07) சந்தேகங்கள்

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை
ரொட்டி சாப்பிடுவது சுன்னத்தா?

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்துமே சுன்னத் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் சுன்னத் எனும் வரையறைக்குள் அடங்காத சில செயல்களும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் உண்டு. அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை. வஹீ இல்லாமல் சாதாரண மனிதர் எனும் அடிப்படையில் அமைந்தவை என இருவிதமாக இருக்கின்றன.

வஹீயின் அடிப்படையில் அமைந்தவை அனைத்தும் சுன்னத் எனும் அந்தஸ்தை பெறும். அவர்களின் உணவு. உடை, இருப்பிடம், வாகனம், மருத்துவம், விவசாயம், வியாபாரம், குடும்ப வாழ்வு போன்ற நடைமுறை வாழ்வின் செயல்பாடுகள் அனைத்தும் முழுக்க முழுக்க வஹீயின் அடிப்படையில் அமைந்தவை என சொல்லி விட முடியாது.

வஹீயும் இருக்கும் வஹீ அல்லாததுமிருக்கும். இவற்றில் பெரும்பாலானவை அவர்கள் காலத்து வசதி,
பழக்க வழக்கம், கண்டுபிடிப்பு ஆகியவைகளுக்கு ஏற்ப செய்து கொண்ட காரியங்கள் தான்.
தூதராக இருக்கும் போது செய்ததைப் போல் நபியாவதற்கு முன்னரும் செய்திருப்பார்கள். அவர்கள்
காலத்து எதிரிகள் கூட நபி ஸல் அவர்கள் செய்ததைப் போன்றே செய்திருப்பார்கள். இதுபோன்ற வஹீ இல்லாத காரியங்களில் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளத் தேவையில்லை.
இதை நபியவர்களே பல நேரங்களில் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

ஒரு தடவை பெரும் இரைச்சல் சப்தம் ஒன்று கேட்டது. நபி (ஸல்) அவர்கள் இது என்ன சப்தம்? எனக் கேட்டார்கள். (நல்ல விளைச்சலுக்காக) ஆண் பெண் பேரீச்சை மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருக்கிறார்கள் என பதில் வந்தது. நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்யாமல் இருந்தால் நன்றாயிருக்குமே! என்றார்கள். உடனே ஸஹாபாக்கள் அதை நிறுத்திக் கொண்டார்கள். அந்த ஆண்டு மகசூல் மிகவும் குறைந்து விட்டது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்ச மரங்களுக்கு என்ன ஆயிற்று? எனக் கேட்டார்கள். நீங்கள் தானே இன்னின்னவாறு (செய்ய வேண்டாம்) என்றீர்கள். (அதனால் தான் இந்த நிலை) என்றார்கள். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் உங்கள் உலக காரியங்களில் நீங்கள் தான் அதிகம் அறிந்தவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்பின் மாலிக் (ரழி) நூல் : (முஸ்லிம்: 4358),
(இப்னு மாஜா: 2462), (அஹ்மத்: 23773)

நான் எனக்கு தோன்றியதைக் கூறினேன். அதற்காக என்னை பிடித்து விடாதீர்கள். எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தை சொன்னால் அதைக் கடைபிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்லமாட்டேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரழி)
நூல் : (முஸ்லிம்: 4356)

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுக்கு முன் உடும்பு கறி வைக்கப்படுகிறது. அதை வேண்டாம் என தவிர்க்கிறார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இது ஹராமா? எனக் கேட்கிறார்கள். இல்லை இதை சாப்பிட்டு பழக்கமில்லை என நபியவர்கள் பதில் கூறினார்கள்உடனே
நபியின் பங்கையும் சேர்த்து வைத்து காலித் (ரழி) சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: காலித் பின் வலீத் (ரழி) நூல் : (புகாரி: 5391, 5400),
5537), (முஸ்லிம்: 3603), (இப்னு;மாஜா : 3232),  (நஸாயீ: 4242, 4243)
(அபூதாவூத்: 3300), (அஹ்மத்: 2552, 2852, 3050, 16209, 16212, 25586)

உணவு விக்ஷயத்தில் வஹீயின் அடிப்படையில் பல சட்டங்கள் இருந்தாலும் சில விக்ஷயங்களில் நபி (ஸல்) அவர்கள் வஹீ இல்லாமல் தமது சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதற்கும் அதை நாம் கடைபிடிக்கத் தேவையில்லை என்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஓர் சான்றாகும்.

ஒரு தடவை (வெங்காய) வாடையுள்ள உணவுப்பண்டம்ஒன்று நபியவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதை தமது தோழர் ஒருவருக்கு, கொடுக்கச் சொன்னார்கள். அவரும் அதைச் சாப்பிட மறுத்துவிட்டார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஷஷநீங்கள் சாப்பிடுங்கள் ஏனெனில் நீங்கள்
உரையாடாத (வான) வர்களுடன் நான் உரையாட வேண்டியுள்ளது” என்று கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் அந்தச் செடியின் வாடையை நான் வெறுக்கிறேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர்: அபூஸயீத் (ரழி) நூல் : (புகாரி: 275, 877) (அபூதாவூத்: 3326, 3327)

அப்படியானால் வழிபாடுகள் அல்லாத மனித வாழ்வின் நடைமுறைகளில் நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு முன்மாதிரியையும் காட்டித் தரவில்லையா? எனும் கேள்வி எழும். நடைமுறை வாழ்விலும் ஏராளமான சுன்னத்துகள் இருக்கின்றன. அவற்றை நபி(ஸல்) அவர்கள் தமது வார்த்தைகளின் மூலம் இவைகள் சுன்னத்துகள் தான் என புரிய வைத்து விடுவார்கள்.

ஒரு காரியத்தை செய்து விட்டு நீங்களும், செய்யுங்கள் என்று நம்மைப் பார்த்து கட்டளையிட்டு விடுவார்கள். அவ்வாறு கட்டளையிடப்பட்ட காரியம் நபியிடமிருந்து பின்பற்றப் படவேண்டிய சுன்னத்துகள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக தலையில் முடி வளர்கின்றது. முகத்தில்
தாடியும் வளர்கிறது. நபி (ஸல்) அவர்கள் தலையில் முடி வைத்திருந்தார்கள் அதை பல விதங்களில் அழகுப்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். ஆனால், அதைப் பற்றி எந்த கட்டளையும் பிறப்பிக்காத காரணத்தால் அதில் நாம் பின்பற்றி நடக்கவேண்டிய சுன்னத்துகள் எதுவுமில்லை எனலாம்.

அதே நேரத்தில் தாடி வளர்த்த நபியவர்கள் தாம் வைத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் நீங்களும் வையுங்கள் என நமக்கு கட்டளையிடுகிறார்கள். இணைகற்பிப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள் தாடியை வளருங்கள் மீசையைத் கத்தரியுங்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : (புகாரி: 5892), (முஸ்லிம்: 382),
380, 381) (திர்மிதீ: 2687, 268),(நஸாயீ: 15, 4959, 4960, 5131), (அஹ்மத்: 4889, 6167)

இந்தக் கட்டளையின் மூலம் தாடி வைப்பது சுன்னத் என்பதை விளங்கலாம். நபியவர்களின் பயணம் முழுவதும் ஒட்டகம், கழுதை மற்றும் குதிரையில் தான். ஆனால் அது குறித்து எந்த
கட்டளையும் பிறப்பிக்காத காரணத்தால் ஒட்டகப் பயணம் சுன்னத் ஆகாது! அதேபோல தம் வாழ்வின் பெரும்பாலான நாட்களில் கோதுமை மாவு, கோதுமை ரொட்டி, இறைச்சி, பே.பழம் ஆகியவற்றையே பிரதான உணவாக உட்கொண்டுள்ளார்கள் ஆனால் அதுகுறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நமக்கு
எந்தவிதத்திலும் வலியுறுத்தவில்லை. எனவே, ரொட்டி சாப்பிடுவது சுன்னத் ஆகாது.

சாப்பிடும் போது பேசலாமா?

சாப்பிடும் போது எதுவும் பேசக்கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்மார்க்கத்தில் அவ்வாறு எந்த தடையும் விதிக்கப்படவில்லை இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் சாப்பிடும் போது
பேசியிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் முன் ரொட்டி வைக்கப்பட்டது. குழம்பு ஏதும் இருக்கிறதா? எனக் கேட்டார்கள்.

வினிகர்- சமையல்காடியைத் தவிர வேறொன்றுமில்லை என பதில் வந்தது. அதை கொண்டு வரச் செய்து (தொட்டு சாப்பிட்டார்கள்) இந்த வினிகர் குழம்பு சுவையாக இருக்கிறதே,
இந்த வினிகர்குழம்பு சுவையாக இருக்கிறதே என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) நூல் :
(முஸ்லிம்: 3824, 3825, 3826) (திர்மிதீ: 1763, 1765, 13708, 13742, 14279, 14397, 14653, 14658, 14755)

ஸலாமுக்கு பதில் சொல்லுதல், விருந்தினர்களை வரவேற்றல், வீட்டுக்கு வந்தவர்களை சாப்பிட அழைத்தல், உணவுப் பண்டங்களை கேட்டு வாங்கிச் சாப்பிடுதல் போன்ற பயனுள்ள பேச்சுக்களை பேசுவதில் தவறேதுமில்லை. வீண் பேச்சுக் கூடாது என்று சொல்லலாம் அது சாப்பாட்டுக்காக அல்ல. எப்போதுமே கூடாது என்ற அடிப்படையில். பாங்கு சொல்லும் போது சாப்பிடலாமா? தமிழக முஸ்லீம்களில் சிலர் பாங்கு சொல்லும் போது சாப்பிடக் கூடாது எனக் கூறி வருகின்றனர் குர்ஆன் ஹதீஸில் இதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஆனால் பாங்கு சப்தத்தை கேட்பவர் மீது அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமையிருக்கிறது.

பாங்கு (சப்தத்தை) செவியுற்றால் முஅத்தின் சொல்வதைப் போல நீங்களும் சொல்லுங்கள். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரழி)நூல் : (புகாரி: 611), (முஸ்லீம்:
576), (திர்மிதீ: 192), (நஸாயீ: 667), (அபூதாவூத்: 438), (இப்னு மாஜா: 712), (அஹ்மத்: 10597, 11078, 11318)

சாப்பிடும் போது பாங்குக்கு பதில் சொல்ல சிரமம் ஏற்படும் என்பதற்காக ஒருவர் தாம் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டால் தவறில்லை. சாப்பிட்டுக் கொண்டே இடையிடையே பதில் சொல்லிக்
கொள்கிறேன் என்று ஒருவர் கூறினால் அதிலும் தவறில்லை. அதீத பசியில் இருக்கும் ஒருவர் பாங்கை சட்டை செய்யாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அதுவும் குற்றமில்லை.
ஏனெனில் பசியோடு இருப்பவருக்கு தொழுகையையே பிற்படுத்திக் கொள்ள மார்க்கம் அனுமதிக்கிறது.

உணவு வைக்கப்படும் போது இகாமத் சொல்லப்பட்டு விட்டால் முதலில் உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்) என்று நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிக்ஷா(ரழி) நூல் : (புகாரி: 671, 5465), (முஸ்லிம்: 867), (இப்னு மாஜா: 925) (அஹ்மத்: 2299, 24442, 23112)

எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்க்கும் போது பாங்கிற்காக சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகிறது. மூன்று விரல்களால் மட்டுமே சாப்பிட வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள். (சாப்பிட்டு) முடித்ததும் அதை சூப்புவார்கள்.
அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரழி) நூல் : (முஸ்லிம்: 3791, 3795, 3789) (திர்மிதீ: 1723) (அபூதாவூத்: 3330) (அஹ்மத்: 12350, 13575, 15207, 25914, 25916)

இந்த ஹதீஸின் அடிப்படையில் மூன்று விரல்களால் சாப்பிடுவது சுன்னத் என சிலர்கருதுகின்றனர்.
இந்த செயல் வஹியின் அடிப்படையில் அமைந்தது அல்ல. சிறு வயது முதலே அவர்கள் பழகிய பழக்கத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். எனவே, மனிதர் என்ற அடிப்படையில் அமைந்த இந்த செயலை மார்க்க காரியங்களில் ஒன்றாக கருதத் தேவையில்லை (சுன்னத்தைப் பற்றிய மேலும் அறிய ரொட்டி சாப்பிடுவது சுன்னத்தா? எனும் தலைப்பை காண்க)

வயிறு முட்ட சாப்பிடலாமா?

வயிறு நிரம்ப சாப்பிடுவதை சிலர் குறை கூறி வருகின்றனர் வயிற்றை நான்கு பங்குகளாக்கி ஒரு பங்கில் உணவும் ஒரு பங்கில் நீரும், ஒரு பங்கில் காற்றையும் நிரப்பிக் கொண்டு ஒரு பங்கை காலியாக விட்டு விட வேண்டுமென்றும் இதுவே நபிவழி எனவும் கூறுகின்றனர் இது நடைமுறை சாத்தியமற்ற தத்துவமாகும். உடலின் உட்புறத்திலிருக்கும் வயிற்றை எவ்வாறு பங்கு போடுவது?
ஒரு பங்கு தான் சாப்பிட்டிருக்கிறோம் ஒரு பங்கு தான் நீரருந்தியிருக்கிறோம் என உறுதி செய்வது எவ்வாறு? உணவையும், நீரையும் உள்ளே அனுப்பி வயிற்றை நிறைப்பது போல காற்றைக் கொண்டு அதன் பங்கை நிரப்புவது எப்படி? வாய் வழியாக சுவாசித்து காற்றை உள்ளே அனுப்பினாலும் மறு நிமிடமே வெளியேறி விடுமே அதை தடுத்து நிறுத்தி வயிற்றுக்குள் சிறை வைப்பது எப்படி? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன இவை எதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள் இது போன்ற ஒரு வழிமுறையை நமக்கு காட்டித் தரவும் இல்லை.

இதற்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பல நேரங்களில் வயிறு நிரம்ப சாப்பிட்டிருக்கிறார்கள். என்பதற்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை வாங்கி அறுத்து அதன் ஈரலைப் பொறிக்கச் சொன்னார்கள். பிறகு
தம்மை சுற்றியிருந்த நூற்றி முப்பது தோழர்களுக்கும் அதிலிருந்து உண்ணக் கொடுத்தார்கள். அங்க இல்லாதவர்களுக்கும் எடுத்து வைத்தார்கள். அதில் கலந்து கொண்ட அப்துர் ரஹ்மான் பின் அபூபக்கர்(ரழி) கூறுகிறார்கள். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். சாப்பிட்டது போக எஞ்சியதை ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம் என்கிறார்கள்.
ஹதீஸின் சுருக்கம்:அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின்
அபூபக்கர்(ரழி) நூல் : (புகாரி: 2618, 5382),) (முஸ்லிம்: 3832), (அஹ்மத்: 1610)1618)

அபூதல்ஹா (ரழி). உம்மு சுலைம் (ரழி) இருவரும் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து வைத்துக் கொண்டு அவர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களோ தான் மட்டும் தனித்து வராமல் தன்னோடு பசியுடன் இருந்த ஸஹாபாக்களையும் அழைத்துக் கொண்டு
வந்து விட்டார்கள். கணவன் , மனைவி இருவரும் வந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்து கலக்கமடைய நபி (ஸல்) அவர்களோ எவ்விதப் பதட்டமுமின்றி சமைக்கப்பட்ட உணவை கொண்டு வரச் செய்து அதில் பரக்கத்திற்காக துஆ செய்தார்கள்.

பின்னர் உணவின் மீது தன் கையை வைத்துக் கொண்டு தம் தோழர்கள் பத்துப் பத்துப் பேராக வந்து சாப்பிடுமாறு அழைத்தார்கள்.ஒவ்வொருவரும் வந்து வயிறு நிரம்ப சாப்பிட்டு விட்டு சென்றார்கள். இவ்வாறு எண்பது பேர் வயிறு நிரம்பிய பின் மேலும் உணவு மிச்சமிருந்தது. அதை நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள் மேலும் அபூதல்ஹாவும், உம்மு சுலைமும் சாப்பிட்டு முடித்தார்கள்.
ஹதீஸ் சுருக்கம் : அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல் : (புகாரி: 5381, 3578, 6688) (முஸ்லிம்: 3801, 3802) (திர்மிதீ: 3563), (அஹ்மத்: 12034, 12806, 12946)

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் கடுமையான பசியால் வாடிப் போயிருந்த அபூஹ{ரைரா (ரழி) அவர்களை அழைத்துக் கொண்டு தமது இல்லம் நோக்கிச் சென்றார்கள். உண்பதற்கு உணவேதும் உள்ளதா? என வீட்டாரிடம் கேட்டார்கள். இன்னார் அன்பளிப்பாய் தந்த ஒரு கோப்ப பாலைத் தவிர ஏதுமில்லை என பதில் வந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் திண்ணைத் தோழர்களை அழைத்து வாரும் என அபூஹ{ரைராவுக்கு கட்டளையிட்டார்கள். அவரும் அழைத்து வந்தார். அனைவருக்கும் அந்த கோப்பையிலிருந்த பால் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தாகம் தீரும் வரை குடித்து விட்டு கோப்பையை திரும்பத் தந்தனர்.

இறுதியில் நபி (ஸல்) அவர்கள் அபூஹ{ரைராவைப் பார்த்து நீங்கள் பருகுங்கள் என்றார்கள் அவரும் பருகினார் மேலும் பருகுங்கள் என்று கூற மீண்டும் பருகினார் இவ்வாறு நபியவர்கள் கூறிக் கொண்டே இருக்க இறுதியில் என் வயிறு உப்பி பாத்திரம் போல் ஆகி விட்டது. சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பி வைத்த இறைவன் மீது ஆணையாக! இனி பருகுவதற்கு இடமே இல்லை என்று கூறி நபியிடம் கோப்பையைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் புகழ்ந்து அவன் பெயர்கூறி பாலைக் குடித்து முடித்தார்கள் ஹதீஸின் சுருக்கம்.:அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி)
நூல் : (புகாரி: 6452, 5375) (திர்மிதீ: 2401).

நபி (ஸல்) அவர்களே வயிறு முட்ட முட்ட சாப்பிட வைத்துள்ளார்கள் எனும் போது நாமும் அவ்வாறு
சாப்பிடுவதில் தவறேதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது என்ற கருத்துப்பட சில அறிவிப்புகள் வருகின்றன. அவையனைத்தும் பலவீனமான அறிவிப்புகளாக உள்ளன.

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்த ஒரு மனிதர் (வயிறு நிரம்பி) ஏப்பம் விட்டார். அப்போது நபியவர்கள் எங்களை விட்டும் உனது ஏப்பத்தை தடுத்துக் கொள். இவ்வுலகில் வயிறு நிரம்பியிருப்போரில் அதிகமானவர்கள் கியாமத் நாளில் நீண்ட பசியுடையவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்கள். (திர்மிதீ: 2402) மற்றும் (இப்னு மாஜா: 3341) ஆகிய எண்களில் இது பதிவு
செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் முஹம்மது பின் ஹ{மைதி அர்ராஸி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என ஹதீஸ் கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவராவார். இவரது ஹதீஸ்கள் மறுக்கப்படத்தக்கவை என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார் மேலும் இதே அறிவிப்பில் யஹ்யா அல்பக்கா என்று ஒருவர் வருகிறார். இவர் பலஹீனமானவர் இவரது கூற்றை ஆதாரமாக ஏற்க முடியது என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர் எனவே, பலவீனமான அறிவிப்பாளர்களை கொண்டுள்ள இந்த செய்தியை ஆதாரமாக ஏற்க முடியாது.

இப்னுமாஜாவில் மிக்தாம் இப்னு மஃதீகரிப் (ரழி) வழியாக அறிவிக்கப்படும் செய்தி ஒன்று 3340வது ஹதீஸாகவும் திர்மிதியில் 2302வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதன் நிரம்பும் பாத்திரங்களிலே மிகக் கெட்டது வயிறாகும். மனிதனின் முதுகெலும்பு நிற்பதற்கு சில கவள உணவுகளே போதுமானதாகும். மனிதனின் உள்ளம் அவனை மிகைத்தால் அவன் வயிற்றில் மூன்றில் ஒரு பாகம் உணவும், ஒரு பாகம் நீரும் ஒரு பாகம் காலியாகவும் விட்டுவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என்று வந்துள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது பின்
ஹர்ப் என்பவர் வருகிறார் அவர் தன் தாயின் வழியாகவும் அந்தத் தாய் அவரது தாயின் வழியாகவும் கேட்டுஅறிவிப்பதாக உள்ளது.

இந்த மூவரைப் பற்றி எந்தவிபரமும் இல்லை. யாரென்றே தெரியாதவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்தச் செய்தியையும் ஆதாரபூர்வமானதாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் வயிறு நிரம்புதல் என்றால் கணக்கு வழக்கின்றி அதிகமதிகம் தின்பது என்று புரிந்து கொள்ளக் கூடாது. சிலருக்கு வயிறு நிரம்ப அதிக உணவு தேவைப்படும் சிலர்குறைந்த உணவிலே வயிறு நிரம்பி விடுவார்கள். குறைந்த உணவில் வயிறு நிறைவதற்கு உர ிய வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் காட்டிக் தந்துள்ளார்கள்
அது பரகத் நிறைந்த உணவு எனும் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி குறைந்த உணவில் திருப்தியைப் பெற முயற்சிக்க வேண்டும்.

உணவில் அஜினமோட்டோ சேர்க்கலாமா?

அஜினமோட்டோ என்பது மோனோ சோடியம் குளூட்டமேட்எனும் வேதிப் பெயர்கொண்ட ஒருவகை உப்பு தயாரிக்கும் நிறுவனமாகும்.முதன் முதலில் இந்த வேதிப்பொருளை இந்த நிறுவனம்
தான் தயாரித்து விற்பனை செய்தது. நாளடைவில் அந்நிறுவனத்தின் பெயரே அதன் பெயராக நிலைத்துவிட்டது. மரவள்ளிக் கிழங்கு, கடல்பாசி, கரும்பு போன்றவற்றின் ஊரல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த உப்பு உணவில் சுவை கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துவதால் சுவை கூடுவதென்னவோ உண்மை தான்.

ஆனால், அந்தச் சுவையின் பின்னிணைப்பாக ஏராளமான நோய்களும் வந்து சேர்ந்து கொள்கின்றன. 78 சதவீதம் குளூட்டாமிக் அமிலமும், 22 சதவீதம் சோடியமும் கொண்டுள்ள அஜினமோட்டோ நமது மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் எனும் முக்கிய பகுதியைத் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் பெரும்பாலான நொறுக்குத் தீனிகளில் இது கலக்கப்படுகிறது.

அஜினமோட்டோ கலந்திருப்பதை மறைப்பதற்காக யனனநன கடயஎழரச என்று மக்களுக்கு புரியாத மொழியில் எழுதி ஏமாற்றுகின்றனர் . இதை அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சிக்குரிய ஹார்மோனின் சுரப்பு குறைந்து விடும். அதனால் உடல் வளர்ச்சிக் குறைவு நோய் ஏற்படும் என்கிறது ஓர் ஆய்வு.

விருந்துகளின் போது சமையல் பொருட்களின் பட்டியலில் டேஸ்ட் பவுடர் என்று சமையல்காரர்கள் எழுதிக் கொடுப்பதும் இந்த அஜினமோட்டோ தான்.இது ஒரு இயற்கை தாவர உணவு. எனவே, இதில் ஆபத்து ஏதுமில்லை என அதன் விற்பனையாளர்கள் விளக்கம் தருகின்றனர் தாவரங்களிலும் , உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மையுடையவை உண்டு என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர். அஜினமோட்டோவின் கேடுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், பல நாடுகள் அதன் பயன்பாட்டுக்குத் தடை விதித்திருக்கின்றன. நமக்கு கேடுகளை ஏற்படுத்தும் காரியங்களைச் செய்யக்கூடாது எனும் இறை வசனத்தின் படி அஜினமோட்டோவைச் சாப்பிடக்கூடாது
உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள் (அல்குர்ஆன்: 4:29)
உங்கள் கைகளால் நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன்: 2:195)

ஆல்கஹால் கலந்துள்ள மருந்தைச் சாப்பிடலாமா?

ஆல்கஹால் என்பது நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடைய திரவம். பலதரப்பட்ட காரியங்களுக்குப் பயன்படும் விதத்தில் ஆல்கஹாலில் பல வகைகள் உள்ளன. வாசனைத் திரவியங்களை (ஸ்ப்ரே) பீய்ச்சியடிக்க, வெடிமருந்துகளை கட்ட, ரேடியேட்டரின் உறைநிலையைத் தடுக்க, ஊசி போட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க என பல்வேறு பணிகளுக்கும் வெவ்வேறு விதமான ஆல்கஹால்கள் பயன்பாட்டில் உள்ளன.

அந்த வகையில் உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் சிலவற்றிலும் இது சேர்க்கப்படுகிறது. குறிப்பாக சளி, இருமல், அலர்ஜி போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் அலோபதி மருந்துகளைக் குறிப்பிடலாம்.
மேலும் ஹோமியோபதி முறையில் தயாராகும் மருந்துகள் அனைத்தும் ஆல்கஹாலில் ஊற வைக்கப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு வருகின்றன. இதனால் தான் சில மருந்துகளைச் சாப்பிட்ட பின் வாகனம் ஓட்டுதல், கனரக இயந்திரங்களை இயக்குதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என அவற்றிலே எழுதப்பட்டிருக்கிறது.

மருந்துப்பொருட்களில் சேர்க்கப்படுவது ஈத்தைல் எனும் ஆல்கஹால் ஆகும். இது போதையூட்டக் கூடியது. மதுபானங்கள் அனைத்திலும் இதை சேர்ப்பதன் மூலம் போதை தருவதாக மாற்றப்படுகிறது.
போதை தருபவை அனைத்தும் தடுக்கப்பட்டவையே என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிக்ஷா(ரழி) நூல் : (புகாரி: 5585, 5586), (முஸ்லிம்: 3727, 3728)

இந்த நபிமொழியின் அடிப்படையில் போதையூட்டும் ஆல்கஹால் கலந்திருக்கும் எந்தவொன்றையும் சாப்பிடக் கூடாது. மருந்துப் பொருட்களைப் பொறுத்தவரை ஆல்கஹால் கலக்காத மருந்துகளை எழுதித் தருமாறு மருத்துவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டும். ஒருவேளை ஆல்கஹால் கலந ;ததைத் தான் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவற்றை சாப்பிடுவதில் தவறில்லை.

உக்ல் அல்லது உரைனா குலத்தாரில் சிலர்(மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்பவெட்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே, (அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க) பால் தரும் ஒட்டகங்களைப் பெற்றுக்கொண்டு அவற்றின் சிறுநீரையும், பாலையும் பருகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி ) நடந்தனர்(அவற்றின் சிறுநீரையும், பாலையும் பருகி) உடல்
நலம் தேறினர் அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : (புகாரி: 233, 1501),3018, 4192, 4610, 5685, 5686, 5727, 6802, 6804, 6805, 689)

தடை செய்யப்பட்ட ஒட்டகச் சிறுநீரை அவசியத்தின் நிமித்தம் நோய் தீர்க்கும் மருந்தாக நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்கள். பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டது. ஆயினும் நே ாய் நிவா ரணத்திற்காக இதையும்
அனுமதித்துள்ளார்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), ஸ{பைர் இப்னுல் அவ்வாம் (ரழி) ஆகியோருக்கு ஏற்பட்ட சிரங்கு நோய்க்காக பட்டுச்சட்டை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரழி)நூல் : (முஸ்லிம்: 3829, 3870, 3871),
(திர்மிதீ: 1644), (நஸாயீ: 5215, 5216) (அபூதாவூத்: 3534), (இப்னு மாஜா: 358)

எனவே, இதுபோன்ற தருணங்களில் அவசியத்தின் நிமித்தம் நாமும் பயன்படுத்திக் கொள்ளலாம்
வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோ ர் மீது எந ;தக் குற்றமும் இல்லை.
(அல்குர்ஆன்: 2:173, 5:3, 6:145, 16:115) நிர்ப்பந்த நிலையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற
கருத்தைத் தரும் இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக ஆல்கஹால் கலந்துள்ளவற்றை மருந்தாகவும் பயன்படுத்தக்கூடாது என்று சிலர்கூறுகின்றனர்அவர்கள் பின்வரும் ஹதீஸை தமது
கூற்றுக்கு ஆதாரமாக வைக்கின்றனர் .

சுவைத் பின் தாரிக் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் மதுவைப் பற்றிக் கேட்டார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அதைக் கொண்டு நாங்கள் மருத்துவம் செய்கிறோமே எனக் கேட்டார்கள். அதற்கு அது மருந்து இல்லை நோய் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : வாயில் பின் ஹ{ஜ்ர் (ரழி)நூல் : (திர்மிதீ: 1969),
(முஸ்லிம்: 3670), (அபூதாவூத்: 3375), (இப்னு மாஜா: 3491) (அஹ்மத்: 18036, 184104, 25978).

இந்தச் செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால் போதைபொருள் கலந்துள்ள மருந்தை பயன்படுத்தக் கூடாது என்பதைப் போன்று தெரிகிறது. இந்த முடிவுக்கு வந்தால் மேற்கூறிய ஹதீஸ்களையும், வசனத்தையும் மறுக்கும் நிலை தான் ஏற்படும்.ஏனெனில் அவையனைத்தும் அதை
அனுமதிக்கின்றன. நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளில் முரண்பாடு இருக்காது என்ற அடிப்படையில் சற்று நிதானமாக சிந்தித்தால் இதில் நமக்கு தெளிவு கிடைக்கும்.

அது மருந்தில்லை நோய் என்று கூறும் ஹதீஸ் மதுவை அப்படியே எந்த மாற்றமுமின்றி மருந்தாக பயன்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது. அவ்வாறு பயன்படுத்துவது கூடாது எனும் கருத்தை அந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.. அதே மதுபானத்தை ரசாயனக் கலவைகளின் மூலம் மருந்தாக மாற்றிவிட்டால் அதில் மது இருந்தாலும் மருந்து என்ற நிலைக்கு மாற்றப்பட்டு விட்டதால் அதைப் பயன்படுத்தி வலி நிவாரணம் பெறுவதில் தவறில்லை. மது நோய்களுக்கு நிவாரணம் தராது. அவற்றின் கலவையால் தயாரிக்கப்பட்ட மருந்தில் நிவாரணம் உண்டு. அந்த மருந்தின் மூலம் நிவாரணம் பெறலாம்.

இவ்வாறு விளங்கிக் கொண்டால் இதில் முரண்பாடு இல்லை இரண்டும் இருவேறு கருத்தைத் தருகின்றன எனப் புரிந்து செயல்படலாம்.

உண்ணக் கூடாததை விற்பனை செய்யலாமா?

மார்க்கத்தில் உண்பதற்குத் தடை செய்யப்பட்ட எதையும் விற்பனை செய்வது கூடாது. அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு ஒரு பொருளை தடைசெய்துவிட்டால் அதை வியாபாரம் செய்வதையும்,தடுத்துவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                      அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) நூல் :
(அபூதாவூத்: 3026), (அஹ்மத்: 2111, 2546, 2809).

பொதுவாகச் சொல்லப்பட்ட இந்த போதனையை நபி (ஸல் ) அவர்கள் தனித்தனியாக குறிப்பிட்டும்
விளக்கமளித்திருக்கிறார்கள்.

நாய் விற்பனை

நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரத்தின் கூலியையும் சோதிடன் பெறுகிற தட்சணையையும், நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (வேட்டையாடுதல், விளைநிலங்களை பாதுகாத்தல் போன்ற
பணிகளுக்குப் பயன்படும் நாயை விற்பனை செய்வதில் தவறில்லை).
அறிவிப்பவர் : உக்பா பின் அம்ரு (ரழி) நூல் : (புகாரி: 2237, 2282, 5346, 5761), (முஸ்லிம்: 293), (திர்மிதீ: 1052, 1197), (நஸாயீ: 4218, 4587),(அபூதாவூத்: 2974, 3020), (இப்னு மாஜா: 2150), (அஹ்மத்: 6453, 16457, 16468).

மதுபான விற்பனை

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பையில் மதுவை அன்பளிப்பாக வழங்கினார். அவரிடம் அல்லாஹ் இதைத் தடை செய்திருப்பது உமக்கு தெரியுமா? எனக் கேட்டார்கள். அவர் தெரியாது என்றார் (பிறகு தனது அடிமையிடம்) இரகசியமாக ஏதோசொன்னார்.
என்ன இரகசியம்? என நபியவர்கள் கேட்டார்கள். இதை விற்கச் சொன்னேன் என்றார். இதைக் குடிப்பதற்கு தடை செய்தவன், விற்பதற்கும் தடை செய்துள்ளான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, தோல்பையின் வாயைத் திறந்துவிட்டார் அது வழிந்தோடியது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : (முஸ்லிம்: 2957), (நஸாயீ: 4585), (அஹ்மத்: 1937, 2081, 2821, 3201)

பன்றி மற்றும் செத்த பிராணிகள் விற்பனை

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அல்லாஹ்வும், அவன் தூதரும் மதுபானம், தாமாகச் செத்தவை பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றின் விற்பனையை தடை செய்துள்ளார்கள் எனக் கூறினார்கள். உடனே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே செத்தவற்றின் கொழுப்பு கப்பல்களில் பூசவும் தோல்களில் தடவவும், விளக்கு எரிக்கவும், பயன்படுகின்றதே! எனக் கேட்கப்பட்டது.
அதற்கு கூடாது. அதுவும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு மேலும், கூறினார்கள் யூதர்களை அல்லாஹ் அழிப்பானாக! அவர்கள் மீது கொழுப்பை அல்லாஹ் ஹராமாக்கினான். அதை விற்று அதன் கிரயத்தைச்
சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) நூல் : (புகாரி: 2236, 4633), (முஸ்லிம்: 2960), (திர்மிதீ: 1218) (நஸாயீ: 4183, 4590) (அபூதாவூத்: 3025), (இப்னு மாஜா: 2158) (அஹ்மத்: 13948, 13971).

 

ஜம்ஜம் நீரை நின்று கொண்டுதான் குடிக்கவேண்டுமா?

நபி(ஸல்) அவர்கள் ஜம் ஜம் நீரை நின்று கொண்டு பருகினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னுஅப்பாஸ் (ரழி)நூல் : (புகாரி: 5617, 1367) (முஸ்லிம்: 3776, 3779), (திர்மிதீ: 1803), (நஸாயீ: 2915, 2916) (அஹ்மத்: 1741, 1804, 2074)

இந்த ஹதீஸின் படி ஜம் ஜம் நீரை நின்று கொண்டு தான் குடிக்க வேண்டும் என்று சிலர்கூறி வருகின்றனர். நபி (ஸல்) அவர்கள் தாம் அருந்தப் போவது ஜம் ஜம் நீர் என்பதற்காக எழுந்து நின்றிருந்தால் நாமும் அவ்வாறு தான் செய்ய வேண்டும். ஆனால் நபியவர்களோ ஜம்ஜம் அல்லாத நீரையும் நின்று கொண்டு அருந்தியிருக்கிறார்கள். (ஒரு தடவை) அலி (ரழி) அவர்கள் லுஹர் தொழுதார்கள். பின்னர் அசர் தொழுகையின் (நேரம்) வரை கூஃபா பள்ளியின் முற்றத்தில் மக்களின் தேவைகளை (நிறைவேற்றுவதற்காக) அமர்ந்தார்கள். (தொழுகை நேரம் வந்ததும்) தண்ணீர் கொண்டு வரப்பட்டது (அதைக் கொண்டு) தமது முகம், மற்றும் கைகளைக் கழுவினார்கள். தலையை (மஸஹ்) தடவினார்கள்.

தம் இரு கால்களையும் கழுவி (உளுச் செய்தார்கள்) பின்பு எழுந்து மீதத் தண்ணீரை நின்ற நிலையிலே குடித்தார்கள். பிறகு சொன்னார்கள் மக்கள் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கிறார்கள். (இப்போது) நான் செய்ததைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் (அதை நான் பார்த்திருக்கிறேன்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் நஸ்ஸால் இப்னு சப்ரா (ரஹ்)நூல் : (புகாரி: 5616, 5615), (நஸாயீ: 130), (அபுதாவூத்: 3230) (அஹ்மத்: 55)

எனவே நபி ஸல் அவர்கள் ஜம்ஜம் நீருக்கென்று பிரத்தியேகமாக நிற்கவில்லை என்பது தெளிவாகிறது.
ஆகவே ஜம்ஜம் ஆக இருந்தாலும் அதுவல்லாத வேறு பானமாக இருந்தாலும் அமர்ந்து குடிப்பது தான் சிறந்தது. தேவைப்பட்டால், நின்று குடிப்பதிலும் தவறில்லை. (மேலும் விபரத்துக்கு நின்று குடித்தல் என்ற தலைப்பை பார்க்கவும்).

சமைத்த உணவு உளூவை நீக்குமா?

சமைத்த உணவை உண்பதால் உளூ நீங்கும் என்றும். நீங்காது என்றும் மாறுபட்ட கருத்தைத் தரும் ஹதீஸ்கள் உள்ளன.

நெருப்பு தீண்டியவற்றின் (சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன்) காரணமாக உளூச் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரழி) நூல் : (முஸ்லிம்: 528, 529), (நஸாயீ: 179), (அஹ்மத்: 20615, 20655, 20660).

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் சாப்பிட்டார்கள். பிறகு உளூச் செய்யாமலே தொழுகையில் நின்றதை நான் கண்டேன். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : (நஸாயீ: 184), (புகாரி:
207, 5405), (முஸ்லிம்: 531) (அபூதாவூத்: 159, 162) (இப்னு;மாஜா: 481) (அஹ்மத்: 1884, 2046, 2172, 2223, 2282, 2393)

நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையைச் சரி செய்து கொண்டு தொழுகைக்குத் தயாரானார்கள். அப்போது ரொட்டியும், இறைச்சியும் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் மூன்று கவளம் சாப்பிட்டு விட்டு தண்ணீரைத் தொடாமலே (உளூச் செய்யாமலே) மக்களுக்கு
தொழுவித்தார்கள். அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : (முஸ்லிம்: 538)

இவ்விரண்டு கருத்துகளில் உளூச் செய்ய வேண்டும் என்பது ஆரம்பக் காலச்சட்டமாக இருந்தது. பின்னர் நபி (ஸல்) அவர்களால் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. உளூச் செய்யத் தேவையில்லை என்பதே இறுதிச் சட்டமானது. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், செய்யாதிருத்தல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே அல்லாஹ்வின் தூதருடைய கடைசி நிலையாக
இருந்தது. அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி)(நஸாயீ: 185), அபூதாவ+து: 164.

இதை வலுப்படுத்தும் விதமாக ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன.
நான் ஜாபிர் (வழி) அவர்களிடம் சமைத்த உணவைஉண்பதால் உளூச் செய்ய வேண்டுமா? என்று கேட்டேன் அவர்கள் தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அது போன்ற உணவு அரிதாகவே எங்களுக்குக் கிடைத்து வந்தது. அப்போது எங்கள் முன் கைகள், மேல் கைகள் மற்றும் பாதங்கள் தான் எங்கள் கைக்குட்டைகளாக இருந்தன.பிறகு நாங்கள் தொழுவோம். அதற்காக மீண்டும் நாங்கள்
உளூச் செய்ய மாட்டோம். என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : சயீத் பின் ஹாரிஸ் (ரஹ்)(புகாரி: 5457)
இப்னுமாஜா : 3273 அஹ்மது : 14489.

ஒட்டக இறைச்சி உளூவை முறித்து விடும்

எந்தவொரு உணவை உண்பதும் உளுவை முறிப்பதில்லை. ஆனால் ஒட்டக இறைச்சியை உண்பது உளூவை முறித்து விடும் ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் நீ விரும்பினால்
உளூச் செய்து கொள். விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள் என்று கூறினார்கள்.
ஒட்டக இறைச்சியைச் சாப்பிடுவதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா? என மீண்டும் கேட்டார். அதற்கு நபியவர்கள் ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச்செய் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் சமுரா (ரழி)(முஸ்லிம்: 539),
இப்னுமாஜா : 488, அஹ்மது : 19886, 19898, 19953, 19961.

தடுக்கப்பட்டதில் முரண்பாடா?

தாமாகச் செத்தது,ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வைத் தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்கு தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை என்று
கூறுவீராக!(அல்குர்ஆன்: 6:145)

இவ்வசனம் நான்கே நான்கு உணவுகள் மட்டும் தான் தடுக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக அறிவிக்கிறது.ஆனால் வேறொரு இடத்தில் இதில் சொல்லப்படாத மேலும் சிலவற்றை தடுக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, மேட்டிலிருந்து உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வனவிலங்குகள் சாப்பிட்ட பிர ாணிகள் ஆகியவற்றில்(உயிர் இருந்து) நீங்கள் அறுத்தவை தவிர(மற்றவை) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவை ஆகியன உங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.(அல்குர்ஆன்: 5:3)

இதைத் தவிர நபி(ஸல்) அவர்களின் வாய்மொழியாக கழுதை,கோரைப் பல்லுடைய விலங்குகள்,வேட்டை நகமுடைய பறவைகள் ஆகியனவும் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும் போது இறைச் சட்டத்தில் முரண்பாடு இருப்பதைப் போன்று தோன்றலாம்.குர்ஆன் இறங்கிய
விதத்தை தெரிந்து கொண்டு இதைப் படித்தால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறியலாம்.

குர்ஆன் ஒரே நேரத்தில் மொத்தமாக அருளப்படவில்லை. 23 ஆண்டுகளாக தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாக அருளப்பட்டது. தடுக்கப்பட்டவையும் சிறிது சிறிதாகத் தான் தடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததில் பல விக்ஷயங்கள் பின்னால் தடுக்கப்பட்டன.
அந்த அடிப்படையில் 6:145 வசனம் முதலில் இறங்கியது.அவ்வசனம் இறக்கப்பட்ட தருணத்தில் அதில்
கூறப்பட்டுள்ள நான்கு உணவுகள் மட்டுமே தடுக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் 5:3 வசனம் அருளப்பட்டு மேலும் சில உணவுகள் அந்த பட்டியலில் சேர்ந்தன. அதனைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் வழியாக மேலும் சில உணவுகள் தடுக்கப்பட்டன. எனவே இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

அசைவம் அவசியமா?

புலால், மாமிசம், இறைச்சி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அசைவ உணவை உண்பது அருவருப்பானது, உயிர்களை வேதனை செய்யும் பாவச் செயல் என சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
இதைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டையும் அதைத் தவிர்ப்பதால் ஏற்படும் கேடுகளையும் இங்கே பார்ப்போம். நம்பிக்கை கொண்டோரே ! ஒப்பந ;தங்களை நிறைவேற்றுங்கள் உங்களுக்கு (பின்னர்) கூறப்படுவதை தவிர தாவரத்தை உண்ணும் கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.(அல்குர்ஆன்: 5:1)

கால்நடைகளை உங்களுக்காகவே படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள்.(அல்குர்ஆன்: 16:5)

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்கு பருகத் தருகிறோம். அவற்றில் ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகிறீர்கள்.(அல்குர்ஆன்: 23:21).

மேலும் கீழ்காணும் வசங்களிலும் இக்கருத்தைக் காணலாம். 40:79, 39:6, 22:34, 22:30, 2:28, 16:80, 16:66, 10:24, 6:142. மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் கால்நடைகளை அறுத்து உண்பதை அனுமதிக்கின்றன. இறைவனின் படைப்பில் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள் என இரு வகைகள் உள்ளன. தாவர உண்ணியின் உடல் அதை மட்டுமே ஏற்றுக் கொள்கிற விதத்தில் படைக்கப்பட்டுள்ளது. பற்களின் அமைப்பு தட்டையாகவும், ஜீரண உறுப்புகள் அதற்கேற்ற வாரும்
அமைந்துள்ளது. அவற்றால் மாமிச உணவை உட்கொண்டு உயிர் வாழ முடியாது. அதே போல மாமிச உண்ணிகளின் உடல் மரக்கறி உணவை ஜீரணித்துக் கொள்ள முடியாது. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது நமது முன்னோர்கள் ஆய்ந்தறிந்த ஓர் உண்மை. மனித உடல் மட்டுமே மரக்கறி, மாமிசம் ஆகிய இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் வி தத்தில் படைக்கப்பட்டுள்ளது.

இருவகை உணவையும் உண்பதற்கு ஏற்றவாறு தட்டையும், கூர்மையும் கலந்த பல்வரிசையையும், அதற்கேற்றவாறு ஜீரண மண்டலத்தையும் இறைவன் ஏன் வழங்கினான்? என்பதை சிந்தித்தால் இறைவனின் ஏற்பாட்டில் அசைவம் அனுமதிக்கப்பட்டதே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரைக் கொல்வது உறுத்துகிறதா?
உயிரைக் கொன்று உயிர் வாழ்வதா? என சிலர் கேள்வியெழுப்புகின்றனர். இவர்கள் தாவரங்கள் (சைவம்) உட்பட எதையும் உண்ண முடியாது. ஏனெனில் மரம், செடி, கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது. எனவே தான் அவைகள் வளர்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை மறுப்பவர்கள் ஒரு துளி நீரைக் கூட வாயில் வைத்து சுவைக்க முடியாது. ஏனெனில் ஒரு துளி நீரில் 50 மில்லியன் பாக்டீரியக்கள் புறக்கண்களுக்கு தெரியாமல் உயிர்

வாழ்ந்து கொண்டிருக்கின்றன என மருத்துவ உலகம் கூறுகிறது. இட்லி, தயிர், பிரட், பன் என எல்லாம் உயிர் மயம். இவை எல்லாவற்றிலும் நொதித்தல் உண்டு. அவை எல்லாம் உயிர்களின் செயலே! கொழுப்புச் சத்து கூடுதலாக இருக்கிறதே!அசைவத்தில் மட்டுமல்ல சைவ உணவிலும் கொழுப்பு இருக்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்கள், தேங்காய், வெண்ணெய், வேர்க்கடலை தயிர், பாதாம் என சைவமாக கருதப்படும் பொருட்களில் கொழுப்புடையவை குறித்து ஒரு பட்டியலே தயாரிக்கலாம். கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணை எனும் கவர்ச்சிகரமான விளம்பரமும், வியாபாரமும் இதை உண்மைப் படுத்துகிறது. மேலும் கொழுப்பு என்பது உடல் இயக்கத்திற்கு உதவக் கூடியது. கொழுப்பின்றி மனிதனால் வாழவே முடியாது. அது அளவு கடந்து விடாமல் அணை போட வேண்டுமே
தவிர கொழுப்பே கூடாது என்பது அறிவுடைமையாகாது.

இதய நோய், உடல் பருமன் போன்ற நோயாளிகள் மாமிசம் உண்ணக் கூடாது என மருத்துவர்கள் கூறுவதை வைத்துக் கொண்டு அசைவமே ஆபத்து என்பதை ஏற்க முடியாது. சில நோயாளிகளுக்கு சர்க்கரை, வேறு சிலருக்கு உப்பு, கத்தரி, மீன், தயிர் என ஒவ்வொருவருக்கும் ஒத்துக்கொள்ளாத தடுக்கப்பட்ட உணவுப் பட்டியல் நீளுமே. அனைத்தையும் தவிர்க்க வேண்டுமென கூற முடியுமா?
கூறினால் உயிர்கள் யாவும் உண்டு, உயிர்த்து வாழமுடியமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

உணவுத் தட்டுப்பாடு

கால்நடைகளை உணவுக்கோ வேறு பயன்பாட்டிற்கோகொல்லக் கூடாது என முடிவெடுத்து விட்டால் மனித வாழ்வே கேள்விக் குறியாகி விடும். . நாமும் சைவ உணவைத் தேட ஆடு,மாடுகளும் நம்முடன்
சைவத்தில் போட்டி போட பூமியில் கிடைக்கும் தாவரங்களையும், தானியங்களையம் பங்கிட்டுக் கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு விடாதா? ஒரு ஐந்தாண்டு காலம் மனிதனும் மிருகங்களும் போட்டி போட்டுச் சாப்பிட்டால் உலகின் பசுமை வனக் காடுகள் அனைத்தும் பாலைவனமாக மாறிப்போகாதா? நாம் உயிர்வாழ சுத்தமான காற்று (ஆக்ஸிஜன்) அவசியம். அதை சுவாசித்து கார்பன்-டை-ஆக்ஸைடு எனும் அசுத்தக் காற்றை வெளியிடுகிறோம். விலங்குகளும், கால்நடைகளும்
இதுபோலவே ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பனை வெளியிடுகின்றன.

தாவரங்கள் தான் இதற்கு மாற்றமாக ஆக்ஸிஜனை தந்து கார்பனை உள்ளிழுத்துக் கொள்கின்றன.
கட்டுப்படுத்தப்படாத கால்நடைப் பெருக்கமும் அவற்றின் உணவுக்காக மரங்களின் அழிவும் உலகில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மொத்த உயிர்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கி விடாதா? மனித இனம் பெருகினால் தின்று அழிப்பதற்கும், சுவாசித்து கழிப்பதற்கும் தகுந்தாற் போல் புதிய புதிய முறையில் உணவு உற்பத்தி நடந்து கொண்டேயிருக்கும்.

ஏனெனில் மனிதன் வெறும் வயிற்றோடு மட்டும் பிறப்பதில்லை. உலகின் சிக்கலுக்குத் தீர்வு காணும் அறிவோடும் பிறக்கிறான். ஆனால் இங்கே பெருகுவது சிந்தனையற்ற விலங்கினம். இறுதியில் உணவின்றி உயிர்கள் அழியும் அல்லது தனது உணவைப் பெறுவதற்காக ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு அழியும். இந்த அழிவை விட மனிதனின் உணவுக்காகவும, பயன்பாட்டுக்காகவும் அறுப்பது அபாயகரமானாதா? என்பதை சிந்திக்க வேண்டும்.

உயிரினப் பெருக்கம்

தாவரங்கள், விலங்குகள் மனிதர்கள் என அனைத்து வகை ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்காக ஒன்றையொன்று சார்ந்து நிற்கும் வகையில் உணவுச் சங்கிலியால் பிணைத்து வைத்திருக்கிறான், இறைவன். அந்தச் சங்கிலியின் ஒரு கண்ணியில் சிக்கல் வந்தால் அடுத்தடுத்த கண்ணிகளும் பாதிக்கப்படும். ஒரு விலங்கு அது உண்ண வேண்டிய உயிரினங்களை உண்ணாமல் விட்டு
விட்டாலும் பெரும் குழப்பம் ஏற்படும்.

ஏனெனில் அவற்றின் வளர்ச்சியின் வேகம் அப்படி. அவற்றின் சினைக்காலம். இனப் பெருக்கத்திற்கு தயாராகும் காலம் ஆகியவை மிகவும் குறைவு. பெற்றெடுக்கும் குட்டிகளின் எண்ணிக்கையும் அதிகம்
உதாரணத்திற்கு எலிகள் :
 கருவுற்றிருக்கும் காலம் – 23 நாட்கள்
 சுண்டெலியின் சினைக்காலம் – 21 நாட்கள்
 ஒரு தடவை போடும் குட்டிகள் – 6 முதல் 10
 இரண்டு குட்டிகள் பிறந்தால் அவற்றின் பாலினம் -ஆண் ஒன்று, பெண் ஒன்று
 ஒரு பிரவசத்துக்கும் அடுத்த கருவுறுதலுக்கும் இடைப்பட்ட காலம் ஏதுமில்லை. மறுநாளே தயாராகிவிடும்
 பிறந்தது முதல் இனவிருத்திக்கு தயாராகும் கால இடைவெளி: (பருவமடையும் காலம்) ப ி ற ந ; த
மூன்றாம் மாதம்
 ஒரு ஜோடி எலிகள் ஓராண்டு முடிவில் பெருகியிருக்கும் எண்ணிக்கை: 1,000 முதல் 2500 வரை
 நாள் ஒன்றுக்கு 5 எலிகளின் உணவு: ஒரு நாளில் ஒரு மனிதனின் உணவுக்குச் சமம்
 உலக உணவு உற்பத்தியில் எலிகளால் ஏற்படும் சேதம் ஆண்டுக்கு: 10 சதவீதம் உணவு தானியங்கள்
 இந்தியாவில் மட்டும் ஏற்படும் சேதம் ஆண்டுக்கு:
 ரூ.2,500 – கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள். மனிதர்களால் பொறி வைத்து பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் எலிகளின் எண்ணிக்கையை விட பாம்பு, பூனை, ஆந்தை போன்ற விலங்குகளால் உண்ணப்படும் எலிகளின் எண்ணிக்கை பல நூறு மடங்கு அதிகம்.

எலிகளைத் தின்பதை அவை நிறுத்திக் கொண்டால் அவற்றின் பெருக்கமும் அதனால் ஏற்படும் சேதங்களும் அவற்றின் உணவுத் தேவையும் பல நூறு மடங்கு அதிகரிக்கும். பெருகி நிற்கும் எலிகளின் உணவுத் தேவை ஒருபுறம் இருந்தால் இதுவரை அந்த எலிகளை உட்கொண்ட பிராணிகளின் தேவை மறுபுறம் நெருக்கும். ஒன்று இவை மடியும் அல்லது வேறு விலங்குகளின் உணவில் கைவைத்து அதை உட்கொள்ள வேண்டிய விலங்கிற்கு உணவு கிடைக்காமல் மடியச் செய்யும். இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியும் உடைந்து நொறுங்கும் . அதுபோன்ற பேரழிவிலிருந்து உலகைக் காப்பதற்குத் தான் பேரறிவாளனாகிய இறைவன் பூனையைக் கொண்டு எலியைக் கட்டுப்படுத்துகிறான். பாம்பைக் கொண்டு பூனையைக் கட்டுப்படுத்துகிறான்.

கழுகைக் கொண்டு பாம்பு என ஒன்றைக் கொண்டு மற்றொன்றை வாழச் செய்துள்ளான். அந்த வழியில் மனிதனைக் கொண்டு ஆடு, மாடுகளைக் கட்டுப்படுத்துகிறான். பொருளாதாரப் பிரச்சனை நமது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் பலவும் மிருகங்களைக் கொல்வதன் மூலமே கிடைக்கின்றன. காலணி, பெல்ட், பேக், மத்தளம், மத்தள வார், குளிராடை இவையும் இவை போன்ற எண்ணற்ற பொருட்களுக்கும் மிருகத்தின் தோல்கள் தான் மூலதனம்.

மெழுகு, சோப்பு, களைக்கொல்லி, பூச்சி மருந்து, மெடிக்கல் கேப்சூல், ஆபரேக்ஷன் நூல், களிம்பு, பெயிண்ட் இவை போன்ற ஏராளமான பொருட்களுக்கு மிருகக் கொழுப்பு தான் மூலதனம்.
பிராணிகளைக் கொல்லக் கூடாது என்போர் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பார்களா? இவற்றை தயாரிக்கும் தொழிற்சாலைகளை இழுத்து மூடுவார்களா? (அ) மூடத்தான் சம்மதிப்பார்களா? இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட கோடானு கோடி தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலை பரிந்துரைப்பார்களா? என்பன போன்ற ஆயிரமாயிரம் கேள்விகள் அணிவகுக்கின்றன. இவை அனைத்திற்கும் பதில் ஒன்றே ஒன்றுதான் எந்தவித உறுத்தலுமின்றி அசைவத்தை அங்கீகரிப்போம்.

நண்டு சாப்பிடலாமா?

நண்டு, சுறா, திமிங்கலம், ஆகியவை உண்பதற்கு அனுமதிக்கப்படடதல்ல என சிலர்கூறி வருகின்றனர் அல்லாஹ்வும், ரசூலும் இவ்வாறு எந்தத் தடையும் விதிக்கவில்லை. கடல்வாழ் உயிரினங்களில் கேடு தருபவை தவிர அனைத்தும் அனுமதிக்கப்பட்டது என குர்ஆன்
கூறுகிறது. உங்களுக்கும் ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.(அல்குர்ஆன்:)

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை உண்பதற்காக அவனே உங்களுக்கு கடலை பயன்படச் செய்தான். அல்குர் ஆன் 16 : 14

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டார். யா ரசூலல்லாஹ் நாங்கள் கடலில் பயணிக்கும் போது கொஞ்சம் நீரை எடுத்துச் செல்கிறோம். அதைக் கொண்டு உளூச் செய்துவிட்டால் தாகம் தணிக்க முடியாது. எனவே, கடல்நீரில் உளூச் செய்யலாமா? எனக் கேட்டார். அதற்கு அதன் தண்ணீர் தூய்மையானது அதில் செத்தவையும் அனுமதிக்கப்பட்டது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி) நூல் : திர்மிதி : 64,(நஸாயீ: 330, 4275), அபூதாவ+து : 76, இப்னுமாஜா : 380, 3237, அஹ்மது : 6935, 8380, 8557, 8737, 14481, 22017

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரழி) அவர்களின் தலைமையில் 300 வீரர்கள் கொண்ட எங்கள் படையை அனுப்பினார்கள். குறைக்ஷிகளின் வணிகக் கூட்டத்தை எதிர்பார்த்து கடற்கரையோரமாக அரை மாத காலம் நாங்கள் தங்கியிருந்தோம். (அப்போது) உண்ண உணவின்றி கருவேல மர இலையைச் சாப்பிட்டோம். (அதனாலே கருவேல இலைப்படை என பெயர்வந்துவிட்டது) கடல் எங்களுக்காக ஒரு திமிங்கலத்தை கரையில் ஒதுக்கியது. அதை அரை மாத காலமும் சாப்பிட்டோம். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி)(புகாரி: 2483, 2983, 4360, 4361, 4362, 5493, 5494), முஸ்லீம் : 3577 திர்மிதி : 2399, நஸயீ : 4276, 4277, 4278 இப்னுமாஜா : 4149 அஹ்மது : 13768, 13795.

மதீனா வந்தவுடன் நபி(ஸல்) அவர்களிடம் இதைக் கூறினோம்.அல்லாஹ் வெளிப்படுத்திய இந்த உணவை உண்ணுங்கள். மிச்சமிருந்தால் நமக்கும் தாருங்கள் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் (மிச்சமிருந்த) ஒரு துண்டை கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை நபி (ஸல்)
அவர்கள் சாப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி)(முஸ்லிம்: 3576),(புகாரி: 4362),(நஸாயீ: 4279), அஹ்மது : 13738, 13817, 14517

மேற்கண்ட செய்திகள் யாவும் கடல் வாழிகள் அனைத்துமே உண்ணத் தகுந்தது என்ற கருத்தை தெளிவுபடுத்துகின்றன. எனவே, அல்லாஹ் அனுமதித்ததை தடை செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. யாரேனும் தடை செய்தால் அவர்களுக்கு கட்டுப்படவேண்டியத் தேவையுமில்லை.
அல்லாஹ்வையன்றி நமக்காக அறுத்ததை சாப்பிடலாமா? திருக்குர்ஆனின் 2:173, 5:3, 6:145, 16:115 ஆகிய வசனங்களில் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஹராம் என கூறப்பட்டுள்ளது.

அப்படியானால், நாம் நமக்காகவும், நம் விருந்தினருக்காகவும்அறுக்கும் ஆடு, மாடுகளை சாப்பிடக்கூடாதா? என்று சிலர்கேள்வி எழுப்புகின்றனர் அல்லாஹ்வுக்காக அறுத்தல் என்றால் அவன் உண்பதற்காக அறுப்பது அல்ல. அவ்வாறு யாரும் புரிந்து கொள்வதும் இல்லை. மாறாக, அவன் தான் இந்தப் பிராணியைப் படைத்தான். அவனே அதை உண்பதற்குரிய அனுமதியையும் வழங்கியுள்ளான். எனவே, அந்தப் பிராணியின் மீது இறைவனுக்கு உள்ள அதிகாரத்தை நிலைநாட்டுவதும் அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதும், அவனது அருளை எதிர்பார்ப்பதும் தான் அல்லாஹ்வுக்காக அறுத்தல் என்பதன் பொருளாகும். அவற்றின் மாமிசங்களோ, இரத்தங்களோ அல்லாஹ்வை
சென்றடைவதில்லை. அல்குர் ஆன் – 22:37

நாம் நமக்காகவும், நம் விருந்தினருக்காகவும் அறுக்கும் போது இந்த நோக்கத்தில் அறுப்பதில்லை. உண்பதற்குத் தான் அறுக்கிறோம். எந்த உரிமையையும் நிலைநாட்டுவதற்காக
அல்ல. அல்லாஹ்வுக்கு அறுப்பதைப் போன்று பக்தி எங்கே வெளிப்படுகிறதோ அவற்றை உண்பது தான் ஹராமாகும்.

உதாரணமாக அவ்லியாக்கள், மகான்கள், இன்ன பிற கற்பனை தெய்வங்களுக்கா கவும் , பிராணி கள் அறுக்கப்படுகின்றன. அவற்றை அவர்கள் சாப்பிடுவதில்லை. அவர்கள் அதைச் சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் அறுப்பவர்களிடம் இல்லை. இறைவனுக்காக அறுக்கும் போது என்ன பக்தியும், நம்பிக்கையும் வைக்கப்படுகிறதோ அதுதான் இங்கும் வெளிப்படுகிறது.

அல்லாஹ்வுக்காக அறுத்து விட்டு அவன் அருளை எதிர்பார்ப்பதை போல் அவ்லியாக்களுக்காக அறுத்துவிட்டு அருள்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற உணவுகள்தான் ஹராம் ஆகும். சாப்பிடலாமா? கூடாதா? என சந்தேகம் வந்தால்? ஒரு பொருளை சாப்பிடுவது கூடுமா? கூடாதா என்ற சந்தேகம் வந்துவிட்டால் இயன்றவரை அதற்குரிய சான்றுகளைத் தேடி சந்தேகத்தை நீக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

எந்த முடிவுக்கும் வரமுடியாமல் சந்தேகம் நீடித்துக் கொண்டேயிருந்தால் அதைச் சாப்பிடாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக : அல்லாஹ்வின் பெயர்கூறி அனுப்பப்பட்ட வேட்டை நாய் நமக்காக கொண்டு வருவதைச் சாப்பிட மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது.
வேட்டைக்குச் சென்ற இடத்தில் நமது நாயுடன் பிஸ்மி சொல்லப்படாத வேறு நாயும் நின்று கொண்டிருந்தால். இதைப்பிடித்தது எது? நாம் அனுப்பிய நாயா? அருகிலிருக்கும் வேறு நாயா? என்று சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலாது. இந்த தருணத்தில் அதைப்பிடித்தது எது? என்பதை அறிய  முயற்சிக்க வேண்டும். அருகில் யாரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களிடம் விசாரித்துப் பார்க்கலாம். வேறு ஏதும் உறுதியான தடயம் கிடைக்கிறதா? என ஆய்வு செய்யலாம்.

எந்தச் சான்று கிடைக்காமல் இதுவும் பிடித்திருக்கலாம் அதுவும் பிடித்திருக்கலாம் என்ற இழுபறி நிலையே நீடித்தால் இந்த உணவே வேண்டாம் என விலகிக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிஸ்மில்லாஹ் கூறி அனுப்பப்பட்ட உனது பிராணியுடன் பிஸ்மி கூறப்படாத வேறு நாய்கள் கலந்திருந்தால் அதை நீ சாப்பிடாதே ஏனெனில் எது அதைப் பிடித்தது? என்பதை நீ அறிய மாட்டாய் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அதீய்யிப்னு ஹாதிம் (ரழி)(புகாரி: 175, 2054, 5483, 5487, 5475, 5476)முஸ்லீம் : 3560, 3565 திர்மிதி : 1385, 1390
(நஸாயீ: 4190, 4200). ஆபூதாவ+து, இப்னுமாஜா அஹ்மது.

அதுபோல பிஸ்மில்லாஹ் கூறி எய்த அம்பினால், வேட்டையாடப்பட்ட பி ர ாணியை ச ாப்பிடுவதும்
அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு, ஷஷஅம்பின் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணியை ஓரிரு நாட்களுக்குப் பின் தண்ணீரிலிருந்து கண்டெடுத்தால் அதை நீ சாப்பிடாதே” என நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அறிவிப்பாளர் : அதிய்யி பின் ஹாதிம் (ரழி)(புகாரி: 5485), முஸ்லீம் : 3566, திர்மிதி : 1389, அபூதாவ+து : 2467, அஹ்மது : 18570.

இந்தத் தடைக்கு காரணமும் சந்தேகம்தான். அதன் மரணம் அம்பினாலா? அல்லது நீரினாலா? எனும் கேள்விக்கு விடை தெரியாமல் போகும்போது அதைச்சாப்பிடாமல் விலகி விடுவதே நல்லது.  ஒருவேளை ஒருவர் இன்றைய நவீன அறிவியலை துணைக்கு அழைத்துக் கொண்டு செத்துவிட்ட அந்தப் பிராணியை ஆய்வுக்கு உட்படுத்தி அது தரும் உறுதியான தகவலின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்தால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். ந பி (ஸல் ) அவர்களுக்கு தர்மப் பொருள் தடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் வீட்டில் கிடந்த பேரீத்தம் பழம் ஒன்றை தர்மப்பொருளா? அல்லது தனக்குரிய பொருளா? என்பதை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை.

ஏனெனில், நபி(ஸல்) அவர்களின் வீடும், பள்ளிவாசலும் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தது. இடையில் ஒரு திரைச்சீலை மட்டுமே தடுப்பாக இருந்தது. மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் தர்மப்பொருட்கள் அனைத்தும் பள்ளிவாசலில் தான் பாதுகாக்கப்படும். அதில் ஒன்றிரண்டு வீட்டிற்குள்ளே உருண்டு வர வாய்ப்புகளும் உண்டு. ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத இந்தச் சூழலில் அதைச் சாப்பிட வேண்டாம் என்ற முடிவுக்கே வந்திருக்கிறார்கள். அதை தமது வாய்மொழியாக இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்கள்.

நான் என் வீட்டுக்கு திரும்புகிறேன். என் விரிப்பில் பேரீத்தம் பழம் ஒன்று விழுந்து கிடப்பதைக் காண்கிறேன். அதை சாப்பிடுவதற்காக (என் வாயருகே) அதை உயர்த்துகிறேன். பின்னர்அது தர்மப்பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு வந்து விடுகிறது. அதை நான் (சாப்பிடாமல்) போட்டுவிடுகிறேன் என்று நபி(ஸல்) கூறுகிறார்கள். அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா(ரழி)(புகாரி: 2433, 2431, 2055), முஸ்லீம் : 1781, 1782, 1783 அபூதாவ+து : 1408, 1409 அஹ்மது : 11893, 12447, 13535.

இதுபோன்ற சந்தேகத்திற்குரியதை தவிர்ப்பதில் வேறொரு நன்மையும் உண்டு சந்தேகத்திற்குரியதிலே இவ்வளவு கண்டிப்பு காட்டுகிறவர் ஹராமானதின் அருகில் கூட நெருங்கக்
கூடாது எனும் பக்குவத்தையும் அடைந்து கொள்வார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹலால் தெளிவானது. ஹராம் தெளிவானது. இரண்டுக்கும், இடையில் சந்தேகத்திற்குரியவையும் உண்டு. யார் சந்தேகமானதை விட்டு விலகிக் கொள்கிறாரோ அவர் தன்
மானத்தையும் , மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொண்டவராகிறார்.

யார் சந்தேகத்திற்குரியதை செய்து விடுகிறாரோ அவர் வேலி ஓரத்தில் (கால்நடைகளை) மேய்ப்பவரைப் போன்றாவார். (ஓரத்தில் மேய்ப்பது) வேலிக்குள்ளே மேய்ந்து விட வழி வகுக்கும். அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருமன்னனுக்கும் ஓர் எல்லை உண்டு. அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லை அவனால் தடுக்கப்பட்டவையே என்று கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் இப்னு பக்ஷீர் (ரழி)(புகாரி: 52, 2051), முஸ்லீம் : 2996, திர்மதி : 1126(நஸாயீ: 2377, 5614)அபூதாவ+து : 2892 இப்னுமாஜா : 3974, அஹ்மது : 17624, 17645, 17649.

சந்தேகத்திற்குரியதை தவிர்ப்பது எந்த அளவுக்கு அவசியமானதோ அதே அளவுக்கு அதில் சந்தேகத்திற்கு இடமிருக்கி றதா ? என்பதை உறுதி செய்வதும் அவசியமானதாகும் . நமது கற்பனையையும், மன இச்சையையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு சந்தேகம்
என்ற முடிவுக்கு வந்து விடவும் கூடாது.

ஹலால் என்று கூறுவதற்கும் ஹராம் என்று கூறுவதற்கும் சம அளவில் வாய்ப்புகள் இருந்து இறுதி முடிவெடுக்க முடியாத நிலை ஏற்படும் போது தான் சந்தேகத்திற்குரியவை
என்ற முடிவுக்கு வரவேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து சில உணவுகளைச் சாப்பிட்டால் பாவமாகி விடுமோ (என்று
சந்தேகம் வருகிறது) நான் என்ன செய்வது? எனக் கேட்டார். அதற்கு உன் உள்ளத்தில் எந்த தடுமாற்றமும் வர வேண்டாம் (அடிப்படையின்றி சந்தேகப்பட்டால் ) அதில் நீ கிறிஸ்தவர்களுக்கு ஒப்பாகி விடுவாய் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹ{ல்ப் (ரழி) நூல்: அபூதாவ+து: 3290, திர்மிதி: 1490, இப்னுமாஜா: 2820, அஹ்மது: 20959.

உணவுக்கு இறைவன் பொறுப்பு எனில் பசியும், பட்டினியும் ஏன்?

உலகில் உள்ள அனைத்து உயிர்களின் உணவுக்கும் இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் போது பசி, பட்டினி, உணவுப்பற்றாக்குறை போன்றவை ஏற்படுவதற்கு காரணம் மனிதனின் அரசியல், பொருளாதார நிர்வாக சீர்கேடுகள் தான். அனைத்து உயிர்களின் உணவுக்கும் இறைவன்
பொறுப்பேற்கிறான் என்றால், அனைத்து உயிர்களுக்கும் தேவையான உணவை உலகில் இறைவன் வைத்துள்ளான் ஒவ்வொரு ஜீவனும் அதைத்தேடி முயற்சித்து தனக்குரிய பங்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள். அந்தத் தேடலில் பலருக்கு கிடைக்கிறது. சிலருக்கு கிடைக்காமல்
போகிறது.

கிடைக்காமைக்கு காரணம் உலகில் உற்பத்தியாகும்உணவுப்பொருளை பங்கிடுவதில் மனிதன் செய்யும் முறைகேடும் தேவையற்ற குறுக்கீடும் தான். உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றும் பூமியின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. சில பகுதியில் விளையும் பொருள் வேறு சில பகுதியில் விளைவதில்லை. அது அந்தந்தப் பகுதியின் மண்வளம், நீர்வளம், தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொருத்து அமையும்.

ஒரு பகுதியில் தேவைக்கு அதிகமாக விளையும் உணவு தானியங்களை தேவையுடைய பகுதிக்கு பகிர்ந்தளித்தால் பட்டினிச் சாவையும், பற்றாக்குறையையும் தவிர்க்கலாம். திமிர்பிடித்த பணக்கார நாடுகள் தனது தேவை போக எஞ்சியிருக்கும் பால், கோதுமை போன்ற உணவுப் பண்டங்களை கடலில் கொட்டுகின்றன பாழாய்ப் போகும் இந்தப் பண்டங்களை முறையாகப் பகிர்ந்தளித்தால் பலரின் பசி நீங்கும்.

உணவுப்பொருள் சேமிப்புக்கிடங்குகள் முறையான பராமரிப்பின்றி ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் டன் உணவு தானியங்கள் உளுத்துப் போய் வீணாகின்றன. அவைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டால் பலரின் பசி நீங்க வாய்ப்புண்டு. விலையேற்றத்தை எதிர்பார்த்து பெரும் பெரும் பண முதலைகளின் குடோன்களில் லடசக்கணக்கான டன் உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகின்றன.

அதன் மூலமும் செயற்கையான உணவுப் பற்றாக்குறை உண்டாகிறது.
தாராளமாகச் சந்தையில் கிடைத்தாலும் கடுமையானவிலையேற்றத்தின் காரணமாக ஏழைகள் அதன் பக்கம்எட்டிக்கூட பார்க்க முடியாத சூழல் ஏற்படுகிறது. வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகள் தமது எரிபொருள் தேவைக்காக இனி மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது என்று மாற்று எரிபொருளை கண்டறியும் விதமாக உணவு தானியங்களைப் பயன்படுத்தி பயோ டீசல் தயாரிக்கும்
வேளையில் இறங்கியுள்ளன. 2008ம் ஆண்டு அமெரிக்கா தனது நாட்டின் 40 சதவீத தானியத்தை இதற்காக செலவளித்துள்ளது. அதுவே 2009-ல் 50 சதவீதமாகவும் 2010- ல் 60 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விளைவிக்கப்படும் உணவுப்பொருளில் 60 சதவீதத்தை உண்ணக் கொடுக்காமல் வேறு வேலைகளுக்கு பயன்படுத்துவது என்பது பட்டினியால் சாவும் ஏழைநாட்டு மக்களைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாத சுயநல சிந்தனையின் வெளிப்பாடன்றி வேறென்னவாக இருக்க
முடியும்? இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி என பல நாடுகளில் துவங்கியுள்ள இந்த பயோ டீசல் பயணம் செயற்கை பற்றாக்குறை உண்டாக ஓர் நேரடிக் காரணமாக
உள்ளது.

தேவை அதிகரித்து விலைவாசி உயர்ந்து மண்ணை மலடாக்கும் ரசாயனக் கழிவுகளால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் நிலங்கள் பயரிட முடியாத தரிசாக மாறிக் கொண்டிருக்கிறது. அந்தக் கழிவுகளை சுத்திகரித்து முறைப்படுத்தினால் இன்றிருப்பதை விட பல மடங்கு உற்பத்தி
பெருகும், சாப்பிட்டது போக எஞ்சியதை வேறு தேவைக்கு பயன்படுத்தவும் முடியும்.

விளைபொருட்களின் ஆதாரமாகத் திகழும் நீர் நிலைகளான குளங்கள், குட்டைகள், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறுகின்றன. அவற்றை நம்பி பயிர் செய்த விவசாயிகள் நீர் ஆதாரமற்ற வயல் வெளிகளை கிடைத்த விலைக்கு விற்று விடுகின்றனர்
நாளடைவில் அங்கே கட்டிடங்கள் முளைத்து களைகட்டத் துவங்கி விடுகின்றன. இதனைத் தாண்டி எஞ்சியிருக்கும் விவசாய பூமியும் மழை நேரத்தில் வெள்ளம் செல்ல வழியில்லாமல் அருகில் விளைந்திருக்கும் விவசாய பூமியை ஒரு கைபார்த்து கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்து விடுகின்றன. இதுபோன்ற மனிதச் சிந்தனையின் நிர்வாகக் குறுக்கீடு தான் உலகில் சிலருக்கு உணவு கிடைக்காமைக்கு காரணம்.

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. அவர்கள் திருந்துவதற்காக அவர்கள் செய்ததில் சிலவற்றை அவர்களுக்கு சுவைக்க செய்வான்.
அல்குர் ஆன் 30:41

உணவு கிடைப்பதில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் உணவு உற்பத்தியை பொறுத்தவரை உலகமக்கள் தொகையின் தேவையை விட பலநூறு மடங்கு அதிகமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்தியாவில் 2010-2011ம் பயிர் பருவத்தில் நெல், கோதுமை ஆகிய உணவு தானியங்களின் கையிருப்பு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. என இந்திய உணவுக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் பட்டினிச்சாவின் பட்டியலும் வாசிக்கப்படத்தான் செய்கிறது. இவ்விரண்டையும் ஒப்பு நோக்கினால் பட்டினிச்சாவுக்கும், பற்றாக்குறைக்கும் பங்கீட்டு முறையில் உள்ள கோளாறு தான் முக்கியக் காரணம் என்பது தெளிவாகப் புரியும்.

இணை வைப்பவர் அறுத்ததை சாப்பிடலாமா?

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் ஒருவர் பிஸ்மில்லாஹ் கூறி அறுத்துத் தந்தால் அதை நாம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் பிஸ்மில்லாஹ் கூறுதல் என்றால் அல்லாஹ்வை உள்ளத்தால் நம்பி நாவால் மொழிய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! அல்குர் ஆன் 47:19

சொல்வதற்கு முன்பு அறிதல் அவசியம் என்கிறது இவ்வசனம். வெறும் வாய் வார்த்தையாக அல்லாஹ்வைப் பற்றி கூறுவதை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். பிஸ்மில்லாஹ் என்பதை உளப்பூர்வமாக நம்பி சொல்ல வேண்டும். அந்த நம்பிக்கையை வெளிப்படையான செயல்கள்
மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரிறைக் கொள்கைக்கு எதிரான இணை கற்பிக்கும் காரியத்தை வெளிப்படையாகச் செய்யும் ஒருவர் தன்னை அல்லாஹ்வை நம்பியிருக்கும் முஸ்லிம் என அறிவித்துக் கொண்டாலும் இவர் கூறும் பிஸ்மில்லாஹ் பொருள் புரியாமல் சொல்லப்பட்ட வெறும் வாய் வார்ததையாகத் தான் இருக்கும்.. ஏனெனில் லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறும் ஒருவர்
அதற்கு எதிரானவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்போது தான் அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

யார் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவற்றை நிராகரித்து விட்டு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று
கூறுகிறாரோ அவருடைய உயிரும் , உடமையும் புனிதமானதாகும் . அவரைப் பற்றிய விசாரணை
அல்லாஹ்விடம் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : தாரிக் பின் அக்ஷ்ரிம் (ரழி) நூல் : முஸ்லீம் : 34 அஹ்மது : 15313, 25954.

லாயிலாஹ இல்லல்லாஹ்வை கூறிவிட்டு வாழ்வில் அதற்கு முரண்பட்டால் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுபவற்றை அவர் நிராகரிக்கவில்லை. எனவே, அவர் நாவால் கலிமா சொன்னாலும் சொல்லவில்லை என்று தான் அர்த்தம். தர்ஹாவுக்குச் செல்லுதல் , அவ்லியாக்களிடம் பிரார்த்தித்தல், தாயத்து தகடுகளை தொங்கவிடுதல் போன்ற க்ஷிர்க்கான காரியங்களில் ஈடுபடும் ஒருவர் பிஸ்மில்லாஹ் கூறி அறுத்துத் தந்தால் அது பிஸ்மி சொல்லப்படாதது என்று கூறி அதைப் புறக்கணித்து விட வேண்டும்.