12) பிறருக்கு உதவு
சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.
தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள் தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால் எனக் கேட்டதற்கு “தேவையுடைய உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். நோழர்கள். “அதுவும் இயலவில்லை என்றால்? என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்”என்று கூறினார்கள். (புகாரீ: 1445)
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கும் மார்க்கம் அல்ல. திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கும் வேதம் அல்ல மாறாக அன்பை ஏவும் மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம். மனிதர்களுக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் நோக்கமாகும். பெயரளவில் இஸ்லாத்தை கடைபிடிக்கும் சிலர் ஈடுபடும் காரியங்களை வைத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயகத்திற்குமே தீவிரவாத சாயத்தை ஊடகங்கள் வாயிலாக பூசப்படுகிறது. தனி மனிதர்களின் செயல்களை ஓட்டுமொத்த மதத்தோடு தொடர்பு படுத்த துவங்கினால் எந்த மதமும் தீவிரவாத பட்டம் பெறாமல் எஞ்சியிருக்காது.
இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாரத்திற்கு அறவே இடம் இல்லை. இஸ்லாம் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களின் செயல்களை ஆதரவிக்கவில்லை