14) அண்டை வீட்டாருக்கு நலம் நாடுதல்
இன்றைய அவசர உலகில், அடுக்குமாடுகள் நிறைந்த கால கட்டத்தில் பக்கத்து வீட்டில் எவர் வசிக்கிறார் என்று கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அண்டை வீட்டாரை அந்நிய நாட்டவரை போல அணுகும் மனநிலையில் இருக்கிறார்கள். இஸ்லாமோ அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்து கொள்ளவும் அவர்கள் விசயத்தில் அக்கறை கொள்ளவும் போதிக்கிறது.
எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 73)