04) நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே. (முஸ்லிம்: 4575)

நபி (ஸல்) அவர்களின் பரம்பரை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா’வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா’வின் வழித்தோன்றல்களில் குறைஷியைரத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியலிருந்து பனூ ஹாஷிம் குலத்தாரைத்
தேர்ந்தெடுத்தான். பனூ ஹாஷிம் குலத்தாலிருந்து என்னைத் தேர்ந்தெடுத்தான். (முஸ்லிம்: 4573)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ ஹாஷிம் குலத்தாரைச் சார்ந்தவர்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ், அவர்களின் தந்தை அப்துல் முத்தலிப், அவர்களின் தந்தையே ஹாஷிம் ஆவார்.

நபித்துவத்திற்கு முன் . . .

நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பிலிருந்து அவர்கள் நபியாக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு வைரயிலுள்ள வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்வுகள் உள்ளன. அவற்றையும் அறிந்து கொள்வோம்.