02) முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
தவ்ராத், இன்ஜீல் உள்ளிட்ட முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றி முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
முஹம்மது என்றொரு தூதர் வருவார் என்றும் அவர் மகத்தான சில நற்குணம் கொண்டவராக இருப்பார் என்றும் அதிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையே அவர்களுக்கு ஏவுகிறார். தீமையே விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் உள்ள கால இடைவெளி சுமார் அறுநூறு (600) ஆண்டு காலமாகும். (புகாரி: 3948)