني : (( أحاديث حبيب عن عاصم بن ضمرة لاتصح ، إنما هي مأخوذة عن عمرو بن خالد الواسطي ))ولكن ذكر يعقوب بن شيبة عن ابن المديني أنه قال في حديث ابن ابن جريح : (( هذا رايته في كتب ابن جريح أخبرني إسماعيل بن مسلم عن حبيب ))وحبيب قال ابو حاتم : (( لاتثبت له رواية عن عاصم )) . وقد سبق ذكر حديث الفخذ في أبواب الأدب .
شرح علل الترمذي لابن رجب
தொடையை மறைக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தைத் தரும் இந்த ஹதீஸில் இரு இடங்களில் தொடர்பு அறுந்துள்ளதால், பலவீனமானதாக உள்ளது.
இது தவிர தொடையை மறைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மற்றொரு ஹதீஸும் உள்ளது.
நான் தொடையைத் திறந்த நிலையில் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன் தொடையை மூடு! ஏனெனில் அது மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுர்ஹுத் (ரலி)
(திர்மிதீ: 2720),(அஹ்மத்: 15367, 15368)
இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதீ அவர்களே இதன் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்டுள்ளது எனக் கூறுகின்றார்.
இது குறித்து ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
قوله باب ما يذكر في الفخذ ويروى عن ابن عباس وجرهد ومحمد بن جحش عن النبي – صلى الله عليه و سلم – الفخذ عورة وقال أنس حسر النبي – صلى الله عليه و سلم – عن فخذه وحديث أنس أسند وحديث جرهد أحوط أما حديث ابن عباس فأخبرني به أبو إسحاق بن أحمد الحريري أن أحمد بن أبي طالب أخبرهم فيما قرئ عليه وهو يسمع ح وقرأت على إبراهيم بن محمد الدمشقي بالمسجد الحرام أخبركم أحمد بن أبي النعم سماعا عن عبد الله بن عمر بن علي أنا أبو الوقت أخبره أنا عبد الرحمن بن محمد البوشنجي أنا عبد الله بن احمد السرخسي أنا إبراهيم بن خريم أنا عبد بن حميد ز أنا عبيد الله ابن موسى أنا اسرائيل عن أبي يحيى القتات سمعت مجاهدا يحدث عن ابن عباس قال مر رسول الله – صلى الله عليه و سلم – على رجل فرأى فخذه خارجه فقال غط فخذك فإن فخذ الرجل من عورته رواه الإمام أحمد في مسنده عن محمد بن سابق عن إسرائيل فوقع لنا بدلا عاليا ورواه الترمذي في جامعه عن واصل بن عبد الأعلى عن يحيى بن آدم عن إسرائيل به مختصرا وأبو يحيى القتات روى عنه جماعة واختلف قول ابن معين فيه فقال مرة في حديثه ضعف وقال مرة ثقة وقال أحمد روى عنه إسرائيل أحاديث كثيرة مناكير جدا وقال النسائي ليس بالقوي ورواه أبو جعفر بن جرير الطبري عن أبي زرعة الرازي عن ثابت بن محمد عن إسرائيل به في عقبه عن أبي زرعة عن ثابت عن سفيان عن حبيب ابن أبي ثابت عن طاوس بن محمد عن ابن عباس به قال أبو عبد الله بن بكير كان هذا الحديث في كتاب أبي زرعة عن ثابت عن إسرائيل وإلى جنبه عن ثابت عن سفيان عن حبيب عن طاوس عن ابن عباس في كسوف الشمس فيشبه أن يكون أبو زرعة حدث به من حفظه فوهم فيه إن لم يكن الطبري أخطأ عليه حكاه الخطيب في ترجمة ابن جرير قلت وقد رواه ابن تومرد عن أبي زرعة على الصواب وهذا مما أخطأ فيه الثقة على الثقة ولو سلم لكان على شرط الصحيح والله أعلم وأما حديث جرهد فإنه حديث مضطرب جدا فمن أمثل طرقه ما أخبرنا عبد الرحمن بن أحمد بن المبارك الغزي أن علي بن إسماعيل المخزومي أخبرهم أنا إسماعيل بن عبد القوي عن فاطمة بنت سعد الخير سماعا عن فاطمة بنت عبد الله سماعا أن محمد بن عبد الله بن ريذة أخبرهم أنا أبو القاسم الطبراني ثنا علي ابن عبد العزيز البغوي ثنا القعنبي عن مالك عن أبي النضر عن زرعة بن عبد الرحمن بن جرهد عن أبيه قال كان جرهد من أصحاب الصفة قال جلس رسول الله – صلى الله عليه و سلم – وفخذي مكشوفة فقال أما علمت أن الفخذ عورة رواه أبو داود عن القعنبي فوافقناه بعلو وتابع القعنبي على وصله عن مالك عبد الرحمن بن مهدي وعبد الله بن نافع وخالفهم معن بن عيسى وإسحاق بن الطباع وعبد الله بن وهب وإسماعيل بن أبي أويس وغيرهم فقالوا عن مالك عن أبي النضر عن زرعة عن أبيه ولم يذكروا جده وهكذا رواه البخاري في التاريخ عن يحيى بن بكير عن مالك ورواه مطرف عن مالك عن الزهري عن عبد الرحمن بن جرهد عن أبيه وهو غريب جدا لكن الراوي له عن مطرف ضعيف وقال البخاري في التاريخ قال لي إسماعيل حدثني ابن أبي الزناد عن أبيه عن زرعة بن عبد الرحمن بن جرهد الأسلمي عن جده جرهد أن النبي – صلى الله عليه و سلم -قال الفخذ عورة وقال أبو الزناد وحدثني نفر سوى زرعة مثله وقال أيضا قال لي عبد الرحمن بن يونس عن ابن أبي الفديك عن الضحاك ابن عثمان عن أبي النضر عن زرعة بن عبد الرحمن بن جرهد عن جده جرهد عن النبي – صلى الله عليه و سلم – ورواه سفيان بن عيينة عن أبي الزناد ووقع لنا حديثه عاليا جدا أخبرنيه أحمد بن خليل في كتابه أن أبا بكر ابن محمد بن عنتر أخبره عن عبد الرحمن بن مكي الطرابلسي أنا أبو طاهر السلفي أنا أبو الخطاب بن البطر أنا عمر بن أحمد البزاز أنا أبو جعفر محمد بن يحيى بن عمر بن علي بن حرب ثنا جد أبي ثنا سفيان عن أبي الزناد حدثه ابن جرهد عن جرهد أن النبي – صلى الله عليه و سلم – أبصره في المسجد وعليه بردة وقد انكشف فخذه فقال إن الفخذ من العورة رواه الترمذي عن ابن أبي عمر عن سفيان فوقع لنا بدلا عاليا بدرجتين لكنه قال عن أبي الزناد عن زرعة بن مسلم بن جرهد عن جده ورواه البخاري في تاريخه عن صدقة بن الفضل عن ابن عيينة عن أبي الزناد عن آل جرهد عن جرهد وعن أبي النضر عن زرعة بن مسلم بن جرهد قال البخاري ولا يصح هذا ورواه معمر عن أبي الزناد كرواية علي بن حرب عن سفيان أخبرنا به عبد الرحمن بن أحمد بن الغزي بالسند المتقدم إلى الطبراني ثنا إسحاق بن إبراهيم الدبري عن عبد الرزاق عن معمر عن أبي الزناد عن ابن جرهد عن أبيه نحوه رواه الإمام أحمد عن عبد الرزاق فوافقتاه بعلو ورواه الترمذي عن الحسن بن علي عن عبدالرزاق فوقع لنا بدلا عاليا بدرجتين وهكذا رواه روح بن القاسم وورقاء عن ابي الزناد ورواه ابن حبان في صحيحه من طريق أبي عاصم عن سفيان هو الثوري عن أبي الزناد عن زرعة بن عبد الرحمن عن جده جرهد به ولم يصنع ابن حبان في تصحيح هذه الطريق شيئا فقد صرح الترمذي بانقطاعها هذا مع الاختلاف فيه على أبي الزناد قيل عنه هكذا وقيل عنه عن زرعة بن عبد الرحمن قال كان جرهد ونفر من أسلم وقيل عنه غير ذلك وله طريق أخرى من غير رواية أبي الزناد وأبي النضر أخبرني عبد الله بن عمر الأزهري أنا أحمد بن محمد بن عمر حفنجلة أنا عبد اللطيف بن عبد المنعم أنا أبو محمد بن صاعد أنا أبو القاسم بن الحصين أنا أبو علي بن المذهب أنا أبو بكر بن مالك حدثني عبد الله بن أحمد بن حنبل حدثني أبي ثنا أبو عامر ثنا زهير يعني ابن محمد عن عبد الله بن محمد يعني ابن عقيل عن عبد الله ابن جرهد الأسلمي أنه سمع أباه به رواه الترمذي عن واصل بن عبد الأعلى عن يحيى بن آدم عن الحسن بن صالح بن عبد الله وقال حسن غريب من هذا الوجه وعبد الله بن جرهد ذكره ابن حبان في الثقات وقال يروي عنه عبد الله بن محمد بن عقيل إن كان حفظه وقال البخاري رواه غيره عن ابن عقيل عن عبد الله بن مسلم بن جرهد عن أبيه وهو أصح فدخله أيضا الاضطراب والإرسال ولو ذهبت أحكي ما عندي من طرق هذا الحديث لاحتمل أوراقا ولكن الاختصار أولى والله الموفق وأما حديث محمد بن جحش وهو محمد بن عبد الله بن جحش نسب إلى جده وقال الترمذي له ولأبيه صحبة وقال البخاري في التاريخ قتل أبوه يوم أحد فأخبرني بحديثه محمد بن علي البزاعي بقراءتي عليه بسفح قاسيون عمره الله تعالىعن زينب بنت إسماعيل بن إبراهيم سماعا أن أحمد بن عبد الدايم أخبرهم أنا يحيى بن محمود الثقفي أنا عبد الواحد بن أحمد بن الهيثمي أنا عبيد الله بن المعتز بن منصور أنا أبو طاهر محمد بن الفضل بن خزيمة أنا جدي إما الأئمة أبو بكر محمد بن إسحاق ثنا علي بن حجر ثنا إسماعيل بن جعفر ثنا العلاء عن أبي كثير عن محمد بن جحش أنه قال مر رسول الله – صلى الله عليه و سلم – وأنا معه على معمر وفخذاه مكشوفتان فقال يا معمر غط عليك فخذيك فإن الفخذين عورة رواه الإمام أحمد في مسنده عن سليمان بن داود وهوالهاشمي عن إسماعيل ابن جعفر عن العلاء بن عبد الرحمن به فوقع لنا بدلا عاليا بدرجة ورواه البخاري في التارخ عن إبراهيم بن موسى عن إسماعيل به وهكذا رواه حفص بن ميسرة وابن أبي حازم وعبد العزيز الدراوردي وسليمان بن بلال ومحمد بن جعفر بن أبي كبير عن العلاء بن عبد الرحمن وأبو كبير هو مولى محمد بن عبد الله بن جحش روى عنه أيضا صفوان بن سليم ومحمد بن سيرين ومحمد بن عمرو بن علقمة ومحمد بن أبي يحيى الأسلمي وعدة بعضهم في الصحابة ولا يصح ويقال هو مولى الليثين وأما حديث أنس بن مالك فهو في الباب المذكور قد أسنده من طريق عبد العزيز بن صهيب عنه وقوله وحديث أنس أسنده أي أصح إسنادا ز أ قوله فيه وقال أبو موسى غطى النبي – صلى الله عليه و سلم – ركبتيه حين دخل عثمان وقال زيد بن ثابت أنزل الله على رسوله وفخذه على فخذي فثقلت علي حتى خفت أن ترض خفذي أما حديث أبي موسى فهو طرف من حديث القف وقد أخرجه أبو عبد الله في مواضع من كتابه من مسند أبي موسى وانفرد عاصم الأحول عن أبي عثمان عن أبي موسى بهذه الزيادة فيه وأخرجها من طريقه في مناقب عثمان وأما حديث زيد بن ثابت فأسنده في الجهاد والتفسير من رواية سهل بن سعد الصحابي عن مروان بن الحكم عن زيد بن ثابت أن النبي – صلى الله عليه و سلم – أملى عليه ز ب لا يستوي القاعدون من المؤمنين النساء ح أ فجاء ابن أم مكتوم الحديث وفيه هذا القدر المعلق
تغليق التعليق بن حجر
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன என்று ஹாபிழ் இப்னு ஹஜர் கூறுகின்றார்கள். தமது தக்லீக் அத்தஃலீக் என்ற நூலில் ஜுர்ஹுத் வழியாக அறிவிக்கப்படும் 20க்கும் மேற்பட்ட அறிவிப்புக்களைப் பட்டியலிட்டு அறிவிப்பாளர்கள் பட்டியலில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றார். இன்னும் குழப்பமான அறிவிப்புக்கள் உள்ளன, அவற்றை எழுதினால் தனி நூலாகி விடும் என்றும் அவர் கூறுகின்றார்.
புகாரி இமாம் அவர்களும் தமது தாரீக் என்ற நூலில் இதைப் பலவீனமானது எனக் கூறியுள்ளார்கள்.
எனவே இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.
தொடையை மறைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
ஒரு மனிதர் தொடையைத் திறந்த நிலையில் இருந்த போது அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடந்து சென்றனர். அப்போது, உனது தொடையை மூடு! ஏனெனில் தொடையை ஆண்கள் மறைக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஜாஹித் என்பாரும், முஜாஹித் வழியாக அபூயஹ்யா அல்கத்தாத் என்பாரும் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபூயஹ்யா அல்கத்தாத் என்பவர் பலவீனமானவர். இமாம் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு முயீன், நஸாயீ, ஹாபிழ் இப்னு ஹஜர் உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தொடையை மறைக்க வேண்டும் எனக் கூறுவோர் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
மஃமர் என்பாரின் இரண்டு தொடைகளும் திறந்த நிலையில் இருந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நானும் சென்றோம். அப்போது, மஃமரே! உனது தொடைகளை மூடிக் கொள்! ஏனெனில் தொடைகளும் மறைக்கப்பட வேண்டியவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் ஜஹ்ஷ் (ரலி)
முஹம்மத் பின் ஜஹ்ஷ் மூலம் அறிவிக்கும் அபூகஸீர் என்பார் நம்பகமானவரா? இல்லையா? என்று எந்த விபரமும் இல்லை என ஹாபிழ் இப்னு ஹஜர் கூறுகின்றார். யாரென்று அறியப்படாதவர் என்பது இதன் கருத்தாகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் மேற்கண்ட நான்கு ஹதீஸ்களைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர். மேற்கண்ட நான்கு ஹதீஸ்களுமே ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.
அதே நேரத்தில் தொடை திறந்திருப்பதை அனுமதிக்கும் கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தொடைகளை அல்லது கெண்டைக் கால்களைத் திறந்த நிலையில் படுத்திருந்தார்கள். உள்ளே வருவதற்கு அபூபக்ர் (ரலி) அனுமதி கேட்டார்கள். படுத்துக் கொண்டே அந்த நிலையில் அவருக்கு அனுமதியளித்தார்கள். பின்னர் உமர் (ரலி) அனுமதி கேட்டார்கள். படுத்துக் கொண்ட நிலையிலேயே அவருக்கும் அனுமதியளித்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அனுமதி கேட்டார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து தமது ஆடைகளைச் சரி செய்து கொண்டு அவருக்கு அனுமதியளித்தார்கள். உஸ்மான் (ரலி) உள்ளே வந்து பேசிக் கொண்டு புறப்பட்டார். இதைக் கண்ட நான், அபூபக்ர் (ரலி) வந்தார்; அவருக்காக உங்கள் முகம் மலரவில்லை; அவரைப் பொருட்படுத்தவில்லை; பின்னர் உமர் வந்தார்; அவருக்காகவும் உங்கள் முகம் மலரவுமில்லை; பொருட்படுத்தவும் இல்லை. பின்னர் உஸ்மான் வந்த போது அமர்ந்து ஆடையைச் சரி செய்தது ஏன்? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், யாரைப் பார்த்து வானவர்கள் வெட்கப்படுவார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்படக் கூடாதா? என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் என்பார் இம்மூன்று பேரின் வருகையும் ஒரே நாளில் நடந்தது அல்ல என்று கூறுகின்றார். இவை வெவ்வேறு நாட்களில் நடந்த மூன்று நிகழ்ச்சிகள் என்றும் கூறுகின்றார்.
தொடைகள் திறந்திருப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அறியாமல் நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருத முடியாது. ஆயிஷா (ரலி) அதைச் சுட்டிக் காட்டிய போது, உஸ்மானுக்காக அதிக வெட்கத்தைக் கடைப்பிடித்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலிலிருந்து, அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் வந்த போது தொடை திறந்திருந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தே நடந்தது தான் என்பதை அறியலாம்.
மேற்கண்ட ஹதீஸில் தொடைகளையோ, கெண்டைக் கால்களையோ என்று சந்தேகமான வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கூறுவார்கள். இந்த சந்தேகம் நியாயமானது தான். மேலும் சில ஹதீஸ்கள் இந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளன.
حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا إسماعيل بن علية قال حدثنا عبد العزيز بن صهيب عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم غزا خيبر فصلينا عندها صلاة الغداة بغلس فركب نبي الله صلى الله عليه وسلم وركب أبو طلحة وأنا رديف أبي طلحة فأجرى نبي الله صلى الله عليه وسلم في زقاق خيبر وإن ركبتي لتمس فخذ نبي الله صلى الله عليه وسلم ثم حسر الإزار عن فخذه حتى إني أنظر إلى بياض فخذ نبي الله صلى الله عليه وسلم فلما دخل القرية قال الله أكبر خربت خيبر إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين قالها ثلاثا قال وخرج القوم إلى أعمالهم فقالوا محمد قال عبد العزيز وقال بعض أصحابنا والخميس يعني الجيش قال فأصبناها عنوة فجمع السبي فجاء دحية الكلبي رضي الله عنه فقال يا نبي الله أعطني جارية من السبي قال اذهب فخذ جارية فأخذ صفية بنت حيي فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله أعطيت دحية صفية بنت حيي سيدة قريظة والنضير لا تصلح إلا لك قال ادعوه بها فجاء بها فلما نظر إليها النبي صلى الله عليه وسلم قال خذ جارية من السبي غيرها قال فأعتقها النبي صلى الله عليه وسلم وتزوجها فقال له ثابت يا أبا حمزة ما أصدقها قال نفسها أعتقها وتزوجها حتى إذا كان بالطريق جهزتها له أم سليم فأهدتها له من الليل فأصبح النبي صلى الله عليه وسلم عروسا فقال من كان عنده شيء فليجئ به وبسط نطعا فجعل الرجل يجيء بالتمر وجعل الرجل يجيء بالسمن قال وأحسبه قد ذكر السويق قال فحاسوا حيسا فكانت وليمة رسول الله صلى الله عليه وسلم
371 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் மீது (ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு) போர் தொடுத்தார்கள். (அந்தப் போரின் போது) கைபருக்கு அருகில் (அதன் புறநகரில்) நாங்கள் (கடைசி இரவின்) இருட்டிலேயே வைகறைத் தொழுகையைத் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் (தமது வாகனத்தில் ஏறி) பயணமானார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் சாலையில் (தமது வாகனத்தைச்) செலுத்தினார்கள். அப்போது எனது முட்டுக்கால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையில் உராய்ந்து கொண்டிருந்தது. பின்னர் அவர்கள் தமது தொடையிலிருந்த வேட்டியை விலக்கினார்கள். எந்த அளவிற்கென்றால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையைப் பார்த்தேன். (பிறகு) அந்த நகருக்குள் அவர்கள் பிரவேசித்த போது, அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று மூன்று முறை கூறினார்கள்.
(புகாரி: 371),(முஸ்லிம்: 2561)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் நுழைந்தார்கள். வாசலில் என்னைக் காவல் காக்க கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து அனுமதி கேட்டார். அவரை அனுமதிக்குமாறும், சொர்க்கத்தைப் பற்றி நற்செய்தி கூறுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு அனுமதி கேட்டவர் அபூபக்ர் (ரலி) ஆவார். பின்னர் இன்னொருவர் வந்தார். அவருக்கு அனுமதியளிக்குமாறும் சொர்க்கத்தைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் உமர் (ரலி) ஆவார். பின்னர் இன்னொருவர் வந்தார். சற்று நேரம் தாமதித்து விட்டு அவரை அனுமதிக்குமாறும் சொர்க்கம் பற்றி அவருக்கு நற்செய்தி கூறுமாறும் அவர் பெருந்துன்பத்தை (இவ்வுலகில்) அடைவார் என்று தெரிவிக்குமாறும் கூறினார்கள். அவர் உஸ்மான் (ரலி) ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள பகுதியில் தமது முட்டுக்கால்களுக்கு மேல் ஆடையை விலக்கியவர்களாக இருந்தனர். உஸ்மான் வந்ததும் முட்டுக் காலை மூடிக் கொண்டனர் என்று அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் மஃக்ரிப் தொழுதோம். சென்றவர்கள் சென்று விட்டார்கள். மற்றவர்கள் (இஷாவுக்காக) தங்கி விட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூச்சிறைக்க விரைவாக முட்டுக் கால்களை விட்டும் ஆடை விலகியவர்களாக வந்தனர். நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவன் வானத்தின் ஒரு வாசலைத் திறந்து உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையாகக் கூறுகின்றான். என் அடியார்களைப் பாருங்கள். அவர்கள் ஒரு கடமையை முடித்து விட்டு மறு கடமைக்காக காத்திருக்கின்றனர் என்று வானவர்களிடம் கூறுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இப்னுமாஜா-793
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது அபூபக்ர் (ரலி) தமது முட்டுக்கால்கள் தெரியும் அளவுக்கு ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் தோழர் வழக்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) ஸலாம் கூறினார்; எனக்கும் உமர் பின் கத்தாபுக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டது. நான் அவர் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டேன். பின்னர் கவலைப்பட்டு என்னை மன்னிக்குமாறு கேட்டேன். அவர் மன்னிக்க மறுத்து விட்டார். எனவே உங்களிடம் வந்துள்ளேன் என்று முறையிட்டார். அபூபக்ரே! அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி), அபூபக்ரின் வீட்டுக்கு வந்து, உள்ளே அபூபக்ர் இருக்கிறாரா? எனக் கேட்டார். இல்லை என்று வீட்டிலுள்ளவர்கள் பதிலளித்தனர். உடனே அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். உடனே நபிகள் நாயகத்தின் முகம் மாறியது. அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்து போய் மண்டியிட்டு, அல்லாஹ்வின் தூதரே! நான் தான் அநியாயம் செய்து விட்டேன். (உமர் அல்ல) என்று இரண்டு தடவை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ் உங்களிடம் என்னைத் தூதராக அனுப்பினான். நீ பொய் சொல்கிறாய் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் அபூபக்ர், நீங்கள் கூறுவது உண்மை என்றார். தமது உடலாலும் பொருளாலும் எனக்கு உறுதுணையாக இருந்தார். என் தோழரை நீங்கள் விட்டு விடுவீர்களா? என்று இரண்டு தடவை கேட்டார்கள். இதன் பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் எவராலும் தொல்லைப் படுத்தப்படவில்லை.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
தொடைகளைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லாததாலும் அதற்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதாலும் இரண்டாம் சாராரின் கருத்தே சரியாக உள்ளது.
இதனால் தான் புகாரி இமாம் அவர்கள், அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பை வலுவானது என்றும் ஜுர்ஹுத் (ரலி)யின் அறிவிப்பைப் பேணுதலானது என்றும் கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின்னர் குறைந்த அளவு ஆடைகளுடன் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.
ஒரு மனிதர் நபிகள் நாயகத்திடம் வந்து ஒரு ஆடை மட்டுமே அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உள்ளனவா? என்று திருப்பிக் கேட்டார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி ஒருவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் தாராளமாக உங்களுக்கு ஆடைகளைத் தந்திருந்தால் தாராளமாக அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதன் பின்னர்,
ஒரு போர்வை – ஒரு வேட்டி அணிந்தும்,
ஒரு வேட்டி – ஒரு சட்டை அணிந்தும்,
ஒரு வேட்டி – ஒரு மேலாடை அணிந்தும்,
ஒரு ஸிர்வால் (பேண்ட்) – ஒரு மேலாடை அணிந்தும்,
ஒரு சட்டை – ஒரு பேண்ட் அணிந்தும்,
ஒரு பேண்ட் – ஒரு மேலாடை அணிந்தும்,
ஒரு அரைக் கால் டவுசர் – ஒரு மேலாடை அணிந்தும்,
ஒரு அரைக் கால் டவுசர் – ஒரு சட்டை அணிந்தும்
தொழலானார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
உமர் (ரலி) அவர்கள் தாராளமாக அணியுமாறு கூறிய பிறகு இப்படி இரண்டு ஆடைகள் அணிந்து தொழலானார்கள் என்பதை இதிலிருந்து அறிகிறோம். இவ்வாறு அணிந்த ஆடைகளில் அரைக் கால் டவுசரும் இருந்தது என்பதையும் அறிந்து கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்படாத இந்தச் செய்தி மார்க்க ஆதாரமாகாது என்றாலும் அன்றைய காலத்தில் இருந்த நிலையை அறிந்து கொள்வதற்காக இதைக் குறிப்பிடுகிறோம்.
எனவே ஒருவர் அரைக்கால் டவுசர் அணிந்து தொழுதால் அதைக் குற்றம் என்று கூற மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
மேற்கண்ட தொடர் வெளியான பின் அதை விமர்சிக்க புகுந்தவர்கள் அந்த ஆதாரங்களுக்கு பதில் சொல்லி விமர்சித்தால் அது ஏற்புடையதாக இருக்கும். அல்லது தங்கள் தரப்பில் கூடுதல் ஆதாரத்தை எடுத்து வைத்து நிரூபித்தால் அதுவும் ஏற்கத்தக்கதாக இருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் விதண்டாவாதம் செய்து தான் அவர்களின் விமர்சனம் இருந்தது. அந்த விமர்சனங்களுக்கும் அப்போதே பதில் கொடுக்கப்பட்டது. அதைக் கீழே எடுத்துக் காட்டியுள்ளோம்.
தொழுகையில் ஆண்களின் ஆடைகள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதன் ஒரு பகுதியைக் கடந்த இதழில் கண்டோம். அப்பகுதியை வாசித்த சிலர் நம்மை எதிர்ப்பதாக எண்ணிக் கொண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகக் கருத்து கூறி வருகின்றனர்.
நமக்கு எது விருப்பமானதாக உள்ளதோ, அல்லது எதற்கு நாம் பழக்கப்பட்டு விட்டோமோ அது தான் மார்க்கமாக இருக்க வேண்டும். அதற்கு மாற்றமான எதையும் ஏற்க மாட்டோம் என்ற மனநிலை பலரிடம் காணப்படுகின்றது. அதன் வெளிப்படையாகவே சென்ற இதழில் நாம் எழுதியதைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
முதலில் இந்த மனப்போக்கு ஈமானுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.
யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும் எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ உதவுபவனோ உமக்கு இல்லை.
வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு சென்றாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்றினால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.
இஸ்ராயீலின் மக்களிடம் உறுதிமொழி எடுத்தோம். அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.
உம்மிடம் இந்த அறிவு வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து பொறுப்பாளனோ, காப்பாற்றுபவனோ உமக்கு இல்லை.
அந்த நேரம் வரக்கூடியதே. ஒவ்வொருவரும் தமது உழைப்புக் கேற்ப கூலி கொடுக்கப் படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன். அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!
உண்மை, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றிச் சென்றிருந்தால் வானங்களும், பூமியும் அவற்றில் உள்ளோரும் சீரழிந்திருப்பார்கள். மாறாக அவர்களுக்கு அவர்களின் அறிவுரையையே வழங்கியுள்ளோம். அவர்கள் தமது அறிவுரையைப் புறக்கணிக்கின்றனர்.
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
மாறாக, அநீதி இழைத்தோர் அறிவின்றி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழிகாட்டுபவன் யார்? அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை.
மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழி கெடுத்து விடும்.
(முஹம்மதே!) இதை நோக்கி அழைப்பீராக! உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!
(முஹம்மதே!) பின்னர் இம்மார்க்கத்தில் உம்மை ஒரு வழிமுறையில் அமைத்தோம். எனவே அதைப் பின்பற்றுவீராக! அறியாதோரின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!
தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழிகெடுத்தான். அவனது செவியிலும்,உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழிகாட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
தமது இறைவனிடமிருந்து (கிடைத்த) தெளிவான மார்க்கத்தில் இருப்பவர், தனது மனோ இச்சைகளைப் பின்பற்றி தனது தீய செயல் அழகானதாகக் காட்டப்பட்டவனைப் போன்றவரா?
முஹம்மதே!) உம்மிடமிருந்து செவியேற்பவரும் அவர்களில் உள்ளனர். உம்மை விட்டு அவர்கள் வெளியேறியவுடன் இவர் சற்று முன் என்ன தான் கூறினார்? என்று கல்வி வழங்கப்பட்டோரிடம் (கேலியாக) கேட்கின்றனர். அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள் தமது மனோ இச்சைகளைப் பின்பற்றினார்கள்.
பொய்யெனக் கருதி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது.
தாங்கள் எதற்குப் பழக்கப்பட்டு விட்டார்களோ அதற்கு மாற்றமான கொள்கையையும், சட்டதிட்டங்களையும் இறைத் தூதர்கள் கொண்டு வந்ததற்காகத் தான் அன்றைய மக்கள் இறைத் தூதர்களை எதிர்த்தனர் என்பதையும், மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவன் வெற்றி பெற முடியாது என்பதையும் மேற்கண்ட வசனங்கள் அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றன.
எனவே சென்ற இதழில் நாம் எழுதியதை விமர்சிப்பவர்கள் நாம் எடுத்து வைத்த ஆதாரங்களுக்குப் பதில் சொல்லி விட்டு விமர்சிக்க வேண்டும். மேலும் அதற்கு மாற்றமான கருத்துக்கு உரிய சான்றுகளையும் முன் வைத்து விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து, மொட்டை தலையன் குட்டையில் விழுந்தான் என்பது போல் விமர்சனம் செய்வது மடமையாகும். மனோ இச்சையைப் பின்பற்றுவதாகும்.
இனிமேல் நிர்வாணமாகத் தொழலாம் என்று சொன்னாலும் சொல்வார்கள் என்று திசை திருப்புவதைத் தவிர இவர்களிடம் வேறு உருப்படியான ஒரு வாதமும் இல்லை.
இவர்களின் மண்டையில் உறைப்பது போல் நாம் சொல்கிறோம். நிர்வாணமாகத் தொழலாம் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறவில்லை. ஒரு பேச்சுக்கு அல்லாஹ்வோ, அவனது தூதரோ அவ்வாறு கூறியிருந்தால் அதை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்பட மாட்டோம். மக்களின் மனோ இச்சைக்கு அஞ்சி உண்மையை மறைக்க மாட்டோம்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவோர் முதலில் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் இது தான். சட்டம் வகுக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அவனிடமிருந்து சட்டங்களைப் பெற்றுத் தரும் அதிகாரம் அவனது தூதர்களுக்கு மட்டுமே உரியது.
இதைக் கவனத்தில் கொண்டு நமது முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்களின் தொடைப் பகுதியில் ஒரு பகுதி தெரியும் வகையில் ஆடை அணிவது குற்றமாகாது என்று நாம் மனோ இச்சைப்படி கூறினோமா? உரிய ஆதாரங்களை முன் வைத்திருக்கிறோமா என்பதில் மட்டும் தான் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நாங்கள் விரும்புவதை அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறினால் தான் ஏற்போம், இல்லாவிட்டால் ஏற்க மாட்டோம் என்ற எண்ணம் இப்லீசின் கோட்பாடாகும். இப்லீசின் இந்த மன நிலை இவர்களுக்கு இருப்பதன் காரணமாகவே நம்முடன் ஏகத்துவப் பிரச்சாரம் செய்தவர்கள் தற்போது முற்றிலுமாக தடம் புரண்டுள்ளனர்.
இந்த அடிப்படையிலிருந்து விலகிய ஒவ்வொருவரும் இறுதியில் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டதையும் திரும்பிச் சென்று கொண்டிருப்பதையும் நாம் கண்ணாரக் கண்டு வருகிறோம்.
இதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம்.
ஆண்களின் குறைந்தபட்ச ஆடை பற்றிய கருத்தை நாம் தான் உலகத்தில் வைத்ததாக எண்ணிக் கொண்டு குதியாட்டம் போட்டு வருகின்றனர்.
நான்கு இமாம்களில் இரண்டு பெரும் இமாம்கள் மாலிக், அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோரின் கருத்தும் இதுவாகவே இருந்தது. குர்ஆன், ஹதீஸில் உள்ளதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில் முன்னோடியாகத் திகழ்ந்த ளாஹிரியா பிரிவு அறிஞர்கள் அனைவரின் கருத்தும் இதுவாகவே இருந்தது.
நம்மை நோக்கி இவர்கள் கேட்ட கேள்விகளும், கிண்டலும் மேற்கண்ட அறிஞர்களுக்கும் தான் என்பதைப் பகிரங்கமாக, வெளிப்படையாக கூறத் தயாரா? மேற்கண்ட இமாம்கள் நிர்வாணமாகத் தொழச் சொன்னார்கள் என்று இவர்கள் கிண்டலடிப்பார்களா? என்பதை மூன்றாவதாகப் பதிவு செய்கிறோம்.
எந்த விமர்சனம் செய்வதாக இருந்தாலும் அதில் இரண்டு அம்சங்கள் இருக்க வேண்டும். எதிரியின் கருத்து எந்த அடிப்படையில் தவறானது என்பதை விளக்க வேண்டும். எங்கள் கருத்து இது எனக் கூறி, அதற்கான ஆதாரத்தைக் காட்டி நிரூபிக்க வேண்டும்.
சென்ற இதழில் நாம் எழுதியதை விமர்சனம் செய்பவர்கள் கிண்டல் செய்வதைத் தவிர வேறு எந்த விமர்சனமும் செய்ய இயலவில்லை என்பதை நான்காவதாகப் பதிவு செய்கிறோம்.
இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துடையவர்கள் யாராக இருந்தாலும் இது பற்றி பகிரங்க விவாதத்துக்கோ, கலந்துரையாடலுக்கோ முன் வந்தால் அதை நாம் ஏற்கத் தயார்.
எத்தனையோ விஷயங்களை நாம் எழுதியபோதெல்லாம் அதை எதிர்க்க வழியில்லாது புளுங்கிக் கொண்டிருந்தவர்கள் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வருவதால், அருமையான வாய்ப்பு கிடைத்து விட்டதைப் போல் பூரித்துப் போய் இருப்பதால் இந்தத் தலைப்பில் விவாதம் நடத்துவது அவர்களுக்கு எளிதாகவே இருக்கும்.
இதற்கு அவர்கள் முன்வரட்டும் என்பதை ஐந்தாவதாகப் பதிவு செய்கிறோம்.
சென்ற இதழில் நாம் எழுதிய முக்கியமான சான்றுகளை மட்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்தார்கள் என்பதற்கு ஐந்து ஹதீஸ்களை அரபு மூலத்துடன் வெளியிட்டுள்ளோம். அதன் தமிழாக்கத்தை மட்டும் மீண்டும் தருகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தொடைகளை அல்லது கெண்டைக் கால்களைத் திறந்த நிலையில் படுத்திருந்தார்கள். உள்ளே வருவதற்கு அபூபக்ர் (ரலி) அனுமதி கேட்டார்கள். அந்த நிலையில் படுத்துக் கொண்டே அவருக்கு அனுமதியளித்தார்கள். பின்னர் உமர் (ரலி) அனுமதி கேட்டார்கள். அந்த நிலையில் இருந்தே அனுமதி யளித்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அனுமதி கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து தமது ஆடைகளைச் சரி செய்து கொண்டு அவருக்கு அனுமதியளித்தார்கள். உஸ்மான் (ரலி) உள்ளே வந்து பேசிக் கொண்டு புறப்பட்டார். இதைக் கண்ட நான், “அபூபக்ர் (ரலி) வந்தார். அவருக்காக உங்கள் முகம் மலரவில்லை; அவரைப் பொருட்படுத்தவில்லை. பின்னர் உமர் வந்தார். அவருக்காகவும் உங்கள் முகம் மலரவுமில்லை; பொருட்படுத்தவும் இல்லை. பின்னர் உஸ்மான் வந்த போது அமர்ந்து ஆடையைச் சரி செய்தது ஏன்? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “யாரைப் பார்த்து வானவர்கள் வெட்கப்படுவார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்படக் கூடாதா? என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் ஏறி வந்தனர். நானும் அபூதல்ஹாவும் ஒரு ஒட்டகத்தில் அவர்கள் அருகில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்களின் ஆடை விலகி, தொடையின் வெண்மையை நான் பார்த்தேன் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.
(புகாரி: 371),(முஸ்லிம்: 2561)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் நுழைந்தார்கள். வாசலில் என்னைக் காவல் காக்க கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து அனுமதி கேட்டார். அவரை அனுமதிக்குமாறும் சொர்க்கத்தைப் பற்றி நற்செய்தி கூறுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு அனுமதி கேட்டவர் அபூபக்ர் (ரலி) ஆவார். பின்னர் இன்னொருவர் வந்தார். அவருக்கு அனுமதியளிக்குமாறும் சொர்க்கத்தைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் உமர் (ரலி) ஆவார். பின்னர் இன்னொருவர் வந்தார். சற்று நேரம் தாமதித்து விட்டு அவரை அனுமதிக்குமாறும் சொர்க்கம் பற்றி அவருக்கு நற்செய்தி கூறுமாறும் அவர் பெருந்துன்பத்தை (இவ்வுலகில்) அடைவார் என்று தெரிவிக்குமாறும் கூறினார்கள். அவர் உஸ்மான் (ரலி) ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள பகுதியில் தமது முட்டுக்கால்களுக்கு மேல் ஆடையை விலக்கியவர்களாக இருந்தனர். உஸ்மான் வந்ததும் முட்டுக் காலை மூடிக் கொண்டனர் என்று அபூமூஸா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுதோம். சென்றவர்கள் சென்று விட்டார்கள். மற்றவர்கள் (இஷாவுக்காக) தங்கி விட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூச்சிறைக்க விரைவாக முட்டுக் கால்களை விட்டும் ஆடை விலகியவர்களாக வந்தனர். “நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவன் வானத்தின் ஒரு வாசலைத் திறந்து உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையாகக் கூறுகின்றான். “என் அடியார்களைப் பாருங்கள். அவர்கள் ஒரு கடமையை முடித்து விட்டு மறு கடமைக்காக காத்திருக்கின்றனர் என்று வானவர்களிடம் கூறுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இப்னுமாஜா-793
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தபோது அபூபக்ர் (ரலி) தமது முட்டுக்கால்கள் தெரியும் அளவுக்கு ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் வழக்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) ஸலாம் கூறினார், “எனக்கும் உமர் பின் கத்தாபுக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டது. நான் அவர் விஷயத்தில் அவசரப்பட்டு விட்டேன். பின்னர் கவலைப்பட்டு என்னை மன்னிக்குமாறு கேட்டேன். அவர் மன்னிக்க மறுத்து விட்டார். எனவே உங்களிடம் வந்துள்ளேன் என்று முறையிட்டார். “அபூபக்ரே! அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக என்று கூறினார்கள். பின்னர் உமர் (ரலி), அவர்கள் அபூபக்ரின் வீட்டுக்கு வந்து, “உள்ளே அபூபக்ர் இருக்கிறாரா? எனக் கேட்டார்கள். இல்லை என்று வீட்டிலுள்ளவர்கள் பதிலளித்தனர். உடனே அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். உடனே நபிகள் நாயகத்தின் முகம் மாறியது. அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்து போய் மண்டியிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! நான் தான் அநியாயம் செய்து விட்டேன். (உமர் அல்ல) என்று இரண்டு தடவை கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களிடம் என்னைத் தூதராக அனுப்பினான். நீ பொய் சொல்கிறாய் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனால் அபூபக்ர், `நீங்கள் கூறுவது உண்மை என்றார். தனது உடலாலும் பொருளாலும் எனக்கு உறுதுணையாக இருந்தார். என் தோழரை நீங்கள் விட்டு விடுவீர்களா? என்று இரண்டு தடவை கேட்டார்கள். இதன் பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் எவராலும் தொல்லைப் படுத்தப்படவில்லை.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
ஒரு மனிதர் நபிகள் நாயகத்திடம் வந்து ஒரு ஆடை மட்டுமே அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உள்ளதா? என்று திருப்பிக் கேட்டார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் இது பற்றி ஒருவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் தாராளமாக உங்களுக்கு ஆடைகளைத் தந்திருந்தால் தாராளமாக அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதன் பின்னர், ஒரு போர்வை – ஒரு வேட்டி அணிந்தும், ஒரு வேட்டி – ஒரு சட்டை அணிந்தும், ஒரு வேட்டி – ஒரு மேலாடை அணிந்தும், ஒரு ஸிர்வால் (பேண்ட்) – ஒரு மேலாடை அணிந்தும், ஒரு சட்டை – ஒரு பேண்ட் அணிந்தும், ஒரு பேண்ட் – ஒரு மேலாடை அணிந்தும், ஒரு அரைக் கால் டவுசர் – ஒரு மேலாடை அணிந்தும், ஒரு அரைக் கால் டவுசர் – ஒரு சட்டை அணிந்தும் தொழலானார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மனோ இச்சையைத் தூக்கி எறிந்து விட்டு மேற்கண்ட ஹதீஸ்களை வாசிக்கும் போது நமக்கு விளங்குவது என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முட்டுக்காலுக்கு மேலே ஆடையைத் தூக்கிக் கட்டியிருந்ததும், தொடை தெரியும் வகையில் அவர்கள் இருந்ததும், இது அவர்களுக்குத் தெரிந்த நிலையில் தான் நடந்துள்ளது என்பதும் தெளிவாக விளங்குகிறது அல்லவா?
சிந்திக்கும் எவரும் நமது முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.
இந்த இடத்தில் நியாயமாகக் கேட்கப்படும் சில கேள்விகளும் உள்ளன. அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் கடமை நமக்கு உள்ளது.
அரைக் கால் டவுசர் அணிந்து நபித் தோழர்கள் தொழுததாக இறுதியாக ஒரு செய்தியை நாம் வெளியிட்டோம். (புகாரி: 365)
அல்லாஹ்வும், ரசூலும் கூறியது தான் மார்க்கம் என்று கூறிய நீங்கள் நபித்தோழர்களின் செயலை ஆதாரமாகக் காட்டுவது ஏன் என்பது அத்தகைய சந்தேகங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ்வும், ரசூலும் காட்டியவை மட்டும் தான் மார்க்கம் என்பதில் நமக்கு எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அதில் எந்தச் சமரசமும் கிடையாது. நபித்தோழர்களின் சொந்த அபிப்பிராயங்களையும், சொந்த நடவடிக்கைகளையும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் இல்லை என்பதை இப்போதும் கூறுகிறோம். இதில் எள் முனையளவும் நம்மிடம் மாற்றம் ஏற்படவில்லை.
வஹீயைத் தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது என்பதிலும், நபித் தோழர்களுக்கு வஹீ ஏதும் வந்ததில்லை என்பதிலும் இப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான மேற்கண்ட ஐந்து ஹதீஸ்கள் மூலம் ஒரு உண்மையை உறுதி செய்த பின்னர் மேலதிக தகவலுக்காகத் தான் நபித்தோழர்களும் அவ்வாறு ஆடை அணிந்துள்ளனர் என்று குறிப்பிட்டோம்.
நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான ஹதீஸ்கள் ஏதும் இல்லாமல் இருந்தால் நபித் தோழர்களின் மேற்கண்ட நடைமுறையை நாம் சுட்டிக் காட்டியிருக்க மாட்டோம்.
நபித் தோழர்கள் தொடர்புடைய கடைசி ஒரு பக்கத்தை நீக்கி விட்டுச் சென்ற இதழை வாசித்தாலும் நாம் கூறிய கருத்து நிரூபணமாகும் என்பதை இதற்குப் பதிலாகத் தருகிறோம்.
மற்றொரு சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.
மேற்கண்ட ஹதீஸ்களில் தொழும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஆடை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லையே? பொதுவாகத் தானே உள்ளது என்பது அந்தச் சந்தேகம்.
ஒரு அடிப்படையைக் கவனத்தில் கொள்ளாததால் இந்தச் சந்தேகம் எழுகிறது.
தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு ஆடை அணிந்து விட்டு தொழுகைக்கு இது பொருந்தாது என்று கூறியிருந்தால் இக்கேள்வி நியாயமாக இருக்கும். அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அப்படி வித்தியாசப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்காத போது இக்கேள்வி அர்த்தமற்றதாகி விடுகின்றது.
தொழும் போது ஆண்கள் கரண்டை வரை மறைக்க வேண்டும், மேற்கண்ட ஹதீஸ்கள் தொழுகைக்கு வெளியே நடந்ததைக் கூறுகின்றது என்று நாம் ஒரு வாதத்துக்காகக் கூறினால் அதை அறிவுடையோர் ஏற்க மாட்டார்கள். ஏனெனில் தொழுகைக்கு ஒரு விதமாகவும் தொழுகைக்கு வெளியே வேறு விதமாகவும் ஆடை அணிய வேண்டும் என்று யார் வாதிக்கிறார்களோ அவர்கள் தான் அந்த வேறுபாட்டுக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
வேறுபடுத்திக் காட்ட ஆதாரம் இல்லாவிட்டால் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் ஒரே அளவு ஆடை தான் குறைந்த பட்ச ஆடை என்பது உறுதியாகி விடும்.
இன்னொன்றையும் நாம் சுட்டிக் காட்டுவது அவசியமெனக் கருதுகிறோம்.
ஒருவர் குறைந்தபட்சமாக அணியும் ஆடையின் அளவு எவ்வளவு என்பதைத் தான் விளக்கியிருந்தோம். எல்லோரும் சட்டை, பனியனைக் கழற்றி விட்டு அரைக்கால் டிரவுசருக்கு மாறுங்கள் என்பது இதன் பொருளல்ல. அப்படி ஒருவர் தொழுதால் அதைத் தடுக்க வழியில்லை என்பது தான் இதன் பொருள். இதைப் புரிந்து கொள்ளாமல் கிண்டலடிப்பவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி இது தான்.
எங்களை விமர்சிக்கும் நீங்கள் தொப்புள் முதல் மூட்டுக்கால் வரை ஆடை அணிந்தால் போதும் எனக் கூறுகின்றீர்கள். உங்கள் கூற்றை இப்படி நாங்கள் புரிந்து கொள்ளலாமா? எல்லோரும் சட்டையையும் பனியனையும் கழற்றி விட்டு மூட்டுக்கால் மறையும் அளவுக்கு துண்டைக் கட்டிக் கொண்டு தொழச் சொல்வதாக நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா? அப்படியானால் நீங்கள் கூறும் அளவுக்கும் நாங்கள் கூறும் அளவுக்கும் ஒரு ஜான் அளவு தான் வித்தியாசம்.
அத்துடன் எங்கள் வாதத்துக்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. உங்கள் வாதம் கற்பனையின் அடிப்படையில் அமைந்தது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.
இது தவிர குர் ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் இயக்கத்தினரும் மனோ இச்சைக்கு ஆட்பட்டு சில விமர்சனங்களைச் செய்தனர். அதற்கும் நாம் முன்னரே பத்திலளித்து விட்டோம். அதையும் இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
தொடை மறைக்க வேண்டிய பகுதியா? ஜாக்கின் விமர்சனத்திற்கு பதில்
மார்க்க விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது மனோ இச்சைகளுக்கு அப்பாற்பட்டு, யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலைச் சிந்னையுடன் ஆய்வு செய்ய வேண்டும்.
குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும்.
நாம் முன்னால் கூறியது தவறு என்று தெளிவாகும் போது அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஆனால் நாங்கள் தான் கொள்கைவாதிகள் என்றும், குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை தற்போது ஆட்டம் காணத் துவங்கி விட்டது. ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பு, மார்க்க விஷயத்திலும் கூட இவர்களைத் தடுமாறச் செய்துள்ளது. இவர்களின் பேச்சுக்களும், எழுத்துகளும் இவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
மார்க்க விஷயங்களில் திருக்குர்ஆன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு மட்டும் தான் கட்டுப்பட வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் கூறி வந்தவர்கள் ஒரு தனி நபரின் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக உலக, மார்க்க விஷயங்களில் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் எனும் மார்க்கத்திற்கு புறம்பான புதுக் கொள்கையைப் புகுத்தினார்கள்.
குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் என்று கூறி வந்தவர்கள் குர்ஆனும், நபிவழியும் தங்களுடைய கருத்துக்கு தோதுவாக அமையாத காரணத்தினால் ஸஹாபாக்களுடைய கருத்துகளையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் இல்லாத ஈமானுக்கு மாற்றமான மூன்றாவது அடிப்படைக்குச் சென்றார்கள்.
ஆதாரப்பூர்வமான ஸஹீஹான நபிமொழிகளைத் தான் மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள பொறாமையின் காரணமாக இன்றைக்கு பலவீனமான செய்திகளையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் நிலைக்குச் சென்று விட்டனர்.
கொள்கையற்றவர்களையெல்லாம் தன்னுடைய உறவினர் என்பதற்காக தங்களுடைய பிர்தவ்சியா மதரஸா நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்து உமறுப் புலவர் கனவில் நபிகள் நாயகம் வந்தார்கள் என்று அவர் உளறியதையெல்லாம் ரசித்துக் கேட்ட கொள்கை வீரர்கள் தான் இவர்கள்.
குர்ஆன், ஹதீஸ் அனைவருக்கும் விளங்கும் என்று நாம் கூறி வருவதால் குர்ஆன், ஹதீஸ் யாருக்கும் விளங்காது; அறுபத்தி நான்கு கலைகளையும் படித்து, மதீனாவில் பட்டம் பெற்று, உலக அமீராக இருப்பவர் கூறினால் தான் விளங்க முடியும் என்றும் இவர்கள் கூறுவார்கள் என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் இவர்களின் தொடர் மனமாற்றம் இதைத் தெளிவுபடுத்துகிறது.
இது இவர்களிடம் ஏற்பட்ட தடுமாற்றமா? இல்லை கொள்கை மாற்றமா? என்று தான் தெரியவில்லை.
நமக்கு மறுப்பு எழுதப் போகிறோம் என்று புறப்பட்ட சிலர் மறுப்பு என்ற பெயரில் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆண்கள் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று அபூ ஹனீஃபா, ஷாஃபி உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்; ஆனால் இன்னும் பல அறிஞர்கள் இதைவிடக் குறைந்த அளவிற்கு மறைத்துக் கொண்டால் போதுமானது என்று கூறியுள்ளனர்; முதல் சாரார் எடுத்து வைக்கக் கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல நேரங்களில் தொடை தெரிந்துள்ளது என்பதற்கு வலுவான பல சான்றுகளைக் காட்டி தொழுகையின் போது ஒருவர் தன்னுடைய தொடை தெரியும் வகையில் ஆடையணிந்து தொழுதால் அது குற்றமில்லை என்று தெளிவாக ஆய்வுக்கட்டுரையில் எழுதப்பட்டிருந்து.
இதற்கு மறுப்பு எழுதக் கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும்? தொப்புளிலிருந்து முட்டுக்கால் வரை மறைப்பதற்கு சரியான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது நாம் பலவீனம் என்று கூறியது இன்னின்ன காரணங்களால் தவறு எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஆனால் குராஃபிகளைப் போல் அன்றைக்கு இதை ஸஹீஹ் என்று கூறிவிட்டு இன்றைக்கு ளயீஃப் என்று கூறுகிறீர்களே அன்று இருந்த ஹதீஸ்கள் தான் இன்றும் இருக்கின்றன. ஹதீஸ்களில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியானால் 2005ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் எப்படி உதயமானது? என்று உளறியுள்ளனர். சில ஆய்வாளர்கள் வயதான காலத்தில் சொன்னதை அப்படியே சிந்திக்காமல் கூறுவார்கள். இந்த மறுப்பாளர் அந்நிலைக்கு வந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வை எந்த அளவிற்கு விகாரமாக்க முடியுமோ அந்த அளவிற்கு விகாரமாகக் கூறியுள்ளனர். தொடைப் பகுதி கட்டாயம் மறைக்க வேண்டிய உறுப்புகளில் அடங்காது என்று நாம் கூறிய பிறகும் அதற்குத் தெளிவான சான்றைக் காட்டாமல் அதற்குத் தொடர்பில்லாத சில வசனங்களைக் கூறி இந்த வசனங்கள் மூலம் ஒரு மனிதன் தனது மானத்தை மறைப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மனிதர்கள் மானக் கேடானது என்று வெறுக்கக் கூடியவற்றை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்பதையும் புரிய முடிகிறது என்று கூறியுள்ளனர்.
தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு (தொடை தெரியும் வகையில்) ஆடை அணிந்து விட்டு தொழுகைக்கு இது பொருந்தாது என்று கூறியிருந்தால் இக்கேள்வி நியாயமாக இருக்கும். அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அப்படி வித்தியாசப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்காத போது இக்கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது என்று ஏகத்துவத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்குப் பதில் கூறமால்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து முட்டுக்கால் தொடையும் தெரிவது மாதிரி தொழுகையில் இமாமாக நின்று தொழுதார்கள்; அல்லது தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு ஒரு சான்றையாவது கொண்டு வர முடியுமா? என்று கேட்டுள்ளனர்.
ஒரு விஷயத்தைக் கூடாது என்று மறுப்பவர்கள் தான் அதற்குரிய சான்றைக் காட்ட வேண்டும். இந்த அடிப்படையைக் கூட இவர்கள் மறந்து விட்டனர். மேலும் நபியவர்கள் செய்திருந்தால் மட்டும் தான் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுவது அறியாமையாகும். அவர்கள் அங்கீகரித்து இருந்தாலும் அதுவும் மார்க்கச் சட்டம் தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடும்புக்கறி சாப்பிட்டதில்லை. ஆனால் அதற்கு அங்கீகாரம் தந்துள்ளார்கள். எனவே ஒருவர் உடும்புக்கறி சாப்பிடுவது கூடும் எனக் கூறும் போது நபியவர்கள் சாப்பிட்டதாக ஒரு சான்றையாவது காட்ட முடியுமா? என்று கேட்பது அறியாமையாகும்.
சுபுஹுத் தொழுத பிறகு அதனுடைய முன் சுன்னத்தை நபியவர்கள் தொழுததில்லை. ஆனால் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே முன் சுன்னத் தவறிவிட்டால் சுபுஹுக்குப் பின் அதைத் தொழலாம் என்று ஒருவர் கூறினால் நபியவர்கள் இவ்வாறு செய்ததாக ஒரு சான்றாவது காட்ட முடியுமா? என்று கேட்பதும் அறியாமையாகும்.
நபியவர்கள் செய்யாவிட்டாலும் எதற்கெல்லாம் அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்களோ அவையெல்லாம் மார்க்கம் தான். கூடாது என்று கூறுபவர்கள் தான் அதற்குரிய தடையைக் காட்ட வேண்டும்.
இவர்களுக்காக சில மேலதிகமான சான்றுகளை எடுத்துக் காட்டுகின்றோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் ஒரு காரியத்தைச் செய்து அதை நபியவர்கள் தடை செய்யவில்லையென்றால் அதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்று தான் பொருளாகும். இதை அவர்களும் ஒத்துக் கொண்டுள்ளார்கள். இதை விளங்காமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ரீதியில் மறுப்பு எழுதியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுத ஸஹாபாக்களில் பெரும்பாலானவர்களுக்கு அரைக்கால் வரை மறைக்கக் கூடிய அளவிற்குக் கூட ஆடை இருந்ததில்லை என்பதை நாம் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது விளங்கிக் கொள்ள முடியும்.
ஆண்கள் (அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால்) சிறுவர்களைப் போல் அவர்கள் தம் கீழாடைகளைப் பிடரிகள் மீது கட்டிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால் பெண்களே! ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து) நிமிரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம் என்று பெண்களுக்குக் கூறப்படும்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் சஅத் (ரலி
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் யாருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறு சிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத் தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக் கால் வரையும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும். தமது மறைவிடங்களை பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப் பிடித்துக் கொள்வார்கள்.
மேற்கண்ட ஹதீஸ்கள் நபித்தோழர்களில் பலர் தொழுகைகளில் தம்முடைய அரைக்கால் வரை கூட மறைக்காத கீழாடைகளை அணிந்து தொழுதுள்ளனர் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட ஆடைகளை அவர்கள் அணிந்து தொழும் போது தொடையின் சில பகுதிகள் வெளியில் தெரியத் தான் செய்யும். ஆனால் நபியவர்கள் இதனைத் தடை செய்ததாக நாம் எந்தச் சான்றையும் காணவில்லை.
நபித்தோழர்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தான் இவ்வாறு செய்தார்கள் என்று கூறி இதை மழுப்பி விட முடியாது.
மேலாடை இல்லாத நேரத்தில் ஒருவர் மேலாடை இல்லாமல் தொழலாம். இது தான் நிர்ப்பந்தமாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலாடை இருக்கும் போது அது இல்லாமல் தொழுவதற்குத் தடை செய்துள்ளனர்.
ஆனால் தொடையைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. எனவே ஆதாரம் இல்லாத பட்சத்தில் நிர்ப்பந்தம் என்று கூறுவது தவறாகும்.
ஏனென்றால் ஒரு நபித்தோழர் ஒரு ஆடையில் தொழுவது கூடுமா? என்று நபியவர்களிடம் வினவுகிறார். ஒரு ஆடை அணிந்து தொழும் போது உடலின் பல பகுதிகள் வெளியில் தெரியும். எனவே அந்த நபித்தோழர் இவ்வாறு வினவுகிறார். ஆனால் நபியவர்கள் அவருடைய கேள்விக்கு பதில் கூறாமல் உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகளா இருக்கிறது? என்று அவர் அவ்வாறு கேட்டதையே வெறுக்கும் படி பதில் கூறுகிறார்கள். (புகாரி: 358) நபியவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி கேட்பதையே வெறுக்கிறார்கள் என்றால் அதில் நமக்குப் பல நன்மைகள் உள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே நபித்தோழர்கள் அரைகுறை ஆடையுடன் தொழுததை நிர்ப்பந்தம் என்றும் கூற முடியாது. நபியவர்கள் அரை நிர்வாணமாகச் தொழச் சொன்னார்கள் என்று கூறி அதை விகாரமாக்குவதும் கூடாது. அவர்கள் ஒன்றிற்கு அனுமதியளிக்கும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவன் தான் உண்மையான முஃமின் ஆவான்.
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப் படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம் என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
எனவே நபிமொழிகளின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறும் போது அதை விகாரப்படுத்திக் கேலி செய்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேலி செய்வது போன்றதாகும். இதைத் தான் இன்றைக்கு உலக அமீர்களும், அவர்களின் புதுக் கூட்டாளிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் தகிடு தத்தங்களை இவர்களை நம்புகின்ற ஒரு சில கொள்கைவாதிகளும் விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.
தாங்கள் எதற்குப் பழக்கப்பட்டு விட்டார்களோ அதற்கு மாற்றமாக இறைத் தூதர்கள் கொண்டு வந்ததற்காகத் தான் அன்றைய மக்கள் இறைத்தூதர்களை எதிர்த்தனர் என்பதையும், மனோஇச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவன் வெற்றி பெறமுடியாது என்பதையும் இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்களின் கீழாடை மிகச் சிறியதாக இருந்ததால் சில நேரங்களில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள் கூட தொழுகையில் வெளிப்பட்டுள்ளது.
அம்ர் பின் ஸலிமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டி வந்தது. ஆகவே அந்தப் பகுதி பெண்மணியொருவர் உங்கள் ஒதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா? என்று கேட்டார்.
பின்புறம் தெரியும் வகையில் தான் அவர்களுடைய ஆடை இருந்துள்ளது. நிச்சயமாக அதனுடைய நீளம் முட்டுக்கால் வரை கூட இருந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட ஆடையணிந்து தொழும் போது நிச்சயம் தொடையின் சில பகுதிகள் வெளிப்படத் தான் செய்யும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
நபியவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும், நபியவர்களின் காலத்தில் பல நபித்தோழர்கள் தொடைப் பகுதிகள் தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து தொழுகையில் கலந்துள்ளார்கள் என்ற சான்றுகளின் அடிப்படையிலும் ஆண்களின் தொடைப் பகுதி கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளில் உள்ளதல்ல என்றே நாம் கூறுகிறோம். எனவே ஒருவர் தன்னுடைய தொடை தெரியும் வகையில் தொழுதால் அதனைக் குறை கூற முடியாதென்றும் நாம் கூறுகிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தொடை திறந்திருந்ததாக வரக் கூடிய செய்திகள் தொழுகையைக் குறிக்கவில்லை என இவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் தொடையை மறைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் வலுவான ஆதாரமாகக் காட்டக் கூடிய அந்தப் பலவீனமான ஹதீஸ்களிலும் கூட நபிகள் நாயகம் (ஸல்) தொழுகையில் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறியதாக வரவில்லை.
இதை வசதியாக மறைத்து விட்டனர். பலவீனமான ஹதீஸ்கள் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் அதனை ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் இவர்கள் தங்களின் பொய்யான வாதங்களை நிலைநாட்ட எப்படிப்பட்ட நிலைக்கும் செல்வார்கள் என்பதைத் தான் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அவர்கள் நம்மைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கின்றனர். அந்தக் கேள்விகள் அவர்களை நோக்கியும் திரும்பும் என்பதை நாம் சுட்டிக்க்காட்டுகிறோம்.
ஒருவன் தொப்புளிலிருந்து முட்டுக்கால்கள் வரை மறைத்தவனாக மட்டும் தொழுதால் அது அரை நிர்வாணம் இல்லையா?
இவ்வாறு யாராவது மக்கள் மத்தியில் நடமாடுவார்களா?
இவ்வாறு மற்ற மனிதர்களின் முன்னே நிற்பதையே மானக்கேடானதாகக் கருதும் போது படைத்த அல்லாஹ்வின் முன் இப்படி நிற்பதை அல்லாஹ் விரும்புவானா?
இப்படி முக்கால் நிர்வாணமாக பள்ளிவாசலுக்குள் செல்வது அலங்காரமாகுமா? அலங்கோலமாகுமா?
இப்படி ஆடை அணிந்து தொழுவது அல்லாஹ்வை அவமரியாதை செய்வதாக, அவனைக் கேவலப்படுத்துவதாக அவனுடைய கட்டளைக்கு மாறு செய்வதாக ஆகாதா?
என்றெல்லாம் நாமும் உங்களைப் போல் அந்த வசனங்களைக் காட்டி நீங்கள் கொடுத்த அந்த ஆதாரமில்லாத ஃபத்வாவிற்கு பல கேள்விகளைக் கேட்க முடியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தங்களுடைய தொடையை வெளிப்படுத்தியிருக்கும் போது நிச்சயமாக அது கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதி இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இது தொழுகைக்குப் பொருந்தாது என்று கூறும் ஆய்வாளர்கள் (?) தான் அதற்குரிய சான்றைக் காட்ட வேண்டும். அவர்களால் அப்படிக் காட்ட முடியாதபட்சத்தில் அவர்கள் தான் பொய்யர்கள் என்பதை அவரை உலக அமீராக(?) ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இருக்கும் போது தனது தொடையை மூடாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் வரும் போது மூடியதாகவும், உஸ்மான் (ரலி) அதிகம் வெட்கப்படுவார்கள் என்பதால் அவ்வாறு செய்ததாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்த செய்தியைக் குறிப்பிட்டிருந்தோம்.
இதற்கு மறுப்பளிக்க வந்தவர்கள், அபூபக்ரும், உமரும் ஆரம்ப கால நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு அருகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்துள்ளனர். உஸ்மான் (ரலி) வந்ததும் மூடியுள்ளதால் இது தொடையை மறைக்க வேண்டும் என்பதைத் தான் காட்டுகின்றது என்ற அற்புதமான (?) ஆய்வை வெளியிட்டுள்ளனர்.
தொடை தெரிவது தடுக்கப்பட்டது என்றால் அதை யார் முன்னிலையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். இவர்களது வாதப்படி தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று கூறப் போகின்றார்களா?
இதே ஆய்வின் (?) அடிப்படையில் நெருங்கிய நண்பர்களுடன் இருக்கும் போது தடுக்கப்பட்ட காரியத்தைச் செய்து கொள்ளலாம் என்று ஃபத்வா கொடுப்பார்களா?
மொத்தத்தில் நாம் வெளியிடப்பட்ட முறையான ஆய்வுக் கட்டுரைக்கு அறியாமை விளக்கத்தைக் கொடுத்தவர்கள் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர். இதில் ஒன்றிற்குக் கூட அவர்கள் பதிலளிக்க முடியவில்லை என்றால் கூட அவர்களுடைய ஆய்வில் குறை உள்ளது என்று தான் பொருளாகும்.
ஒருவர் முதலில் ஒரு செய்தியைக் கூறுகிறார். பின்னர் அது அவருக்குப் பலவீனம் எனத் தெரிகிறது. எனவே அவர் அதை வெளிப்படையாக மக்களிடம் கூறுகிறார். இது சரியான நடைமுறையா? இறையச்சத்திற்கு நெருக்கமானதா? இல்லை தவறான நடைமுறையா? என்பதை இவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.
ஒருவர், தான் முதலில் கூறிய ஹதீஸ் பலவீனமானது என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தும் போது அவர் மூளை குழம்பி விட்டாரா? அல்லது எவ்விதச் சான்றும் காட்டாமல் அவருடைய ஆய்வை மறுப்பவர்கள் மூளை குழம்பியவர்களா?
ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகும் எவ்விதச் சான்றும் காட்டாமல் அதே பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளீர்கள். எனவே பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற கொள்கைக்கு எப்போது மாறினீர்கள்? ஏன் இந்த நிலைப்பாட்டிற்கு வந்தீர்கள்?
தொப்புளிலிருந்து முட்டுக்கால் வரை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று பலவீனமான ஹதீஸ்களிலிருந்து நீங்கள் ஆதாரம் எடுத்துள்ளீர்கள். அதில் தொழுகையில் மறைக்க வேண்டும் என்று வந்துள்ளதா?
ஒருவன் தன்னுடைய தொடை தெரியும் வண்ணம் தொழுவது அரை நிர்வாணம் என்றால் நீங்கள் ஏற்றுக் கொண்ட முறைப்படி தொப்புளிலிருந்து மூட்டுக்கால் வரை மறைத்து தொழுவது அரை நிர்வாணம் இல்லையா? ஏனென்றால் இரண்டிற்கும் ஒரு ஜான் தான் வித்தியாசம்.
ஒருவன் தன்னுடைய தொடை தெரியும் வண்ணம் தொழுவதால் அதைக் குறை கூற முடியாது என்று கூறுவது அனைவரும் அரைக்கால் டவுசருடன் தொழுகைக்கு வாருங்கள் என்று அழைப்பதா? அப்படியென்றால் நீங்கள் தொப்புளிலிருந்து முட்டுக்கால்கள் வரை மறைக்க வேண்டும் என்று கூறுவதற்கும் இவ்வாறு கூறலாமா?
நபியவர்கள் தொழுகையல்லாத நிலைகளில் தொடை தெரியும் வண்ணம் ஆடையணிந்துள்ளனர். இது தொழுகைக்குப் பொருந்தாது என்று கூறக்கூடிய நீங்கள் அவ்வாறு தடை செய்ததற்கு நேரடிச் சான்றைக் காட்ட முடியுமா?
நபியவர்கள் செய்ததாக நேரடிச் சான்று இருந்தால் தான் ஒரு காரியம் மார்க்கச் சட்டமாகுமா? அல்லது நபித்தோழர்கள் செய்ததை நபியவர்கள் அங்கீகரித்திருந்தால் அதை மார்க்கச் சட்டமாக எடுத்துக் கொள்ளக் கூடாதா? கூடும் என்றால் நபியவர்கள் செய்ததாக நேரடிச் சான்றைக் காட்ட முடியுமா? என்று கேட்டதின் மர்மம் என்ன?
ஆக இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்பதையெல்லாம் விட்டு விலகி, ஒரு தனி நபரை எதிர்க்க வேண்டும்; அவர் என்ன சொன்னாலும், அது குர்ஆன், ஹதீஸிற்கு உட்பட்டு இருந்தாலும் அதை விமர்சிக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்று விட்டார்கள்.
நபித் தோழர்களை இழிவுபடுத்தும் ஜாக்கினர்
இவர்களின் இந்தத் தனி நபர் எதிர்ப்பு எந்த அளவுக்கு வரம்பு மீறிச் சென்று விட்டது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம்.
அரைக் கால் டவுசர் அணிந்து நபித் தோழர்கள் தொழுததாக இறுதியாக ஒரு செய்தியை நாம் வெளியிட்டோம். (புகாரி: 365)
நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான ஐந்து ஹதீஸ்கள் மூலம் ஒரு உண்மையை உறுதி செய்த பின்னர் மேலதிக தகவலுக்காகத் தான் நபித்தோழர்களும் அவ்வாறு ஆடை அணிந்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
இதையும் இவர்கள் விமர்சித்து எழுதியுள்ளார்கள். நம்மை விமர்சித்தது மட்டுமல்ல; நமக்கு மறுப்பு என்ற பெயரில் நபித் தோழர்களையும் தரக் குறைவாக விமர்சித்துள்ளார்கள்.
குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறி வந்தவர்கள், நபித் தோழர்களையும் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானம் போட்டது நினைவிருக்கலாம்.
நபித்தோழர்களின் ஈமான் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுடைய ஈமானை விடச் சிறந்ததாகும்.
நபித்தோழர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு விளங்கியவர்களாவர்.
நபித்தோழர்களை சங்கைப்படுத்துவதும், அவர்களின் சிறப்பை மதிப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
ஸஹாபாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏகோபித்துக் கொடுக்கின்ற விளக்கத்தைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடான விஷயங்களில் குர்ஆன் சுன்னாவிற்கு மிகவும் நெருக்கமான கருத்தையே ஏற்க வேண்டும்.
ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்குக் கொடுக்கின்ற விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை விடச் சிறந்ததாகும்.
குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை.
என்றெல்லாம் தீர்மானம் போட்டவர்கள் இன்று நாம் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் நபித் தோழர்களின் காலத்தில் நடந்த ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டும் போது, தயவு தாட்சண்யமின்றி அதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
குர்ஆன், சுன்னாவிற்கு நபித்தோழர்கள் கொடுக்கும் விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கொடுக்கும் விளக்கங்களை விடச் சிறந்தது என்று கூறியவர்கள், இன்று நபித்தோழர்கள் கொடுத்த விளக்கத்தை நாம் எடுத்துக் காட்டும் போது, டவுசர்காரர்கள் என்று கிண்டல் செய்கின்றார்கள்.
நாமாவது குறைந்தபட்ச ஆடை என்ற சட்டத்தை மட்டுமே மக்களுக்கு எடுத்துச் சொன்னோம். ஆனால் நபித்தோழர்கள் அந்த ஆடையை அணிந்து தொழுதே இருக்கின்றார்கள்.
அப்படியானால் இவர்கள் அந்த நபித் தோழர்களை டவுசர்காரர்கள் என்று கிண்டல் செய்கின்றார்கள் என்று தானே அர்த்தம்.
நம்மைக் குறை சொல்வதாக எண்ணிக் கொண்டு, அல்லாஹ்வின் முன்னிலையில் நபித்தோழர்கள் அரை நிர்வாணமாகத் தொழுதார்கள் என்று குற்றம் சாட்டுகின்றார்கள்.
இப்படிப்பட்டவர்கள், நபித்தோழர்களை மதிக்க வேண்டும், அவர்கள் கொடுக்கும் விளக்கத்தைத் தான் ஏற்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது யாரை ஏமாற்றுவதற்காக? யாருடைய திருப்தியைப் பெறுவதற்காக என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தனி நபரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, கண்ணியமிகு ஸஹாபாக்களையே டவுசர்காரர்கள், அரை நிர்வாணிகள் என்று கிண்டல் செய்யும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
இவர்களது இந்தக் கொள்கைத் தடுமாற்றம் முற்றிப் போய், நமக்கு மறுப்பு சொல்வதற்காக சமாதி வழிபாடு கூடும் என்றோ, இறந்தவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்றோ சொல்லி விடாமல் இருக்க