07) அடிமைகளிடத்தில் மனிதநேயம்

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

நபி (லை) அவர்கள் காலத்தில் அடிமைகள் ஆடு, மாடுகளைப் போன்று நடத்தப் பட்டார்கள். மார்க்கெட்டில் காய்கறிகள் விற்கப்படுவதைப் போன்று அடிமைகள் விற்கப்பட்டார்கள்.நம்முடைய ஆட்டை நாம் அறுத்தால், அடித்தால் யாரேனும் கேள்வி கேட்பார்களா? இல்லை அதுபோல் ஒருவரது அடிமையை அவர் அடித்தால் அவரை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறியநாவது உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு உட்கார வைக்க வில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவனம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியான பாடுபட்டிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2557)

நாகரீகம் வளர்ந்து சமத்துவம் பேசப்படுகின்ற இந்தக காலத்தில நபி (ஸல்) அவர்கள் சொல் தந்த மனிதநேயம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஆனால் எஜயான வதை உண்கிறாரோ, எதை உடுத்துகிறாரோ அதையே தன் அடிமைக்கு உண்ணக் கொடுக்கட்டும் உடுத்தக் கொடுக்கட்டும் என்று அன்றைக்கே நபி (ஸம்) அவர்கள் சொல்யிருக்கிறார்கள் என்றால் இதை விட பெரிய மனிதநேயம் யாரிடத்தில் இருக்க முடியும்?