12) ஈஸா (அலை)
தந்தையில்லாமல் பிறந்து தொட்டில் குழந்தையாக இருக்கும்போது பேசிய, இப்போதும்இறக்காமல்வானளவில் உயர்த்தப்பட்டு மறுமை அடையாளமாக இவ்வுலகத்திற்கு வந்து கொடிய தஜ்ஜாலை கொல்லும் நபி ஈஸா (அலை) அவர்களுக்கும் மறைவான விசயங்கள் தெரியாது என்பதை கீழ்க்காணும் வசனம் தெரிவிக்கிறது.
(மறுமை நாளில்) மர்யமுடைய மகன் ஈஸ்ாவே, அல்லாஹ்வையன்றி என்னையும், என்தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், நீ மிகவும் தூய்மையானவன் எனக்கு உரிமை இல்லாதஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால் அதை நீநிச்சயமாக அறிந்திருப்பாய். உன் மனதிலுள்ளசிை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நீதுே மறைவானவற்றையெல்லாம் அறிபவன் என்று அவர் கூறுவார்.
நீ எனக்குக் கட்டளையிட்டபடி (பனிதர்களை நோக்கி) என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத்தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்)இருந்தகாலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப்பொருட்கள் மீதும் கண்காணிப்பவனாக இருக்கிறாய். (அல்குர்ஆன்: 5:116) ➚,117)
இந்த வசனத்தில் உன் மனதிலுள்ளதை நான் அறிய மாட்டேன் என்ற வாசகமும் நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் அறிபவன் என்றவாசகமும் ஈஸா (அலை) அவர்களுக்கு மறைவான விசயம் தெரியாது என்பதை தெளிவாக விளக்குகிறது. இதைப்போல் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய் நீயே எல்லாப் பொருட்கள் மீதும் கண்காணிப்பவனாக இருக்கிறாய் என்ற ஈஸா (அலை) அவர்களின் கூற்று அவர்களுக்கு தெரியாமல் பல விசயங்கள் நடக்கலாம். அதை அவர்களால் அறியமுடியாது என்பதை தெரிவிக்கிறது.