02) பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்
உலகில் பல்வேறு விதமான கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கின்றன அவற்றை உருவாக்கியவர்கள். பின்பற்றுபவர்கள் என்று பலரும் அந்தச் சித்தாந்தங்களுக்கு வெவ்வேறு விளக்கம் கொடுக்கிறார்கள், வரையறை சொல்கிறார்கள்.
இஸ்லாத்தைப் பற்றியும் அதன் அடிப்படை பற்றியும் அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில், அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மது நபியும் நமக்குப் பல விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் அவற்றுள் முக்கியமான ஒன்று பிறர்நலம் நாடுவதே இஸ்லாம் என்பதாகும் இதன் மூலம் இஸ்லாமிய மார்க்கம் எந்தளவிற்கு சமூக நலனில் அக்கறை கொள்கிறது ஆர்வம் காட்டுகிறது என்பதை அறியலாம்
நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவதுதான் என்று கூறினார்கள் நாங்கள், “யாருக்கு நலம் நாடுவது)? என்று கேட்டோம் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும். அவனுடைய வேதத்துக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்” என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பவர் : தமீமுத்தாரீ (ரலி), நூல் (முஸ்லிம்: 95)
பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் கருத்தை இஸ்லாம் கூறுவதாக எவராலும் எந்தவொரு சட்டத்தையும் எடுத்துக் காட்ட முடியாது அதிலுள்ள பொதுநலன் நாடும் கருத்துக்களைச் சுட்டிக் காட்டாமல் இஸ்லாத்தை ஒருவருக்கு முழுமையாக எடுத்துச் சொல்ல இயலாது அந்த அளவிற்கு இஸ்லாம் அதிகம் அதிகமாக சமூக அக்கறை பற்றி பேசுகிறது இதைப் பின்வரும் வரலாற்று நிகழ்வு மூலம் அறியலாம்.
மக்காவில் வாழ்ந்த இறைமறுப்பாளர்களுக்கும் மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் இடையே ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலகட்டம். அந்த சமயம், அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.அவர் சிரியாவிற்கு சென்றிருந்தபோது ரோம மன்னர் ஹெராக்ளியஸை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அவரிடம் முஹம்மது நபி பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் அந்த மன்னர் கேட்கிறார் அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் அளித்த பதிலையும் அதற்கு மன்னர் கூறிய மறுமொழியையும் பாருங்கள்.
(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, “உம்மிடம் அவர் (முஹம்மது நபி) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்? என்று நான் கேட்டேன் நீர், அவர் தொழுமாறும், வாய்மையை யும் நல்லொழுக்கத்தையும் கைக்கொள்ளும்படியும் ஒப்பந்தத்தை யும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கப் பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்” என்று (ஹெராக்ளியஸ்) கூறினார்.
அறிவிப்பவர்: அபூசுஃப்யான் (ரலி), நூல் : (புகாரி: 2681)
இதே செய்தி முஸ்லிம் எனும் நூலில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் இதைவிடவும் கூடுதலாக வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஹெராக்ளியஸ், அந்த மனிதர் உங்களுக்கு என்ன கட்டளை யிடுகிறார்?” என்று கேட்டார். “தொழுகையை நிறைவேற்றுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் உறவுகளைப் பேணுமாறும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழுமாறும் எங்களுக்கு முஹம்மது நபி) கட்டளையிடுகிறார்” என்று நான் கூறினேன் அதற்கு ஹெராக்ளியஸ். நீர் சொல்லது உண்மையாக இருப்பின், நிச்சயமாக அவர் ஓர் இறைத்தூதர் தாம் என்று கூறினார். அறிவிப்பவர்: அபூசுஃப்யான் (ரலி), நூல்: (முஸ்லிம்: 3637)
இதில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செய்த பிரச்சாரத்தைப் பற்றி அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் இந்தச் செய்தி மூலம் இஸ்லாம் என்பது பிறர்நலம் நாடும் மார்க்கம் என்பதை தெளிவாக அறியலாம். பெற்றோர். இரத்த பந்தங்கள் உற்றார் உறவினர். அண்டை வீட்டார் என்று சமூகத்தில் தம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் இஸ்லாம் சுற்றுத் தருகிறது. இதற்குப் பின்வரும் செய்தியும் மிகப்பெரும் சான்றாக இருக்கிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 10ஆம் நாளில் மக்காவில்) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள் அப்போது இது எந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள் மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணினோம் அந்த அளவிற்கு மௌனமாக இருந்தார்கள்) பிறகு இது நஹ்ர் உடைய (துல்ஹஜ் 10 ஆம்) நாள் அல்லவா?’ என்று கேட்டார்கள் நாங்கள் ஆம். இறைத்தூதர் அவர்களே! என்று சொன்னோம்.
நபியவர்கள் இது எந்த ஊர்? இது புனித நகரமல்லவா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம், இறைத்தூதர் அவர்களே என்று சொன்னோம் நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் (புனிதம் வாய்ந்த) உங்களின் இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமான) இந்த மாதத்தில் இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் செல்வங்களும் உங்களின் மானமும் உங்கள் உடல்களும் உங்களுக்குப் புனிதமானவையே’ என்று கூறிவிட்டு (நான் வாழ்ந்த இந்தக் காலம் வரை உங்களிடம் இறைச்செய்திகள் அனைத்தையும்) தெரிவித்துவிட்டேனா?’ எனக் கேட்டார்கள்.
நாங்கள் ‘ஆம் (தெரிவித்து விட்டீர்கள்) என்று பதிலளித்தோம்.பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவா! நீயே சாட்சி’ என்றார்கள்.பிறகு (மக்களிடம்), ‘இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தியைப் பிறருக்குத் தெரிவிப்பவர்களில் எத்தனையோ பேர், தம்மைவிட அதை நன்கு நினைவிலிருத்திக் கொள்பவரிடம் தெரிவிக்கலாம் என்றுகூறினார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பின்னால் ஒருவரையொருவர் பிடரியில் வெட்டி மாய்த்துக் கொள்ளும்நி ராகரிப்பாளர்களாய் நீங்கள் மாறிவிட வேண்டாம் என்றும் (அன்றைய உரையில்) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), நூல்: (புகாரி: 7078)
ஒவ்வொரு மனிதனுடைய உயிரும். செல்வமும் மானமும் உடலும் புனிதமானவை என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மட்டுமின்றி அடுத்த மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முஹம்மது நபி எல்லா நேரத்திலும் போதித்தார்கள் இதைப் புரிந்து கொள்வதற்கு நபிமொழிகளில் ஏராளமான சம்பவங்களும் செய்திகளும் சான்றுகளாக உள்ளன.
வணக்க வழிபாடுகளில் தவறு ஏற்பட்டால் அதற்காக செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பற்றிக் கூறும் போது, ஏழைகளுக்கு உணவு தருவதையும், அவர்களுக்கு ஆடை அளிப்பதையும் இறைவன் குறிப்பிடுகிறான். இதன் மூலம் ஒரு கட்டிடத்தில் எத்தனையோ பகுதிகள், பொருட்கள் இருந்தாலும் அதனுடைய உறுதிக்கும் தரத்திற்கும் அடிப்படையாக இருப்பதில் தூண்களுக்கு முக்கிய பங்குண்டு இந்த வகையில் இஸ்லாத்தில் பல்வேறு கடமைகள் அறிவுரைகள் சொல்லப்பட்டிருந்தாலும் அதில் ஐந்து விசயங்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றுள் ஒன்று, ஜகாத் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாரு மில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 8)
செல்வத்தில் தன்னிறைவு பெற்றவர்கள் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தை ஏழை எளியோருக்கு, தேவையுடையோருக்கு வழங்க வேண்டும் என்பது தான் ஜகாத்தின் சாரம்சம். இதோ யாருக்கெல்லாம் வழங்கலாமென இஸ்லாம் கூறுகிறது என்பதைப் பாருங்கள்.
ஜகாத் யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப் போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர் களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் (ஜகாத் எனும் கட்டாய) தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
இதல்லாமல் மற்ற கடமைகளிலும், வணக்கங்களிலும் பிறர்நலம் நாடும் செய்திகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, நோன்பு வைத்திருக்கும் நிலையில் அதை முறிக்கும் காரியத்தை செய்தவர். சத்தியம் செய்து அதை மீறியவர், நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் விட்டவர் போன்றோர் செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பார்க்கும் போது இதைப் புரிந்து கொள்ளலாம். இதன் மூலம் இஸ்லாம் மக்கள் நலன் நாடுவதை அடிப்படை நோக்கமாக கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இறைநம்பிக்கையின் அடையாளம்
ஏக இறைவனை நம்பிய மக்கள், இஸ்லாம் கூறுகின்ற அனைத்து செய்தியையும் நம்ப வேண்டும். நம்பினால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படவும் வேண்டும். அப்போது தான் முழுமையான உண்மையான இறைநம்பிக்கையாளராக திகழ முடியும். அந்த வகையில் சமூக அக்கறையோடு வாழ்வதை இஸ்லாம் இறை நம்பிக்கையின் அடையாளமாக குறிப்பிடுகிறது.
இறைநம்பிக்கை என்பது ‘எழுபதுக்கும் அதிகமான அல்லது ‘அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது. தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 58)
‘உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கை யாளராக ஆகமாட்டார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 13)
ஒட்டுமொத்த மனித இனமும் ஆதி மனிதர் ஆதம் நபியின் சந்ததிகள் தான். அதன்படி, அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்கள். இந்த சகோதரத்துவ உணர்வோடு சுற்றியுள்ள மக்களுக்கு நல்லது செய்வதை இறைநம்பிக்கையின் அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது.
முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள். (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி), நூல்: (புகாரி: 2446)
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி), நூல்: (புகாரி: 6011)
கட்டிடத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியை வலுப்படுத்துவது போன்று, உடலில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் அதை இன்னொரு பகுதி உணர்வது போன்று இறை நம்பிக்கை கொண்ட மக்கள் பிற மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக அடுத்தவர் நலனைக் கெடுப்பது இறைநம்பிக்கைக்கு எதிரானது என்றும் இஸ்லாம் எச்சரிக்கிறது. இதோ ஒரு செய்தியைப் பாருங்கள்.
நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும் போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (புகாரி: 2682)
சமுதாயத்தில் ஒரு சிலர் தீமையான காரியங்களைச் செய்கி றார்கள். அந்த மோசமான செயல்களால் மற்றவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். இதைப் பார்க்கும் போது. நம்மால் முடிந்தளவு அந்தத் தீய காரியத்தைக் களைவதற்கு களத்தில் இறங்க வேண்டும்.
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமான நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : (முஸ்லிம்: 78)
சமூகத் தீமைகள், கொடுமைகள் போன்றவற்றை தடுக்கவும் ஒழிக்கவும் எந்தளவுக்கு முனைகிறோமோ அந்தளவுக்கு நம்மிடம் இறைநம்பிக்கை வீரியமாக இருப்பதாக அர்த்தம்.அது மட்டுமல்ல! தனி மனிதனையும் சமூகத்தையும் நாசப்படுத்தும் செயல்களில் இருந்து மக்களை காப்பதும் இறைநம்பிக்கையின் அம்சம் என்பதை அறிய முடிகிறது.
இவ்வுலகில் நமக்குத் தந்துள்ள அனைத்து அருட்கொடை களைப் பற்றியும் இறைவன் மறுமையில் விசாரிப்பான். அதற்குரிய சரியான பதில் இருந்தால் மட்டுமே அங்கு முழுமையான வெற்றி பெற முடியும்.
எனவே, அல்லாஹ்விற்கு பயந்து அவன் கொடுத்துள்ள பாக்கியங்களை, அருட்கொடைகளை மார்க்கம் அனுமதித்த அடிப்படையில் பயன்படுத்த வேண்டும். பிறருக்குப் பயனளிக்கும் வகையில் நற்காரியங்களை செய்வதும், தீய காரியங்களை விட்டு விலகியிருப்பதும் கூட இறைச்சத்தின் வெளிப்பாடாகும். இதோ அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
இந்த வசனத்தில் இறையச்சம் கொண்ட மக்களின் பண்புகளை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்கள் அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறான். இதோ இறையச்சத்தைப் பிரதிபலிக்கும் காரியங்கள் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதையும் கேளுங்கள்.
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ் சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (முஸ்லிம்: 5010)
எனவே, முஸ்லிம்கள் சக முஸ்லிம்களிடம் மட்டும் நல்ல முறையில் நடந்தால் போதுமென இந்தச் செய்தியை வைத்துத் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. இது முஸ்லிம்கள் நிறைந்த சபையில், நாட்டில் சொல்லப்பட்ட அறிவுரை. எனவே எல்லா மக்களிடமும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
அடுத்த மக்களிடம் எப்படி நடக்க வேண்டும்: நடக்க கூடாது என்பது பற்றி அறிவுரை கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியில் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள். அதன் மூலம், மேற்கண்ட அந்த விசயங்களைக் கடைபிடிப்பதும் இறையச்சத்தின் அம்சம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
முஸ்லிம் என்ற அரபி வார்த்தைக்கு கீழ்படிபவர். கட்டுப்படுபவர் என்று அர்த்தம். ஏக இறைவனுக்கு கட்டுப்பட்டு, அவன் சொன்னபடி வாழ்பவரே முஸ்லிம். தம்மை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர் அநியாயமான முறையில் எவருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. பொது நலம் பேணுபவராக திகழ வேண்டும்.
எவருடைய நாவு, கையின் தொல்லைகளில் இருந்து (மற்றவர்கள்) பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார். மேலும் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றை விட்டும் ஒதுங்கியவரே முஹாஜிர் (துறந்தவரர்) ஆவார்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: (புகாரி: 10)
ஒருவர் அடுத்தவருக்கு பாதகமான பாரதூரமான காரியங்க ளைச் செய்தாலும் இறைவனுக்கு காணிக்கை செய்துவிட்டால் அவரை ஆன்மீகவாதியாக ஏற்றுக் கொள்ளும் கொள்கைகள் தான் ஏராளம். ஆனால், அடுத்த மக்களுக்கு தொல்லைகளைக் கொடுத்தால் அவரை முழுமையான இறைநம்பிக்கையாளராக இஸ்லாம் அங்கீகரிக்க மறுக்கிறது. இதன் மூலம் இஸ்லாம் சமூக நலனை எந்தளவுக்கு விரும்புகிறது என்பதை விளங்கலாம்.