08) ஆன்மீகத்தில் மனிதநேயம்
இன்றைக்கு ஆன்மீகம் என்ற பெயரில் காட்டுமிராண்டடித்தனமான இறை வழிபாடுகள் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொட்டைத் தலையில் தேங்காயை உடைப்பதை இறைவன் விரும்புகிறான் என்று நினைக்கின்றனர் மண்டை உடைந்து இரத்தம் பீறிட்டு வருவதைப் பார்த்தும் அர்ச்சகருக்கு இரக்கம் வரவில்லை.
கடவுளுக்காக வெறுமேனியில் சாட்டைபைக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். நெருப்பில் குதித்து காலைப் புண்ணாக்கிக் கொள்கிறார்கள். கடவுளை நெருங்க வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவே விரும்பாது. ஆன்மீகத்தையும் மனிதநேயப் பார்வையுடன் பார்க்கிறது. எனவே தான் இதுபோன்ற வழிபாடுகளுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதியில்லை.
நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். எனவே அவரைப் பற்றி (மக்களிடத்தில்) விசாரித்தார்கள். மக்கள், “அவர் அபூஇஸ்ராயீல் ஆவார். உட்காராமல் வெயில் நிற்பதாகவும் பேசாமல் இருப்பதாகவும் நோன்பு வைப்பதாகவும் அவர் நேர்ச்சை செய்துள்ளார்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரை பேசச் சொல்லுங்கள், அவர் நிழல் வந்து அமரட்டும். நோன்பை (மட்டும்) பூர்த்தி செய்யட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: (புகாரி: 6701)
இந்தச் செய்தி ஆன்மீகம் என்ற பெயரில் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.