யூதத்துவம் – பிராமணத்துவம் ஓர் ஒப்பீடு
படிப்பறிவற்றோர் (தாழ்ந்த ஜாதியினர்) விசயத்தில் நாங்கள் எப்படி நடந்தாலும் எங்கள் மீது குற்றமில்லை என்பது யூதக் கொள்கை – அதுதான் பிராமணர்களின் கொள்கையும்.
நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். “எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது” என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன்:) ➚
மாட்டினை கடவுளாக கருதுவது யூதக் கொள்கை அதுவே பிராமணக் கொள்கை
மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக்கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள். (அல்குர்ஆன்:) ➚
உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம். “உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!” (எனக் கூறினோம்). “செவியுற்றோம்; மாறுசெய்தோம்” என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது. “நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 2 ; 93)
நாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்பது யூதக் கொள்கை – அதுவே பிராமணக் கொள்கை
நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்” என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். “(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?” என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள். தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது. (அல்குர்ஆன்:) ➚
தீண்டாமையின் தந்தை ஸாமிரி என்ற யூதன் – அதுவே பிராணமர்களின் கொள்கை
மூஸாவின் சாபத்தை வரமாக நினைக்கிறார்கள்
ஸாமிரியே! உனது விஷயமென்ன?” என்று (மூஸா) கேட்டார்.
“அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது” என்றான். “நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் “தீண்டாதே’ என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்” என்று (மூஸா) கூறினார் (அல்குர்ஆன்:) ➚,96, 97)
வேதத்தை மறைக்க வேண்டும் என்பது யூதக் கொள்கை – தங்களைத் தவிர வேறு யாரும் வேதம் ஓதக் கூடாது என்பது பிராமணக் கொள்கை நம்பிக்கை கொண்டோரைக் காணும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும் போது “அல்லாஹ் உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே? விளங்க மாட்டீர்களா?” என்று கேட்கின்றனர். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிய மாட்டார்களா? (அல்குர்ஆன்:) ➚, 77)