11) ஒரு தாய் மக்கள்

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு, நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும். இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய் தந்தைக்கு பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லால் வலியுறுத்துகிறது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் பிறந்தவர், அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (அல்குர்ஆன்: 49:1)

இஸ்லாம் கூறும் ஒரு நாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும் அனைவரும் சகோதரர்கள் சகோதரர்களுக்குள் வெட்டும் குத்து. ஈண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்த சித்தாந்தம் வலியுறுத்தும் கருதாகும்.