02) ஏழையும் இறைவனும்

நூல்கள்: மனிதநேய மார்க்கம் இஸ்லாம்

மனிதர்களுக்கு நாம் உதவி செய்வதை இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றும் மனிதனுக்கு நாம் இரக்கம் காட்டாவிட்டால் இறைவநை வெறுத்துத் தள்ளியதைப் போன்றும் இறைவன் எடுத்துக் கொள்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன் ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான் அதற்கு அவன், ‘இறைவா! நீ அகிலத்தின் இறைவன் உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான் அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான் ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உள்ளிடத்தில் உணவு வேண்டினேன் ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை என்று கூறுவான் அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ். “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வத்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளிததிருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! தன் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நியோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான், அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உள்னிடத்தில் தண்ணீர் கேட்டேன் ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி)

நூல் (முஸ்லிம்: 4661)

பிச்சைக்காரனாக இருந்தாலும் அவனிடத்திலும் மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு கற்று தருகிறது. என்ழக்கு உதவுவது இறைவனுக்கு உதவுவதைப் போன்றது என்று இஸ்லாம் நமக்கு மேற்கண்ட செய்தியின் மூலம் உணர்த்துகிறது.

பாதையில் துன்பம் தரக் கூடிய பெரிய கல்லோ அல்லது முள்ளோ அல்லது கண்ணாடிச் சில்லோ கிடந்தால் அதை நாம் அகற்ற வேண்டும். ஆனால் இவற்றை நம் கண்ணால் பார்த்தும் கூட அதைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறோம்.

இஸ்லாம் மனிதநேயத்தைக் கருதி, பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி என்று கூறுகிறது. அல்லாஹ்வை நம்பியவர்களிடத்தில் அவசியம் இச்செயல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பாதையில் கிடக்கும் நோவினை தரக்கூடியவற்றை அகற்றுவது ஈமானில் ஒருபகுதி என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி)

நூல் (முஸ்லிம்: 51)