05) தடுக்கப்பட்டவையும் அதன் கேடுகளும்

உணவு ஓர் இஸ்லாமிய பார்வை
தடுக்கப்பட்டவை கெட்டவையே

மனிதனின் உடல், உயிர், அறிவார்ந்த நம்பிக்கை, மானம் மரியாதை என வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனிதனுக்குத் தீங்கு தருவதைத் தான் இறைவன் தடைசெய்துள்ளான்.
இதைப் பற்றி இறைவன் கூறும் போது…

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை அவர்கள் பின்பற்றுகின்றனர் தங்களிடம் உள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிளும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்.இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை வி ட்டும் அவர்களை தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். அசுத்தமானவைகளை அவர்களுக்கு தடை செய்கிறார்.
(அல்குர்ஆன்:)

தடுக்கப்பட்ட உணவை உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் பெருகும், வலிமை கூடும் எனக் கூறப் பட்டால் அது பெரும்பாலும் மறுக்கப்பட வேண்டிய க்ஷைத்தானியக் கூற்றாகத் தான் இருக்கும் ஏனெனில் க்ஷைத்தான் நமது ஆதிப் பெற்றோர் ஆதம், ஹவ்வா இருவரிடமும் சென்று இறைவன் உங்களுக்கு தடை செய்திருக்கும் மரத்திலிருந்து நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை விளையும் என்ற ஆசை வார்த்தையின் மூலம் தான் வழி கொடுத்தான். ஆதமே நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள் இந்த மரத்தை நெருங்காதீர்கள். (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள் (என இறைவன் கூறினான்)
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத் தலங்களைப் பற்றி புரிய வைப்பதற்காக க்ஷைத்தான்
அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவே தவிர உங்கள் இறைவன் இந்த மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை என்று கூறினான். நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே என்று அவர்களிடம் சத்தியம் செய்தான். அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான்.
அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத் தலங்கள் பற்றி அவர்களுக்குப் புரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றார்கள். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து இம்மரத்தை உங்களுக்கு நான் தடை செய்யவில்லையா? க்ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா? எனக் கேட்டான்.
(அல்குர்ஆன்: 7:19-22),.20:120,121)

மதுபானம் மற்றும் சூதாட்டத்தைத் தடை செய்யும் வசனத்திலும் அவற்றால் மனிதனுக்கு அதிக கேடுகள் ஏற்படுகின்றன என்பதே தடை செய்வதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர் அவ்விரண்டிலும் பெரும் கேடும் மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டில் பயனை விட கேடு மிகப் பெரியது எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன்:)

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவும் க்ஷைத்தான் விரும்புகிறான் எனவே (அவற்றிலிருந்து) விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 5:90),91)

இறைவன் விதித்துள்ள தடைகள் அனைத்துமே மனிதனைக் காக்கும் கேடயங்கள் தான். அவனது சுதந்திரத்தைப் பறிப்பதற்காக போடப்பட்ட வெற்றுச் சட்டங்கள் இல்லை. உயரமான மலைப் பாதைகளிலும், மேம்பாலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் மனிதச் சுதந்திரத்தை எப்படி
முறைப்படுத்துகின்றனவோ அது போல கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் பெரும் இடர்களில் போய் மனிதன் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பது தான் இறைச் சட்டத்தின் நோக்கம் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

தாமாகச் செத்தவை

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை
ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர் ஆன் : 2:173, 5:3, 16:115)

இவ்வசனம் நான்கு பொருட்களை உண்ணக் கூடாதவை
என தடை செய்கிறது. அதில் முதலாவதாக தாமாகச்
செத்தவற்றை சாப்பிடக்கூடாது என்கிறான் இறைவன்.
தாமாகச் செத்தவை என்றால் யாராலும் கொல்லப்படாதது
என்பதை எளிதாக விளங்கிக் கொள்வோம். அது போல
கடல் வாழ் உயிரிகளைத் தவிர்த்து கால்நடை மற்றும்
பறவைகளில் இஸ்லாம் கூறும் முறைப்படி அறுக்கப்படாமல்
மனிதனா லோ , விலங்குகளா லோ முறைதவறி
கொல்லப்பட்டவையும் தாமாகச் செத்தவையாக கருதப்படும்.
27 28
கீழ்காணும் வசனம் அதைத் தெளிவுப்படுத்துகிறது.
கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிப்பட்டவை (மேட்டிலிருந்து)
உருண்டு விழுந்தவை. (தமக்கிடையே) மோதிக் கொண்டவை
மற்றும் வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில்
(உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர
(மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன)
(அல்குர்ஆன்: 5:3).
பெரும்பாலும் ஏதேனும் ஒரு நோய்த் தொற்றின்
காரணமாகவோ அல்லது விக்ஷத் தன்மையுள்ள பொருட்களைச்
சாப்பிடுவதனாலோ பிராணிகள் தாமாக இறக்கின்றன.
அந்த இறைச்சியை நாம் சாப்பிட்டால் அதில் உள்ள
நோய்க் கிருமியும், விக்ஷமும் நமது உடலுக்குள் சென்று
நமது ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும்.
மேலும், தாமாகவும் முறைப்படி அறுக்காமலும் சாகின்ற
பிராணிகளின் உடலில் உள்ள இரத்தம் வெளியேறாமல்
உடலிலே தங்கிவிடும். அந்த இரத்தத்தில் உணவிலிருந்து
பெறப்படும் சத்துக்கள் மட்டுமல்லாது அதன் கழிவுகளும்
பல்வேறு கிருமிகளும் ஓடிக்கொண்டிருக்கும் பிராணிகள்
உயிருடன் இருக்கும் போது உடனுக்குடன் இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் அந்தக் கிருமிகள்
எந்தக் கேட்டையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவை
இறந்தவுடன் அதில் உள்ள கிருமிகள் பல்கிப்பெருக
ஆரம்பிக்கும். பிறகு சுற்றியிருக்கும் இறைச்சிக்கும் பரவி
அதையும் உண்பதற்குத் தகுதியற்றதாக ஆக்கிவிடும்.
அவைகள் இறந்து ஓரிரு நாட்கள் ஆகிவிட்டால் எந்த
அளவுக்கு அவை கெட்டுப் போய் இருக்கின்றன என்பதை
ஆராய்ச்சி ஏதுமின்றி அதில் உள்ள கிருமிகளையும்,
புழுக்களையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.