04) எதிரிகளிடத்தில் மனிதநேயம் 

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

பொதுவாக மனிதநேயம் என்பது இஸ்லாத்தை ஏற்றவர்களிடத்திலும் ஏற்காதவர்களிடத்திலும் இருக்கிறது நம்மில் பெரும்பாலானோர் நம்மை எதிர்க்காத போது, நமக்குத் துன்பம் தராத ஒருவரிடத்தில் தான் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம்.

ஆனால் இஸ்லாம் எதிரியிடத்தில் கூட மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறுகிறது. இது நான் இஸ்லாம் கூறும் மனிதநேயத்திற்கும் மற்றவர்கள் கூறும் மனித நேயத்திற்கும் உள்ள வித்தியாசம்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாசல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், “நிறுத்து, நிறுத்து’ என்று கூறி தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் நமது தோழர்களைப் பார்த்து, “அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்” என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து “பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது.இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்” என்று கூறி உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: (முஸ்லிம்: 429)

நமது வீட்டை ஒருவர் அசுத்தம் செய்தால் அவரை நாம் அடிக்காமல் விட மாட்டோம். வீட்டை விடப் புனிதமான பள்ளிவாசல் ஒருவர் சிறுநீர் கழித்த போதும் கூட அவர் துன்புற்று விடக்கூடாது என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள் என்றால் இந்த மனித நேயத்தை வர்ணிக்க உலகில் வார்த்தைகள் உண்டா?